பிரமீடுகளின் பிரபஞ்ச ரகசியங்கள்!
பிரமீடு என்ற சொல், எகிப்த்து நாட்டில் முக்கோண வடிவில் விளங்கும் கட்டிடங்களை குறிப்பதாகும்.
எகிப்த்து நாட்டில் நைல் நதிக்கரையில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பே,
அக்காலத்தில் வாழ்ந்த அரசர்களின் கல்லறைதான் இந்த பிரமீடு என்று ஒரு சாரார்
சொல்லி வருகிறார்கள்.
ஆனால் பெரு நாட்டினரும், அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் பிரமீடுகள் அக்காலத்தில் கோவில்களாக பயன்பட்டன என்கிறார்கள்.
இந்த பிரமீடுகள் கி மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டபட்டிருக்க வேண்டும் என தற்கால கட்டிடகலை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
1798 இல் நெப்போலியன் எகிப்ப்த்தை வென்றார். அவர் கிரேட் பிரமீடை பார்வையிட சென்றபோது அரசரின் அறைக்குள் கொஞ்சநேரம் தனியாக விடும்படி மற்றவர்களிடம் சொல்லி விட்டார்.
அவர் வெளியில் வரும்போது முகம் வெளிறி மன அழுத்தத்துடன் காணப்பட்டார்.
அவருடைய உதவியாளர் விசித்திரமாக எதையும் கண்டீர்களா என்று கேட்டார்.
அதற்கு நெப்போலியன் நான் எதையும் சொல்வதற்கில்லை. அந்த அனுபவத்தை மீண்டும் விவரிக்க விருப்பம் இல்லை என்று மிருதுவான குரலில் பதிலளித்தார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தான் சக்ரவர்த்தியான போதும், பிரமீடு சம்பவம் பற்றி பேசவில்லை. தன் விதி பற்றிய முன் எச்சரிக்கையை பெற்றதாக மட்டும் குறுப்பிட்டார்.
அப்படியானால் நெப்போலியன் உள்ளே சென்றபோது அவர் எங்கே? எப்போது? எப்படி மரணமடைவார் என்பதையும். அவருடைய வெற்றிகளை பற்றியும். அவருடைய அந்தரங்க வாழ்க்கையை பற்றியும் அவருக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது என்பது புலனாகிறது.
ஆம் பிரமீடு என்பது உலக சஞ்சாரத்தில் இருக்கக்கூடிய பிரபஞ்ச சக்திகளை தன்னுள்ளே ஆகர்ஷ்சனம் செய்து, அந்த சக்தியை கொண்டு எதிர்கால விஷயங்களையும், நிகழ்கால விஷயங்களையும் ஒரு குறுப்பிட்ட அதிர்வலைகள் மூலம் உணர்த்தும் சக்தி மிக்க இடம் என்பது உண்மையாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக