திங்கள், 17 பிப்ரவரி, 2014

மகான்கள்

மஹா பெரியவா மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை.பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போதுஜமீன்தாரிடம் கேட்டார்.

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டுஇளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.

அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில். இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான், ஒவ்வருவரிடமும்“சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார். பவார் முகாமின் காவலாளியாகவெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?

“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். மடத்து நிர்வாகியை அழைத்தார்.

“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா?நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒருசிறிய தூக்கு.

விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்திற்கு உணவு கொண்டு போவதாகவும்,வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர். காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக்கொடுக்க முடியுமா?” ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.

“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கைஅங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது. புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.

தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.

அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.

பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம்செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது….

“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.

ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.

“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. மஹானின் “மேனா”வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான். அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.

விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால்நம்பமுடியவில்லை.

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.

பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்குஅவர்களுடன் போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான்,என்பது உண்மை.

இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது. இடம் கிடைகாத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…

ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்கஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன்வரக்கூடாது என்று உத்தரவு.

ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார். சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகைவாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.

“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு… “எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செய்தபின் குகைக்குள் நுழைந்தார்.

என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது. சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

“இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.

உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக,வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.

வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவன்

மகான்கள்- II

அவர் ஒரு மாசித்தர். பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டக்கூடியவர். நோய்களைக் குணமாக்கிய பெருமைகளும் அவருக்குண்டு. என் சகோதரர் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தாங்க முடியாத வயிற்று வலியால் துடித்தபோது, உடனடி நிவாரணத்துக்காக அந்தச் சித்தரிடம் அவரை நான் அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. பூஜை செய்து அண்ணனுக்கு திருநீறுப் பிரஸாதம் தந்தார் சித்தர்.
நான் அவரை நாடி வந்துவிட்டதால் நிச்சயமாகத் தன்னைப் பற்றிக் கட்டுரைகள் எழுதுவேன் என்று எதிர்பார்த்தார் அவர். ஆனால், நான் அதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிந்ததும், அவர்பால் என்னை ஈர்ப்பதற்காக எனக்கு அழைப்புகள் விடுத்தார்.
மீண்டும் ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒருநாள் அவரிடம் சென்றேன். நடுநிசி நேரம். அறைக் கதவைத் தாழிட்டுவிட்டு, எனக்குச் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் அந்தச் சித்தர். வடித்த சாதத்தை உள்ளங்கையில் வைத்துத் தேய்த்தார். அது மீண்டும் அரிசியானது. வெந்தப் பருப்பைத் தேய்த்துத் துவரம் பருப்பாக்கினார். திருச்சானூர் மஞ்சள் வந்தது. பழநி விபூதி, மீனாட்சி குங்குமம் இப்படி எத்தனையோ… நான் அவற்றில் உற்சாகம் காட்டாமல் ஒரு சாட்சியாக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
“இவ்வளவு செஞ்சு காட்றேன், ஆச்சரியப்படாம இருக்கீங்களே, மனசுலே என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க?” என்று சற்றுக் கடுமையாகவே கேட்டார்.
“நீங்கள் இவற்றைக்காட்டிலும் பிரமிக்கத்தக்க அற்புதங்கள் செய்து காட்டும் சக்தி படைத்தவர் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் எனக்கு எதுவுமே ஆச்சரியமாகத் தோன்றவில்லை” என்றேன்.
“எழுத்தாளர் ஆச்சே… அதான் சாமர்த்தியமா பேசறீங்க…” என்றார். இப்போது அவர் பேச்சில் மட்டுமல்ல, முகத்திலும் கோபம் தெரிந்தது. எனக்குச் சற்று பயமாக இருந்தது. மணிபர்சில் இருந்த பெரியவா படத்தைப் பற்றிக் கொள்ளும் பொருட்டு கைகட்டி நின்றேன். நான் வழிக்கு வருவதாக நினைத்துக் கொண்ட அவர், “உங்களுக்கு உபதேசம் பண்றேன், மந்திரத்தை எழுதிக்குங்க” என்று கூறி கையை நீட்டினார். பேப்பரும் பேனாவும் எங்கிருந்தோ வந்தன.
“பிடிங்க” என்று இரண்டையும் என்னிடம் தந்தார். வாங்கிக் கொண்டேன்.
“ம்… எழுதிக்குங்க….”
“வேண்டாங்க…..எனக்கு உபதேசம் ஒன்றும் தேவையில்லை..”
“என்னாது… என் உபதேசம் கிடைக்காதான்னு அவனவன் காத்துக்கிட்டு இருக்கான். நீங்க வாணாண்றீங்களே….!” என்று உரக்கச் சத்தம் போட்டார்.
எனக்கு அடிவயிற்றில் கிலி பிசைந்தெடுத்து, ”மன்னிச்சுடுங்க” என்று கூறியபடி, பேப்பரையும் பேனாவையும் மேஜை மீது வைத்தேன்.
அவர் இருக்கையிலிருந்து எழுந்தார். எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பெரியவாளையே தியானம் செய்யத் தொடங்கினேன்.
சித்தர் என்னருகில் வந்தார். என் வலது தோள்பட்டையைத் தொட்டார். “இந்தக் கையாலேதான் எழுதறீங்க… இதை எழுதவிடாம என்னாலே செய்ய முடியும்…. பார்க்கறீங்களா?” என்று கூறி லேசாக அழுத்தினார். அடுத்த கணம், என் கை சற்று கீழே இறங்கி, தொள தொளவென்று ஆடியது. பெரும் திகில் என்னைப் பற்றிக் கொண்டது. கண்களில் நீர் முட்டி நின்றது. உடம்பே நடுங்கியது. என்ன செய்வது என்று புரியாமல் பதறிப்போனேன். அந்நிலையிலும் ‘பெரியவா, பெரியவா’ என்று நெஞ்சு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.
“என்னைப் பற்றி எழுதறேன்னு இப்பவாவது சொல்லுங்க… கையைச் சரி பண்ணிடறேன்” என்றார் அந்தச் சித்தர்.
அந்நிலையிலும் நான் வாயைத் திறக்கவில்லை!
அந்தச் சித்தர் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் நின்றிருந்தாலும், என்னுள்ளே நிலவிய அச்ச உணர்வை என் முகபாவம் அவருக்குக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.
“பாவம், ரொம்பப் பயந்து போயிருக்கீங்க. நான் கையைச் சரி பண்ணிடறேன். என் சக்தி என்னன்னு இப்பவாவது நீங்க புரிஞ்சிகிட்டா போதும்” என்று என் வலது தோள்பட்டையைத் தொட்டு, கையைத் தடவி விட்டார். உடனேயே என் கரம் பழையபடி ஆகிவிட்டதை என்னால் உணர முடிந்தது.
அடுத்தபடி ஏதாவது செய்துவிடப் போகிறாரே என்ற பயத்தில், “நான் போகலாமா?” என்று சற்றுத் தயக்கத்துடனேயே கேட்டேன். அவர் சிரித்தார்.
“இப்பப் போயிட்டு வாங்க. பயமெல்லாம் முழுக்கத் தெளிஞ்சப்பறம் இன்னொரு நாள் வாங்க. பேசுவோம்” என்று கூறிக் கதவைத் திறந்து விட்டார். ‘இன்றைக்குத் தப்பித்தோம்’ என்று எண்ணியவாறு வீட்டுக்கு விரைந்தேன்.
வீட்டுக்குச் சென்ற பிறகு நடந்தவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் சாதாரணமாகத்தான் என் வீட்டாரிடம் நான் சொன்னேன். சித்தர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைக் கூறி, நான் மடித்து வைத்திருந்த அரிசி, பருப்பு, மஞ்சள் பொட்டலங்களைப் பிரித்துக் காட்டினேன். அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அறைக்குள் நான் அனுபவித்த வேதனையையும் என்னை வாட்டிய நடுக்கத்தையும் சற்று வேடிக்கையாகவே விவரித்தேன். ஆனால், படுத்துக்கொண்ட பிறகு நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
சித்தரின் முகபாவமும், பேச்சும், செய்கையும் சிந்தையைக் குழப்பி என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. மனதின் அடித்தளத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு கலக்கம். ஒரு திகில். ஒரு பீதி….! புரண்டு புரண்டு படுத்தேன்… அசதியில் ஒரு நொடி கண்ணயர்ந்தால், கனவில் தோற்றமும் பேச்சும் சுழன்றாடின. மறுகணம் அலறிப் புடைத்துக் கொண்டு ஒரு விழிப்பு… இந்த அரட்டல் புரட்டலிலே பொழுதும் விடிந்து விட்டது.
ஏறத்தாழ ஒரு வாரம், என் அன்றாட அலுவல்களில் ஓர் இயந்திரத்தன்மை நிலவியதற்கு மாறிய என் மனநிலைதான் காரணம் என்று என்னால் உணர முடிந்தது.
படுத்தேன், எழுந்தேன், குளித்தேன். படித்தேன், பேசினேன், உணவருந்தினேன், அலுவலகம் சென்றேன், எழுதினேன், திருத்தினேன், மாலை நண்பர்களுடன் ஓட்டலுக்குச் சென்றேன். சினிமா பார்த்தேன், சிரித்தேன், அரட்டை அடித்தேன். ஆனால், அன்று நடுநிசியில் அந்த அறைக்குள் நடந்தவை ஆழ்மனதில் குடியேறி, என் செயல்களுக்குச் செயற்கை முலாம் பூசி, நெஞ்சை நெருடிக் கொண்டிருந்தன. என் எண்ணங்களின் பின்னணியில், இன்னது என்று அடையாளம் காண முடியாத அச்சமும் கலவரமும் எதிரொலித்துக் கொண்டிருக்க, எதையுமே வெளியில் சொல்ல முடியாமல் நான் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தேன். என் அகவாழ்க்கை, புறவாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டுப் போய், ஒரு பீதி என்னை நிரந்தர நிழலாகத் தொடர்ந்து கொண்டிருப்பது போன்ற திக்பிரமையில் சிக்கி, அதனின்றும் மீள வழி தெரியாமல் சிதைந்து போனேன்.
நான் எத்தனைதான் மறக்க முயன்றாலும், அந்த நள்ளிரவின் அசாதாரண நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வந்து, என்னை வாட்டி வதைத்தன. நான் சித்தரிடம் நடந்து கொண்டதும் பேசியதும் முறையற்றவையாக இருந்தால், அதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்குமோ என்ற தவிப்பு ஒரு புறம்; அவரிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்து, நான் போகாமல் இருந்தால் விபரீதங்கள் ஏற்படுமோ என்ற மனக்கொந்தளிப்பு மறுபுறம். நாளுக்கு நாள் இதுவே ஒரு மனநோயாகப் பரவி, பேய் பிடித்தவன் போல் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் மாலை, யாரிடமாவது சொன்னால்தான் அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் அரிய நண்பன் டன்லப் கிருஷ்ணன் இல்லம் சென்று அழமாட்டாக் குறையாக என் மனநிலையை எடுத்துக் கூறினேன்.
“‘ பெரியவா இருக்கா, பார்த்துப்பா’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லும் நீயே இப்படிப் பயந்துண்டிருக்கியே” என்று என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நண்பன், எனக்குத் தைரியம் சொன்னான்.
” தைரியமாக இருக்கும்படி பக்தி அறிவுறுத்துகிறது. ஆனால், நெஞ்சு குமுறித் துடிக்கிறது. நான் என்ன செய்ய? எனக்கு உடனே பெரியவாளைப் பார்த்து, எல்லாத்தையும் அவர்கிட்டே சொல்லியாகணும். நீ என்னோட வரணும்… நீதான் காரை ஓட்டணும்… உடனே புறப்படு…. இப்பவே போயாகணும்” என்று அவசரப்படுத்தினேன்.
அப்போது பெரியவா காஞ்சீபுரத்தில் இல்லை. தமிழ்நாடு- ஆந்திரா எல்லைப் பகுதியில் யாத்திரை செய்து கொண்டிருப்பதை அறிந்து புறப்பட்டுச் சென்றோம்.
இரண்டு மூன்று இடங்களில் காரை நிறுத்திப் பெரியவா இருக்குமிடத்தை விசாரித்துக் கொண்டே போனோம்.
இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும்… ஒரு சாலையில் வேகமாகப் போக்கொண்டிருந்தபோது “கிருஷ்ணா, அதோ சைக்கிள் கூண்டு வண்டி நிக்கறது, பெரியவா இங்கேதான் தங்கியிருப்பா…காரை நிறுத்து” என்றேன்.
கார் நின்றது. நாங்கள் இறங்கிச் சென்றோம். பாராக்காரர் சுப்பையா மற்றும் ஓரிருவர் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சாலையை ஒட்டினாற்போல் ஒரு பாழடைந்த சிறு மண்டபம். வாசலில் கண்ணன் உட்கார்ந்திருந்தார்,(நான் எத்தனைதான் ஞாபகப்படுத்திப் பார்த்தாலும் பெரியவா அப்போது தங்கியிருந்த இடத்தை இப்போது என்னால் நினைவு கூர முடியவில்லை. கண்ணனாலும் தெளிவாகக் கூற முடியவில்லை.)
எங்களைக் கண்டதும், “எங்கேடா ரெண்டு பேரும் இந்த அர்த்தராத்திரியில் வந்தேள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் கண்ணன்.
“அதையெல்லாம் அப்புறம் சொல்கிறேன். பெரியவாளை நான் உடனே தரிசனம் பண்ணணும். ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்று கூறினேன்.
“பெரியவா படுத்துண்டுட்டா…அதோ அந்த சாக்குத் திரைக்குப் பின்னாலேதான் படுத்துண்டிருக்கா… இத்தனை நேரம் தூங்கிப் போயிருப்பா…இங்கே இடமில்லே…கார்லேயே படுத்துக்கோங்கோ” என்று கண்ணன் கூறியது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.
நாங்கள் காரை நோக்கிப் புறப்பட்ட நேரத்தில், “யார்ராது கண்ணா? ஸ்ரீதர் வந்திருக்கானா?” என்று திரைக்குப் பின்னாலிருந்து பெரியவாளின் அபயக் குரல் கேட்டது.
“ஆமாம்” என்றார் கண்ணன்.
“வரச் சொல்லு.”
கண்ணன் என்னை உள்ளே அழைத்துச் சென்றார். சயனித்துக் கொண்டிருந்த ஆபத்பாந்தவன் எழுந்து உட்கார்ந்தார். கண்ணீர் பெருக, வந்தனம் செய்து எழுந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன்.
“என்னப்பா?”
வாத்சல்யமும் வாஞ்சையும் அன்பும் பரிவும் கலந்த அந்த அமுதக் கேள்வி, வான்மழையாகப் பொழிந்து, நெஞ்சைக் குளிர்வித்தது.
நடந்தவற்றை ஒரு விவரமும் விடாமல் விவரித்தேன். வெட்கமின்றி என் பயத்தை விளக்கினேன். பெரும் சஞ்சலத்திலிருந்து என்னை மீட்கும்படி வேண்டினேன்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவர், “நீ ஏன் அவரைப் பார்க்கப் போனே?” என வினவினார். கேள்வி சுருக்கென்று தைத்தது.
“அண்ணா வயிற்று வலியால் துடிச்சதை என்னால் தாங்க முடியலே. டாக்டர் குடுத்த மாத்திரைகள் வலியைக் குறைக்கலே. ஏதாவது அற்புதங்கள் செய்து, உடனடியாக வலியைக் குறைக்க மாட்டாரா என்ற ஆசையில் அவரிடம் போனேன். ஆபரேஷனுக்குப் பெரியவாளிடம் ஆசி வாங்கிக் கொண்ட பிறகு வேறொருவரிடம் சென்றது தப்புதான். அந்தப் பாவத்தை நான் ஒரு வாரமா அனுபவிச்சிண்டிருக்கிறதா தோண்றது. அவர் ஏதாவது பண்ணிவிடுவாரோன்னு பயமாயிருக்கு. பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும். அதான் ஓடி வந்தேன்” என்று நெஞ்சு படபடக்க, நா குழரக் கூறினேன்.
“ஏன் பயப்படறே? அவராலே உன்னை என்னடா பண்ண முடியும்?”
நன்றிக் கண்ணீர் ஊற்றெனப் பெருகி வழிந்தது. நெஞ்சில் கனத்த சுமை சட்டென்று குறைந்தது.
“இது மாதிரி பண்றவா யார்கிட்டேயும் நீ இனிமே எதுக்கும் போகாதே.”
“சரி…”
“ஊருக்குப் போயிட்டு வா.”
“பன்னண்டு மணிக்கு மேலே ஆயிடுத்து. ராத்திரி தங்கிட்டு, கார்த்தாலே போறேன்” என்றேன் நான்.,
“ஒரு பயமும் இல்லே. நீ இப்பவே புறப்பட்டு போ…” என்று மீண்டும் உத்தரவு தந்தார் பெரியவா.
எழுந்து மீண்டும் வந்தனம் செய்துவிட்டுப் புறப்பட்டேன்.
பூர்ண நிலவொளியில், பூர்ண மன அமைதியுடன் நானும் நண்பனும் பயணித்துக் கொண்டிருந்தோம்.
“அவராலே உன்னை என்னடா பண்ண முடியும்?”
நள்ளிரவில் தோன்றிய பயத்தை, நள்ளிரவிலேயே கிள்ளியெறிந்த கேள்வி இது.
கேள்வியிலேயே விடையும் அடங்கியிருந்த பெரியவாளின் இந்தக் கேள்வி ‘நான் இருக்க பயமேன்’ என்று என் உள்ளத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. எதிரொலித்தது.
இதுவே எனக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் தகர்க்க முடியாத அரணாகவும் அமைந்து விட்டது. இந்தக் கவசமும் அரணும் அச்சமேயற்ற பெரும் நிம்மதியைத் தந்தன. அந்த மன நிம்மதியில் ஆனந்தம் பிறந்தது. மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசிக் கொண்டே இரவோடு இரவாகச் சென்னையை அடைந்தோம்.
வீட்டுக்குள் நுழையும்போது இருள் விலகி, விடிந்து விட்டிருந்தது.

மகான்கள்

காஞ்சி மஹான், மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை. பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஜமீன்தாரிடம் கேட்டார்.
“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”
ஜமீந்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?
“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார்.
அன்றிலிருந்து அந்த வடநாட்டு இளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.
அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில்.
இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.
எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான் , ஒவ்வருவரிடமும் “சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார்.
பவார் முகாமின் காவலாளியாக வெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?
“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். மடத்து நிர்வாகியை அழைத்தார்.
“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போடா வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா? நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் போட்டால் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.
சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒரு சிறிய தூக்கு.
விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்தில் உணவு கொண்டு போவதாகவும், வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர்.
காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார்
“இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக் கொடுக்க முடியுமா?” ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.
“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கை அங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது.
புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.
தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப்ப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.
அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.
பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம் செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது….
“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.
ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.
“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.
மஹானின் “மேனா” வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான்.
அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.
விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விளக்கிப் பார்த்த பவார் அதிர்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.
“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.
பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்கு அவர்களுடன் போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான், என்பது உண்மை.
இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது.
இடம் கிடைகாத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…
ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்க ஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன் வரக்கூடாது என்று உத்தரவு.
ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார்.
சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகை வாயில் தெரிந்தது.
ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.
“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு…
“எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செத்தபின் குகைக்குள் நுழைந்தார்.
என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது.
சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். “இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.
உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை.
மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின.
தன்னையே நம்பாதவனாக, வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.
வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான மஹான், “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவன்.

17. 2, 2014

மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள்



கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமும், வழிபாடும் மிகச் சுலபமாக இறைவனை அடையும்
வழியாகும். ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர ஐயர்வாள், மருதாநல்லூர் சுவாமிகள்
மூவரும் நாமசங்கீர்த்தனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஆவர்.

நாமபஜனையில் பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, மிருதங்கம்
போன்ற வாத்தியங்களை இசைத்து மனதை ஒருமுகப்படுத்தி புனிதமான இறைவழிபாட்டு
முறையை மேம்படுத்தியவர் சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள்.

சீதாகல்யாணம், ராதாகல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பஜனை
சம்பிரதாயங்களை உருவாக்கி, "மருதாநல்லூர் பாணி" என்று புகழ்பாடும் அளவிற்கு
அதை மக்களிடையே பரப்பியவர்.

1777 முதல் 1817வரை 40 ஆண்டுகள் வாழ்ந்தார். இளம்பிராயத்தில் "வெங்கட்ராமன்'
என்ற பெயர் பெற்ற சுவாமிகள், தெலுங்கு பிராமணர் வம்சத்தில் பிறந்தவர். இவரது
தந்தை காவியங்களில் பற்றுடையவர்.

பக்திமான் என்பதால், சுவாமிகளுக்கு வேதத்துடன் கூட, ராமகாவியத்தை திரும்பத்
திரும்ப சொல்லி மனதில் பதிய வைத்தார். இதனால், ராமஜபம் மட்டுமில்லாமல்,
உள்ளும் புறமும் தன்னை ஸ்ரீராமனாவே பார்த்துக் கொண்டார்.

பாகவதர்களின் இருப்பிடமாகிய திருவிசைநல்லூரில் வசித்த இவருக்கு, சிறுவயதிலேயே
இவரது தாயார் பல மகான்களின் கதைகளைச் சொன்னார். தன் தந்தை செய்த சிரார்த்தம்
முதலான வைதீக காரியங்களில் பிழைப்புக்காக ஈடுபட்டு வந்தார்.

ஒருநாள் பக்கத்து ஊருக்கு சிரார்த்தம் செய்ய சென்ற போது, ராமநாம ஜபம் செய்ய
ஆரம்பித்து விட்டார். காலையில் ஆரம்பித்த ஜபம் மாலையில் தான் முடிந்தது.
சிரார்த்தம் பற்றிய நினைப்பு வந்தவுடன், ஓடிச்சென்று அந்த வீட்டுக்காரரை
பார்த்து மன்னிப்பு கேட்க முயற்சி செய்த போது,  "நீங்கள் இன்று வெகுநன்றாக
சிரார்த்தம் செய்து வைத்தீர்கள்,'' என்று சொன்னதைக் கேட்டு, பகவத் அருளை
நினைத்து திகைத்து நின்று விட்டார்.

இவர் ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தந்தையார் இறந்த பிறகு,
குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊருக்குச் சென்று குழந்தைகளுக்கு வேதம் சொல்லித்
தந்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது
புகழ் எங்கும் பரவியது. கூட்டம் பெருகியது. இது இவரது ஜப வாழ்க்கைக்கு
இடையூறாக அமைந்தது.

எனவே, தம் சொத்துக்களை உறவினர்களிடம் கொடுத்து விட்டு ராமஜபம் செய்யும்
ஆசையில் அயோத்திக்கு புறப்பட்டு விட்டார். உஞ்சவிருத்தி எடுத்து
நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திரா வந்து விட்டார். திருப்பதி செல்லும்
பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ராமா ராமா என்று சொல்லி ஆடிப்பாடிக்
கொண்டிருப்பதை கண்டார்.

"தமிழகத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கே வெட்கப்படுகிறார்களே! ஆனால், இங்குள்ள
மக்கள் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்களே,'' என எண்ணியவராய், வடக்கே இருந்த
சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து ஒருநாம
சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார்.

அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி, "" உன் பிறப்பின் நோக்கத்தை அறிந்த
பிறகும் அயோத்திக்கு ஏன் செல்கிறாய். உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை
பரப்ப ஏற்பாடு செய்,'' என்றார். உடனே, சுவாமிகள் மருதாநல்லூர் திரும்பி
விட்டார்.

ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஐயர்வாள், பத்ராசலம் ராமதாசர்
போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஒரு அழகான நாமசங்கீர்த்தன முறையை
உருவாக்கினார். அதை அந்த ஊரில் உள்ள எல்லா பெரியவர்களுக்கும்,
குழந்தைகளுக்கும் கற்றுத் தந்தார். மருதாநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார்.
இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்றபோது, சமாதி
எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. அவரது சமாதியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற
தீர்மானத்துடன் 9 நாட்கள் உண்ணாமல்,உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார்.

10வது நாள் உத்வேகம் வந்தவராய், காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து
கேட்க, ஓரிடத்தில் சிம்ம கர்ஜனையாக "ராம் ராம்' என்ற நாமம் காதில் கேட்டது.
அந்த இடமே மகானின் ஜீவசமாதி என்பதை அறிந்த சுவாமிகள்

தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் சமாதி அமைக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகள்
சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில்
ஆஞ்சநேயர் தோன்றி, ""உன்னைத் தேடி ராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளார்,'' என்று
சொன்னார். இதனால் சரபோஜி மன்னர், சுவாமிகளின் பாதங்களில் விழுந்து
ஆசிபெற்றார்.

மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அவர்
உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது, பாலகலோசன் என்பவர் அவரை அவமரியாதை செய்தார்.
இதனால் அவருக்கு வயிற்றுவலி வந்து அவஸ்தை அதிகமானது. அவரது மனைவி சுவாமிகளிடம்
மன்னிப்பு கேட்டு தீர்த்தம் பெற்றார். அதை கணவருக்கு அளித்தாள். வயிற்றுவலி
நீங்கிய பாலகலோசன் அவரது சீடரானார். அந்த சீடர் எழுதிய, "அதடே பரபிரும்மம்' என்ற பாடல் குருவணக்கமாக பாடப்படுகிறது.

1817ல், ராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி
சந்நிதியில் இறைவனுடன் ஐக்கியமானார்.

பகவந்நாமா:
வாயால் பகவந்நாமாவைச் சொல்லிப் புண்ணியம் செய்யவேண்டும்.
“சம்பாதிப்பதிலேயே பொழுதெல்லாம் போய் விடுகிறது. இதற்கு அவகாசம்
இல்லையே” என்பீர்கள்.
சம்பாதிப்பது க்ருஹஸ்தர்களுக்கு அவசியம்தான். ஆனால்
யோசித்துப்பார்த்தால் அதற்கே முழு நேரமும் போய்விடவில்லை என்று தெரியும்.

வீண் பேச்சு, பரிஹாசம், வேடிக்கை பார்ப்பது, நியூஸ்பேப்பர் விமரிசனம் இவற்றில்
எவ்வளவு பொழுது வீணாகிறது!

அதையெல்லாம் பகவந்நாம ஸ்மரணயில் செலவிடலாமே. இதற்கென்று தனியே
பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை.

ஆபீஸ்க்கு பஸ்சிலோ, ரயிலிலோ போகும்போது பகவந்நாமாவை ஜபித்துக்கொண்டே போகலாமே!
ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன்வராதே.
மறுஉலகத்தில் செலவாணி பகவந்நாமா ஒன்றுதானே.
மனசு பகவானின் இடம்.

அதை குப்பைத்தொட்டியாக்கியிருக்கிறோம். அதை
சுத்தப்படுத்தி, மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமர்ந்து
விட வேண்டும். தினமும் இப்படி ஐந்து நிமிஷமாவது தியானம் செய்ய வேண்டும்.

லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்கவேண்டிய காரியம் இது. ஏனெனில், லோகம்
முழுகும் போது நமக்கு கைகொடுப்பது இந்த பகவந்நாமாதான்.

17. 2, 2014

மகான்கள்- சித்தேஸ்வர சுவாமிகள்



அரசனுக்கும் உயரத்தில் ஆசனமிட்ட சித்தர்: தமிழ்நாட்டில் வேலூரை அடுத்துள்ள ஆம்பூரிலும், கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் சாவளிகே என்ற இடத்திலும் சித்தேஸ்வர சுவாமிகள் எனும் சித்தர் சமாதி அடைந்துள்ளார். இது மட்டுமல்ல, இவர் வாழ்வில் மிகப்பல அற்புதங்களையும் செய்திருக்கிறார். குல்பர்காவில் கொல்லூர் எனும் கிராமத்தில் பிறந்த சிவலிங்கேஸ்வரர் சிறு வயதிலிருந்தே தெய்வீகம் நிறைந்தவராகவே இருந்தார். பலபேரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார். ஒரு முறை இப்பகுதிக்குப் படையெடுத்து வந்த அவுரங்கசிப் நதியின் மீது ஆசனமிட்டு நமாஸ் செய்தார். அவருக்கு மேல் அந்தரத்தில் பத்மாசனமிட்டு சுவாமிகள் அமர்ந்திருந்ததைப் பார்த்துத் தன் பெருமையை ஒழித்தார் மன்னர். சுவாமிகளின் அறிவுரைப்படி அவரவர் நாடுகளை அவரவரிடமே திருப்பித்தந்தார்.
இப்படிப் பல வருடங்கள் வாழ்ந்த சித்தேஸ்வர சுவாமிகள் கடைசியில் சாவளிகே என்ற இடத்தில் பல வருடங்கள் வாழ்ந்து, உயிரோடு தன்னை குகையில் வைத்து மூடுமாறு செய்தார். ஒரு வாரம் கழித்து குகையைத் திறந்தபோது அங்கு விபூதிக் குவியல் இருப்பதைக் கண்டனர். சாவளிகே மடம் பின்னர் பக்தர்களிடையே பெரும் புகழ் பெற்றது. கர்நாடகாவில் அப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டபோது வீரசைவ லிங்காயத்து சமூகத்தினர் பலரும் தெற்கே வந்தனர். இவர்களுள் பல குடும்பங்கள் ஆம்பூரில் குடியேறின. சாவளிகே மடத்தில் சமாதியடைந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இங்கு கடைத்தெருவில் அமர்ந்து, பலருக்கும் விபூதி கொடுத்து குணமடையச் செய்வதைப் பார்த்த இவர்கள் அதிசயம் அடைந்தனர். சுவாமிகளை மிகுந்த மரியாதையுடன் கொண்டாடினர்.
இச்சமயத்தில் இப்பகுதி வழியே சென்ற ஆற்காடு நவாபின் குதிரையின் வேகத்திற்கு ஏற்ப, தான் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை ஓடச் செய்தார்! வியந்து போன நவாப், சுவாமிகளை வணங்கினார். அவர் தங்குவதற்கான இடத்தையும் தானமளித்தார். அந்த இடத்திலேயே சமாதியடைந்த சுவாமி, வானில் பறக்கும் பறவைகளின் நிழல் தன் சமாதி மேல் பட்டாலும் அவைகளுக்கும் மோட்சம் கிடைக்கும் என்றார். அதனால் சமாதியின் மேல் விதானத்தை மூடாமலே கோயில் அமைத்தனர். அக்கோயிலையே இப்போது புணருத்தாரணம் செய்து மிகச் சிறப்பாக திருப்பணி செய்து வருகிறார்கள்                                           
17.2, 2014

மகான்கள்



காவிரி பாயும் சோழவள நாட்டிலே – நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் – வீரவேளாளர் மரபிலே வாழ்ந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டர் சோழருடைய படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் அஞ்சாத வீரர். கொலை செய்வதில் வல்ல புலி போன்ற குணம் மிக்கவராதலால், இவருக்கு கோட்புலியார் என்று காரணப் பெயர் ஏற்பட்டது. இப்பெயர் இவரது இயற்பெயராக இருக்கும் என்று எண்ணுவதற்கில்லை. எண்ணற்றப் போர்க்களம் சென்று பகையரசர்களை வென்று மன்னர்க்கு எல்லையற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அதனால் அவருக்கு இச்சிறப்புப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். வீரம் வளர்த்த கோட்புலியார் அரனாரிடத்து எல்லையில்லா பக்தி பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவியலைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தினார். ஒருமுறை நாயனார் அரச கட்டளையை ஏற்றுப் போர்முனைக்குப் புறப்பட்டார். போருக்குப் போகும் முன்னே தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத்துரோகமாகும். இது இறைவன் ஆணை. கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு புறப்பட்டார். கோட்புலியார் சென்ற சில நாட்களுக்கெல்லாம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லோரும் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக எடுத்துச் செலவு செய்தனர்.
போருக்குச் சென்றிருந்த கோட்புலியார் வெற்றி பெற்று நாடு திரும்பினார். சுற்றத்தார்களும், உறவினர்களும் நெற்குவியலை எடுத்து உண்டதை அறிந்து சினங்கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள் வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக்கொண்ட சுற்றத்தார் அத்தனை பேரையும் அழைத்தார். ஒருவரையும் தப்பி ஓடிவிடாதபடி காவல்புரியச் செய்து தம் தந்தையார், தாயார், உடன்பிறந்தார் மனைவியர்கள், சுற்றத்தார் ஆகிய அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு அவரது வாளுக்குத் தப்பிய பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை! அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இவன் அன்னத்தை உண்டதில்லை. இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியும் என்று பணிவோடு வேண்டினான். அவன் மொழிந்ததைக் கேட்டு, மேலும் கோபம் வளர நாயனார், இப்பாலகன் அன்னத்தை உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட அன்னையின் மூலைப் பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இரு துண்டாக்கினார். அப்பொழுது சடைமுடிப் பெருமானார் விடையின் மீது எழுந்தருளினார். அன்பனே! உன் உடைவாளால் உயிர் நீத்தோர் அனைவரும் பிறவி என்னும் பாவத்தை விட்டு அகன்றவராயினர். அவர்கள் சிவபுரியில் இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையில் நம்முடன் அணைவாய் என்று அருள் புரிந்தார் சிவபெருமான். கோட்புலியார் காட்டிய பக்தியின் சக்தி அனைவருக்கும் பிறவாப் பெருவாழ்வைக் கொடுத்தது!
குருபூஜை: கோட்புலி நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்.
 

17,2.2014

மகான்கள்


சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற இடம் அமைந்திருந்தது.இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை செய்து வந்தனர்.ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்ததுவரும் அதிபத்தர் முதல் மீனை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார்.எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.இவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை. அந்த மீனையும் இறைவனுக்கு என்றே கடலுக்குள் வீசி விட்டு வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்புவார். இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும் சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறுகச் சிறுகக் குறையத் தொடங்கியது.ஒருநாள் அதிபத்த நாயனார் வலை வீசிய போது அவரது வலையில் விசித்திரமான ஒரு மீன் கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அபபொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப் பெற்றிருந்தது. வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை.எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்ற மட்டில்லா மகிழ்ச்சியோடு இறைவனை நினைத்தவாறு அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி எறிந்தார்.அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது.இறைவன் உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் எம்பெருமான்.
குருபூஜை: அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

 17.2,2014

மகான்கள்- புத்தர்


கபிலவஸ்து என்னும் நாட்டின் மன்னனான சுத்தோதனருக்கும் மகாமயாவுக்கும் மகனாகப் புத்தர் பிறந்தார். இவரது இயற்பெயர் சித்தார்த்தர். லட்சியத்தை அடைந்தவர் என்பது இதன் பொருள். இவர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். சித்தார்த்தர் பிறந்த சில நாட்களிலேயே அவரது தாய் இறந்துவிட்டார். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக தந்தையால் வளர்க்கப்பட்டார். அரசர்களுக்கே உரிய கல்வி, போர்ப்பயிற்சி போன்ற அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். யசோதரா என்ற பெண்ணை மணந்து ஓர் அழகான மகனையும் பெற்றார். புத்தரின் அரசபோக வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. வாழ்வில் எந்தக் குறையும் இல்லை.
ஒரு நாள் வெளியில் பவனி வந்தபோது, ஒரு வயோதிகர், ஒரு நோயாளி, இறந்த ஒருவரின் இறுதி யாத்திரை ஆகியவற்றைக் கண்ட சித்தார்த்தர் மிகவும் சிந்தித்தார்! மூப்பு, பிணி, சாக்காடு இவற்றுக்குக் காரணம் என்ன? இவற்றைத் தவிர்க்க முடியாதா? என்று ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார் சித்தார்த்தர். ஒரு துறவியிடம் அவற்றைக் குறித்து விளக்கம் பெற்றார். துறவு மேற்கொள்ளும் உறுதியுடன் புறப்பட்டுவிட்டார் புத்தர். இளவரசர் புறப்பட்டதைக் கண்டு துணுக்குற்ற தேரோட்டி, இளவரசே! தங்களுக்கு வாழ்வில் என்ன குறை? அரச பதவி, அரண்மனை சுகம், அன்பு மனைவி, ஆண் மகன் என அனைத்தும் உள்ளன. இவற்றையெல்லாம் பிரிந்து சென்று என்ன சுகத்தைக் காணப் போகிறீர்கள்? என்று வினவினார். சித்தார்த்தர் பதிலேதும் கூறாமல் புன்னகைத்தார். உண்மை ஞானத்தைத் தேடி கயாவில் ஆறு ஆண்டு காலம் ஆழ்ந்த தியானத்தில் தவமியற்றினார். முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞானஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அதுமுதல் அவர் கவுதம புத்தர் என அழைக்கப்பட்டார். இடைவிடாத முயற்சியும் தவமும் ஞானத்தை அளிக்கும் என்பர். ஞானத்தை அடைய கடும் முயற்சி செய்யவேண்டும். அல்லது கடுந்தவம் செய்ய வேண்டும். சித்தார்த்தர் தாம் பெற்ற ஞானத்தை உலகின் நன்மைக்காக உபதேசித்தார். வாராணசிக்கு அருகில் உள்ள ஸாரநாத்தில் புத்தர்பிரான் தமது அருளுரைகளை வழங்கினார். அந்த நந்தவனத்துக்கு வடக்கில் ஒரு மடாலயத்தில் புத்தர் சில காலம் தங்கினார். பிற்காலத்தில், அங்கு அசோகச் சக்கரவர்த்தி ஒரு ஒரு சலவைக்கல் தூணை எழுப்பினார். அதன் உச்சியில் நான்கு கிரகங்களின் உருவம் செதுக்கப்பட்டது. இந்தச் சின்னமே நம் நாட்டின் தேசியச் சின்னமானது. பல இடங்களிலும் தாம் சந்தித்த மக்களின் குறைகளைத் தீர்த்த புத்தர், நாற்பது ஆண்டுகள் தமது உபதேசங்களை அருளினார். அவை ஆசியாவெங்கும் வேகமாகப் பரவின. கி.மு, மூன்றாம் நூற்றாண்டில் மாமன்னர் அசோகர், புத்தரின் கொள்கைகளைப் பரப்பியதில் முன்னணியில் நின்றார். கயாவிலிருந்த போதிமரக் கன்றுகளுடன் தமது பிரதிநிதிகளை அசோகர் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். புத்தர் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வலியுறுத்தினார். அன்பை நான்கு வகைகளாகக் குறிப்பிட்டார் புத்தர். பகைவனுக்கும் அருளும் பரந்து விரிந்த அன்பு கொள்ளுதல் மைத்ரி. உயிர்களிடம் இரக்கம் கொள்ளுதல் கருணா. சமத்துவ மனத்துடன் அனைவரிடத்திலும் அன்பு கொள்ளுதல் உபேக்ஷõ. உற்சாகத்துடன், நம்பிக்கையுடன் தொண்டு செய்தல் முதிதா எனப்படும்.
பிற நாடுகளில் வழக்கத்திலுள்ள மதக் கருத்துக்களுக்கு மாறுபட்ட புதிய கருத்துக்களைக் கூறிய சிந்தனையாளர்களும், சீர்திருத்தவாதிகளும், பெரிதும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பதை அவர்களின் வரலாற்றிலிருந்து அறியலாம். பின் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கும் பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80  வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது. புத்தபூர்ணிமா அன்று புத்தமதத்தினர் வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணிவர். அன்று மடாலயங்களிலும், வழிபாட்டிடங்களிலும், வீடுகளிலும் வழிபாடுகளையும் விழாக்களையும் நடத்தி மகிழ்வர். கீர் எனப்படும் பானம் அன்றைய தினம் அவர்களது உணவில் முக்கிய அங்கமாக இருக்கும். இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அத்தகைய சிறப்புடைய புத்தபூர்ணிமாவில், புத்தர் போதித்த உயர் நெறிகளைப் பின்பற்ற நாம் உறுதிகொள்ள வேண்டும்.

17 .2, 2014

சுகர ப்ரம்ம மஹரிஷி


suka brhamam
சுகப் ப்ரம்ம மஹரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருக்கக் கூடும். கிளி போன்ற முகம் உடைய இம்மகரிஷி சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப்பட்டார். இவர் மஹாபாரதத்தை உலகுக்குத் தந்த வேத வியாசரின் புதல்வர். ”சுக முனிவர்” என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் அருளியதுதான் ”ஸ்ரீமத் பாகவதம்.” என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது நேர் சீடர்தான் ஆதி சங்கரர். இதிலிருந்து சுக முனிவரின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.
இவரது காயத்ரி மந்திரம்
ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

17 .2, 2014

மகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 5


காஞ்சிப்பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ளது. நாடுமுழுவதும் சுதந்திரப்போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது.  டாக்டர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதிகளாக மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பெரியவரின் வருகையைக் கேள்விப்பட்ட சிறைக்கைதிகள் எப்படியும் அவரைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டனர். சிறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரிடம் அனுமதி கேட்டனர். கண்டிப்பு மிக்கவராக அந்த அதிகாரி இருந்தாலும், கைதிகளின் பக்தியுணர்வைக் கண்டு இரக்கப்பட்டு, தானும் அவர்களோடு பெரியவர் தங்கியிருந்த இடத்திற்குப் புறப்பட்டார். கூண்டிற்குள் அடைபட்ட பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல, கைதிகளும் மகிழ்ச்சியுடன் பெரியவரைத் தரிசிக்கக் கிளம்பினர். மாலை 5 மணிக்கு கிளம்பிய அவர்கள், ஆறுமணிக்குள் தரிசனத்தை முடித்து விட்டு, சிறைச்சாலைக்குத் திரும்பிவிட வேண்டும் என்பது அந்த அதிகாரியின் நிபந்தனை. சிறைக்கைதிகள்  வந்த நேரத்தில் பெரியவர்  வழக்கமான மாலை நேர பூஜையில் இருந்தார். பூஜை முடிய ஆறுமணிக்கு மேலாகும் என்று சீடர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர் வெளியே வந்தால் மட்டுமே தரிசிக்கமுடியும் என்ற நிலையில், என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். மாலை 5.45 மணி ஆகிவிட்டது. இன்னும் 15 நிமிடத்திற்குள் சிறைக்குள் சென்றாக வேண்டும். நேரம் சென்று கொண்டிருந்தது. பெரியவர் வருவதாகத் தெரியவில்லை.
இனி அவரைக் காண்பதற்கு இயலாது என்ற நிலையில், ஏமாற்றமான மனதுடன் கைதிகள் அதிகாரியுடன் கிளம்ப ஆயத்தமாயினர். ஆனால், திடீரென தன் பூஜையை முடித்துக் கொண்ட சுவாமிகள் வெளியே வந்தார். சிறைக்கைதிகள் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதித்தார். சற்றும் இதனை எதிர்பார்க்காத கைதிகள் ஆர்வத்துடன் அவரைக் காண ஓடினர். அப்போது கைதிகள் சுவாமிகளிடம் ஒருமித்த குரலில் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். சுவாமிகளும், நாடு விடுதலை அடைந்து மக்கள் யாவரும் சுதந்திரவாழ்வு வாழவேண்டும், என்று பிரார்த்தித்தார். தேசிய உணர்வு கொண்ட கைதிகளுக்கு பெரியவரின் சந்திப்பு உற்சாகத்தைத் தந்தது. அவர்களை ஆசிர்வதித்து பிரசாதமும் வழங்கி மகிழ்ந்தார்.இந்நிகழ்வைப் பற்றி, அந்த ஆங்கிலேய அதிகாரி தன் டைரியில்,துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படாமல், அதை எதிர்நோக்க மார்பைத் திறந்து காட்டும் சுதந்திரப் போராட்ட கைதிகள், அந்த மகாபெரியவரின் முன்னால், சாந்தமாக அடங்கி ஒடுங்கி நிற்பதை நான் இன்று கண்டேன்.இந்த ஆன்மிகப்பணிவினை இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். எனக்குமே அப்பெரியவரைப் பார்த்தபிறகு நான் ஒரு சிறைஅதிகாரி என்ற எண்ணமே மறந்துபோனது. என் மனம் அதிகாரத்தில் இருந்து விலகி அன்பு மார்க்கத்திலும், பக்தி நெறியிலும் சென்றது. இனி அன்பு வழியே என்வழி, என்று குறிப்பிட்டுள்ளார்.

Thursday, April 5, 2012

மகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 4


ஆங்கில எழுத்தாளர் பால்பிரண்டன் 1921ல் இந்தியா வந்தார். எழுத்தாளர் கே.எஸ். வெங்கடரமணியோடு சேர்ந்து ஆன்மிக ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார். இந்திய மகான்களைத் தரிசிக்கவேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. வெங்கடரமணி பால்பிரண்டனிடம்,காஞ்சிப்பெரியவர் ஒரு உண்மையான துறவி. பாதயாத்திரையாக இந்தியா முழுவதும் சென்று ஆன்மிக கருத்துக்களைப் பரப்பி வருபவர். யோக மார்க்க உண்மைகளை நன்கு அறிந்தவர். நீங்கள் அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தார்.அப்போது பெரியவர் செங்கல்பட்டில்  முகாமிட்டிருந்தார். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பால்பிரண்டன் பெரியவரை சந்தித்த நிகழ்ச்சி, பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் உபதேசம் பெற்றதைப் போல அமைந்தது. பிரண்டன் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக சந்தேகங்களுக்குரிய விடைகளை பெரியவரிடம் இருந்து பெற்றார். அவரிடம் பெரியவர், திருவண்ணாமலையில் இருக்கும் ரமணமகரிஷியையும் சந்தியுங்கள், என்றார். ரமணரையும் சந்தித்து பால்பிரண்டன் ஆசிபெற்றார். பால்பிரண்டன் காஞ்சிப்பெரியவரிடம் தான் பெற்ற அனுபவத்தை தன் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். குழந்தைப் பருவம் முதற்கொண்டே இறைப்பணியில் ஈடுபட்டிருக்கும் இப்பெரியவரை விட்டுப்பிரிய எனக்கு மனம் வரவே இல்லை. இம்மகான் பீடாதிபதியாக இருந்தாலும், அவரது மனம் அதிகாரத்தை நாடவில்லை. அவர் எல்லாவற்றையும் துறந்தவர். அவருக்கு அளிக்கும் காணிக்கைகளை எல்லாம் தகுதியுடையவர்களுக்கே பங்கிட்டு அளிக்கிறார். அவரது அழகிய உருவத்தை நான் ஒருபோதும் மறக்க முடியாது.
நான் செங்கல்பட்டில் தங்கியிருந்த நாளில் அந்த ஊரையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். சுவாமிகளை மறுபடியும் தரிசிக்க வேண்டும்என்ற ஆவல் என்னுள் உதித்தது. அவர் ஒரு பெரிய கூட்டத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கண்டு பெருமை கொண்டேன். கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் அந்த மக்களின் உள்ளத்தில் ஆழமாக இருந்தது. அவர்கள் வேறு எந்த சிந்தனையிலும் நாட்டம் செலுத்தவில்லை. அன்று இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். படுத்திருந்தபோது, என்னுடைய உடம்பிலுள்ள நரம்புகள் அனைத்தும் முறுக்கேறி இருந்தது. யாரோ என்னை இழுப்பது போல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. என்னைச் சுற்றி மின்சாரம் பாய்வது போல உணர்ந்தேன். எனது பக்கத்தில் வெளிச்சம் தோன்றியது. மிகுந்த பரபரப்பான நான் எழுந்தபோது, மகாசுவாமிகளின் உருவத்தைக் கண்டேன். அதில் எந்தவித ஐயமும் இல்லை. கருணையை வெளிப்படுத்தவே அவர் வந்திருந்திருப்பதை உணர்ந்தேன். தாழ்மையுடன் இரு; நீ கோருவதை எல்லாம் அடைவாய் என்று அவர் கூறுவதை என் காதுகள் உணர்ந்தன. அதன்பின் அந்த உருவம் மறைந்து விட்டது. மறக்க முடியாத இந்த நிகழ்ச்சியை எப்போதும் என் மனம் நினைத்துக் கொண்டே இருந்தது, என்று எழுதியிருக்கிறார். பால்பிரண்டனுக்கு கிடைத்த மகாபெரியவரின் அருள்பார்வை நமக்கும் கிடைக்கட்டும்.

F

மகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி-1


காஞ்சிப் பெரியவர் 1894, மே20ல் விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். தாயார் லட்சுமி அம்மையார். இவர்களுக்கு சுவாமிகளைத் தவிர நான்கு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இதில் சுவாமிகள் அவர்களின் இரண்டாவதாகப் பிறந்தவர். சுவாமிநாதன் என்ற பெயரே சுவாமிகளுக்கு பெற்றோர் சூட்டியதாகும். இவர்களது குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாதன். அவரது பெயரே  சுவாமிகளின் பெயராக அமைந்தது.  சுவாமிநாதன் எட்டுவயது வரை தந்தையிடமே கல்வி கற்றார். பின் திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர் நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார். இப்பள்ளியில் கண்டிப்பும் ஒழுங்கும் நல்ல முறையில் இருந்தன. அறிவுக்கூர்மையுடன் நன்கு ஆர்வத்துடன் படித்து வந்தார். ஆண்டு தோறும் பைபிள் ஒப்புவித்தல் போட்டி நடப்பது வழக்கம். இப்போட்டியில்  எப்படியும் பரிசு பெற்று விடுவது என்ற உறுதியுடன் சுவாமிநாதன் படித்து முதல்பரிசும் பெற்றார்.இவர் வெற்றி பெற்றது அனைவருக்கும்  ஆச்சரியத்தை தந்தது. எல்லா ஆசிரியர்களும் சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தனர்.  ஒருசமயம் அப்பள்ளியை ஆய்வு செய்ய உதவிக்கல்வி அதிகாரி மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். கண்டிப்பு மிக்க அவர், மாணவர்களின் கல்வித்திறனை அறிய சிக்கலான பல கேள்விகளைக் கேட்டார். சுவாமிநாதனின் தெளிவான பேச்சு அதிகாரியின் கவனத்தை ஈர்த்தது. நிச்சயம் இந்த மாணவர் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடைவார் என்று பாராட்டிச் சென்றார்.
சுவாமிநாதன் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியின் ஆண்டு விழாவில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான்மன்னர் என்ற  நாடகத்தை நடத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆர்தர் இளவரசர் வேடத்தில் நடிப்பதற்கு சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார் தலைமையாசிரியர். நாடகத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து சுவாமி நாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சுவாமிநாதனின் பெற்றோருக்கோ இதில் உடன்பாடில்லை. ஆனாலும், தன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் சுவாமிநாதன். அவரது விருப்பப்படியே பெற்றோர் நாடகஉடைகளை தைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டே நாட்களில் ஜான் மன்னருக்குரிய வசனங்களை மனப்பாடம் செய்து, அருமையாக நடித்தார். நாடகத்தைக் கண்ட தலைமை விருந்தினர் பிஷப், சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தார்.  இன்று ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் என்று சொல்லி முதல்பரிசை வழங்கினார்.  அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளாகி நமக்கு அருள்பாலித்தார். 

W

மகான்கள் - ஒரு பார்வை 4 ரமணர்


குருவருளும் திருவருளும் நிறைந்த சிவத்தலம் திருச்சுழி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ளது. எழில்சூழ்ந்த இந்த கிராமத்தில், அண்ணாமலையாரின் அருந்தவப்புதல்வரான ரமண மகரிஷி 1879 டிசம்பர் 30ல் அவதரித்தார். இவ்வூரில் பூமிநாதசுவாமி கோயில் உள்ளது. கோயில் அருகில் உள்ள கார்த்திகேயன் வீதியில் ஸ்ரீசுந்தர மந்திரம் என்று அழைக்கப்படும் ரமணரின் வீடு உள்ளது. சுந்தரமய்யர், அழகம்மாள் தம்பதியரின் இரண்டாவது பிள்ளையாக ரமணர் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் வேங்கடராமன். நாகசாமி, நாகசுந்தரம்,அலமேலு உடன்பிறந்தவர்கள். இவரது பரம்பரையில், யாராவது ஒருவர் தொடர்ந்து துறவியாவது வழக்கமாக இருந்து வந்தது. சுந்தரமய்யர் பிள்ளையை நன்கு படிக்கவைக்க எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், அவர் ரமணர் சிறுபிள்ளையாக இருந்தபோதே காலமாகி விட்டார். வேங்கடராமன் ஆரம்பக்கல்வியை திருச்சுழி சேதுபதி ஆரம்பப்பள்ளியில் தொடங்கினார். பின்பு, மதுரையில் சொக்கநாதர் கோயில் தெருவில் வசித்த சித்தப்பா சுப்பையர் வீட்டிற்கு வந்தார். (அந்த வீடு இப்போது ரமணாஸ்ரமம் என்று அழைக்கப்படுகிறது) அமெரிக்கன் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளியில் ஒருமுறை, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு வேங்கடராமன் பதில் சொல்லவில்லை. அதனால், ஆசிரியர் அப்பாடத்தை மூன்றுமுறை எழுதிவரும்படி அறிவுறுத்தினார். இதன் பிறகு, பள்ளிக்கல்வியைக் கற்பதில் ஈடுபாடு இல்லாமல், ஆன்மிக்கல்வி பயில ஆர்வம் கொண்டார். தன் அண்ணன் நாகசாமியிடம் ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினார்.
அண்ணனும் தம்பி பள்ளிக்குச் செல்வதாக எண்ணி, சித்தியிடம் 5 ரூபாய் வாங்கி பீஸ் கட்டும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், வேங்கடராமன் கோயில் நகரான திருவண்ணாமலை செல்ல முடிவெடுத்து, ரயில்டிக்கெட்டுக்கான 3ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை வீட்டிலேயே வைத்து விட்டார். திண்டிவனம் சென்று ரயில் மாற வேண்டும் என்று எண்ணி 2 ரூபாய் 78 காசுக்கு டிக்கெட் எடுத்தார். ஆனால், ஒருபெரியவர் திருவண்ணாமலை செல்ல விழுப்புரம் செல்ல வேண்டும் என்று சொல்ல விழுப்புரத்தில் இறங்கினார். கையில் இருந்த காசைக் கொண்டு மாம்பழப்பட்டு வரை சென்றார். அதன் பின் திருவண்ணாமலைக்கு நடக்க ஆரம்பித்தார். இரவான போது அரகண்டநல்லூரை அடைந்திருந்தார். அங்கிருந்த சிவன்கோயிலில் தங்கினார். சிறுவனின் வாடிய முகத்தைக் கண்ட நாதஸ்வர வித்வான் ஒருவர் பிரசாதத்தைக் கொடுத்தார். காதில் இருந்த தங்க கடுக்கனை அவ்வூரில் அடகுவைத்து 4 ரூபாய் பெற்றார். திருவண்ணாமலையை வந்தடைந்தார். உடைகள் தேவையில்லை என்று கோவணத்தைக் கட்டிக் கொண்டார். அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு பிரகாரத்தில் இங்குமங்கும் அலைந்தார். கையில் இருந்த மீதி சில்லறையை வேண்டாம் என்று குளத்தில் எறிந்தார். அண்ணாமலையாரை எண்ணி தியானத்தில் ஆழ்ந்தார். விழித்தபோது, உடலில் காயங்கள் இருந்தன. அவரைச் சிலர் பைத்தியம் என்று கல்லால் தாக்கியிருப்பதை உணர்ந்தார். கோயிலில் இருக்கும் பாதாள லிங்க அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார். முகத்தில் அருள்நிறைந்த வேங்கடராமனை ஊர் அன்பர்கள் ரமணா அழைத்தனர். ரமணருக்கு சேவை செய்ய பழனிச்சுவாமி, எச்சம்மாள், கீரைப்பாட்டி என்று பலர் வந்தனர். இதற்கிடையில், தனது மகன் திருவண்ணாமலையில் இருப்பதைக் கேள்விப்பட்ட ரமணரின் தாய் அழகம்மா பிள்ளையைக் காண வந்தார். அங்கேயே தங்கி மகனுக்கு சேவை செய்து முக்தி பெற்றார். தம்பிக்கு சேவைசெய்ய நாகசாமியும் வந்தார். பற்றற்ற ஞானியாக வாழ்ந்த ரமணர் 1950 ஏப்ரல் 14ல் இறைவனோடு கலந்தார். திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம், பாதணி, கைத்தடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணிய பூமியில் ரமணர் இன்றும் தங்கியிருந்து தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பக்தர்கள்.


மகான்கள் - ஒரு பார்வை 3 ரிஷ்ய சிருங்கர்


ஒரு காலத்தில் ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருந்தார். இவரது காலடி எங்கு பட்டாலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்கிறது புராணம். இவரது வரலாற்றை வால்மீகி முனிவர் சுவைபடச் சொல்லியிருக்கிறார்.
விபண்டகர் என்ற முனிவர் மகாகீர்த்திமான். யாக, ஹோம காரியங்களில் மிக மிக சிறந்தவர். அவரது புத்திரன் ரிஷ்யசிருங்கர். தாய் முகம் அறியாதவர். பிறந்தது முதல் தந்தையை மட்டுமே தெரியும். மழை இல்லாத இடத்தில் அவர் காலடி பட்டாலே போதும். வானம் பொத்துக் கொண்டு ஊற்றும். இவர் பிறந்தது முதல் காட்டிலுள்ள தங்கள் ஆசிரமத்திலேயே வசித்தார். தந்தையும், மகனும் மட்டுமே அங்கு வசித்தனர். அவரது நண்பர்களெல்லாம் காட்டில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, மான்கள், மற்ற விலங்குகள் மட்டுமே. இதைத்தவிர வேறு எந்த உலகப் பொருளையும் அறியாதவர் அவர். தந்தையைத் தவிர பிற மனித முகங்களை அவர் பார்த்ததே இல்லை. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி. யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகனுக்கு கற்றுக் கொடுத்தார். தந்தையார் கொடுக்கும் கனிவகைகள், எப்போதாவது தயாரிக்கும் பட்சண வகைகளைத் தவிர வேறு எந்த உணவையும் பற்றி தெரியாதவர். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத <உத்தமராக இருந்தார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்றவரின் காலடிகள் பட்ட இடத்தில் மழை கொட்டுவதில் வியப்பென்ன! இந்நிலையில் தான் அங்கதேசத்து அரசன் ரோமபாதன் மழையின்றி நாட்டு மக்கள் வாடுவதைக் கண்டு தானும் வாட்ட முற்றான். என்னவெல்லாமோ யாகங்கள் நடத்திப் பார்த்தான். வருண பகவான் மசியவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாண்டுகள் மழை தொடர்ந்து பொய்த்து விட்டது. குளங்களில் தேக்கி வைத்த தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியும் வற்றி விட்டது. மக்கள் இடம் பெயர முடிவெடுத்தனர். அரசன் அவர்களைச் சமாதானம் செய்தான். சிறிதுகாலம் பொறுத்திருக்க வேண்டினான். எப்படியேனும் மழை பெய்ய வைக்க பூஜைகள் நடத்த உறுதியளித்தான். அமைச்சர்களையும், அவ்வூரில் மிகச்சிறந்த பிராமணர்களையும் அழைத்து ஆலோசித்தான். அவர்கள் ரிஷ்யசிருங்கர் பற்றி தாங்கள் கேள்விப்பட்டதைக் கூறினர். அந்த மகான் நம் ஊருக்குள் நுழைந்தாலே, மழை கொட்டிவிடும். ஆனால், அதற்காக ஒரு பிரதி உபகாரம் செய்ய வேண்டும், என்றனர். மழைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதாக மன்னன் வாக்களித்தான்.
அரசே! ரிஷ்ய சிருங்கரை எவ்வகையிலாவது அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. ஆனால், அவருக்கு உங்கள் மகள் சாந்தையை கன்னிகாதானம் செய்து தர வேண்டும். சம்மதமா? என்றனர். காட்டுவாசியாக இதுவரை காலம் கழித்த முனிவருக்கு பெண் கொடுக்க எனக்கு எப்படி மனம் வரும்? அதிலும் நாட்டின் இளவரசியை மணம் செய்து கொடுப்பதென்றால்... என்றெல்லாம் அரசன் பேசவில்லை. முழு மனதுடன் சம்மதித்தான். எனக்கு நாட்டு மக்களின் சுகம் தான் முக்கியம். என் குடும்ப சுகம் அதற்கு பிறகு தான். சாந்தையை உறுதியாக முனிவருக்கு திருமணம் செய்து வைக்கிறேன், என சத்தியம் செய்தான். இதன்பிறகு முனிவரை அழைத்து வர யார் செல்வது என்ற சிக்கல் ஏற்பட்டது. பிற மனித முகங்களையே கண்டறியாத அந்த மகானை தாங்கள் போய் அழைத்தால் வரமாட்டார் என அமைச்சர்களுக்கு தோன்றியது. பிராமணர்களும் அவரை அழைத்து வரத் தயங்கினர். அவர்கள் ஒரு உபாயம் செய்தனர். இவ்வுலகில் பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை. எனவே தாசிகளை அனுப்பி அவரை மயக்கி அழைத்து வருவதென்று முடிவு செய்யப்பட்டது. தாசிகள் காட்டிற்கு அனுப்பப்பட்டனர். சந்தனம், அகில், வாசனைத் திரவியங்கள் பூசி, அலங்காரம் செய்து, மனதை மயக்கும் அழகுடன், அந்நாட்டிலேயே மிகச்சிறந்த தாசிப் பெண்கள் காட்டிற்கு சென்றனர். அவர்கள் விதவிதமான பட்சணங்களையும் தயாரித்திருந்தனர். காட்டிற்கு சென்ற தாசிகள் ரிஷ்யசிருங்கரின் தந்தை எங்காவது வெளியே போகட்டும் என ஒளிந்து காத்திருந்தனர். அவர்கள் நினைத்தது போலவே, விபண்டகர் வெளியே போய் விட்டார். அந்தப் பெண்கள் இதுதான் சமயமென்று ஆஸ்ரமத்திற்குள் சென்று, முனிவரைப் பணிவாக வணங்கினர். ரிஷ்யசிருங்கருக்கு ஆச்சரியம். உலகத்தில் இத்தனை அழகான ஜீவன்கள் இருக்கிறதா? இவையெல்லாம் நம்மைப் போல் இல்லையே. கண், காது, மூக்கு, கை, கால்கள் அப்படியே இருக்கிறது. ஆனால், உடை மாறியிருக்கிறது. இன்னும் சில வேற்றுமைகள் தென்படுகின்றன. இவர்கள் உடலில் நறுமணம் கமழ்கிறது, என ஆச்சரியப்பட்டார். அப்பெண்களை அவர் உபசரித்தார். ஆஸ்ரமத்திலுள்ள கனிகள், கிழங்குகளைக் கொடுத்தார். அவர்களுக்கு பூஜை செய்தார். அப்பெண்களும் பதிலுக்கு தாங்கள் கொண்டு வந்த பட்சணங்களைக் கொடுத்து சாப்பிடும்படி வேண்டினர். அவர் சாப்பிட்டுப் பார்த்தார். தினமும் ஒரே வகையான பழமும், கிழங்கும் தின்றவருக்கு இந்த பட்சணங்கள் தேனாய் சுவைத்தன. ருசியோ ருசி.
தன்னை மறந்த நிலையில் இருந்த சிருங்கரிடம், மகாமுனிவரே! தாங்கள் எங்களுடன் எங்கள் ஆஸ்ரமத்திற்கு வாருங்கள். அங்கு வந்தால், வித விதமான பட்சணங்கள் கிடைக்கும், என்றனர். ரிஷ்யசிருங்கர் ஒரு வித்தியாசமான உலகம் எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டார். தந்தை வரும் முன் கிளம்புவது உசிதமென அப்பெண்கள் தாபத்துடன் தூபம் போட, அவர் அங்கதேசத்துக்கு கிளம்பினார். அந்நாட்டு எல்லையில் நுழைந்தாரோ, இல்லையோ, மழை ஊற்றித் தள்ளியது. பத்து ஆண்டுகளாக தலைமறைவான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்து விட்டது. மக்கள், மன்னன் மகிழ்ந்தனர். கால்நடைகள் குதித்தாடின. சிறுவர்கள் மழையில் நனைந்து விளையாடினர். மன்னன் ரிஷ்யசிருங்கரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். தங்கள் நிலையை எடுத்துச் சொன்னான். ஒரு நல்ல காரியத்திற்காக தாசிகளை அனுப்பி உங்களை வரவழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக எங்களை மன்னிக்க வேண்டும். தங்களைப் போன்ற தவசீலர்கள் அவர்களிடம் நட்பு கொள்ளாலாகாது. தாங்கள் என் மகள் சாந்தையை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்றான். உலகம் என்றால் இன்னதென்று அறிந்து கொண்டு, நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்த முனிவர், சாந்தையை திருமணம் செய்து சுக வாழ்வு வாழ்ந்தார். அந்நாடு என்றும் செழித்திருந்தது. ரிஷ்ய சிருங்கரின் கதையைப் படித்த நாமும் நம் தமிழகத்தில் தேவையான மழை கொட்டுமென நம்புவோம்.


மகான்கள் - ஒரு பார்வை 2 சிவானந்தர்



இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல ! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி ! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877-ஆம் வருடம், செப்டம்பர் 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.
1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905-ஆம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913-ஆம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 1923-ஆம் வருடம், இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ஆம் வருடம் ஜூன் 1-ஆம் தேதி, சுவாமி சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927-ஆம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934- ஆம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். சுவாமிகள், தன்னை அறிந்துகொண்டு, விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி, 1963-ஆம் வருடம், ஜூலை 14-ஆம் தேதி, கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.


திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் சிவானந்தர். பலரும் இவரைக் குருவாக ஏற்றனர். இவரைக் காணவரும் பக்தர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்துக் கொண்டே இருப்பர். அவரும் அவற்றை தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார். உலகின் பல பாகங்களில் இருந்தும் பணமும், அன்பளிப்புகளும் ஆஸ்ரமத்திற்கு வரும். அதன்மூலம் துறவிகளுக்கு வேண்டிய உணவு, மருத்துவ உதவி, சிறந்த நூல்கள் என்று வேண்டியவற்றைச் செய்து மகிழ்ச்சி காண்பார். தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் சிவானந்தரை, கவியோகி சுத்தானந்த பாரதியார், கிவ்ஆனந்தர் (கொடுத்து மகிழ்பவர்) என்று போற்றினார்.




பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள்
இடைவிடாத ஆன்மிகப்பயிற்சியாலும், தியானத்தாலும் சிவானந்தரிடம் எப்போதும் ஞானம் குடிகொண்டிருக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எப்போதும் பரந்த மனப்பான்மையுடன் ஞானவிஷயங்களை வழங்கிக்கொண்டிருப்பார். இருபது முக்கிய ஆன்மிக போதனைகள், நாற்பது நல்லுரைகள், சாதன தத்துவம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஞான தானத்தை எப்போதும் எல்லோருக்கும் கொடுங்கள்! இவ்வாறு செய்தால், யார் யாருக்கு எதெது வேண்டுமோ அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்தவர்கள் ஆவீர்கள், என்கிறார் சிவானந்தர்.
நாத்திகனுக்கே முக்கியத்துவம்
தரம் குறைந்த செய்திகளுடன் வரும் பத்திரிகைகளுக்கும் சிவானந்தர் கட்டுரை அனுப்புவது வழக்கம். இதனால் சிவானந்தரை பலரும் விமர்சித்தனர். சிலர் கண்டனமே தெரிவித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சிவானந்தர், ஒரே தராசில் ஆன்மிக விஷயத்தையும், காமச் சுவையையும் எடை போட்டுப் பார்க்கும் வாசகர்கள் விரைவிலேயே ஆன்மிகவாதிகளாக மாறிவிடுவார்கள். முதலில் நாத்திகர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் தான், நான் ஆன்மிகவாதியாக மாற்ற வேண்டும், என்று பதிலளித்தார். அவரது கட்டுரைகளைப் படித்து விட்டு, இந்தியா, இலங்கை, பர்மா, மலேசிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் சிவானந்தரை நாடி வந்தனர்.
வாங்க குழந்தையே!
யாரும் எளிதில் அணுகும் விதத்தில் சிவானந்தர் மிக எளிமையான மகானாக வாழ்ந்தார். தரிசனநேரம் என்று தனியாக நேரம் எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தம்மிடம் வரும் பக்தர்களிடம் அவரவருடைய தாய்மொழியிலேயே பேசுவார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வரவேற்று உபசரிப்பார். சிறுகுழந்தைகளையும் நீங்கள் என்று மதிப்புடன் உபசரிப்பார். ஒருமையில் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்குகளிடம் கூட அன்புடன் கவனிப்பார். பசித்த உயிர்களுக்கு உணவிடுவதை ஒரு தாய்போல செய்வதில் அவருக்கு இணை அவரே. தன்னை பெரிய மகானாக எண்ணிக்கொள்ளாமல் சாதாரண மனிதராகவே பழகுவார்..
கொலைகாரனிடமும் இறைவன்
1950, ஜனவரி 8 மாலையில், சிவானந்தரின் ஆஸ்ரமத்தில் சத்சங்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மின்விளக்கு அதிகம் இல்லாத காலம் அது. அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அப்போது கோவிந்தன் என்னும் முரடன் சிவானந்தரைக் கொல்லும் நோக்கத்தில் கோடரியால் தாக்கினான். ஆனால், சிவானந்தர், தலைப்பாகை அணிந்திருந்ததால் அடி விழவில்லை. போலீசார் உடனே வந்து அவனைப் பிடித்தும் கூட அவனை தண்டிக்க சிவானந்தருக்கு மனமில்லை. பழங்கள், விபூதிபிரசாதம் கொடுத்து அவனை வழியனுப்பினார். திருடர், கொலைகாரர்களிடமும் இறைவன் இருக்கிறார் என்று எல்லாருக்கும் உபதேசம் செய்தார்.
மவுனமான நேரம் மனதில் ஏது பாரம்
*  எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள். உண்ணும் முன் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். சரிவிகித உணவை உட்கொள்வதும் அவசியம்.
*  மிளகாய், பூண்டு, புளி போன்ற உணவுவகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி, டீ, மாமிசம், மது போன்ற உணவுவகைகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
*  தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளுங்கள். முடிந்தால், சுறுசுறுப்பை உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.
*  தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள். விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லது. இது மனதுக்கு நல்லது. கண், வாய், செவி, மூக்கு, நாக்கு ஆகியவற்றை முடிந்தளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
*  உண்மையே பேசுங்கள்.இரக்கமும், கனிவும் கொண்டிருங்கள். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஒளிவுமறைவின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.
*  நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள். நன்மைக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். பெருந்தன்மை உணர்வுடன் செயல்படுங்கள்.
*  கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சகிப்புத்தன்மையுடன் பிறர் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும், சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.
* தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். உங்கள் சாதனைகளையும், ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடம் இருந்து விலகி விடுங்கள்.
*  உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையையும், உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.
*  பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு. தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் பணியையோ, தொழிலையேயோ கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகச் செய்யுங்கள். அதை அவருக்கே அர்ப்பணித்து விடுங்கள்.
*  உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள். உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.
*  பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். ஆடம்பரம், போலி கவுரவம், டம்பம், கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.
*  கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள். எல்லா நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
*  கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள். காலை எழும்போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.
* அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் பாடல்கள் பாடுங்கள். எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.
-இதயத்தை இதமாக்குகிறார் சிவானந்தர்

மகான்கள் - ஒரு பார்வை 1 குருஞானசம்பந்தர்!


ஸ்ரீ வில்லிப்புத்தூரில் வசித்த சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதியர் சிவனருளால் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஞானசம்பந்தன் என பெயர் சூட்டினர். குழந்தை பெரியவன் ஆனவுடன் மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்க மதுரைக்கு சென்றனர். ஞானசம்பந்தன் சொக்கநாதரை தரிசித்தான். தரிசனம் முடிந்து ஊர் திரும்பும்போது, பெற்றோரிடம், தான் சில காலம் கோயிலில் இருந்து விட்டு ஊருக்கு திரும்புவதாக கூறிவிட்டான். பெற்றோரும் அவனது எண்ணப்படியே விட்டுச்சென்றனர். பின்னர் அவன், மீனாட்சி சொக்கரை தம் பெற்றோராகவே பாவித்து வந்தான். ஒருசமயம், அவன் தனியே லிங்கபூஜை செய்ய விரும்பி, தனக்கு லிங்கம் வேண்டுமென சிவனிடம் வேண்டினான். அன்றிரவில் சிவன் அவனது கனவில் தோன்றி, பொற்றாமரைக் குளத்தின் ஓரிடத்தில் லிங்கம் கிடைக்கும். அதனை நீ பூஜித்து மகிழ்வாயாக! என்றார். மறுநாள் காலையில் பொற்றாமரைக் குளத்திற்கு விரைந்தான் சம்பந்தன். குளத்தில் நீராடிவிட்டு சிவன் கூறிய இடத்தில் பார்த்தான். ஒரு ஸ்படிக லிங்கம் அவனுக்கு கிடைத்தது. மகிழ்ச்சியடைந்த சம்பந்தன் மனதில் ஒரு குழப்பமும் உண்டானது. சிவலிங்க பூஜை செய்ய வேண்டுமானால், ஒரு குருவிடம் முறையாக தீட்சை பெற வேண்டுமே! நாம் யாரிடம் தீட்சை பெறுவது? என யோசித்தான். அன்றிரவிலும் சிவன் அவனது கனவில் தோன்றி, திருவாரூரில் வசிக்கும் ஞானப்பிரகாசரை குருவாக ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். அதன்படி திருவாரூர் சென்ற சம்பந்தன், ஞானப்பிரகாசரிடம் சீடராக சேர்ந்தான். அவர் சம்பந்தனுக்கு பல உபதேசங்கள் செய்தார்.
ஞானப்பிரகாசர் தினமும் காலையில் கோயிலுக்கு சென்று அர்த்தஜாம பூஜை முடியும்வரையில் இருந்துவிட்டு, அதன்பின்பு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பந்தரும் தினமும் அவருடன் கோயிலுக்கு சென்று வந்தான்.ஒருநாள் இருவரும் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பினர். அவர்களுக்கு வழிகாட்ட, தீப்பந்தம் கொண்டு வரும் பணியாளன் வெளியில் சென்று விட்டான். எனவே, சம்பந்தனே கையில் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு வந்தான். ஞானப்பிரகாசர் இதனை கவனிக்கவில்லை. இருவரும் ஆஸ்ரமத்தை அடைந்த போது ஞானப்பிரகாசர், நில்! என்று மட்டும் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். சம்பந்தனும் கையில் தீப்பந்தத்துடன் வெளியிலேயே நின்று விட்டான். சிறிது நேரத்தில் மழை பிடித்தது. இரவு முழுவதும் ஒரே மழை. ஆனாலும், சம்பந்தன் அவ்விடத்தை விட்டு அசையக்கூட இல்லை. அவன் வைத்திருந்த தீப்பந்தமும் அணையவில்லை. முன்பைவிட அதிக பிரகாசமுடையதாகவே எரிந்து கொண்டிருந்தது. மறுநாள் விடிந்தும் விட்டது. ஞானப்பிரகாசரின் மனைவி வாசல் தெளிக்க வெளியில் வந்தார். மழையில் நனைந்து, கையில் தீப்பந்தத்துடன் சம்பந்தன் நின்றிருந்ததைக் கண்டு திகைத்தார். தன் கணவரிடம் சென்று விபரத்தை கூறினார். வெளியில் வந்த ஞானப்பிரகாசர் தன் சீடன் இறையருள் பெற்றவன் என்பதை உறுதி செய்து கொண்டான். அவனிடம், ஞானசம்பந்தா! இன்று முதல் நீ குருவாக இருந்து மற்றவர்களுக்கு நல்உபதேசம் செய்வாய்! என்று வாழ்த்தி அனுப்பினார். ஞானசம்பந்தரும் மக்களிடம் சிவநெறியின் போதனைகளை உபதேசித்து வந்தார். மக்கள் அவரை குருஞானசம்பந்தர் என்று அழைத்தனர்.  தர்மபுரத்தில் சிவமடம் அமைத்து தொண்டாற்றிய அவர், அங்கேயே இறைவனடி சேந்தார். பிற்காலத்தில் அவரது சீடர்கள், அவர் பூஜித்த லிங்கத்தை அவ்விடத்திலேயே வைத்து கோயில் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...