ஜோதிட சக்கரவர்த்தி ஜோதிட ஆசிரியர் T.V.வெங்கட்ராம்ஜி கட்டண சேவைக்கு RS-1001 மட்டும் ஜோதிட ஆலோசனை வேண்டும் எனில் உங்கள் பெயர்.பிறந்த தேதி,நேரம் AM/PM.பிறந்த ஊர் போன் மூலம் தெரியப்படுத்தி உங்கள் ஜாதகபலனை தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள்.பிரச்சனைகளுக்கு.தீர்வு வாட்சப்பில் & வாய்ஸ் ரெக்காடிங் மூலம் அனுப்பப்படும்.CELL.8667710736. whatsapp NO 8124812470 email.sssjn2412@gmail.com V.VENKATESAN ,State Bank Of India. Ac/no. 34790428329 IFS code.SBIN0001603.Chennai.Tiruvottiyur
வியாழன், 7 ஜூலை, 2016
கரணம் பலம்
கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும்.
1. பவம் - சிங்கம்
2. பாலவம் - புலி
3. கௌலவம் - பன்றி
4. தைதிலம் - கழுகு
5. கரம் - யானை
6. வணிஜை - எருது
7. பத்ரம் - கோழி
8. சகுனி - காக்கை
9. சதுஷ்பாதம் - நாய்
10. நாகவம் - பாம்பு
11. கிமுஸ்துக்னம் - புழு
மேலே காணப்படும் 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.
கீழே தரப்பட்டுள்ள குணாதிசயங்கள் பெற்றிருப்பினும் , அவர்களின் தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே மேலதிகமாக பிரதிபலிக்கின்றார்கள்.
1. பவ கரணம் (சிங்கம் )
எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி உடையவருமாவர்.
2. பாலவ கரணம் (புலி)
சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும்
குணமுடையவருமாவார்.
3. கெளலவ கரணம் (பன்றி)
அரசாங்கப் பணியாளராக இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய் மீது பற்றுள்ளவரும், நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம் உடையவரும் வாகன வசதியுடையவருமாவார்.
4. தைதுலை கரணம் (கழுதை)
தருமம் செய்யாத கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.
5. கரசை கரணம் (யானை)
அரசாங்க மூலம் பணவரவு உள்ளவரும், பெண் நேயரும், எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவருமாவார்.
6. வணிசை கரணம் (எருது)
கற்பனையான வார்த்தைகளைப் பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப ஒழுகாதவரும், பெண் நேயருமாவர்.
7. பத்திரை கரணம் (கோழி-சேவல்)
ஆண்மைக்குறைவுள்ளவர் , மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவருமாவார்.
8. சகுனி கரணம் (காகம்)
நல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த செல்வம் உடையவரும், தைரியம் உள்ளவருமாவார்.
9. சதுஷ்பாத கரணம் (நாய்)
பெண் பிரியரும், வறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபியும், தீய நடத்தையுடையவருமாவார்.
10. நாகவ கரணம் (பாம்பு)
துன்பத்தை ஆள்பவரும், உத்தம குணமும், சுவையான உணவு உண்பவருமாவார்.
11. கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு)
தாய் தந்தையர் மீது பற்றுள்ளவரும், சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும், உலகத்தை நன்கு அறிந்தவருமாவார்.
இவைகள் கரணத்திற்குறிய பொதுவான பலன்களாக இருக்கும்.
இப்போது திருமண முறிவுக்கான காரணங்களை பார்ப்போம் .
கோழி , நாய் , பன்றி , கழுதை , எருது , பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சுகித்திருக்கும்.
மற்ற சிங்கம், புலி, யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு அமைத்துக்கொள்ளும்.
காமத்தில் அதிக ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி, கழுதை, பாம்பு , புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம் ஒரே மாதிரி இல்லை.
குறுகிய நேரம், நீண்ட நேரம் என மாற்றம் உடையதாக இருக்கின்றது.
உதாரணமாக கோழியின் (சேவலின்) , காகத்தின் கலவி என்பது சில நொடிகளே,
ஆனால் நாய்,பன்றி,கழுதை,புழு போன்றவற்றின் கலவி நேரம் மிக கூடுதலாகும்.
உதாரணத்திற்கு ஒரு கோழி (பத்திரை கரணம்)அல்லது காகத்தின் (சகுனி கரணம்) கரணத்தில் பிறந்த ஆணின் கலவி நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும்.
ஆனால் ஒரு பன்றியின் (கௌலவம் கரணம்) நாயின் (சதுஷ்பாதம் கரணம்) கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது நீண்டநேரம் இருக்கும்.
இதைத்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார்கள் பெரியோர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்
வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம் சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...
-
உங்களது வாழ்க்கை எங்கே ? சிலர் எங்கோ ஓரிடத்தில் பிறந்து எங்கோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர். வேறு சிலர் உலகம் சுற்றினாலும் சொந்த ஊரே சொர்க...
-
விருச்சிகம் ஸ்திர ராசி. ஜலராசி. காலபுருஷனின் எட்டாம் இடம் இங்கு குருபகவான் சனிபகவான் புதன்பகவான் நட்சத்திரம் உண்டு. நீர் ராசி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக