புதன், 5 அக்டோபர், 2016

நவரத்தினங்கள் பற்றிய ஆய்வு

மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் நம் கையில் இல்லை என்பது போலத்தான்  நம்பிக்கை சக்கரத்தில்தான் வாழ்க்கை வண்டியானது சுழன்று கொண்டிருக்கின்றது. என்னால் இது முடியும், நான் இதைச் சாதிப்பேன், வாழ்க்கையில் நானும் உயர்வடைவேன் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியங்கள். லட்சியங்கள் இல்லாத வாழ்க்கை தண்ணீர் இல்லாத  ஓடையைப் போன்றது. வறண்ட வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை.  எதையாவது சாதிக்க வேண்டுமென்பதே ஒவ்வொருவரின் கனவாகும். பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் வாழும் நாட்களானது லட்சியங்கள் நிறைந்ததாக இருக்கு வேண்டும். ஆனால் நினைத்தவுடன் நம் லட்சியங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிட முடியாது. கேட்டவுடன் எதுவும் கிடைத்து விடாது. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும்.

மாணிக்கம் , முத்து , பவளம் , மரகத பச்சை , கனக புஷ்பராகம் , வைரம் , நீலம், கோமேதகம் , வைடுரியம் மக்கள் அனைவருக்கும் அதிகமாக தெரிந்தது நவரத்ன கற்கள்தான்.அதாவது மரகத பச்சை, வைரம் , வைடுரியம் போன்ற கற்கள்தான் அதிக புழக்கத்தில் உள்ளன.ஆனால் ஆதி காலம் தொட்டே பெரிய அரசர்கள் ஜமீன்தார்கள் , சீமான்கள் ஆகியோர் உப கரண கற்களை அதிகம் பயன்படுத்தி உள்ளனர். நம்முடைய வாழ்வியல் முறைகளில் பல இடையூறுகள் துன்பங்களை எதிர்பாராத சங்கடங்களை தவிர்க்க உப ரத்ன கற்கள்தான் அதிகம் பயன்படுத்தபடுகிறது.அதே நேரத்தில் ரத்ன கற்களைப் பற்றியும் உப ரத்ன கற்களைப் பற்றியும் அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதாவது ரத்ன கற்கள் அணிந்தால் கோடீஸ்வரர் ஆகலாம் பெரிய அதிர்ஷ்டம் வரும் எதிரிகளை வெல்லலாம் என அதிக ஆசையை தூண்டும் கருத்துக்கள் நிலவுகிறது. இது முற்றிலும் தவறு.


நவரத்தினங்கள்: முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம். 

முத்து (pearl)


வெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை.  இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்தவகை முத்துக்களை, ஆணிமுத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில்  அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்கிறார்கள்.

 நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர். 

உலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுதுதான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்றுதான். 

இயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக  வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920 ம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள். 

இங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து  விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. 

ஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம்.முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும். மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.

பராமரிப்பு: பசுவின் சிறுநீர்,புளிப்புவகை காடி,பழச்சாறு ஆகியவற்றில்  சுத்தி  செய்து பசும்பாலில்  சுத்தம்  செய்ய வேண்டும்.  குண்டலி பரு ரசம்,புவியின் ரசம்,பொன்னங்காய் ரசம் ஆகிய வற்றில் மூன்று  நாட்கள் ஊற  வைத்தும்  முத்தை   சுத்தம்  செய்யலாம்.

குறைபாடு அறிதல்: மச்சங்கள்,புள்ளிகள்,விரிசல் கொண்ட முத்துக்கள் குறைபாடுள்ளவை.மேலும் மெல்லிய கோடுகள் மற்றும் ஒளியற்ற தன்மை கொண்ட  முத்துக்களும்  குறையுடையவை

வைரம் (diamond)
வைரத்தைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால்,
 வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்.இந்தியாவில் கோகினூர் என்ற இடத்தில் எடுக்கப்படும் வைரம் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்திலிருந்தும் வைரம் வெட்டி எடுக்கப்படுகிறது. வைரத்தின் தெளிவு நிறம், எடை இவற்றை வைத்தே இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வைரத்தை எவ்வளவு நாட்கள் உபயோகித்தாலும் அதன் ஓரங்கள் தேயாமலும் நுணுங்காமலும் காணப்படும். விலை உயர்ந்த வைர வியாபாரத்தை உலக அளவில் கட்டுப்படுத்தும் நிறுவனமாக லண்டனில் தலைமையகத்தை கொண்ட பீபர்ஸ் விளங்குகின்றது. 

நம்நாட்டைப் பொறுத்தவரை கோடுகள், புள்ளிகள் ஏதும் இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை என்றும் எண்ணி வாங்கி அணிந் கொள்கிறோம். ஆனால் அயல் நாட்டினர் வைரத்தின் ஜொலிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். 

பராமரிப்பு :வைரத்தை பெண் குதிரையின் சிறு நீரில் மூன்று நாட்கள் ஊற வைத்து பின்னர் நல்ல  வெய்யிலில்  காய  வைத்தால் வைரம் சுத்தி ஆகும். எலுமிச்சை பழத்தினுள் வைரத்தை  வைத்து அகத்தி  இலை சாறில் வேக  வைத்து  எடுத்தாலும் வைரம் சுத்தி ஆகும்.

குறைபாடு அறிதல்: பொருத்தமற்ற  வடிவம் கொண்டவைரங்கள்,முனைகள் உடைந்த,துவாரம் உள்ள வைரங்கள், ஒளியற்ற வைரங்கள்,குமிழ்கள் உள்ள வைரங்கள்,நிற பேதமுள்ள வைரங்கள்,கீறல் உள்ள வைரங்கள் ஆகியவை குறை பாடுள்ள வைரங்கள் ஆகும்.

வைரத்தின் மருத்துவ குணங்கள் 
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு. சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மை தன்மையை இழக்காதவாறு செய்யும்.


வைடூரியம் (cat's eye)
வைடூரியம் லேசான பச்சையும், பழுப்பு நிறமும் கொண்டதாகும். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுவதோடு நடுவே ஒரு வெண்மை நிறத்தில் கோடு போன்ற அமைப்பும் காணப்படுகிறது. இதை மேலும் கீழும் அசைத்தால் பூனைக் கண் போலத் தெரியும். இதனாலேயே வைடூரியத்திற்கு கேட்ஸ்அய் என்ற ஆங்கிலப் பெயர் வந்தது. மஞ்சள் நிற பிரகாசமும் வெண்ணிற கற்றையும் உடையதே மிக உயர்ந்த வகை வைடூரியமாகும்.பெரில்லியம் அலுமினேட் எனப்படும் வேதிப்பொருளாளல் ஆன வைடூரியம், கிரிஸோபெரில் வகையை சார்ந்ததாகும். விலையும் அதிகமாகும். வைடூரிய கல்லின் குறுக்கே ஒரு நூல் பட்டையாகவும் தெளிவில்லாமலும், கல்லின் நிறம் வெளிர் பச்சையாகவும் இருந்தால் விலை அதற்கேற்ப குறைய வாய்ப்புண்டு.

இதில் குறிப்பிடத்தக்கது குவார்ட்ஸ் வகை வைடூரியங்கள் ஆகும். ஆனால் இதன் பெயரில் தான் வைடூரியம் உள்ளதே தவிர சுத்தமான வைடூரியம் இல்லை. எடை குறைந்த குவார்ட்ஸ் வகை வைடுரியங்கள் ப்ரவுன் கலந்து பச்சையாக இருக்கும். இதில் பழுப்பு நிறம் உடைய நூல் போன்ற அமைப்பு கொண்ட கற்களை டைகர்ஸ் ஐ (ஜிவீரீமீக்ஷீs ணிஹ்மீ) என்றும், கருப்பு நிறமாக இருந்தால் புல்ஸ் ஐ (ஙிuறீறீs ணிஹ்மீ)  என்றும் அழைக்கின்றனர். 
வைடூரியங்களில் நமது நாட்டில் கேரளாவில் கிடைப்பதே விலை உயர்ந்ததாகும். இது தவிர, ஒரிஸாவில் கிடைப்பது சற்று விலை குறைந்ததாக உள்ளது. பிரேசில், இலங்கை, அமெரிக்கா முதலிய இடங்களிலும் வைடூரியம் கிடைக்கின்றது.

வைடூரியத்தின் மருத்துவ குணங்கள் 
வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி, ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

பராமரிப்பு : வைடூரியத்தை குதிரையின் சிறுநீரில் ஒருநாள்  முழுவதும் போட்டுவைத்து பின்னர் அதை பூசணிகாய் சாறில் போட்டுவைக்க வேண்டும் .அதன்பின் அதை கழுவவேண்டும்.

குறைபாடு அறிதல் : வைடூரியத்தை குதிரையின் சிறுநீரில் ஒருநாள்  முழுவதும் போட்டுவைத்து பின்னர் அதை பூசணிகாய் சாறில் போட்டுவைக்க வேண்டும் .அதன்பின் அதை கழுவவேண்டும்.

மாணிக்கம் (ruby)
இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் . மாணிக்கம் சிவப்பு நிறமுடைய, பூமியில் விளையக்கூடிய ஒரு கல்லாகும். ரோஸ் கலந்த சிப்பு நிறமுடையதாகவும் அல்லது சுத்த சிவப்பு நிறமுடையதாகவும் விளங்கும் இக்கற்கள் ஒளி ஊடுருவக்கூடியதாகவும், ஒளி ஊடுருவ இயலாத கல்லாகவும் இரு வகையாக கிடைகிறது. வெல்வெட் போன்ற தன்மையும் வைரத்திற்கு அடுத்த கடினத் தன்மையையும் கொண்டது மாணிக்கக் கல்லாகும்.

மாணிக்கம் மிகுந்த உயர்தரமானது. தற்போது கிடைப்பது அரிதாக இருப்பதால் இதற்கு இது தான் விலை என்று நிர்ணயிக்க முடிவதில்லை. அதனால் தான் மாணிக்கத்தை விலையில்லா மாணிக்கம் என்கிறார்கள். மாணிக்கத்தை கேரட் முறையில்தான் மதிப்பீடு செய்கிறார்கள். உண்மையான உயர்ந்த வகை மாணிக்கக் கற்கள் வைரத்தை விடவும் விலை உயர்ந்ததாகும். மாணிக்கம் பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கின்றன. 

ஒரு சில மாணிக்கங்களை வெட்டிப் பார்த்தால் ஆறு கீற்றுகள் உடைய  நட்சத்திரத்தை  பார்க்கலாம். இந்த வகை மாணிக்கக் கல்லை நட்சத்திர மாணிக்கம் என்று அழைக்கிறார்கள். மாணிக்கம் ஒரு பிரகாசமான, கடினமான, காலமெல்லாம் நிலைத் திருக்கக்கூடிய, அணியத்தகுந்த ஓர் அபூர்வ ரத்தினமாகும்.
உயர்தர மாணிக்கங்கள் சாதார வெளிச்சத்தில் ஒரு சிப்பு நிறத்தையும், அதிக வெளிச்சத்தில் நல்ல ஜொலிக்கும் சிகப்பையும் காட்டும். இந்தியாவில் தரம் குறைந்த ரூபிகளும், மற்றும் நல்ல அரிய வகையுள்ள ரூபிகளும் கிடைக்கின்றது. தரம் குறைந்த ரூபிகளுக்கு மைசூர் ரூபி என்று பெயர். இதில் ஒளியோ கவர்ச்சியோ இருக்காது. நேராக பூமியிலிருந்து கிடைக்கும் எந்தவொரு ரத்தினமும் ஒழுங்கற்றதாகத்தான் இருக்கும். அவற்றை சரியான முறையில் பட்டை தீட்டி பாலிஷ் செய்தால் மட்டுமே கற்களுக்கு அழகும் கவர்ச்சியும் உண்டாகும்.

மாணிக்கம் அலுமியம் டிரை ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளால் ஆனது. கெராண்டம் என்கிற வகையைச் சேர்ந்த மாணிக்கக் கற்கள் புறா இரத்த நிறத்தில் கிடைப்பது முதன்மை தரம் ஆகும். கரும்புள்ளிகள் உடைய மாணிக்கத்தை அணிந்தால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பலவாறு பழுதடைந்த மாணிக்கம் இறப்பைக்கூட தந்து விடும். மாணிக்கத்தை கையில் அணிந்திருக்கும் போது அதன் நிறம் மங்கினால் அவருக்கு துன்பங்கள் ஏற்படும். அந்த துன்பம் நீங்கிவிட்டால் மாணிக்கக்கல் மீண்டும் தன்னுடைய பழைய நிறத்தை அடைந்து விடும்.

பராமரிப்பு : குதிரையின் சிறுநீரில் மாணிக்கத்தை  மூன்று நாட்கள் போட்டு பிறகு வெயிலில் காய வைத்து  வெந்நீரில்  கழுவினால் மாணிக்கம் சுத்தமாகும்.

குறைபாடு அறிதல்: சிவப்பு நிறமில்லாத,பால் படிந்த மாணிக்கங்கள், புகை படிந்தது போல் தோற்றம் கொண்ட மாணிக்கங்கள்,உடைந்த கரடு முரடான ஒழுங்கற்ற வடிவம் கொண்ட மாணிக்கக்கள்,மற்றும் துவாரம் உள்ள மாணிக்கங்கள் குறைபாடு கொண்டவை.

மரகத பச்சை (emerald)

மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து  அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது. 
மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும் இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளதுமுதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைக்ன்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக  உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது.  பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை. பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. 

மரகதத்தின் மருத்துவ குணம் 
மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.

பராமரிப்பு :நிலப்பூசணி கிழங்கை துவாரம் செய்து அதில் மரகதகல்லை வைத்து சிலைமண் செய்து குக்குட  புடமிட்டு காக்க சீதகத்தால்   எடுக்க  மரகதம்  சுத்தி ஆகும்.

குறைபாடு அறிதல் : மேடு பள்ளம்  உடையவை , துவாரங்கள்,கரும்புள்ளிகள், விரிசல்,கொண்ட மரகத கற்கள்  குறைபாடுள்ளவை.மேலும் ஒளியற்ற கற்களும்  குறை பாடுள்ளவை.

புஷ்பராகம் (topaz)

கனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள்.தங்கம் மஞ்சள் நிறமுடையது. இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம் சுமாரான எடை கொண்டதாகவும், ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது. கொரண்டம் என்ற குடும்பத்தைச் சார்ந்ததுதான் மாணிக்கம், நீலம், வெள்ளை புஷ்ப ராகம், சாதாரண புஷ்ப ராகம் நிறமில்லாமல்தான் கிடைக்கும் ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது.  சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால் அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப் பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், நிறம் எதுவுமே சேராமலிருந்தால் வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி ஜொலிப்புடன் அழகாக காணப்படும். 

தங்கம் கலந்தாற்போல் மஞ்சள் நிறத்துடன் காணப்படுவது கனக புஷ்பராகமாகும். இது மிகவும் ஜொலிப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது. எனவே வெள்ளை புஷ்பராகத்தைவிட மஞசள் புஷ்ப ராகம் சற்று விலை கூடுதலானது. இதை கேரட் கணக்கில்தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள். 

புஷ்ப ராகக் கற்கள் இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா ஆகிய இடங்களிலும், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. ஆறுகளில் அடித்து வரப்படும் கூழாங்கல் போன்ற தோற்றத்துடன் ஆற்று ஓரங்களில் கிடைக்கின்றது. புஷ்ப ராகக் கல் கடினத்தன்மை அதிகமுள்ளதால் நெடுநாள் உபயோகத்தாலும் பளபளப்பு குன்றாது.

புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.

பராமரிப்பு :ஆட்டின் சிறுநீரில் புஷ்பராக கல்லை  இரண்டுநாட்கள்  வைத்திருந்து பிறகு  வெய்யிலில் காயவைத்து  கழுவினால் சுத்தமாகும்.
குறைபாடு அறிதல்: கலங்கலான புஷ்பராகம்,ஒளியில்லாத,கருநிறம்  கொண்ட,மேடு பள்ளமான,வெண்மையான நீரோட்டம் கொண்ட புஷ்பராக கற்கள்  குறையுடையவை.

நீலம் (sappihire)
நீலம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்ற மூலப்பொருளால் ஆனது. இக்கல்லுக்கு நீல நிறத்தைத் தருவதற்கு டைட்டானியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. ஆழ்ந்த நீல நிறமுள்ள நீலக்கல்லில் டைட்டானியம் அதிகம் இருக்கும். இதன் நிறத்தின் பெயரே கல்லின் பெயரானது. முன்பெல்லாம் உயர்தரமான நீலம் இந்தியாவில் காஷ்மீரில் கிடைத்து வந்தது. தற்போது இந்தியாவில் கிடைப்பது அரிதாகிவிட்டாலும் தாய்லாந்து, இலங்கை, கென்யா, டான்சானியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகிறது
நீலம் கடினத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு, பளபளப்பு குன்றாமல் இருக்கும். வெளிர் நீல கற்கள் பாங்காங்கில் அடர் நீலமாக மாற்றப்பட்டு பாங்காங் நீலம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக எடையும், சுத்தமான தன்மையும் கொண்ட கல்லை கெட்டி நீலம் என்கிறார்கள். 



பர்மா மற்றும் காஷ்மீரில் அற்புதமான நீல கற்கள் கிடைக்கின்றன. இவை அழகான ஒளி கற்கள் கிடைக்கின்றன. இவை அழகான ஒளிமிகுந்த, கண்களைக் கவரக்கூடியவையாக இருக்கும்.

நீலகல்லின் மருத்துவ குணம் 
கீல் வாதம், இடுப்புவாதம், நரம்புவலி, வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும், குஷ்ட நோயையும் குணப்படுத்தும். வயிற்று நோயை சரிபடுத்தும். அதிக உடல் பருமனை குறைக்கும். இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.

பராமரிப்பு :
கழுதையின் சிறுநீரில் நீலகற்களை இரண்டுநாட்கள்  வைத்திருந்து வெய்யிலில் காய  வைத்து பிறகு  கழுவினால் நீலம் சுத்தமாகும்.
குறைபாடு அறிதல் :நீலகல்லை  வாங்கியவுடன் அவற்றை அணிந்து  கொள்ள கூடாது.சில நாட்கள் நீல கல்லை வைத்து பார்த்து நல்ல  பலன் அளிக்கிறதா  என்பதை  அறிந்த பிறகே  நகையில்  பதித்து   அணிய  வேண்டும். தீய பலன் அளித்தால் அவை குறையுடையவை.

பவழம் (coral)
பவழம் கடல் வாழ் முதுகெலும்பற்ற உயிரின வகையைச் சேர்ந்தவையாகும். இவற்றின் மேல் சுண்ணாம்பு அல்லது கடினமான ஓடு இருக்கும்.  இவைகள் இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. கடலில் விளையும் இரு ரத்தினங்களில் பவழம் பவழப்பூச்சிகள் எனப்படும். சிறிய உயிரினங்களினால் உருவாக்கப்படுகின்றன. கடினமான பாறைகளின்  மேல் இந்த பூச்சிகள் நின்று கொண்டு இரை தேடும் போது இப்பூச்சிகள் உடல்களிலிருந்து உண்டாகக்கூடிய எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன. இதுவே பவழம் உண்மையாக உற்பத்தியாகும் முறையாகும். பவழம் கால்சியம் கார்பனேட்டினால் ஆனது. மிகச் சிறந்த பவழம் கிளியின் மூக்கு நிறத்தைப் போன்றும், செம்பருத்தி பூவின் நிறத்தைப் போன்றும், கோவைப் பழத்தைப் போன்றும் செந்திறமாக இருக்கும். நாம் பவழம் என்றாலே சிவப்பு நிறம் மட்டும்தான் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. வெண் பவழம் என்றால் முருகப்பூ போன்ற நிறத்துடன்  காணப்படும். பவழத்திற்கு ஆங்கிலத்தில் கோரல் என்று பெயர்

பவழத்தின் அமைப்பைக் கொண்டு 6 அல்லது 8 கிரகங்கள் உடையதென  இரு வகையாக பிரிக்கப்படுகிறது. சிவப்பு பவழமானது 8 காரங்கள் பிரிவைச் சார்ந்ததாகும். முன்பு நம் நாட்டு கடல் பகுதிகளில் பவழம் நிறைய கிடைக்கப் பெற்றது. தற்போதோ இத்தாலி மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் கிடைக்கப் பெறுகிறது. பவழம் குடுமையான வேதிப் பொருளான அமிலமானது பட்டால் உடனே கரைந்துவிடக்கூடிய தன்மை கொண்டது

பவழத்தின் மருத்துவ குணங்கள் 
ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.

பராமரிப்பு :ஒரு கண்ணாடி குவளையில் எலுமிச்சை பழ சாறை ஊற்றி அதில் பவழத்தை நான்கு மணி நேரம் போட்டு  வைத்து வெந்நீரில் கழுவ வேண்டும்.
குறைபாடு அறிதல் :ஒரு கண்ணாடி குவளையில் எலுமிச்சை பழ சாறை ஊற்றி அதில் பவழத்தை நான்கு மணி நேரம் போட்டு  வைத்து வெந்நீரில் கழுவ வேண்டும்.

குறைபாடு அறிதல் பவழத்திற்கு 6 குற்றங்கள் உண்டு. அப்படிப்பட்ட பவளங்கள் அணிவதைத் தவிர்த்து விடுவது நல்லது. பவழங்கள் பிளவு பட்டோ, கரும் புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப்போயோ, ஓரங்கள் ஓடிந்தோ, துளைகளுடனோ, இருந்தால் அவை குற்றமுடைய பவழமாக கருதப்படும். பவழத்தில் நாள் பட்ட, பூச்சி அரித்த பவழம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல. கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் பூமியில் விளைபவையாகும். இந்த கற்கள் பவழம் போன்ற அமைப்பை கொண்டது என்பதால் இவற்றை பவழம் என்று எண்ணிவிடக்கூடாது.

கோமேதகம் (hessonits)
கோமேதகம் காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். மற்றும் சில வகை, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். புகை படிந்த சிவப்பு ஒளி வீசும் நிறங்கொண்ட கோமேதகம் நல்ல நிறமும், ஒளி ஊடுவருவக்கூடிய தன்மையும் கொண்டதாகும். மென்மை, பிரகாசம் மற்றும் ஒளி தரும் கல்லே உயந்த சுபமான கோமேதகம் ஆகும். கோமேதகம் கார்னெட் வகையைச் சார்ந்தது. பழங்கால நூல்களில் கோமேதகம்  கோமூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு  கோமேதகம் என்று பெயரிட்டனர். கல்லின் உள்ளே பார்க்கும் போது தேனில் காணப்படும் குமிழ்களைப் போல காணப்படுவது கோமேதகத்தின் சிறப்பு அம்சமாகும்.கோமேதகக் கல்லானது இந்தியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் எடுக்கப்படும் கற்கள் இங்கேயே பட்டை தீட்டி விற்பனை செய்யப்படுகிறது

கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்
கோமேதக பஸ்பம் ஈரல்வலி, குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும். 
பராமரிப்பு :கோமேதகத்தை  குதிரையின் சிறுநீரில் மூன்று நாட்கள் போட்டு பின்னர் நில பூசணிக்கிழங்கு சாறில் மூன்று நாட்கள் போட்டு வைக்க வேண்டும்.மீண்டும் அதனை எலுமிச்சை சாறில் மூன்றுநாட்கள் போட்டு  வைத்து வெந்நீரில்  கழுவவேண்டும்.

குறைபாடு அறிதல் : கோமேதகத்தை  குதிரையின் சிறுநீரில் மூன்று நாட்கள் போட்டு பின்னர் நில பூசணிக்கிழங்கு சாறில் மூன்று நாட்கள் போட்டு வைக்க வேண்டும்.மீண்டும் அதனை எலுமிச்சை சாறில் மூன்றுநாட்கள் போட்டு  வைத்து வெந்நீரில்  கழுவவேண்டும்.

ரத்தின கற்களை இரவு நேரங்களிலோ அல்லது  மின்  விளக்கு  ஒளியிலோ பார்த்து வாங்க கூடாது. நல்ல பகலில்  சூரிய ஒளியில் ஒரு பூதகண்ணாடி வழியே பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.அப்போதுதான் அவற்றில் உள்ள குறைபாடுகள்  தெளிவாக தெரியும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...