செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

வலம்புரிச் சங்கு


வலம்புரிச் சங்கு என்றால் அர்த்தம் ஸ்ரீ மகாலெட்சுமியின் சகோதரி. இது கிடைப்பது மிக மிக அரிது. எந்த வீட்டிலும் மற்றும் வியாபாரியிடமும் இது இருந்தால் அங்கு லெட்சுமி கடாட்சமாக இருக்கும்.
சித்தர்களின் கோட்பாடு படி வலம்புரிச் சங்கு எவ்விடத்தில் இருக்குமோ அவ்விடத்தில் மகாலெட்சுமி வாசம் செய்வாள். அந்த வீட்டில் உள்ளவர்களிடம் சந்தோசம் கானும். இந்தச் சங்கு தங்கத்தில் அல்லது வெள்ளியினால் செய்த பீடத்தில் நெல்லை பரப்பி அதன் மேல் வலம்புரிசங்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சுத்தமாகக் குளித்து பவித்திரமாக சங்கை பால் அல்லது சுத்த நீரினால் கழுவ வேண்டும். வலம்புரிசங்கிற்குள் சில்லரை காசுகள் வைப்பது நலம் தரும்
ஓம் கிரீம் ஸ்ரீநமம்
ஸ்ரீதர் கருஸ்தாயி பயோநிதி ஜதாயி லெட்சுமி சகோதரியாத்சித்திராத் பர்பிரதாமிஸ்ரீதட்சணாருத் சங்கை

ஸ்ரீகிரீம்நம
ஒவ்வொரு நாளும் பதினைந்து முறை மேலே குறிப்பிட்ட மந்திரத்தைக் கூறவும். இதே போல் வலம்புரி சங்கைப் பூஜை செய்தால் தீய சக்திகள் நம்மை அன்டாமல் சந்தோசமாக வாழலாம்.
பாற்கடலைக் கடையும் போது அதிலிருந்து ஆலகால விஷம், கற்பகவிருட்சம், காமதேனு, இது போன்ற பல பொருட்கள் வெளிவந்தன.அப்பொழுது தேவர்களும் அசுரர்களும் இவற்றை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாற்கடலில் இருந்து மகாலெட்சுமியுடன் வலம்புரிசங்கும் வெளிவந்தது மகாலெட்சுமியை மகாவிஷ்னுவும் மகாலெட்சுமியின் கையில் உள்ள வலம்புரி சங்கை அக்கினி தேவனும் எடுத்து கொன்டனர்.
பின்பு மகாவிஷ்னு பிற்காலத்தில் அதை பெற்று கொண்டார்
ஸ்ரீ கிருஷ்ணன் அர்ச்சுனன் இவர்கள் இருவரையும் காண்டவதகனத்திற்காக அக்கினி தேவன் அழைத்தார். அப்பொழுது அவர்கள் இருவரும் வெறும் கையுடன் சென்றனர். இதனால் அதிர்ச்சியுற்ற அக்கினி தேவன்   நீங்கள் இருவரும் என்னை எப்படிக் காப்பாற்றுவீர்கள் என்று வினவினார். இது தான் சந்தர்ப்பம் என்று ஸ்ரீ கிருஷ்ணன் கை நழுவிய வலம்புரிசங்கையும் அர்ச்சுணனுக்கு வில்லையும் தந்திரமாக பெற்று கொண்டனர்.
நமக்கு பல விதமான வலம்புரிச் சங்கு கிடைக்கிறது. தென்னிந்தியாவில் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வரை கிடைக்கக் கூடியது இது மகாலெட்சுமி சொரூபமானது. மகாலெட்சுமியின் கையில் கிடைத்த சங்கின் வகையைச் சேர்ந்தது.
மகாவிஷ்ணு கையில் இருப்பது புருசம் என்று கூறுவார்கள். இந்தச் சங்கு கிடைப்பது மிக மிக அரிது. புண்ணியம் செய்தவர்களுக்கே புருசம் சங்கு கிடைக்கும் ஏன் என்றால் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒன்று கிடைக்கலாம். இதன் விலை சற்று அதிகம்.
இரண்டாவது ஆப்பிரிக்கன் சங்கு பிரம்ம சிருஷ்டியில் இருக்கும் எல்லாப் பொருளுக்கும் விஸ்வாமித்திரர் பிரதி சிருஷ்டி செய்தார்.

 அந்த சிருஷ்டிகளில் ஒன்று தான் தற்சமயம் நாம் காணும் வலம்புரிச் சங்கு. இந்தச் சங்கை உபயோகப்படுத்தும் முறை.
சிறிதாக உள்ள வலம்புரி சங்கை தனிப்பட்ட ஒரு ஆள் வைத்து கொள்ளலாம். வேண்டும்யென்றால் பயணத்தில் எடுத்துக் கொண்டு போகலாம். மஞ்சள் நனைத்த துணியில் சங்கைச் சுற்றி எடுத்துக் கொண்டு சென்று செல்லும் வழியில் பூஜை செய்து கொள்ளலாம். வீட்டில் பூஜை அறையில் வைத்து தினந்தோறும் பூஜிக்கலாம் கோவில் போன்ற இடத்திற்கு பெரிய அளவிளான வலம்புரி சங்கை வைத்துப் பூஜை செய்யலாம். ஒவ்வொரு நாளும் ஜலத்தில் சுத்தம் செய்து சுவாமி விக்கரகத்திற்கு அபிஷேகம் செய்து பிறகு சங்கை அலங்கரித்து அதில் ஜலம் விட்டு உயரமான பீடத்தில் வைத்துப் பூஜை செய்யலாம். பிறகு சங்கிலுள்ள ஜலத்தைத் தீர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் சங்கைச் சுத்தம் செய்து அந்தப் பீடத்தில் வைத்துவிடவும். கவிழ்த்து வைக்கக் கூடாது. ஏனென்றால் பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதனால் எக்காரணம் கொண்டும் தரையின் மேல் வைக்கக் கூடாது.
இந்த வலம்புரிச் சங்கை மூன்று விதமாக பயன்படுத்தலாம். ஒன்று யாராவது இறந்தால் அவர்களுக்கு இந்த வலம்புரிச் சங்கில் நீர் நிரப்பி அதில் துளசி இலை சிட்டிகை உப்பு சிட்டிகை சர்க்கரை சிட்டிகை அரிசி போட்ட இந்த பஞ்சாம்ருதத்தை இறந்தவரின் வாயில் ஊற்றினால் அந்த மனிதனுக்குச் சொர்க்கம் கிடைக்கும். அதுமட்டும் அல்லாமல் கொடுப்பவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்.
இரண்டாவது யாருக்காவது தலைவலி இருந்தால் இந்தச் சங்கில் ஜலம் ஊற்றி அதை 15 நாட்கள் அருந்தினால் திரும்பவும் ஒற்றைத் தலைவலி இருக்காது மூன்றாவது நமது வீட்டில்  யாராவது பெண்மணி பிரசவ நேரத்தில் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தால் உடன் இந்தச் சங்கில் ஜலம் விட்டு அதை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சுகப்பிரசவம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...