இத்தலம் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ
.தொலைவில் உள்ளது.திருவீழிமலை ஒரு பாடல் பெற்ற
ஸ்தலம்.சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர்இந்த
திருத்தலம் குறித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள் . திருவீழிமலை என்று இந்த
ஊர் இன்று அறியபட்டாலும் ,இந்த ஊரின் சரியான பெயர் திருவீழிமிழலை என்பதே
ஆகும்.பார்வதி தேவி கார்த்தியாயினி ஆக மறு பிறவி எடுத்து சிவ பெருமானை
இங்கு மணந்தாக வரலாறு.பெருமாள் இங்கு 1000 புஷ்பங்களால் சிவ பெருமானை
வழிபட்டு சக்ராயுதம் பெற்றதாகவும் வரலாறு. மிழிலை குறும்பர் என்றொரு வேடர்
இங்கு இருந்ததாகவும் அவர் தினமும் சிவ பெருமானுக்கு விழாம் பழம் படைத்து
வணங்கினார் என்றும் ,அவரின் பக்தியை மெச்சி சிவ பெருமான் இங்கு காட்சி
அளித்தார் என்றும் சொல்லபடுகிறது.
சம்பந்தரும் நாவுக்கரசரும் இந்த ஊருக்கு வந்த சமயம் இங்கு கடும் வறட்சி
நிலவியது .மக்களின் கஷ்டத்தை போக்குவதற்கு இருவரும் இறைவனிடம் வேண்டினர்
.இருவேறு நேரத்தில் நடந்த நிகழ்ச்சி இது .சம்பந்தருக்கு மகா மண்டபம் முன்
உள்ள பீடத்தில் சிவ பெருமான் படி காசு (தங்க காசு) தினமும் ஓன்று வீதம்
அளிக்கிறார்.அதே போல் நாவுக்கரசருக்கு மேற்கு பிராகாரத்தில் உள்ள பீடத்தில்
படி காசு அளிக்கிறார். இருவரும் படி காசை வைத்து மக்களின் பசியை
போக்கினார்கள்.இத்தலத்தில் சிவ பெருமான் சுவேது கேதுவின் பொருட்டு எமனை
காலால் எட்டி உதைத்து சிரஞ்சீவியாக வாழ் அருள் புரிகிறார் . அதனால் இத்தலம்
எமபயம் நீக்கும் இடமாக விளங்குகிறது. அதனால் இங்கு மணிவிழா மற்றும்
சதாபிஷேகம் போன்ற விழாக்களும் சிறப்பாக செய்யபடுகிறது .
கார்த்தியாயினி சிவ பெருமான் திருமணம் இங்கு நடந்ததால் இறைவனுக்கு இங்கு
மற்றொரு பெயர் மாப்பிள்ளை சாமி .கார்த்தியாயினி சமேத மாப்பிள்ளை சன்னதி
ஓன்று உள்ளது .திருமணம் வேண்டுவோரும் குழந்தை வரம் வேண்டுவோரும் இங்கு
வேண்டி மாலை சாத்துகிறார்கள் .சன்னதிக்கு ஏறும் படிக்கட்டுக்கு கீழே இங்கு
பாதாள நந்தி உள்ளது .பாதாள நந்தியை வணங்கி விட்டு படி ஏறி மாப்பிள்ளை
சன்னதி செல்ல வேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக