எந்த ஒரு மனிதனும் தனக்கு வேறு ஒரு வழியில்லை... தன்னால் முடியக்கூடியது
எதுவும் இல்லை , நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்று உணரும்
தருணத்தில் தான் , அவனது மனது ஜோதிடம், ஜாதகம் என்று திரும்புகிறது.
நான் , தான் என்னும் அகம்பாவம் அழியும்போது தான் இறைவனை நினைக்க தோன்றும்.
உதாரணத்திற்கு நம் குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஒரு சின்ன ஆஸ்பத்திரி, அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியது, இன்னும் பெரிய டாக்டர் இப்படியே நீளும். அவர்கள் ஒரு பெரிய தொகையை சொல்லி உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறினால், அந்த தொகையை ஏற்பாடு செய்து விட்டால் பிரச்னை இல்லை. எப்பொழுது அந்த பெரிய டாக்டரும் கையை விரித்து விடுவாரோ, அல்லது அந்த தொகை ஏற்பாடு செய்ய முடியவில்லையோ , அப்பொழுது மாட்டிக் கொள்வது கடவுளும், ஜோதிடர்களும்.
இப்படித்தான் ஒரு அன்பர் எம்மிடம் வந்தார். "சார், கொஞ்சம் என்னோட ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார். எனக்கு இந்த நோய் பிரச்னையிலிருந்து விடுதலை வேணும். பரிகாரம் எதாவது செய்யனும்னா செஞ்சுவிடுகிறோம்", என்று கேட்டார்.
நாமும் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து , அவருக்கு பலவீனமான கிரகங்களுக்குத் தக்க பரிகாரம் கூறினோம். அவருக்கு , ஆறாம் இடம் பலவீனமாக இருந்தது. ஆறாம் இடம் - ருண, ரோக, சத்ரு ஸ்தானம். அதாவது கடன், நோய், எதிரியைக் குறிக்கும். அந்த இடத்தின் அதிபதி பலவீனமாக இருந்தாலோ , அல்லது அந்த வீடு பாவ கிரகங்களின் பார்வையிலோ , சேர்க்கையிலோ இருந்தால் , அந்த இடத்தின் அதிபதியின் தசை நடந்தால் , அவர் கடன் அல்லது நோயினால் பாதிக்கப்படுகிறார்.
அதற்கு அந்த கிரகத்தின் அதிபதிக்கு உரிய பரிகாரம் மேற்கொள்ளவேண்டும். இந்த அன்பருக்கு அதன்படி குரு பகவானுக்கு உரிய பரிகாரம் மேற்கொள்ளவேண்டி இருந்தது. நண்பரும் அதன்படி ஆலங்குடி சென்று, குரு பகவானை தரிசித்து விட்டு வந்தார். ஆனால் பலன் முழுவதுமாக கிடைக்கவில்லை. ஓரளவு தான் அவருக்கு பலன் தெரிந்தது.
திரும்பவும் அவர் எம்மிடம் வந்தார்.
பரிகாரம் செய்யும் அன்பர்கள் ஒரு விஷயத்தை மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். பரிகாரம் என்பது நல்ல மழை பெய்யும் நேரத்தில் கையில் ஒரு குடையுன் பாதுகாப்பாக செல்வதற்கு ஒப்பானது மட்டுமே. மழை அதிகமாகப் பெய்தால் , குடை இருந்தும் , நீங்கள் நனையத் தான் வேண்டி இருக்கும். நமக்கு கிடைக்கும் துன்பங்கள் , நமது கர்ம வினைக்கு ஏற்ப , இந்த ஜென்மத்தில் திரும்பக் கிடைக்கும். பரிகாரங்கள் அதன் தாக்கத்தை , கடுமையை ஓரளவுக்கு குறைக்கச் செய்யும். அவ்வளவுதான்.
காலம் முழுக்க அநியாயங்கள் செய்துவிட்டு , பரிகாரம் செய்தால் மட்டும் போதுமா !? என்று கேட்டால், இது பொருத்தமாக தோன்றவில்லை. வந்திருந்த நண்பர் - ஒரு அரசாங்க அதிகாரி. தினமும் லஞ்சம் - சர்வ சாதாரணமாக புழங்கும் இடம். அவரால் வாங்காமலும் இருக்க முடியாது. அவர் இருக்கும் ஆபீஸ் சூழ்நிலை அப்படி.
ஆலங்குடி கோவிலிலும் அவர்க்கு தெரிந்த நண்பரைச் சந்தித்து, அங்கும் ராஜ உபச்சாரம். ஏதோ ஒரு பிக்னிக் போவதுபோல் , கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சென்று வந்து விட்டார்.
பரிகாரம், ஹோமம் , யாகம், அன்னதானம் ஆகியவை அந்த தேவதையின் முழு ஆசிர்வாதம் கிடைக்கச் செய்யப்படுவது. பரிகாரம் செய்ய விரும்பும் அன்பர்கள் அங்கு சென்று தங்கள் பராக்கிரமத்தைக் காட்டாமல் இருப்பதே நல்லது. மேலும் எந்த ஒரு பரிகாரம் செய்ய விரும்பினாலும் , பரிகாரம் செய்ய விருக்கும் தினத்திற்கு முன் , குறைந்தது ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) விரதமிருந்து , உடலையும், மனதையும் சுத்தமாக வைத்து, இரு வேளை நீராடி , அந்த தெய்வத்தை மனமுருக வேண்டி பின் பொருத்தமான நாளில் அந்த ஸ்தலத்துக்கு சென்று இறைவனை மனமார தொழுது, குறிப்பட்ட தொல்லைகளில் இருந்து விடுவிக்க வேண்டி வழிபடவேண்டும். அபிஷேகம், அர்ச்சனை ,வாய்ப்பு இருந்ததால் அங்க பிரதஷ்ணம் செய்வது ஆகியவை இன்னும் நல்லது. (சபரி மலைக்கு மாலை அணிபவர்கள் இருப்பதை போல).
உடல் நலம் மிக குன்றியவர்கள் - விரதம் இருக்க இயலாதவர்கள் , மனதளவில் முடிந்தவரை நாம ஜபம் செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்து முடித்த பிறகும், பிறருக்கு தெரியாமல் இருந்தால் கூட , நம் மனதை உறுத்தும் தவறுகளை மீண்டும் செய்யாமல் , சுயக் கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம். அது உங்கள் சந்ததியினருக்கு நல்லது.
அந்த நண்பருக்கு இதை எடுத்து சொல்லி, அவரை மீண்டும் ஒருமுறை சென்று வரச் சொன்னோம். இதைத் தவிர்த்து , அவருக்கு நியாயம் இல்லாத முறையில் வரும் லஞ்சப் பணத்தை , சொந்த செலவுக்கு பயன்படுத்தாது - கோவில்களில் அன்னதானத்திற்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ பயனுள்ள வழியில் செலவிடச் சொன்னோம். அவர்களின் வயிறு குளிர குளிர, எத்தனையோ வயிறு எரிந்து பணம் வாங்கிய பாவம் குறையும். இதை செய்தால் உங்கள் நோயிலிருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கும் என்று கூறி அனுப்பினோம். அதன்படியே , நண்பர் திரும்பவும் ஆலயம் சென்று வந்து, அவரால் முடிந்தவரை அநாதை ஆசிரமங்களுக்கும் , ஆலயப் பணிகளுக்கும் உதவி வருகிறார்.
அவரே ஒருநாள் எம்மிடம் திரும்பி வந்து , இப்போது நோயின் தீவிரம் மிகவும் மட்டுப் பட்டு விட்டதாகவும், முன் எப்போதையும் விட , மன நிறைவான வாழ்க்கை வாழுவதாகவும் தெரிவித்தார்.
எனவே , பரிகாரம் செய்யும் அன்பர்கள் - முழு நம்பிக்கையுடன் , மேலே கூறியபடி முறைகளை பின்பற்றி செய்து வர , அவர்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றம் கண்டிப்பாக நிகழும்.இதைத் தவிர தங்கள் இஷ்ட தெய்வத்தை நித்ய வழிபாடு செய்வதைவழக்கமாக வைத்திருங்கள். அவன் இஷ்டப்படியே நமக்கு எல்லாமே இங்கு ப்ராப்தம்.
ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் :
1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து , திருமணம் செய்யாமல் இருத்தல்
2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது
3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது
5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
6 . சென்ற பிறவிகளில் , ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
7.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)
பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்
4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்
பரிகாரம்:தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று , பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து , ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்.
தினமலரில் வெளியான திருவிடை மருதூர் ஆலய சிறப்பு கட்டுரைகளை காண , கீழே படத்தை க்ளிக் செய்யவும

எவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந்தும் - ஒரு சிலருக்கு திருமணம் எளிதில் நடப்பதில்லை.... ஏன் ??
நல்ல வேலை ... கை நிறைய சம்பளம்... ஆனால் கழுத்துக்கு மேல கடன்... எப்படி?
நல்ல திறமை, கடின
உழைப்பு... - ஆனா , ப்ரோமோஷன் , இன்கிரிமென்ட் எல்லாம் இது எதுமே இல்லாத ,
உங்க "கலீக்" க்கு மட்டும்.. உங்களுக்கு , நல்ல அழகா ஒரு பட்டை...
நாமம்..!! ஏன் இப்படி நமக்கு மட்டும்?
எவ்வளவோ வசதி இருந்தும், கொஞ்சுறதுக்கு ஒரு குழந்தை இல்லை... ஏன் இப்படி?
இந்த பிறவிலேயோ, இல்லை போன பிறவியிலோ , ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டு இருந்தா.... ஆண்டவன் அடிக்கிறது இந்த மாதிரி தான்...
ஜாதகத்தை நன்றாக பார்க்க தெரிந்தவர்கள் , இதை உடனே கணித்து விடுவார்கள். இதற்கு பெயர் - பிரம்மஹத்தி தோஷம். யார் ஒருவர் ஜாதகத்தில், சனி , குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர் , பார்த்து இருந்தாலோ - 99 % அவருக்கு - பிரம்மஹத்தி தோஷம் - இருப்பதாக அர்த்தம்..... நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும் , இது பொருந்தும்..
பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?
ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் :
1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து , திருமணம் செய்யாமல் இருத்தல்
2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது
3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது
4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது
5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது
6 . சென்ற பிறவிகளில் , ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்
7.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)
பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?
1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்
2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்
3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்
4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்
5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது
6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்
பரிகாரம்:தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று , பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து , ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்.
எனக்கு தெரிந்த
அன்பர் ஒருவர் , விடிவு காலம் வராதா என ஏங்கியவர், இதை செய்த 6
மாதங்களில் , ஒரு வழி (ஒளி ) கிடைத்து, ஒரு நிம்மதியான வாழ்வு வாழத்
தொடங்கி இருக்கிறார். .... அதிகம் செலவு ஆகாது.. ஆயிரம் ரூபாய் அதிகம்..
ஆனால் பய பக்தி , மன சுத்தம் முக்கியம்...
.
இது
விளையாட்டு சமாச்சாரம் அல்ல... 30 வயது ஆகியும் திருமணம் ஆகாத ஒரு
பெண்மணிக்கு, எவ்வளவோ தோஷ பரிகாரங்கள் செய்து , கடைசியாக நாம் அவர்களுக்கு
, இந்த தோஷ நிவாரணம் பரிந்துரை செய்து, இன்று அவர்கள் மணமாகி , நல்ல
வாழ்க்கை அமைந்து இருக்கிறது...
அந்த குடும்பத்திற்கு , அதன் பிறகு
எல்லா நல்ல காரியங்களும், நமது அறிவுரைக்குப் பிறகே... அவர்கள் வழியில்
சுமார் இருபது குடும்பங்கள் , நமது ஆன்மிக அறிவுரையின் படி நடந்து
கொள்கிறார்கள்..தினமலரில் வெளியான திருவிடை மருதூர் ஆலய சிறப்பு கட்டுரைகளை காண , கீழே படத்தை க்ளிக் செய்யவும
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக