சனி, 15 பிப்ரவரி, 2014

ஜாதகம் கணிக்கும் வழி


ஜாதகம் கணிக்கும் வழி
லக்னம் என்றால் என்ன?
லக்னம் என்பது ஒரு குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பெயர். அதைச் சற்று விளக்குவோம்.
ராசி என்பது 12 சம பாகமாகப் பிரிக்கப்பட்ட பூமண்டலத்தின் பாகம். சூரியனும் மற்ற கிரகங்களும் கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சுற்றுகின்றன. அதே சமயத்தில் மேஷாதி 12 ராசிகளைச் சம பாகமாகக் கொண்ட பூமண்டலமானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாகச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்பொழுது பூமண்டலத்தின் எந்தப் பாகம் கிழக்கில் நமக்கு நேராக வருகிறதோ அந்த ராசிக்கு லக்னம் என்று பெயர்.
அதாவது, அந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த ராசியை லக்கினமென்று சொல்வார்கள். மற்றும் அப்பொழுது கிரஹங்கள் எந்த எந்த ராசியில் இருக்கின்றனவோ, அதையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இதேல்லாம் சேர்ந்ததற்கே ஜாதகச் சக்கரம் அல்லது ராசிச் சக்கரம் என்று பெயர்.
இனி லக்னம், கிரஹநிலை, தசாபுக்தி ஆகியவற்றைக் கணிக்கும் வழியை ஓர் உதாரணம் மூலமாக விளக்குவோம்
உதாரண ஜாதகம்
விகாரி வருடம் தை மாதம் 9-ம் தேதி வெள்ளிக்கழிமை, சுவாதி நக்ஷத்திரம் 29-27 மறுநாள் விசாகம் 25-42 (23-1-1960 @ 5-40 A.M...) இரவு மணி 5.40க்கு (சனிக்கிழமை விடியற்காலை) சென்னையில் ஓர் ஆண் குழந்தை பிறந்ததை வைத்துக் கொண்டு, அதற்கு ஜாதகம் கணிக்கும் விதத்தையும் கிரகங்களை அமைக்கும் வழியையும் தசா புக்திகள் கணிக்கும் விதத்தையும் கீழே விளக்குவோம்.
ஒரு ஜாதகம் கணிக்குமுன் கீழ்க்கண்ட அம்சங்களை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் :
1.
குழந்தை எத்தனையாவது அட்சாம்சத்தில் உள்ள ஊரில் பிறந்தது?
2.
அந்த அட்சாம்ச ரேகைக்குத் தக்கபடி மேஷாதி ராசிப் பிரமாணங்கள் என்ன?
3.
குழந்தை ஜனனமான தேதியில் அது பிறந்த ஊரில் சூரிய உதயம், எத்தனை மணி, எத்தனை நிமிஷத்துக்கு நிகழ்ந்தது?
4.
சூரியோதயம் முதல் குழந்தை பிறந்தது வரையில் எத்தனை நாழிகை எத்தனை விநாடிகள் சென்றன?
5.
சிசு பிறந்த நட்சத்திரத்தின் மொத்த நாழிகை என்ன?
     இவற்றைப் பஞ்சாங்கத்தின் உதவியால் முக்கியமாகக் குறித்து வைத்துக் கொண்டால் சுலபமாக ஜாதகம் கணித்துவிடலாம்.
  1. சூரிய உதயம்
இந்தக் குழந்தை சென்னையில் பிறந்தது.
சென்னையில் அட்சாம்சம் 13. சென்னையில் அன்றைக்குரிய உதயம் 6-39. தை மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. குழந்தை விடியற்காலை மணி 5-40க்குப் பிறந்தது. அதாவது சனிக்கிழமை உதயத்துக்கு முன் 0-59 நிமிஷங்களுக்கு முன்னதாகப் பிறந்துள்ளது. நம் நாட்டு வழக்கப்படி சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையில் ஒரு நாள் என்று கணக்கிடப்படும்.
  1. உதயாதி ஜனன நாழிகை
வெள்ளிக்கிழமை சூரிய உதயம் முதல் குழந்தை பிறந்த நாழிகை விநாடிகள் வரையில் கணக்கிட வேண்டும. அது முதல் சனிக்கிழமை விடியற்காலை 5.40 வரையில் 23 மணி 1 நிமிஷம் ஆகும். மணி ஒன்றுக்கு 2 ½ நாழிகை வீதம் கணக்கிட, 57 நாழிகை 33 விநாடிகள் வரும். ஆகையால், வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி நாழிகை 57-33-க்கு அந்தக் குழந்தையின் ஜனனம் என்று  அறிய வேண்டும். 
குறிப்பு : சூரிய உதயம் ஒவ்வொரு நாளும் காலை 6-00 மணிக்கே நிகழ்வதில்லை. காலை 5-39 முதல் 6-39க்கு இடையிலான காலத்தில் நாளுக்கு நாள் வித்தியாசமாக சூரியோதயம் ஆகிக்கொண்டிருக்கும். அதேபோல் இடத்திற்கு இடம் சூரியோதய காலம் மாறுபடும்.
உதாரணமாக, சென்னையில் காலை 6-01க்குச் சூரியோதயமென்றால், ராமேசுவரத்தில் அதே தினத்தில் 6-09க்குச் சூரியோதயம் ஆகும்.
ஆகவே, ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தைக் கணிப்பதற்கு முன், அந்தக் குழந்தை பிறந்த ஊரில் சூரியோதயம் எப்பொழுது நிகழ்ந்தது என்பதைப் பஞ்சாங்கங்கள் மூலம் துல்லியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அட்சாம்சங்களும் ராசிப் பிரமாணமும்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளை 360 சம பாகங்களாக (அதாவது ராசி ஒன்றுக்கு 30 பாகைகள் வீதம்) பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்கு அட்சாம்சம் (Latitude) என்று பெயர். பூமி முழுவதும் இந்த அட்சாம்ச ரேகைகளின் மீதே இருக்கிறது. அந்த அந்த அட்சாம்சங்களிலுள்ள பட்டணங்களுக்கு வெவ்வேறு ராசிமான சங்கியைகள் (அதாவது ராசியளவு நாழிகை, விநாடிகள்) ஏற்பட்டுள்ளன.
இந்த அட்சாம்சங்களை அநுசரித்தே மேஷாதி ராசிகளின் கால அளவை அறிய வேண்டும். உதாரணமாக, சென்னையும், அதைச் சுற்றி சுமார் 100 மைல்களுக்கு உட்பட்ட பிரதேசங்களும் 13-ஆவது அட்சாம்சத்தில் இருக்கின்றன. ஆகையால், இந்த 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த இடங்களுக்கு மேஷ ராசிப் பிரமாணம் 4 நாழிகை 29 விநாடிகள் என்றால், இதே மேஷ ராசிக்கு 9-ஆவது அட்சாம்சத்தில் இருக்கும் ராமேசுவரத்துக்கு 4-37 விநாடியாகும். அதாவது சென்னையைக் காட்டிலும் 2 விநாடி குறைவு. (45-வது பக்கம் அட்டவணை 2-ஐ கவனிக்க).
இம்மாதிரி, இடத்துக்கு இடம் மேஷாதி ராசிப் பிரமாணங்கள் மாறுபடும். ஆகையால், ஒரு குழந்தை பிறந்த இடம் எந்த அட்சாம்சத்தைச் சேர்ந்ததோ அந்த அட்சாம்சத்துக்குரிய மேஷாதி ராசிப் பிரமாணங்களைச் சூரியோதயம் தொடங்கி, குழந்தையின் ஜனன காலம் வரையில் கூட்டி லக்கினத்தை அறிய வேண்டும். இதைக் கவனிக்காவிட்டால் சரியான ஜாதகம் கணிக்க இயலாது.
  1. உதய லக்ன சேஷம்
சூரியன் உதய காலத்தில் எந்த ராசியில் இருக்கிறானோ, அதுவே உதய லக்னம் என்று கூறப்படும். மேற்படி உதய லக்ன நாழிகை ஒவ்வொரு நாளும் சூரியோதய காலத்தில் குறைந்துகொண்டே வரும். அதாவது, தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் தேதியன்று சூரிய உதய காலத்தில் மேஷ ராசியில் இருப்பு 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த சென்னைக்கு 4-29 என்றால் 2-ஆம் தேதி மேஷத்தின் இருப்பு 4-20. இம்மாதிரி ஒவ்வொரு தேதிக்கும் சூரிய உதய காலத்தில் 0-9 விநாடி வீதம் கழித்துக்கொண்டே போக வேண்டும்.  இது பஞ்சாங்கத்தில் ராசி இருப்பு என்ற தலைப்பில் இருக்கும்.
அப்படிக் கழித்தது போக மீதி நாழிகை விநாடியே உதய லக்ன சேஷமாகும்.
  1. ஜந்ம லக்னம்
பிறகு ஜனன கால நாழிகை விநாடிகள் வரும்வரை ஒவ்வொரு ராசியாகக் கூட்டிக்கொண்டே போனால், எந்த ராசிப் பிரமாணத்தில் ஜனன கால நாழிகை அடங்குமோ அதுவே அந்தக் குழந்தையின் ஜன்ம லக்னம் என்று அறிய வேண்டும்.
லக்னம் கணிக்கும் வழி
இந்தக் குழந்தை பிறந்தது தை மாதம் 9-ஆம் தேதி இரவு. ஆகையால் தை மாதம் 9-ஆம் தேதிக்குச் சரியாக (தை மாதத்திற்குரிய) மகர ராசியின் சேஷத்தைப் பஞ்சாங்கத்தில் உள்ளபடி குறித்துக் கொள்ளவேண்டும். அதன் கீழ் கும்பம் தொடங்கி ஜனன கால நாழிகை வரும் வரையில் ராசிமான சங்கியைகளை எழுதிக் கூட்டிக் கொள்ள வேண்டும். அதாவது: தை 9-ஆம் தேதி சூரிய உதயத்தில்-
(உதய லக்னம்)                                நா-வி
மகர சேஷம்
--
3-32
கும்பம்
--
4-17
மீனம்
--
4-11
மேஷம்
--
4-29
ரிஷபம்
--
5-04
மிதுனம்
--
5-27
கடகம்
--
5-22
சிம்மம்
--
5-08
கன்னி
--
5-04
துலாம்
--
5-16
விருச்சிகம்
--
5-28
தனுசு ஆரம்ப நாழிகை
--
53-18
தனுசு – 5-19 சேர்த்து
--
58-37


ஜனன கால நாழிகையான 57-33, மேற்கண்ட தனுசு ராசி வரையிலுள்ள 58-37க்கு உட்பட்டிருப்பதால், இந்தக் குழந்தை தனுர் லக்னத்தில் பிறந்ததாகும். அதாவது குழந்தையின் ஜன்ம லக்னம் தனுசு என்று அறிய வேண்டும். இனி அந்தக் குழந்தையின் ஜன்ன காலத்தில் கிரகங்கள் எந்த பாதசாரத்தில் இருந்தன என்பதைக் கவனிப்போம்:
பஞ்சாங்கத்தில் கிரகபாதசாரங்கள் என்னும் அட்டவணையில் கண்டபடி, தை மாதம் 9-ஆம் தேதி கிரகங்கள் கீழ்க்கண்ட வகையில் நக்ஷத்திர பாதங்களில் சஞ்சரிக்கின்றன:
கிரகம்
நக்ஷத்திரம்
பாதம்
ராசி
நவாம்சம்
சூரியன்
உத்திராடம்
4
மகரம்
மீனம்
சந்திரன்
விசாகம்
2
துலாம்
ரிஷபம்
செவ்வாய்
மூலம்
4
தனுசு
கடகம்
புதன்
உத்திராடம்
3
மகரம்
கும்பம்
குரு
மூலம்
1
தனுசு
மேஷம்
சுக்கிரன்
மூலம்
1
தனுசு
மேஷம்
சனி
பூராடம்
2
தனுசு
கன்னி
ராகு
உத்திரம்
3
கன்னி
கும்பம்
கேது
உத்திரட்டாதி
1
மீனம்
சிம்ஹம்

  1. நவாம்ச லக்னம்
நவாம்ச லக்னம் என்பது ஜன்ம லக்னத்தில் 9-ல் ஒரு பங்கு என்று பொருள். அதாவது ஜன்ம லக்னம் தனுசு, அதன் நிராயன ராசிமானம் சென்னைக்கு 5 நாழி 19 விநாடி அல்லது 319 விநாடி. இதை 9-ஆல் வகுக்க ஒரு பாகம் 35 4/9. குழந்தை பிறந்த நேரம் 57 நாழி 33 விநாடி. தனுர் லக்னம் ஆரம்பம். 53 நாழி 18 விநாடி. தனுர் லக்னம் பிறப்பு வரை சென்றது 57 நாழி 33 விநாடி – 53 நாழி 18 விநாடி (57-33—53-18) 4 நாழி 15 விநாடி அல்லது 255 விநாடி. இதை 35 4/9-ஆல் வகுக்க 8-வது பாகத்தில் அமையும். ஆக நவாம்ச லக்னம்-மேஷம் முதல் கணக்கிட விருச்சிக லக்னம் வரும்.
35) 255 (7
      245
     ------
      10
     ------
மற்ற லக்னங்களுக்கு நவாம்ச லக்னம் போடுவது எப்படி என்பதைக் கீழே விளக்கியுள்ளோம்.
மேஷம், சிம்மம், தனுசு
--
ஜன்ம லக்னமானால் - மேஷம் முதல் கணக்கிட வேண்டும்
ரிஷபம், கன்னி, மகம்
--
ஜன்ம லக்னமானால் - மகம் முதல் கணக்கிட வேண்டும்
மிதுனம், துலாம், கும்பம்
--
ஜன்ம லக்னமானால் - துலாம் முதல் கணக்கிட வேண்டும்
கடகம், விருச்சிகம், மீனம்
--
ஜன்ம லக்னமானால் - கடகம் முதல் கணக்கிட வேண்டும்
  1. ஜந்மநக்ஷத்திரம் ஆத்யந்தம்
இனி ஜன்ம நட்சத்திரத்தின் ஆதியந்த நாழிகைகளையும் ஜனனகால தசாசேஷத்தையும் கணிப்போமாக :
மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூரியோதயத்திலிருந்து 29-27 நாழிகை வரை சுவாதி நக்ஷத்திரம் இருக்கிறது. பிறகு விசாக நக்ஷத்திரம் ஆரம்பம். ஜாதகன் சூரிய உதயாதி 57 நாழிகை 33 விநாடிகளுக்குப் பிறந்திருப்பதால் சுவாதி கழிந்து விசாக நக்ஷத்திரத்தில் ஜனனம் என்று தெரிகிறது. இனி விசாக நக்ஷத்திரத்தின் ஆத்யந்த பரம நாழிகை அதாவது மொத்த நாழிகை என்ன என்று தெரிந்தால் தசாசேஷம் கணிக்கலாம். ஒரு தினத்துக்கு 60-00 நாழிகைகள். அதில் 9-ஆம் தேதி சுவாதி இருப்பு 29-27 போக, அன்றைய தினம்-
விசாக நக்ஷத்திரம் 30-33.
     மறுநாள் தை 10-ஆம் தேதி விசாகம் (பஞ்சாங்கத்தில் உள்ளபடி) 25-42. ஆகையால், இவைகள் இரண்டையும் கூட்ட விசாகம் மொத்த நாழிகை 36-15 ஆகும்.
ஜனன நாழிகை
57-33
அன்று சுவாதி செல்லு
29-27
9-ஆம் தேதி விசாகத்தில் செல்லு
28-06
விசாகம் மொத்தம் (அ) ஆத்யந்த பரம நாழிகை
56-15ல்
28-06ஐக் கழிக்க
ஜனன காலத்தில் விசாகம் இருப்பு
28-09

  1. ஜனனகால தசாசேஷம்
ஆகையால், மேற்கண்ட விசாக நக்ஷத்திரத்தின் சேஷம் 28 நாழிகை, 9 விநாடிகளுக்கு தசாசேஷம் கணிக்க வேண்டும்.
முன்பு குறிப்பிட்டபடி விசாக நட்சத்திரத்துக்கு குருதசை ஆரம்பம். குரு தசை 16 வருஷங்கள். விசாக நட்சத்திரம் மொத்தம் நாழிகை 56-15க்கு 16 வருஷங்களானால் விசாகத்தில் மீதியுள்ள 28-09க்குத் தசாசேஷம் என்ன என்பதைக் கீழ்க்கண்ட விதமாகக்  கணிக்கலாம்.
அதாவது,
1.
விசாகம் மொத்த நாழிகை
56-15 X 60


3360 விநாடிகள்
15
மொத்தம்
3375 விநாடிகள்
2.
விசாகம் செல்லு போக இருப்பு
28.09 X 60

1680
     9
1689 விநாடிகள்

     விசாகம் குருவின் நக்ஷத்திரம். ஜனன காலதசை குருதசை. ஆகவே, மேற்கண்ட இருப்பு விநாடிகளைக் குரு தசா வருஷமான 16ஆல் பெருக்க வேண்டும். அந்த மொத்தத்தை விசாகம் மொத்த விநாடிகளால் வகுக்க தசாசேஷ வருடங்கள் வரும். மீதியை 12-ஆல் பெருக்கி மொத்த விநாடிகளால் வகுத்தது மாதம். 30-ஆல் பெருக்கி வகுத்தது நாட்கள். இவ்விதமாக தசா சேஷம் வரும்.
           1689 X16
          ------------
3375)   27024     (8
வருடம்
            27000
            ---------------
                  24 X 12 / 3375 = 0
மாதம்
                  ----------
                   288 X 30
          -------------------
3375)   8640  ( 2 + 1 =3
நா.
            6750
            ------
            1890
பாதிக்குமேல் இருப்பதால் 1 ஆகச் சேர்த்துக் கொள்ளலாம்.
            ---------
ஆக, ஜனன காலத்தில் குருதசை சேஷம் 8 வருடம்  0 மாதம் 3 நா. அதாவது இந்தக் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே விசாக நட்சத்திரத்தில் பாதி பாகம் கழிந்துவிட்டபடியால், அதற்கு உரிய குருதசை 16 வருஷத்தில் சுமார் பாதி கழிந்து 8 வருஷம் 3 நாட்கள் மாத்திரமே பாக்கி இருக்கின்றன.
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி?
இப்படி பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்ல நாமும்  கொஞ்சம் கற்றுக் கொள்வோமே!
சில அடிப்படைத் தகவல்கள்:
ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.
வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது. நாம் முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள் ளன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான் பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது.
ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.
குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 12 வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30 வருடங்கள் ஆகின்றன.
சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல் வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.
ஆண்டுகள் 60
1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி 
14.விக்கிரம
15.விஷு
16.சித்ரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துர்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.ப்லவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விசுவாவசு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய
தமிழ்மாதங்கள்
சௌரமான ஆண்டுக் கணக்கீட்டில் மாதம் என்பது ஸூர்யன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் 30 நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஸூர்யன் எந்த ராசியில் என்று பிரவேசிக்கிறானோ அதுவே மாதத்தின் தொடக்க நாளாகவும் அந்த ராசியின் பெயரே மாதத்தின் பெயராகவும் உள்ளது.
ஸங்கல்பத்தில் நாம் மாதத்தின் பெயரைக் கூறும்போது இந்தப் பெயர்களையே பயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் தமிழ் மாதங்களின் பெயர்கள்-அந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தன்று பௌர்ணமி திதி வருகிறதோ அந்த நக்ஷத்திரத்தின் பெயரையே கொண்டதாக அமைந்துள்ளது.
மாதங்களின் பெயர்கள்
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது
சித்திரை - மேஷ மாசம்
வைகாசி - ரிஷப மாசம்
ஆனி -  மிதுன மாசம்
ஆடி - கடக மாசம்
ஆவணி -  சிம்ம மாசம்
புரட்டாசி - கன்னி மாசம்
ஐப்பசி - துலா மாசம்
கார்த்திகை -விருச்சிக மாசம்
மார்கழி - தனுர் மாசம்
தை -மகர மாசம்
மாசி - கும்ப மாசம்
பங்குனி - மீன மாசம்
* எந்த மாசத்தில் பூர்ணிமை, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.
* எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோ, இரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.
* விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.
* ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.
அயனங்கள்
ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸூர்யன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.
தைமாதம் தொடங்கி ஆனி ஈறாக 6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம்.
ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.
ருதுக்கள் - 6
ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி, - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது
கிழமைகள் - 7
ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும்.
சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது.
ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது
ஞாயிறு - பானு வாஸரம்
திங்கள் - இந்து வாஸரம்
செவ்வாய் -  பௌம வாஸரம்
புதன் -  ஸௌம்ய வாஸரம்
வியாழன் - குரு வாஸரம்
வெள்ளி - ப்ருகு வாஸரம்
சனி - ஸ்திர வாஸரம்
திதிகள் - 15
ஸூர்யன் இருக்குமிடம் முதல் 12 பாகைகள் சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.
1. ப்ரதமை
 2. த்விதியை
 3. த்ருதியை
 4. சதுர்த்தி
 5. பஞ்சமி,
6. ஷஷ்டி
 7. ஸப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. த்ரயோதசி
14. சதுர்த்தி
15. பூர்ணிமா (அல்லது) அமாவாஸ்யை
மாதம் என்பது இருபக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை சுக்லபக்ஷம் என்றும் பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது.
தமிழில் இதனை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.
திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம். கரணம் என்பவையே பஞ்சாகத்திள்ள ஐந்து அங்கங்களாகும்.
இவற்றில் திதி, வாரம், (வாஸரம்) ஆகிய இரண்டினைப் பற்றியும் மேலே கண்டோ ம். இனி மற்ற மூன்றினையும் அறிவோம்.
நக்ஷத்திரங்கள் - 27
வான் வட்டப்பதையில் உள்ள நக்ஷத்திரங்கள் இருபத்தேழும் பன்னிரண்டு ராசிகளுக்குப் பங்கிடப்பட்டிருக்கின்றன.
நக்ஷத்திரங்கள் 27 - ம் வருமாறு:
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது
அஸ்வதி - அஸ்வினி
பரணி -அபபரணீ
கார்த்திகை - க்ருத்திகா
ரோகிணி - ரோகிணீ
மிருகசீர்ஷம் - ம்ருகசிரோ
திருவாதிரை - ஆர்த்ரா
புனர்பூசம் - புனர்வஸூ
பூசம் - புஷ்யம்
ஆயில்யம் -  ஆஸ்லேஷா
மகம்  -  மகா
பூரம் - பூர்வபல்குனி
உத்திரம் - உத்ரபல்குனி
ஹஸ்தம் - ஹஸ்த
சித்திரை - சித்ரா
சுவாதி - ஸ்வாதீ
விசாகம் - விசாகா
அனுஷம் - அனுராதா
கேட்டை - ஜ்யேஷ்டா
மூலம்  - மூலா
பூராடம் - பூர்வ ஆஷாடா
உத்திராடம் - உத்ர ஆஷாடா
திருவோணம் - ச்ரவண
அவிட்டம் - ஸ்ரவிஷ்டா
சதயம் - சதபிஷக்
பூரட்டாதி - பூர்வப்ரோஷ்டபதா
உத்திரட்டாதி - உத்ரப்ரோஷ்டபதா
ரேவதி - ரேவதி
ராசிகள் - 12
1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி
7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்
மேலே சொன்ன நக்ஷத்திரங்கள் இருபத்தி ஏழும் ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4 நக்ஷத்திரம் விதம் பங்கிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. ஆகவே, ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் அல்லது 2 1/4 நக்ஷத்திரங்கள் உண்டு.
யோகங்கள் - 27
1. விஷ்கம்பம் 2. ப்ரீதி 3. ஆயுமான்
4. சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம்
7. சுகர்மம் 8. த்ருதி 9. சூலம்
10. கண்டம் 11. வ்ருத்தி 12. துருவம்
13. வியாகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம்
16. ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான்
19. பரீகம் 20. சிவம் 21. ஸித்தம்
22. ஸாத்தியம் 23. சுபம் 24. சுப்ரம்
25. பராம்யம் 26. மாஹேந்த்ரம் 27. வைத்ருதி
கரணங்கள் - 11
1. பவம் - சிங்கம்
2. பாலவம் - புலி
3. கௌலவம் - பன்றி
4. தைதிலம் - கழுகு
5. கரம் - யானை
6. வணிஜை - எருது
7. பத்ரம் - கோழி
8. சகுனி - காக்கை
9. சதுஷ்பாதம் - நாய்
0. நாகவம் - பாம்பு
11. கிமுஸ்துக்னம் - புழு
இராகு காலம்
ஒவ்வொரு கிழமையிலும் இராகு காலம் எப்போது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வரிப்பாட்டு ஒன்று சொல்லுவார்கள். அதனை மனதில் கொண்டு கணக்கிட்டுச் சொல்லலாம்.
திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?
கிழமை = இராகு காலம்
ஞாயிறு = 04.30 - 06.00
திங்கள் = 7.30 - 9.00
செவ்வாய் =  03.00 - 04.30
புதன்  = 12.00 - 01.30
வியாழன் =  01.30 - 03.00
வெள்ளி = 10.30 - 12.00
சனி = 09.00 - 10.30
எமகண்டம்
இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.
விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
ஞாயிறு : 12.00 - 01.30
திங்கள் : 10.30 - 12.00
செவ்வாய் : 09.00 - 10.30
புதன் : 07.30 - 09.00
வியாழன் : 06.00 - 07.30
வெள்ளி : 03.00 - 04.30
சனி : 01.30 - 03.00

கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு : 06.00 - 07.30
திங்கள் : 03.00 - 04.30
செவ்வாய் : 1.30 - 03.00
புதன் : 12.00 - 01.30
வியாழன் : 10.30 - 12.00
வெள்ளி : 09.00 - 10.30
சனி : 07.30 - 09.00
இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.

குளிகை
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் =  09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30


கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் =  01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00

ராசிகள் - Tamil Signs
நட்சத்திரங்கள் - Tamil Stars
மேஷம் - Aries
அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய - Aswinini, Barani, upto 1st phase of Krithikai
ரிஷபம் - Taurus
கிருத்திகை 2ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2ஆம் பாதம் முடிய - From Krithikai II phase, Rohini and upto Mirukasheerisham II phase.
மிதுனம் - Gemini
மிருகசிரீஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய - From Mirugasheerisham III phase
கடகம் - Cancer
புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய - From Punarpoosam 4th Phase, Poosam, and upto Ayilyam
சிம்மம் - Leo
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய - Makam, Pooram, and upto Uthiram I phase
கன்னி - Virgo
உத்திரம் 2ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய - From Uthiram II phase, Astham, and upto Chithirai II phase
துலாம் - Libra
சித்திரை 3ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய - From Chithirai 3rd phase, Swathi, and upto Vishaakam 3rd phase
விருச்சிகம் - Scorpio
விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய - From Vishaakam 4th phase, Anushyam, and upto Keattai
தனுசு - Sagittarius
முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய - From Moolam, Pooradam and upto Uthiraadam 1st Phase
மகரம் - Capricorn
உத்திராடம் 2ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய - From Uthiraadam 2nd phse, Thiruvonam and upto Avittam 2nd phase
கும்பம் - Aquarius
அவிட்டம் 3ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய - From Avittam 3rd phase, Sathayam and upto Poorattathi 3rd phase
மீனம் - Pisces
பூரட்டாதி 4ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய - From Poorattathi 4th phase, Uthiraadam and upto Revathi.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...