என்னுடைய முதல் கம்பனிலே வேலை பார்க்கிறப்போ, எனக்கு ஒரு நண்பர் இருந்தார்.
பேரு "சரபேசன்". சென்னை M I T . லெ படிச்சவர். ரொம்ப நல்ல மனுஷன். கொஞ்சம்
கஷ்டப்பட்ட குடும்பம். செம ப்ரில்லியன்ட். அப்போவே GATE லெ 98 .5 %
ஸ்கோர் பண்ணி இருந்தார். அப்புறமா, M .Tech முடிச்சுட்டு , இன்னைக்கு
ஸ்டேட்ஸ் லெ இருக்கிறார்.பேருக்கும் சக்தி இருக்கும் இல்லே?
எதேச்சையா இன்னைக்கு சன் டி.வி. லெ தெய்வ தரிசனம் - புரோக்ராம் பார்க்க நேரிட்டது. அதிலே இன்னைக்கு தாம்பரம் பக்கத்துலே உள்ள சகஸ்ர லிங்கம் கோயில் பத்தி பேசுனாங்க. அந்த பெண்மணி பேசும் பொழுது, இந்த ஒரே கோயில்லே நிறைய தெய்வங்களோட மூர்த்திகள் இருக்குது. காண்பதற்கே அரிய தெய்வங்களான சரபேசர், பிரத்யங்கரா தேவி மூர்த்தங்களும் இந்த கோயில் லெ இருக்குதுனு சொன்னாங்க.
(அம்மணி பேரு. தேவ. மங்கையர்க்கரசி, .... பக்காவா அழகான பொண்ணுலாம் இல்லை. நல்லா மங்கள கரமா இருப்பாங்க.. எப்படி? விபூதி.. குங்குமம், தலை நிறைய மல்லிகைப்பூ .. ஏங்க? உங்க வீட்டுலே நீங்க ஏன் இப்படி இருக்கிறது இல்லே? .... நீங்க கட்டுன புருஷனை விடவா , மத்தவங்க பெருசு? இல்லை சாமி பெருசு? ... நீங்க அவரா மாறுங்களேன்.. ப்ளீஸ்.. அவரோட மன நிலைலே நீங்க எப்படி இருக்கிறீங்க? இப்போ எப்படி இருக்கு? )
அப்போதான் , நமக்கும் ஒரு பொறி தட்டுச்சு. அடடா...! சரபேசர் நமக்கும் கிரீன் சிக்னல் கொடுத்துட்டாருன்னு .... நிஜமாவே நிறைய பேருக்கு சரபேசரைப் பத்தி அதிகமா தெரியாதே.. நமக்கு தெரிஞ்சதை , நம்ம வாசகர்கள் கிட்டே பகிர்ந்துக்கலாமே னு, கிட்டத்தட்ட ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னேயே எனக்கு தோணியது.
அதற்கு காரணம் , ரெண்டு விஷயம். ஒன்னு நேரம் கிடைக்கிறப்போ எல்லாம், திருவண்ணாமலை - கிரிவலம் போனது.. அப்படி ஒரு தடவை போனப்போ, ரெண்டு சாமியார்கள் பேசிக்கிட்டு இருந்தாங்க. நிருதி லிங்கம் சந்நிதி கிட்டே...
ஒரு சாமியார் இன்னொருத்தர் கிட்டே , அவ்வளவு சுவாரஸ்யமா சரபேசர் பத்தி பெருமையா பேசிக்கிட்டு இருந்தார். அதை எதேச்சையா கேட்க நேரிட்டது, நான் செஞ்ச பாக்கியம் னு தான் நெனைக்கிறேன். அது நடந்து , கொஞ்ச நாள் ஆச்சு. அதுக்கு அப்புறம் நானும் மறந்துட்டேன்.
கொஞ்ச நாள் கழிச்சு, பௌர்ணமி கிரிவலம் போறப்போ, அகத்திய ஆசிரமம் கிட்டே , எப்போவுமே அவங்க புத்தகங்களைப் பார்க்கிற வழக்கம். அப்போ அங்கே இருந்த ஒருத்தர், ஒரு புத்தகம் கொடுத்தார். நம்மளை நெறைய தடவை பார்த்து இருப்பார் போல.
என்ன புத்தகம்னு பார்த்தா , " ஸ்ரீ சரபேச்வர அவதார மகிமை " னு புத்தகம் பெயர். அவ்வளவு அருமையான தகவல்கள். ... படிக்கிறப்போ நிறைய இடங்கள்லே அப்படியே என்னை அறியாம, கண்ணிலே கண்ணீர் ஓடிருக்கு. ... இப்படித்தான் சரபேசர் மெல்ல மெல்ல, மனசுக்குள் இடம் பிடிச்சார்....
சரபேசர் பத்தி உங்க எல்லார் கிட்டேயும், எனக்கு கிடைச்ச சரபேச தரிசனத்தை சொல்லப் போறேன்..
( தொடரும்... )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக