செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சப்தகன்னியர்- நாராயணி என்ற வைஷ்ணவி

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் நாராயணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், சேந்தன்குடி பசுபதிகோயில் பரமகல்யாணி சமேத பசுபதீசுவரர் திருக்கோயில் ஆகும். நாராயணி, விஷ்ணு அம்சம் உடையவள். தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவள். சியாமள வர்ணம் உடையவள். மிக்க பலம் பொருந்தியவள். சங்கு, சக்கரம், அபயம், வரதம் அமைந்த நாற்கரத்தினள். கருடக்கொடி, கருடவாகனம் உடையவள்.

மயிலாடுதுறை பூம்பூகார் சாலையில் பசுபதி அக்ரகாரத்திற்கு அண்மையில் உள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அய்யம்பேட்டையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூர ஆட்டோ பயணம் செய்தால் ஜம்புகேஸ்வரர் சமேத அலங்காரவல்லி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைஷ்ணவி வழிபட்ட தலமாகும். வைஷ்ணவியின் தரிசனம் செய்தபோது சிவபெருமான், தனது திருக்கழல் தரிசனத்தை நிகழ்த்தியுள்ளார். அப்போது அம்பாள் மடந்தைப் பருவத்திளாய்(18 வயது) காட்சி அளித்துள்ளாள்.

வைஷ்ணவி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் விஷ்ணு அம்சி ; மகாலட்சுமியின் அவதாரம். ஒரு முகமும் - இரண்டு கண்களும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல - இடக் கரங்களை அபய - வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் - இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் - கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர்.

விஷ்ணு ஸ்திக்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி - யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் - திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து - நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்!

நாராயணி பாடல்: பரவுபுண்ணிய நாதனைப் பசுபதீச்சரத்து
விரவும் ஆதியை அடியருக்கெளிய வேதியனைப்
புரவுபூண்டொளிர் வயிணவி பூசனை புரிந்து
கரவுநீர்தரு வரமெலாம் பெற்றுமை களித்தாள்.

நாராயணி (வைஷ்ணவி) - பூஜா

ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வைஷ்ணவி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வைஸ்ணவி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவியை - நம:

காயத்ரி: ஓம் - தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்: ஸங்க சக்ர தராதேவீ
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வைஸ்ணவ்யை - நம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...