வெள்ளி, 18 ஜூலை, 2014

பிரதோஷம் விரதமும் வீதி வலம் வரும் முறையும்


சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
வறுமை நீங்கி செல்வம் பெருகும். 
நோய்கள் நீங்கும்.
எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.
பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.
பிரதோஷம் பிறந்த கதை! 
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர். 
இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள். 
எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார். 
அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர். 
ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர். 
அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார். 
இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள். 
இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது. 
வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது. 
இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள். 
அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது. 
எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர். 
நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது. 
மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார். 
அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார். 
இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது. 
அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன. 
ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.
அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். 
ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார். 
பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள். 
மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்! 
இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது! 
இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியைத் தொட்டு, "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும். 
மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். 
பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 
11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வகைகள்
நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும்
நெய் - முக்தி பேறு கிடைக்கும்

பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை
பிரதோஷ காலத்தில் திருக்கோவிலை சாதாரணமாக வலம் வருவதைப் போல வலம் வரக்கூடாது. மாறாக, சோம சூட்ச பிரதட்சண முறையில் தான் வலம்வர வேண்டும்.
அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.

சுபம்

செவ்வாய், 8 ஜூலை, 2014

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை


உலகத்தில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான தமிழர்களில் உங்களுக்கு மட்டுமே இந்த பதிவை வாசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.ஏனெனில்,நீங்கள் மட்டுமே பைரவப் பெருமானின் அருளையும்,சிவபெருமானின் ஆசியையும் பெறத் தகுதியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்.அந்த அளவிற்கு உங்களுடைய பூர்வபுண்ணியம் வலிமையாக இருக்கிறது;




தமிழ்நாட்டில் பழமையான ஆலயங்கள் 39,000 இருக்கின்றன;இதில் சரிபாதி சிவாலயங்களாக இருக்கின்றன;1990 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இருக்கும் 220 நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் வணிகம்,உற்பத்தி,சேவைத் தொழில்கள் அனைத்தும் சர்வதேசமயமாகத் துவங்கின; நமது பாரததேசம் உலகமயமாக்கல் என்ற ஒப்பந்தத்தில் 1.1.1995 அன்று கையெழுத்திட்டது;அதன் விளைவாக,குடும்பம் என்ற அமைப்பு வலுவிழக்கத் துவங்கியது;ஏனெனில்,ஒவ்வொருவருமே பேச்சு,மூச்சு,சிந்தனை முழுவதும் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பது? என்ற நோக்கத்தின்படியே செயல்படத் துவங்கிவிட்டனர்;விளைவு? நமது எதிர்கால சந்ததியினருக்கு நமது பண்பாடு பற்றிய அடிப்படை ஞானம் கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கிறது;இணையமும்,கணினிபற்றிய அடிப்படை ஞானம் இல்லாதவர்களை கற்காலத்தைச் சேர்ந்தவரைப் போல எண்ணத் துவங்கிவிட்டனர்;அப்பா 40 வருடம் அரசுப்பணி புரிந்து தனது 58 வயதில் பெற்ற சம்பளத்தை அவரது மகன்/ள் 21 வயதில் பெறத் துவங்கினான்/ள்.



சிறு சிறு நகரங்களும் செல்வச் செழிப்பைப் பெறத் துவங்கின;ஆனால்,அதே சமயம் செல்வ வளம் மிக்கவர்களுக்கும்,வறியவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கத் துவங்கியது;ஜனநாயக நாடான நமது நாடு முதலாளித்துவ வடிவம் எடுக்கத் துவங்கியது;அன்பு,பாசம்,விட்டுகொடுத்தல்,குடும்ப ஒற்றுமைக்கு தன்னையே தியாகம் செய்தல்,குழந்தைகளோடு நேரம் செலழித்து அவர்களின் ஆளுமைத் திறனை வளர்த்தல்,அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்த்தல்,அவர்களது நட்பு வட்டத்தைக் கண்காணித்தல் போன்றவை குறையத் துவங்கின;அவர்களது மனம் சார்ந்த சிக்கல்களை காது கொடுத்து கேட்க பெற்றோர்களுக்கே நேரம் இல்லை; ஆனால்,ஓடி ஓடி சம்பாதிப்பது அவர்களுக்காகவே!!!

தனது முதுமைக் காலத்தில் தன்னையும்,குடும்ப அமைப்பையும் நிர்வகிக்கும் விதமாக அவர்களுக்குப் பயிற்றுவிக்க நேரம் இல்லை;



இதனால்,இந்த 19 ஆண்டுகளில்(1995 முதல் 2014 வரை) “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிட்டன;இனி எனக்கு எதுவும் வேண்டாம்” என்று நம்மில் எத்தனை பேர்கள் சொல்லியிருக்கிறார்கள்?

இதற்கு முதல் காரணம் நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய பாரம்பரிய நடைமுறைகளை இறுதிவரையிலும் பின்பற்றாததே காரணம்;ஏழு வயதிற்குள் நமது குழந்தைகளை அடிக்கடி பழமையான ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லாவிட்டால்,அதன்பிறகு அவர்களுக்கு பக்தி உணர்வை ஊட்டுவது முடியாத காரியமாகிவிடுகிறது.



பெற்றோர்,குரு,குழந்தைகள்,இறைவன்=இவர்களில் யாராவது ஒருவரை சந்திக்கச் சென்றாலும் வெறும் கையோடு போய் பார்க்கக் கூடாது என்பது நமது இந்து தர்மத்தின் சம்பிரதாயம்;

பெரும்பாலான சிவாலயங்களுக்குள் பசுமடம் அமைக்கப்பட்டிருக்கிறது;எனவே,வாழைப்பழங்கள் அல்லது அகத்திக்கீரை வாங்கிச் செல்வது அவசியம்;ஆண்கள் எனில்,மேலாடையைத் தவிர்த்துவிட்டு,சிவாலயத்தினுள் நுழைவது அவசியம்;ஒவ்வொரு நாளுமே மஞ்சள் நிற வேட்டியை அணிந்து கொண்டு செல்வது நன்று;



கோவில் வாசலில் துவார(வாசல்) பாலகராக விநாயகர் அருள்பாலித்துக் கொண்டு இருப்பார்;அவரை மனப்பூர்வமாக வழிபட்டுவிட்டு,கோவிலினுள் நுழைவது முறை;


விநாயகரை வழிபடும் போது,மனதினுள் அவரது காயத்ரி மந்திரத்தையோ அல்லது அகவலையோ மனதிற்குள் பாடுவது அவசியம்;



ஓம் ஏக தத் புருஷாய வித்மஹே



வக்ர துண்டாய தீமஹி



தந்நோஹ் தந்தி ப்ரதோசதயாத்



என்பது விநாயகர் காயத்ரி மந்திரம் ஆகும்;

ஓம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை



இந்து இளம்பிறை போலும் எயிற்றனை



நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்



புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே



என்பது விநாயகர் அகவல் ஆகும்;



இதுவும் ஜபிக்க இயலாதவர்கள் ஓம் கணபதியே போற்றி என்று ஒன்பது முறை ஜபித்தாலும் போதுமானது;

கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது,அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்;அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பனிரெண்டுமுறை ஜபித்துவிட்டு,கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்;கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்;அங்கே வடக்கு நோக்கி விழுந்து கும்பிட வேண்டும்;இப்படிச் செய்வதால் நம்மிடம் அதுவரை இருந்து வந்த அனைத்து தீய எண்ணங்களையும் அந்த பலிபீடத்தில் பலியிடுவதாக ஐதீகம்;பலிபீடத்தில் விழுந்து வணங்கியப் பின்னர்,ஒருபோதும் கோவிலுக்குள்ளே எந்த இடத்திலும் விழுந்து வணங்கக் கூடாது;மேலும்,சிவாலயத்தினுள் இறைவனைத்தவிர,வேறு எவரையும் வணங்கக் கூடாது;அனாவசியமான பேச்சு,செல்போன் பேச்சு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;

சிவனை வழிபடுவதற்கு முறைப்படி நந்திபகவானிடம் அனுமதி கோர வேண்டும்;நந்தி பகவானை வழிபடுவதன் மூலமாக இந்த அனுமதி நமக்கு கிடைத்துவிட்டதாக அர்த்தம்;


ஓம் ஏகதத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி


தந்நோஹ் நந்தி ப்ரசோதயாத் என்பது நந்திபகவானின் காயத்ரி மந்திரம் ஆகும்;



பிறகு,மூலவராக இருக்கும் சிவனது இருப்பிடத்திற்குள் செல்ல வேண்டும்;ஏதாவது ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே நினைக்க வேண்டும்;நினைத்துவிட்டு,ஓம்சிவசக்திஓம்,ஓம்சிவசக்திஓம் என்ற சிவமந்திரத்தை இங்கிருந்து ஜபிக்கத் துவங்க வேண்டும்;சிவனை வழிபட்டுவிட்டு,பக்கவாட்டு வாசல் வழியாகவே அம்பாள் சன்னதிக்குச் செல்ல வேண்டும்;

இதே போல,அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டிருக்கும் நந்திபகவானை வழிபட்டப் பின்னரே,அம்மனை தரிசிக்கச் செல்ல வேண்டும்;இங்கேயும் மனதிற்குள் ஓம்சிவசக்திஓம்,ஓம்சிவசக்திஓம் என்று தொடர்ந்து ஜபித்துக் கொண்டே நமது கோரிக்கையை வேண்ட வேண்டும்;சிவனிடம் என்ன கோரிக்கையை வேண்டினோமோ,அதே கோரிக்கையை அம்பாளிடமும் வேண்ட வேண்டும்;




சிவன் சன்னதியில் தரப்படும் விபூதியையும்,அம்பாள் சன்னதியில் தரப்படும் குங்குமத்தையும் பத்திரமாக நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்;பலர் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு,அர்ச்சகர்/சிவாச்சாரியார் கொடுக்கும் விபூதி,குங்குமத்தை அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர்;இது தவறு மட்டுமல்ல;மகத்தான பாவமும் கூட!


பழமையான சிவாலயத்தில் தரப்படும் விபூதி,குங்குமத்தை விட்டுக் கொண்டு வந்து சேமித்துக் கொண்டே இருந்தால்,நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும் யாராலும் எந்த ஒரு மறைமுகத்தீங்கையும் செய்யமுடியாது;(நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தால்!)ஏனெனில்,இவைகளில் அளவற்ற தெய்வீக சக்தியும்,பாஸிடிவ் எனர்ஜியும் இருப்பதை இன்றைய நவீன அதீத உளவியில் விஞ்ஞானம் பலமுறை நிரூபித்திருக்கிறது;


மூலவர்களின் சன்னதிகளைக் கடந்து பக்கவாட்டுப்பகுதிக்கு வரும் போது சைவ அடியார்களின் 64 வரிசையைக் காணலாம்;இவர்கள் ஒவ்வொருவரின் முன்பாகவும் நின்று மூன்று முறை ஓம்சிவசக்திஓம் என்று ஜபிக்க வேண்டும்;இதன் முடிவில் அமைக்கப்பட்டிருக்கும் விநாயகரின் பெயர் செவிசாய்க்கும் விநாயகர் ஆகும்;இவர் முன்பாக ஒன்பது முறை தோப்புக் கரணம் போட்டுவிட்டு,இவரை ஒருமுறை வலம் வர வேண்டும்;


மூலவர் இருக்கும் சன்னதியின் பின்பக்கத்தைக் கடக்கும்போது,லிங்கோத்பவர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்;இந்த லிங்கோத்பவர் சன்னதிக்கு எதிரே அமைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கம் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மிகவும் முக்கியமான சிவலிங்கம் ஆகும்.இந்த சிவலிங்கத்தை சில நிமிடங்கள் வரையிலும் வழிபட்டால் மட்டுமே நமக்கு கலியின் துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்;நமது மன அமைதி ஒவ்வொரு நாளும் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கும்;அதன் பிறகு,லிங்கோத்பவரை வழிபட வேண்டும்;படைக்கும் கடவுளான பிரம்மா அன்னப்பறவை வடிவில் சிவனின் முடியைத் தேடி பறப்பதை இந்த லிங்கோத்பவரின் மேல்பகுதியிலும்,காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து,சிவனின் அடியைத் தேடிச் செல்வதை இந்த லிங்கோத்பவரின் கீழ்ப்பகுதியிலும் செதுக்கியிருப்பதைக் காணலாம்;இந்த சம்பவம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு,அண்ணாமலையில் நிகழ்ந்திருக்கிறது;அயன்,மால் இருவருக்குமே இறைவன் அந்த அண்ணாமலையாரே என்பதை இந்த லிங்கோத்பவர் சிற்பம் உணர்த்துகிறது;

கோவிலின் உட்பகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சண்டேஸ்வரர் சன்னதிக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும்;அவரது சன்னதியில் நின்று கொண்டு மெதுவாக கை தட்ட வேண்டும்;சிவாலயத்திற்கு வந்தமைக்கான பலன்களைத் தரும் பொறுப்பு இவரையேச் சேரும்;இப்படிக் கைத்தட்டினால் தான்,சிவாலயத்திற்கு நாம் வந்திருப்பதை சண்டேசுவரர் பதிவு செய்வார்;க்ஷேத்திரபாலகராகிய பைரவர் சன்னதிக்கு வரும் வரை இந்த மந்திரத்தை மட்டுமே ஜபிக்க வேண்டும்;

மூலவ சன்னதிகளின் பின்புறத்தைக் கடக்கும் போது சிறிதும் பெரிதுமாக ஏராளமான சிவலிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன;அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டவை;

சிவசக்தியின் கலப்பாக நாம் வாழ்ந்து வரும் உலகம் இயங்கிவருவதால்,ஓம்சிவசக்திஓம் ஜபிப்பதன் மூலமாக தம்பதியரின் மனக்கசப்பு அடியோடு நீங்கிவிடும்;ஒற்றுமை ஏற்படும்;


பைரவப் பெருமானின் சன்னதிக்கு வந்தடைந்ததும்,பைரவப் பெருமானின் காயத்ரி மந்திரம் அல்லது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ 8 முறை ஜபிக்க வேண்டும்;


பிறகு,உள்பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும்;அப்போதும் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;பெரும்பாலான ஆலயங்களில் உள்பிரகாரத்திலோ அல்லது வெளிப்பிரகாரத்திலோ ஸ்தல விருட்சம் வளர்ந்திருக்கும்;அதன் அருகில் வரும் போது நமது கோரிக்கையை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது கோரிக்கை விரைவில் நிறைவேறும்.கோவிலை விட்டு வெளியேறும் முன்பு கோவிலின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகே செல்ல வேண்டும்;ஏனெனில்,பல கோடி ஆண்டுகளாக சிவ வழிபாடு செய்து வரும் பல சிவபக்தர்கள் கோவிலுக்குள் சூட்சுமமாக இருப்பார்கள்;கோவிலின் அனைத்துப் பிரகாரங்களையும் சுற்றிவிட்டு,கோவிலுக்குள் உட்காராமல் வீட்டுக்குப் புறப்பட்டால் அவர்களும் நம்மோடு நமது வீட்டுக்கு சூட்சுமமாக வரத் துவங்குவர்;அது முறையல்ல;

கோவில் பசுமடத்தில் இருக்கும் பசுக்களுக்கு கையோடு கொண்டு சென்ற பழங்களை அதற்குத் தானமாகத் தர வேண்டும்;மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற ஒரு சில கோவில்களில் பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரை விற்பனை செய்து வருகிறார்கள்;ஒவ்வொரு முறை செல்லும் போதும் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்குத் தருவது நமது சோகங்களை நீக்கிடக் காரணமாக அமையும்;


அதே போல,நமது வீட்டில் இருந்து மூன்று கி.மீ.தூரத்திற்குள் பழமையான சிவாலயம் இருந்தால்,தினமும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது நமக்கு எப்போதெல்லாம் ஓய்வு நேரம் இருக்குமோ அப்போதெல்லாம் நடந்தே இந்த சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;தனியாகப் புறப்பட்டு,சிவவழிபாடு செய்துவிட்டு தனியாகவே வீடு திரும்புவதால் முழு சிவநிறைவு கிடைக்கும்;

அதே போல,நமது வீட்டில் இருந்து புறப்பட்டு சிவாலயம் சென்றுவிட்டு,வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக நமது வீட்டை வந்தடைய வேண்டும்;ஒவ்வொரு பழமையான சிவாலயமும் நமக்கு அளவற்ற ஆத்ம சக்தியைத் தரக்கூடியவை;நமது கர்மவினைகளை படிப்படியாகவும்,முழுமையாகவும் நீக்கக் கூடியவை;


சிவாலயத்தினுள் அல்லது சிவாலயத்தின் வாசலில் நாம் செய்யும் ஒவ்வொரு தானமும் ஏராளமான புண்ணியத்தை நமக்கு அருளக் கூடியவை;

தொடர்ந்து 45 நாட்கள் சிவாலயம் சென்று வந்தாலே சிவனம்சமாகவே நாம் மாறிவிடுவோம்;தொடர்ந்து பத்து ஆண்டுகள் தினமும் சிவாலயம் சென்று வந்தால் குருவின் வடிவில் சிவ தரிசனம் நமக்குக் கிட்டும்;
ஒரே ஒரு சனிப்பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;

ஒரே ஒரு திங்கட்கிழமை பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து நான்கு தலைமுறையாக நமது வீட்டு பெண்மணிகளின் சோகங்கள் படிப்படியாக நீங்கும்;நமது மனதினுள் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கும்;மன உறுதி பலப்படும்;நமது சிந்தனைத் திறன் பல மடங்கு அதிகரிக்கும்;நமது சுபாவத்துக்கு ஏற்ற ஆன்மீக குருவை நாம் சந்திக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;

ஒரே ஒரு சாதாரண பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஓராண்டு சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;


இன்றும் பல சிவாலயங்களில் சாதாரண ஊழியர்கள் வடிவில் அந்தக் கோவிலின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் பணிபுரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்;தொடர்ந்து ஓராண்டு வரை சிவாலயம் செல்பவர்களுக்கு அந்த ஆலயத்தின் மகிமையை உணரும் சந்தர்ப்பம் அமையும்.

உலகில் எப்போதெல்லாம் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதோ,அப்போதெல்லாம் பூமியில் தண்ணீர்ப்பஞ்சம் குறிப்பாக குடிநீர்ப்பஞ்சம் உண்டாகும் என்பது சிவனடியார்களின் அனுபவ உண்மை;

ஓம்சிவசக்திஓம்

பித்ருக்களின் ஆசிகளைத் தரும் ஆடி அமாவாசை

(26.7.14சனிக்கிழமை) அன்னதானம்!!!


உலகத்திற்கே மனிதநாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தது நமது தமிழ்நாடுதான்! ஏனெனில்,மனிதன்நாகரீகமடையத் துவங்கி 20,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன;மனித இனம் நாகரீகமடைந்தது இன்றைய இலங்கைக்குத் தெற்கே கடலுக்குள் மூழ்கியிருக்கும் குமரிக்கண்டத்தில் தான்! அன்று முதல் இன்று வரை குலதெய்வத்தை தலைமுறைதலைமுறையாக வழிபட்டு வரும் ஒரே மனித இனம் நமது தமிழ் இனம் மட்டுமே!
இறந்த முன்னோர்களே குலதெய்வங்களாக பரிணமித்திருக்கின்றன;இறந்த முன்னோர்கள் விண்ணில் பித்ருக்கள் உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர்;அவர்கள் பித்ருதேவதைகள்,எமதர்மராஜா போன்றவர்களின் அனுமதியோடு பூமிக்கு வரும் மூன்று நாட்களில் முதன்மையானது ஆடி அமாவாசை!!அவ்வாறு வருகை தந்து பூமியில் வாழ்ந்து வரும் தனது வம்சாவழியினரில் ஒருவராவது முன்னோர்களுக்குத்தர்ப்பணம் செய்கிறார்களாஎன்பதை கவனிப்பார்கள்;
அவ்வாறு யாராவது ஒருவர் செய்தாலும் அதைப்பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பரிபூரண ஆசி வழங்குவார்கள்;இந்த ஆசியினால் அந்த குடும்பத்திற்கு அடுத்த ஒரு வருடத்திற்கு வளங்கள் பெருகும்;நலங்கள் அதிகரிக்கும்;அதே சமயம் வரஇருக்கும் ஆபத்துக்கள்/விபத்துக்களில் இருந்து பித்ருக்களின் ஆசி தடுத்து காப்பாற்றிவிடும்ஒரே ஒரு ஆடி அமாவாசை நாளன்று நாம் செய்யும்அன்னதானமானது,பித்ருக்கள் உலகில் வசிப்பவர்களுக்கு ஒரு வருடத்துக்குரிய உணவாகப் போய்ச் சேருகிறது;
ஆடி மாதத்தில் ஆத்மாக் காரகனாகிய சூரியன் சந்திரனின் ராசியான கடகத்தைக் கடந்துகொண்டிருப்பார்;அந்த சூரியனுடன் மனக்காரகனாகிய சந்திரன் ஒன்று சேரும் நாள்தான் ஆடி அமாவாசை ஆகும்;
இந்த நன்னாளில் இல்லறத்தாராகிய நாம் ஒவ்வொருவருமே நமது முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) தர்ப்பணம் செய்ய வேண்டும்;ஒவ்வொருவருமே சிவனடி சேர்ந்த தனது பெற்றோர்களின் நினைவாகவோ அல்லது தாத்தா பாட்டியின் நினைவாகவோ அவர்கள் சிவனடி சேர்ந்த திதியை அறிந்து கொள்ள வேண்டும்;ஒவ்வொரு ஆண்டும் அந்த திதி வரும் நாளில் அவரவர்களுக்கு முறைப்படி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;இன்றைய வேகமானவாழ்க்கையில் ஒருவரே குறைந்த பட்சம் ஆறு பேர்களுக்கு வருடாந்திரத் திதி கொடுப்பது சாத்தியமா?
அம்மாவின் அப்பா,அம்மாவின் அம்மா
அப்பாவின் அப்பா,அப்பாவின் அம்மா
மற்றும்
சிவனடி சேர்ந்த அம்மா,அப்பா
போன்ற எண்ணிக்கையில் திதி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் ஒரு ஆண்டில் ஆறு வெவ்வேறு நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;
இது செய்ய முடியாதவர்கள் நமது ஆன்மீக குருவின் தலைமையில் இது போன்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளவாவது செய்ய வேண்டும்;அப்படி கடந்த வருடங்களில் கலந்து கொண்ட அனைவரது நியாயமான கோரிக்கைகளும் சில நாட்கள்/வாரங்களுக்குள் முன்னோர்களின் ஆசியாலும்,நமது ஆன்மீக குருவின் அருளாசியாலும் நிறைவேறின;பலவாசக,வாசகிகளின் பல ஆண்டு வாழ்வியல் சிக்கல்கள் நிரந்தரமாகத் தீர்ந்தன;வேலைகிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைத்தன;திருமணத்தடை பலருக்குநீங்கியது;குழந்தைப் பாக்கியம் வேண்டி வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் புத்திர யோகம் கிடைத்தன;பூர்வீகச் சொத்து சிக்கல்கள் பலருக்குதீர்ந்தன;இந்த அனுபவங்களை விவரித்தால் அதற்கே தனி வலைப்பூ தேவைப்படும்;

ஜய வருடத்தின் ஆடி அமாவாசைத் திதியானது26.7.2014 சனிக்கிழமையன்று வருகிறது.இந்த நன்னாளில் மதியம் மணி முதல் மணி வரை நமது ஆன்மீக வழிகாட்டி சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்டம்கழுகுமலையில் ஆன்மீக சத்சங்கம் நடைபெற இருக்கிறது;இந்த சத்சங்கத்தின் முடிவில் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில் கழுகுமலைகிரிவலமும்,கிரிவலத்தின் நிறைவாக அன்னதானமும் நடைபெற இருக்கிறது.


இந்த ஆடி அமாவாசை பித்ருக்கள் அன்னதான நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து ஆன்மீகஅரசு,ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளையும் ஆன்மீகக்கடல் குழுமம் அன்போடு அழைக்கிறது;


ஓம்சிவசக்திஓம்
கழுகுமலை வர விரும்புவோர் கவனிக்க:-
தமிழ்நாட்டின் வடக்கே இருந்து வருபவர்கள் மதுரை டூ திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை/ரயில்பாதையில் அமைந்திருக்கும் கோவில்பட்டிக்கு வர வேண்டும்;அங்கிருந்து சங்கரன்கோவில் செல்லும் பேருந்து வழித்தடத்தில் அமைந்திருக்கும் கழுகுமலையை வந்தடையலாம்;பொதிகை எக்ஸ்பிரஸின் மூலமாக பயணிப்பவர்கள் சங்கரன்கோவிலில் இறங்க வேண்டும்;அங்கிருந்து கோவில்பட்டி செல்லும் சாலை மார்க்கமாககழுகுமலையை வந்தடையலாம்;

தமிழ்நாட்டின் தெற்கே இருந்து வருபவர்கள் நாகர்கோவில் டூ மதுரை தேசிய நெடுஞ்சாலை/ரயில் பாதையில் அமைந்திருக்கும் கோவில்பட்டியை வந்தடைந்து,அங்கிருந்துகழுகுமலைக்கு வரலாம்;அல்லது திருநெல்வேலி டூ ராஜபாளையம் வழித்தடத்தில் அமைந்திருக்கும் சங்கரன்கோவிலை வந்தடைய வேண்டும்;அங்கிருந்து கோவில்பட்டி செல்லும் சாலை வழியாக கழுகுமலையை வந்தடையலாம்;

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...