தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க, கீழ்கண்ட வழிமுறைகளை கையாளலாம், முன்னோர் வாக்கு.
- ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
- செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
- வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
- இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
- வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
- சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
- எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
- வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
- அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
- துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
- உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள சிறு வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் தரித்திரத்தை தவிர்க்க, உங்கள் செல்வம் நிலைக்க, பணம் பெருக, விருத்தியாக வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக