திங்கள், 17 பிப்ரவரி, 2014

கிரகணத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

கிரகணத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!


கையையும் காலையும் வச்சுக்கிட்டு கம்முன்னு இருக்கானா! சரியான கிரகணத்தில் பிறந்த பய.
காற்று வாக்கிலாவது இதுபோன்ற வார்த்தைகள் உங்கள் காதுக்கு வந்திருக்கும். 
அது என்ன கிரகணம்?
உங்களுக்கு தெரியாத விஷயமல்ல. இருந்தாலும் சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன் பாருங்க. சூரியனை நிழல் மறைத்தால் சூரிய கிரகணம். சந்திரனை நிழல் மறைத்தால் சந்திர கிரகணம்.
அடடா... அற்புதமான  விளக்கம்.  மேலே சொல்லுங்க.


சொல்றேன். இது பாமரத்தனமான விளக்கம் என்றாலும், ஜோதிட சாஸ்த்திரத்தில் இது பற்றிய விளக்கம் இல்லாமல் இல்லை. சாஸ்திர ரீதியில் கிரகங்களாக வர்ணிக்கப்படும் கிரகங்கள் இரண்டு.

அவை... ராகு மற்றும் கேது.

இதை நிழல் கிரகமென்றும், சாயா கிரகமென்றும், சர்ப்ப கிரகமென்றும் பல்வேறு பார்களில் பவனி வருகிறது.

குறிப்பாய் சொல்லப்போனால் சூரிய கிரகணம் என்பது ராகு. சந்திர கிரகணம் என்பது கேது. இது ஜோதிட தகவல். ஆனால் விஞ்ஞான விளக்கம் வேறு.

என்னவாம்?



சுற்றி வரும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது ஏற்படும் நிழல் சந்திர கிரகணம்.

சுற்றி வரும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது ஏற்படும் நிழல் சூரிய கிரகணம். இதெல்லாம் அறிவியல் ரீதியலான கருத்து.

நமக்கு அறிவியலை பகுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து வியத்தகு சாதனை புரிந்தாலும், அதனால் கடவுள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாது.

இந்திரலோகத்தை  ஆராய என்ன தந்திரம் செய்தாலும் முடியாது. அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம் ஆன்மிகம்..




சரி.. சூரிய கிரகணம் என்பது அமாவாசையில் ஆரம்பித்து பிரதமையில் முடிவடையும்.

சந்திர கிரகணம் என்பது பௌர்ணமியில் ஆரம்பித்து பிரதமையில் முடிவடையும். கிரகங்களின் இடைவிடாத சுழற்சியால் ஏற்படுவதுதான் கிரகணம்.

இது ஏதோ கிரங்களின் தனிப்பட்ட விஷயம் என்றோ, நமக்கு இதில் தொடர்பு இல்லை என்றோ முடிவு செய்ய முடியாது.


ஏன்?

காரணமிருக்கிறது. கிரகண காலத்தில் ஏற்படும் கதிர்வீச்சுக்கள் பூமில் உள்ள ஜீவ ராசிகளை பாதிக்கும்.

அதில் நீங்களும் நானும், அவனும் அவளும், இவரும் அவரும் விதிவிலக்கல்ல. அனைத்து தரப்புக்கும் பொதுவான அம்சம்.


என்னவோ?

கிரகணத்தை வெற்று  கண்ணால்  உற்றுப்  பார்த்தால் பார்வையில் பழுது வரும் என்பதை பற்றி சொல்லப்போவதில்லை.

கிரகண நேரத்தில் ஏற்படும் கதிர் வீச்சால் உண்ணும் உணவு கூட விஷமாக போய் விடும் என்பதால், அந்நேரத்தில் எதுவும் சாப்பிட கூடாது என்று கூட சொல்லவில்லை.


இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு விஷயம். கிரகண நேரத்தில் ஆண் பெண் சம்போகம் அறவே கூடாது என்று தான் சொல்ல வருகிறேன்.

ஏன்?

அப்போது கருவாக குழந்தை உருவாகும் விதம் என்னவோ ஒன்றுதான். ஆனால் அவய குறைவுக்கு ஆளாகலாம். அல்லது வளரும் விதத்தில், வாழ்க்கை முறையில் வேறுபாடு வரலாம்.

எப்படி?

முன்கோபம், முரட்டுத்தனம், எகத்தாளம், எடுத்தெறிந்து பேசுவது, தனக்கு மிஞ்சி எதுவும் இல்லை என்று நினைப்பது. அடாவடி செயல்களில் துணிந்து இறங்குவது என்று வில்லங்கத்தின் மொத்த விலாசமாகவே திகழும்.


அல்லது மந்த புத்தி, மறதி குணம், எந்த செயலிலும் ஈடுபாடு அற்ற நிலை என்று அசுமஞ்சக மனிதனுக்கு அடித்தளம் அமைத்துவிடும்.

ஓகோ... அப்பறம்.!

பொதுவாக தாவர இனங்களில் தர்ப்பைதான் கவரும் ஆற்றலில் காந்தத்திற்கே முன்னோடி.

அதோடு தாமிரம் தங்கத்திற்கு இணையாக தர்ப்பையும் மின்கடத்தலில் முதன்மையானது.

அதனால் தான் கிரகண நேரத்தில் வெளிப்படும் ஊதா கதிர்களை உறிஞ்சும் வல்லமை பெற்ற தர்ப்பையை உணவு பதார்த்தம், குடி நீர் இவற்றில் வைக்க சொல்லவதும்.

ஆகர்ஷன சக்தியை அதிகம் பெறுவதற்காக விக்ரகத்தின் மேல் தர்ப்பையை வைத்து பூஜை அறையை பூட்ட சொல்லவதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...