வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே
நமது
முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதன் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றுதான்
வாஸ்துசாஸ்திரமாகும்
1. சமையலறையை ஏன் அக்னிமுலையில் வைக்கவேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் சமையலறை
அக்னிமூலையில் கட்ட வேண்டும் அப்படி வைக்காமல் வீட்டின் நடுவே சமையலறையை வைத்தால் சமையல்
வாசனையும் அதிலிருந்து வரும் புகையும் வீட்டுக்குள்ளேயே இருக்கும். வெளியே
போகாது. அதைச் சுவாசிப்ப வர்களுக்கு சுவாச நோய் வரும். மேலும் வீட்டின் நடுப்பாகத்தில் சமையலறை இருந்தால் திடீரென தீ பிடித்தால்
வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வரமுடியாது தீ விபத்தில் சிக்கிக்
அவஸ்தைபடுவார்கள். அதனால்தான் நமது முன்னோர்கள் நன்கு யோசித்து வீட்டின் சமையலறை இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
2. சமையலறையை ஏன் கிழக்குப்பக்கத்தில் வைக்கவேண்டும்?
சமையலறையை கிழக்குப் பக்கத்தில் வைத்தால் சூரிய வெளிச்சம்
நன்றாக வீட்டில் பரவும். காற்றும்
புகையும் எளிதில் ஜன்னல் வழியாக வெளியே போகும்.வீட்டில் நன்கு
சூரிய வெளிச்சம் பரவுவதால் புழு,பூச்சி. கிருமி போன்ற சிறு உயிரினங்கள்
இறந்துபோகும். மேலும் வடகிழக்குப் பகுதியிலிருந்து வரும்
காற்று வீட்டுக்குள் புகுந்து நல்ல காற்றோட்ட வசதியை உண்டுபண்ணும் இதன்முலம் வியாதிகள் பரவுவது தடுக்கப்டுகிறது
3. தண்ணீரும் குப்பைகளும் வெவ்வேறு இடத்தில் இருக்க வேண்டும் என வாஸ்து
சாஸ்திரம் ஏன் சொல்கிறது?
ஈசான மூலையில் தான் ஆழ்குழாய், கிணறு
ஆகியவற்றை அமைக்க வேண்டும் அதுதான் நல்லது. வீட்டின்
தென்மேற்கு மூலையைக் குப்பைகள். கழிவுகள் போடும் இடமாக அமைக்க
வேண்டும்.. கழிவுகளும் தண்ணீரும் ஒரே இடத்தில் இருந்தால் வியாதி பரவும். அதனால் தணணீரும் குப்பைகளும் வெவ்வேறு இடத்தில் இருக்க
வேண்டும். அதுதான் நல்லது
4. வீட்டின் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்களும் மேல் தளத்தில் குறைவான சன்னல்களும் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் ஏன் சொல்கிறது?
கீழே நிறைய கட்டிடங்களும் பல மரங்களும் உள்ளது. அவைகள் நமது வீட்டிற்குள்ளே காற்று நிறைய வருவதை தடை செய்கிறது. அதனால்
கீழ்தளத்தில் அதிகமான சன்னல்கள் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் தான் நிறைய காற்று
நமது வீட்டில் பரவும். மேல் தளத்தில் குறைவான சன்னல்கள் இருந்தாலே
போதுமானது
5. தொழிற்சாலையின் மெயின் வாசல் வடகிழக்கில் இருக்கவேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொ்ல்ல காரணம் என்ன?
தொழிற்சாலையின் மெயின் வாசல் வடகிழக்கில்
இருந்தால் காற்று நிறைய வரும். அதனால் வடபாகத்தில்
குப்பைகளைப் போடாமல் காலியாக விடவேண்டும். மாறாக குப்பை போட்டால்
காற்று அடித்து குப்பபை யாவும்
தொழிற் சாலைக்குள்ளேயே வந்துவிடும்.
தொழிற் சாலையின் தென்கிழக்குப் பாகத்தில் புகைக்
கூண்டு வைக்கவேண்டும்.
அப்படி வைத்தால் வடகிழக்குப் பகுதியில் இருந்து
காற்று வீசுகிறபோது புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் புகை தொழிற்சாலைக்குள் வராது. வேறு பகுதிக்குச் சென்றுவிடும்.
தொழிற்சாலைகளில் வேலை பார்பவர்கான குடியிருப்பு வீடுகளை
தொழிற்சாலையின் வடமேற்கு பகுதியில் அமைக்கவேண்டும் இந்த வடமேற்கு பகுதி சந்திரனைச் சார்ந்தது அதனால் மன அமைதி ஏற்படும்
தொழிற்சாலையின் மேல்கூரையில் விழக்கூடிய
மழைத் தண்ணீர் கிழக்கு அல்லது மேற்குப் பக்கம் இறங்கும்படி
செய்ய வேண்டும். தென்மேற்கில் இறங்கினால் அங்குள்ள குப்பை மற்றும், கழிவுப்
பொருட்களுடன் மழைத் தண்ணீர் கலந்து பல தீய விளைவுகளை உண்டாக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக