சிலருக்கு
சில விஷயங்கள் தெரியப் படுத்த வேண்டும் என அவன் நினைக்கும்போது, அது
எங்கிருந்தாவது நம்மை வந்து சேர்ந்து விடும். அப்படி எனக்கும் ஒரு விஷயம்
தெரிய வந்தது. அதிசயம் என்று வெறுமனே சொல்லிவிட முடியாத அளவுக்கு,
பேரதிசயம்.
அதை நான் வெளிப்படையாக சொல்வதைவிட, வாய்ப்பு கிடைக்கும்போது - நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். இனிப்பு என்று எழுதுவதாலோ, படிப்பதாலோ - கிடைக்கும் உணர்வு மாதிரி. சாப்பிட்டாத் தானே தெரியும். அதனால் நேரடி அனுபவம், உங்களுக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும் வரை - மனதின் ஒரு ஓரத்தில் இந்த விஷயத்தை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் தகுதியும், வாய்ப்பும் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல அனுபவம் கிடைக்கும்.
என்ன ஏதுன்னு சொல்லாமலே இருந்தா எப்படின்னு கேட்கிறீங்களா? பொள்ளாச்சி பக்கத்தில் - இயற்கை இறைவனை ஆராதிக்கும் ஒரு அருமையான சூழலில் ஒரு கோவில் இருக்கிறது. முடிந்தால் ஒருமுறை சென்று வாருங்கள். படிச்சிட்டு பாதி பேர் , அட போய்யா - இந்த ஆளுக்கு வேற வேலை இல்லை என நினைக்க கூடும். அவங்களை விடுங்க - யார், என்ன எப்படின்னு மெனக்கெடுபவர்களுக்கு , அவங்களோட Website ID கீழே கொடுத்து இருக்கிறேன். மேலும் அதிக விவரங்களை அங்கு தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அங்கு சென்று வந்த பிறகு, உங்களுக்கே பல விஷயங்கள் புலப்படலாம். தீர்வுகள் தேடி அலையும் பல கேள்விகளுக்கு விரைவான வழியும் , சித்தர் பெருமான் ஒருவரின் அருளும் கண்டிப்பாக கிடைக்கும். இந்த விவரங்கள் தெரிந்து கொள்ள நம் வாசக நண்பர்கள் தகுதியானவர்கள் என்கிற எண்ணத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். மற்றபடி உங்கள் இஷ்டம் / அதிர்ஷ்டம் ....!
==================================================================
மேற்கூறிய தகவலை எழுதிக்கொண்டு இருக்கும்போதே இன்னொரு மெயில் ஒன்று கிடைத்தது. நமது வாசகர்களுக்காக தெரிவிக்கும் பொருட்டு, இந்த தகவலை அனுப்பியிருந்த சகோதரி. வள்ளி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
பாபநாசம் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். பொதிகை மலையில் இருக்கும், அளப்பரிய இறை அதிர்வுகள் இருக்கும் ஒரு அருமையான இடம். பாவ நாசம் - பாவத்தை தொலைக்கும் இடம். மதுரைப் பக்கம் ராமேஸ்வரம் / பாபநாசம் எல்லாம் நெறைய பேர் அஸ்தி கரைக்கிறதுக்கு போவாங்க.
அங்கு அகத்தியர் ஆலயம் ஒன்று எழுப்பவிருக்கிறார் அன்பர் ஒருவர். அதன்பொருட்டு வரும் 15 ஆம் தேதி - கணபதி ஹோமமும், சுதர்சன ஹோமமும் நடத்த விருக்கிறார்கள். அந்த யாகத்தின் சங்கல்பம் செய்யும்போது - அன்பர்களின் வேண்டுதல்களையும் / கோரிக்கைகளையும் சேர்த்து சொல்ல இசைந்து இருக்கின்றனர். உங்கள் பெயர், கோத்திரம், நட்சத்திரம், வேண்டுதல்களை - register செய்து கொள்ளவும்.கட்டணம் எதுவும் இல்லை. மேலதிக விவரங்களுக்கு இந்த இணையதள முகவரியை Refer செய்து கொள்ளுங்கள்....!
நான்தான் சொன்னேன் இல்லே ....! தெரிய வேண்டிய நேரத்தில் சில விஷயங்கள் கரெக்டா தெரிய வரும்...... எல்லாம் அவன் செயல்...!
=================================================================
மேலே கூறிய இரண்டு மகத்தான தகவல்களை அறிமுகப் படுத்திய அதே நேரத்தில் இன்னொரு வலைப்பூ பற்றிய தகவலை நம் வாசகர்களிடம் அறிமுகப் படுத்துகிறேன். நான் இதை நம் வாசகர்களிடம் தெரியப்படுத்த அவசியம் ஏற்படாது , அதுதான் விருப்பம் இருப்பவர்கள் மெயில் தொடர்பில் இருக்கிறார்களே என்று நினைத்தேன். ஆனால் சமீபத்தில் வந்த மெயில் ஒன்று கொஞ்சம் "ஜெர்க்" ஆக்கி விட்டது.
- விஷயம் வேற ஒண்ணுமில்லை. "சார், ஷேர் மார்க்கெட் பற்றி ரெண்டு , மூணு ஆர்ட்டிக்கிள் எழுதினீங்க...தனி ப்ளாக் ஒன்னு ஆரம்பிக்கிறீங்கன்னு சொன்னீங்க... அதுக்கு அப்புறம் ஒண்ணுமே சொல்லலையே...."ன்னு கேட்டு ஒரு வாசகர் மெயில் அனுப்பி இருந்தார்.
( " என்னது இந்திரா காந்தி இறந்துட்டாங்களா?" )
- சரிதான் இப்படியே இவரை மாதிரி இன்னும் சில பேரு இருப்பாங்களோன்னு நினைச்சுத் தான் இப்ப அந்த ப்ளாக் பற்றி சொல்ல வேண்டியதாப் போச்சு. ஆன்மீக தேடல் உள்ள வாசகர்களுக்கு - இது சம்பந்தமே இல்லாத ஒரு விஷயம் என்பதால், மெயிலில் விருப்பம் தெரிவித்தவர்களுடன் மட்டும் தொடர்பு கொண்டு இருந்தேன்.
(கெட்ட பையன் சார் ........ காளி !)
மெயிலில் எப்படியும் ஒரு எண்ணூறு பேருக்கு மேல் subscribe செய்து இருக்கிறார்கள். எண்ணிக்கை அதிகம் ஆகும்போது மெயில் தொடர்பு சிரமம் என்பதால் - தனி Blog ஆரம்பித்து இருக்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் அங்கு தொடர்பு கொள்ளலாம்.
Share Market என்பது பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் களம். அதனால் மற்ற இது தொடர்பான தளங்களை பார்த்துவிட்டு , ... ப்பூஊ இவ்வளவுதானா என நினைக்க வேண்டாம்.... அவங்க site லாம் லட்சக் கணக்கில காசு போட்டு பண்ற Website . நாங்க கூகுள் ஆண்டவரை வணங்கி ஓசியில மங்களம் பாடுறவங்க.. அதனால சிம்பிளாத் தான் இருக்கும்....! இதுல எல்லாத்தையும் விட முக்கியம் " உள்ளே இருக்கிற சரக்கு" தான். அது எப்படி இருக்குன்னு - ஏற்கனவே தொடர்பில் இருப்பவர்களுக்கு தெரியும். சரி, சரி .... போதும் , நிறுத்திக்கிறேன்......... அந்த ப்ளாக் லிங்க் கீழே இருக்குதுங்ண்ணோ...!
===============================================================
சரி போகிற போக்கில் ஒரு விஷயம் சொல்லிட்டுப் போறேன். ஒவ்வொரு மனுஷனுக்கும் EGO இருக்கு. 'சின்ன பசங்க' ள்ள ஆரம்பிச்சு வயசான ஆளுங்க வரைக்கும் எல்லாருக்கும் இருக்கு. காசு , அதிகாரம் இருக்கிறவங்களுக்கு தெனாவட்டு நிறையவே இருக்கும். வேணும்னே சிலபேரை வறுத்து எடுப்பாங்க. அடுத்த நிமிஷம் யாரு உசிரோட இருக்கப் போறோம்ன்னு , யாருக்குமே தெரியாது.
ரிமோட் மேலே இருக்கிறவன் கையிலே. சடக்குன்னு அடுத்த சேனல் மாத்திட்டார்னா - இன்னைக்கு நம்ம கையில இருக்கிற எல்லாம் இன்னொருத்தன் கிட்ட போயிடும். இல்லையா, MUTE / OFF பட்டன் அமுக்கிட்டார்னா - அதோட முடிஞ்சது கதை. உசிர் இருக்கிறவரைக்குத்தான், நம்ம உடம்புக்கு மதிப்பு . அதுக்குள்ளே எவ்வளவோ வேலை செய்ய வேண்டி இருக்குது!
ஒரு வேலையா போறோம். செருப்பு பிஞ்சு போச்சு. வழியில தெரிஞ்சவங்க வீடு இருக்குது. "அண்ணே, ஒரு ஜோலியா போய்க்கிட்டு இருக்கேன். ஒரு ரெண்டு மணி நேரத்தில வந்திடுறேன். அதுவரைக்கும் இந்த செருப்பை, இந்த வாசப்படி ஓரமா போட்டுப் போறேன், பார்த்துக்கோங்க"ன்னு, சொன்னா - சரிய்யா சீக்கிரம் வான்னு கேட்டுக்கிடுவாங்க....!
இதே - ஒரு ரெண்டு மூணு பேர் சேர்ந்து ஒரு இடத்துக்கு போறாங்க. அதுல ஒருத்தருக்கு எதோ ஆகி, மேலே டிக்கெட் வாங்கிட்டாரு....! பக்கத்துல அதே வீடு இருக்குது.
"அண்ணே , இந்த மாதிரி ஒரு வேலையா 'அர்ஜெண்ட்' டா மதுரை வரைக்கும் போய்க்கிட்டு இருக்கேன். வர்ற வழியில இவரு நெஞ்சைப் பிடிச்சிட்டு உட்கார்ந்தாரு , எந்திரிக்கவே இல்லை .ஒரேயடியா போயிட்டாரு. நான் போயிட்டு ஒரு ரெண்டு மணி நேரத்தில வந்திடுறேன். இவரை அதுவரைக்கும் பார்த்துக்கோங்க" ன்னு சொன்னா?
" உன்னையும் Body ஆக்கிடுவேன் - ஓடிடு"ன்னு சொல்ல மாட்டாங்க......!
=======================================================
ஒரு பிய்ஞ்சு போன செருப்புக்கு இருக்கிற வேல்யூ கூட - உசிர் போன பிறகு , இந்த உடம்புக்கு கிடையாது. அகம்பாவம், ஆணவம், கோபம், திருட்டு புத்தி எல்லாம் எதுக்கு? நம்ம கெட்டிக்காரத்தனம் எல்லாம் சேர்த்து பண்ண வேண்டிய முக்கியமான வேலை ஒன்னு இருக்கு.
"பிறப்பு ஏன்? இறப்பு ஏன்? இறப்புக்கு அப்புறம் என்ன" ன்னு இறப்புக்கு முன்னே நமக்கு கிடைச்சு இருக்கிற இந்த "கேப்" புல தெரிஞ்சுக்கிடணும்.
ஞானிகள் சொல்றாங்களே , "நீ என்பது நீ அல்ல..... உன் உடம்பு அல்ல.... நீ வேற ...." அப்படின்னு.
அப்படின்னா நிஜமாவே என்னன்னு தெரிஞ்சுக்க TRY பண்ணுவோமா?
பிரியமுடன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக