புதன், 21 நவம்பர், 2018

சிம்ம ராசி காரகத்துவம்



சிம்ம ராசியின் உருவம் சிங்கமாகும். சிங்கத்திற்கு பசி எடுத்தால் மட்டுமே பிற மிருகங்களை வேட்டையாடும்.மற்ற நேரங்களில் பிற மிருகங்களை வேட்டையாடுவதில்லை. இதன் காரணத்தினால், சிம்மராசிக்காரர்கள் அவசியம் கருதி செயல்படுபவர்கள் எனக்கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் ஓய்வாக,எதை பற்றியும் கவலையில்லாதது போல் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும், எப்பொழுதும் ஓய்வாகவே இருக்க விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் தங்கள் எல்லைக்குள் பிறர் நுழைவதை விரும்புவதில்லை. இதனால் சிம்ம ராசிக்காரர்கள்  தனியாக இருக்கவே விரும்புவார்கள் என்றும்,தங்கள் சுதந்திரத்தில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. சிங்கம் விலங்குகளின் அரசன் போல் விளங்குவதால், சிம்மராசிக்காரர்கள் தங்களை எப்பொழுதும் ஒரு தலைவனாகக்காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.
சிம்ம ராசியின் உருவம் சிங்கமாகும். சிங்கம் மலையுச்சி அல்லது மலைக்குகைகளில் வசிக்கும். எனவே உயரமான இடங்கள் சிம்ம ராசியின் வசிப்பிடங்களாகும். மலையுச்சி,மலைக்குகை, உயரமான கோட்டைகள் , மேட்டுப்பகுதியில் அமைந்த ஊர்கள் இவைகள் சிம்ம ராசியின் வசிப்பிடங்களாகும்.
சிம்ம ராசியில் ஆட்சி பெறும் கிரகம் சூரியன்
சிம்ம ராசியில் எந்த கிரகமும் உச்சம் நீசம் அடைவதில்லை
சிம்ம ராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்கள்
மகம் 1,2,3,4
பூரம் 1,2,3,4       உத்திரம் 1
சிம்ம ராசியில் எந்த கிரகமும் உச்சம் நீசம் அடைவதில்லை

சிம்ம ராசி காரகத்துவம் சிம்ம ராசி என்பது ஒரு ஸ்திர ராசி  இதன் உருவம் சிங்கம்  இந்த ராசி காரகர்கள் தனக்கு என்று ஒரு குறிக்கோளுடன் இருப்பார்கள் மற்றவர்கள் இவர்களிடம் நெருங்கி பழக வாய்ப்பு தர மாட்டார்கள்  இவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள்  தான்   குடும்பத்தில் முதன்மையானவராக இருக்க விரும்புவார்கள்  சமுதாயத்திலும் இதே நிலையில் தான் இருப்பார்கள்  இவர்களுக்கு தலைமை தன்மை நிர்வாக தன்மை வழிநடத்தும் தன்மை அதிகம் இருக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கு அதிகம் நன்மை செய்வார்கள் இவர்களின் உழைப்பு என்பது அதிகாரம் தான் மற்றவர்களை வேலை வாங்கும் குணம் உடையவர்கள்  அதிகம் வேலை செய்ய மாட்டார்கள்  அடுத்தவர்களை அதிகம் வேலை வாங்குவார்கள் யாரு செய்ய முடியாத ஒரு சில வேலைகளை மட்டுமே இவர்கள் செய்வார்கள்  தனக்கு தேவையானதை தானே தேர்ந்து எடுத்துக்கொள்வார்கள்  இவர்ககுக்கு  ஒருவரை பிடிக்க வில்லை என்றால் விரட்டி அடித்து விடுவார்கள் கர்வமான நபர்கள் இவர்கள்  இவர்கள் பேசும் போது இவர்களின் குரல்  பேசும் போது அதிக தூரத்தில் இருப்பவர்களுக்கும் கேட்கும்  சத்தமாக பேசும் பழக்கம் உடையவர்கள் கோவப்பட கூடியவர்களாக இருப்பார்கள் தனது நிலை பாட்டை எப்போதும் மாற்றிக்கொள்ளும் தன்மை இருக்காது இவர்களை விட உயர்வான இடத்தில இருக்கும் நபர்கள் சொல்வதை எப்போதும் கேட்டு நடப்பார்கள் அவர்கள் சொல்லும் விஷத்தை மட்டும்  கேட்டு மாற்றம் செய்வார்கள் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் நம்பிக்கை இல்லாதவர்கள்  உடல் வலிமை உள்ளவர்கள் வயது ஆனாலும் அதே மனநிலையில் இருப்பார்கள் இந்த ராசி வறண்ட ராசி  இவர்கள் மலை சார்ந்த பகுதிகள் அதிகம் பிடிக்கும்  மாடி வீட்டை குறிக்கும்  இவர்களுக்கு கற்பனை அதிகம் இருக்கும்  சூதாடும் இடம் ஷேர்மார்கெட் அரசாங்க வீடு  அரசியல் அரசாங்கம் நிர்வாகம் பாலைவனம்  தொடர்பு உடையவர்கள் இது ஒரு மிருக ராசி  புகழ்ச்சிக்கு அடிமையானவர்கள் இவர்களிடம் புகழ்ந்து எதையும் சாதிக்க முடியும்  இது ஒரு நெருப்பு ராசி  எனவே இவர்களின் குடும்பத்தில்  அம்மை தீ விபத்து  மஞ்சள் காமாலை  பதித்தவர்களாக இருப்பார்கள்  இவர்களின் கற்பனைகள் அனைத்தும் உயர்வானதாக இருக்கும் உயர் லட்சியம் உடையதாக இருக்கும் இவர்களுக்கு சூரியன் ஆதிக்கம் நிறைந்த பெயர்கள் தொடர்பு உடையவராகள் அதிகம் நபர்கள்  இருப்பார்கள் தொடர்பில்  இந்த ராசி மிருக ராசி எனவே இவர்களுக்கு மிருகங்கள் குணாதிசயம் இருக்கும்  இந்த ராசியின் மரங்கள் வில்வம் அரச மரம் ஆலமரம்  துவரை  நாவல் மரம் பூசணி செடி மேலும் இவர்கள்  அருவியில் சுனை நீர் ஊற்று  இதில் குளிக்கும் போது  நன்மை தரும் உடலுக்கு  இதில் உள்ள நட்சத்திரம்  மகம் பூரம் உத்திரம்   மகம் நட்சத்திரம் இரட்டை பிறவியை செல்லும்  மேலும் மருத்துவம் சார்ந்த துறை  சிறப்பாக இருக்கும்
 மகம் நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தால்  இந்த கிரக உறவு முறை நபர்கள் அதிகாரத்தில் இருப்பார்கள் வயதான பிறகு தனிமை இவர்ககுக்கு மனா ரீதியான பாதிப்பை தரும் அவர்கள் எரிந்து எரிந்து  பேசுவார்கள்  இந்த நட்சத்திரத்திற்கு தாயின் அன்பு எப்போதும் கிடைக்கும் இந்த நட்சத்திரத்தில் ஒரு பெண் பிறந்தாலும் ருது ஆனாலும் நன்மைகள் உண்டு  சிறுவதில் அதிகம் நன்மைகள் உண்டு  பின்பகுதியில்  கஷ்டமான நிலை இருக்கும்  மகத்தில் பிறந்தவர்கள் திட்டம் போட்டு செயல்படுவார்கள்  மகம் நட்சத்திர விலங்கு புலி  எனவே  திட்டம் போட்டு செயல்படுவார்கள்  இவர்களின் முக அமைப்பு  முன்னோர்கள் சாயலில் இருக்கும்  இவர்கள் வீட்டில் வீசிங் கோல்ட் சாந்த பாதிப்பு உள்ளவர்கள் இவர்கள் வீட்டில் இருப்பார்கள்  குழப்பம் உள்ளவர்களும் இவர்கள் வீட்டில் இருப்பார்கள்  மகம் ஒரு அப்பாவி ஏமாளி   இவர்களுக்கு பணம் அதிகம் இருக்கும்                                                                              பூரம்  நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகம் சார்ந்த உறவு நபர்களுக்கு வயிற்று வலி மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும்  திருமண வாழ்க்கை பாதிப்பு இருக்கும் இவர்களுக்கு வரும் வரங்களை தட்டி கழிப்பார்கள்  அதில் குற்றம் கண்டு பிடித்து சொல்லி கொண்டே இருப்பார்கள்  இவர்கள் பூர்வீக சொத்தை இழந்தவர்களாக இருப்பார்கள்  இவர்களுக்கு மற்றவர்கள் தேடிவந்து உதவி செய்வார்கள் ரத்தம் சம்மந்தம் இல்லாத நபர்கள் உதவிகள் கிடைக்கும்  அதை பயன்படுத்த தெரியாதவர்கள் வாழ தெரியாதவர்கள்  அதுவாவது கிடைக்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியாதவர்கள்                                                                        உத்திரம் நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகம் சார்ந்த உறவு நபர்கள் கொடையாளியாக இருப்பார்கள்  அன்னதானம் செய்பவர்களாக இருப்பார்கள்  உண்மையை கண்டறிவதில் வல்லவர்கள் இவர்கள்  மந்திரம் மாயாஜாலம்  அறிந்தவர்கள்  இதே கன்னி ராசியில் இருக்கும் உத்திரம் கஞ்சத்தனம் இருக்கும்                                                                     உத்திரம் 1.ஆம் பாதம் நபர்களுக்கு இடது கை பழக்கம் இருக்கும்  இவர்களின் சொத்தை இவர்கள் அனுபவிக்க முடியாது அடுத்தவர்கள் அனுபவிப்பார்கள் உதாரணமாக பங்காளிகள் அனுபவிப்பார்கள்  இவர்களுக்கு தீய எண்ணம் இருக்கும் அடுத்தவர்கள் மனைவியை விரும்புவார்கள்  அடையவும் செய்வார்கள்  இது கன்னி உத்திரத்திற்கு பொருந்தும்  உத்திரத்தில் ஒரு பெண் பிறந்தால் அவளின் கணவர் அடுத்த பெண்ணிடம் பழகும் தன்மை இருக்கும்  பொதுவாக சிம்ம ராசி  புத்திர தோஷம்  இருக்கும்  பெரும்பாலும் மணவாழ்க்கை கசக்கும் பெரும்பாலும் இவர்கள் மாடி வீட்டில் வசிப்பார்கள்  இவர்கள் வீட்டில் மருத்துவம் சார்ந்த ஆர்வம் உள்ளவர்கள் இருப்பார்கள் இவர்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் இரண்டு விதமான வருமானம் இருக்கும்  இவர்களிடம் பணம் வாங்கி தொழில் செய்தால் அது வளர்ச்சி தரும் கைராசியான நபர்கள்  பேச்சுபுலமை உள்ளவர்கள்  இவர்களின் பேச்சு லாபநோக்கமாக இருக்கும்  எழுத்து கலைகளில் ஆர்வம் இருக்கும்  இவர்களுக்கு சகோதரர் பிறக்கும் போது ஒரு கர்மம் நடக்கும்  தொழில் மாற்றம் எப்போதும் இருக்கும் சிறு தூரம் சென்று தொழில் செய்வார்கள்  தரகு கம்யூனிகேஷன்  சிறப்பு தரும்  இவர்களுக்கு குழந்தை பிறந்த உடன் குடும்ப பற்று இருக்காது தாய்தந்தை காதல் திருமணம் செய்து இருப்பார்கள் அலலது சொந்தத்தில் திருமணம் செய்து இருப்பார்கள்  அல்லது காதல் திருமணம் வேறு ஜாதியில் நடந்து இருக்கும்  இவர்களுக்கு குழந்தை பிறந்த உடன் தாய் தந்தை பிரிவு  வரும் அமைப்பு உண்டு  தாய் தந்தை இருவரில் ஒருவர் மட்டுமே சிறப்பாக இருப்பார்கள்  இவர்ககுக்கு திருமண தடை இருக்கும் தாமதமான திருமணம் நடக்கும்  திருமணத்தில் கடன்  இருக்கு கலாட்டா கல்யாணம் தான் இருக்கும்                                                                       
சூரிய குடும்பத்தில் கோள்களுக்கு ஒரு மையப்புள்ளியாக அமைந்துள்ளது சூரியனாகும். சூரியனை மையமாகக்கொண்டுதான் கோள்கள் சுற்றிவருகின்றன. சூரியன் ஸ்திரமாக மையத்தில் நிற்கிறது. சூரியன் எந்த கோளையும் சுற்றவில்லை. ஒரு குடும்பம் என்றால் அந்த குடும்பத்தலைவரை மையமாகக்கொண்டுதான் அந்த குடும்பம் இயங்கும். ஒரு ஊர் என்று எடுத்துக்கொண்டால் ஊர்த்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டே அந்த ஊர் இயங்கும். ஒரு  நாடு  என்று எடுத்துக்கொண்டால் அந்த நாட்டுத்தலைவரை மையமாகக்கொண்டே அந்த நாடு இயங்கும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு குடும்பத்தலைவன் (தந்தை), ஊர்த்தலைவன், நாட்டுத்தலைவன், நிர்வாகி,அரசன், அதிகாரி போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒன்பது கிரகங்களில் சூரியனைத்தவிர பிற கிரகங்களை கண்ணால் பார்க்காதவர்கள் இருக்கலாம்,அணால் சூரியனை பார்க்காத ,சூரியனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த ஓப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு புகழ், கீர்த்தி, பிரபலம் போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 சூரியனை தன்னை சுற்றிவரும் பிற கிரகங்கள் ,தங்கள் சுற்றுப்பாதையை விட்டு விலகாமல் , அந்தந்த கிரகத்தை, அதனதன் சுற்றுப்பாதையிலேயே சுற்றிவருமாறு இழுத்து பிடித்து வைத்துள்ளது. சூரியன் கிரகங்களின் மையத்தில் இல்லையென்றால் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து விடும். இதுபோல் மனித உடலில் அந்தந்த உறுப்புகள் அந்தந்த இடத்திலேயே இருக்க, உடலுக்கென்று ஒரு உறுவ அமைப்பைக்கொடுத்து அது சிதைந்து போகாமல் , அனைத்து உறுப்புகளையும் அதனதன் இடத்தில் இழுத்துப்பிடித்துக்கொண்டிருப்பது எலும்பாகும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் எலும்புக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்திருக்கிறார்கள்.
 மனித உடம்பில் சூரிய ஒளி அதிகமாக படும் இடம் சிரசாகும். சிரசுக்குள் இருக்கும் மூளையானது சூரிய ஒளி சிரசில் படும் பகல் நேரத்தில் முழுமையாக செயல்படுகிறது. சூரிய ஒளி சிரசில் விழாத இரவு நேரத்தில் மூளை ஓய்வெடுத்துக்கொள்கிறது. மூளை ஓவ்வெடுக்கும் சமயத்தில் ஒட்டுமொத்த உடம்பும் களைப்பில் தூங்கி விடுகிறது. இதன் அடிப்படையில் சிரசு, மூளை, உடல் தெம்பு,உற்சாகம், உயிர்ப்பு போன்ற காரகங்கள் சூரியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
 சூரிய ஒளி இல்லாமல் உலகில் எந்த உயினமும் தோன்றாது. உயிர்கள் தோன்றுவதற்கு காரணமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக கருதப்படுகிறான். இதன் அடிப்படையில் சூரியன் பித்ருக்காரகன்(தந்தை) என அழைக்கப்படுகிறான்.
 இறைவன் ஒளி வடிமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இறைவனை ஒளி வடிவத்தில் கண்டதாக பல மகான்கள் தங்கள் அனுபவத்தில்  கண்டு கூறியிருக்கிறார்கள். சூரியன் ஒளி வடிவமாக இருப்பதால் பரமாத்மா என அழைக்கப்படுகிறான்.
 வெளிச்சமே உயிரினங்களுக்கு கண் பார்வையைத்தருகிறது . வெளிச்சமில்லாமல் கண்களால் எதையும் பார்க்க முடியாது. அந்த வெளிச்சத்தை தரும் கிரகம் சூரியன் என்பதால் கண் பார்வைக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் வலது கண்ணைக்குறிக்கும் கிரகம் சூரியன் என கூறப்பட்டுள்ளது.
 சூரியனின் நிறம் இளம் சிவப்பாகும். சூரிய ஒளியில் மலரும் செந்தாமரை சூரியனுக்கு உரிய மலராக கூறப்பட்டுள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் கோதுமை சூரியனுக்குரிய தானியமாக கூறப்பட்டுள்ளது.
சூரியனுக்கு
ஆட்சி வீடு சிம்மம்
உச்ச வீடு மேசம்
நீச வீடு துலாம்
                சூரியன் மேசராசியில் 10வது பாகையில் உச்சமடைகிறான். மேசராசியல் 10வது பாகை அஸ்வினி நட்சத்திரத்தைக் குறிக்கும்.                      அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேதுவாகும். மேசராசியின் அதிபதி செவ்வாயாகும். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் பரமாத்மா என்றழைக்கப்படுகிறான். கேது, மோட்சக்காரகன் என்றழைக்கப்படுகிறான். அகங்காரம், ஆணவம், முன்கோபம், கர்வம், மிருகத்தனம், முட்டாள்தனம், சண்டை சச்சரவு, வாக்குவாதம் போன்ற தீய குணங்களுக்க காரகன் செவ்வாய் ஆகும். பொதுவாக எல்லாவித பாவ கர்மங்களுக்கும் காரகம் வகிப்பவன் செவ்வாயேயாகும்.
                ஆகவே மேசராசி முழுவதும் பாவிகள் நிறைந்த பகுதியாகும். பாவங்கள் நிறைந்த பகுதியாகும். ஆனால் சூரியன் கேதுவின் நட்சத்திரத்தில் உச்சம் பெறுவதால், அவன் மோட்ச நிலையில் இருக்கிறான். பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்களே மோட்ச நிலையை அடைய முடியும். மோட்ச நிலையை அடைவது எளிதான காரியமல்ல. பலவிதமான சோதனைகளைக் கடந்துதான் மோட்ச நிலையை அடைய முடியும். மோட்சத்தை நாடிச் செல்பவர்களின் பாதை மிகவும் கரடுமுரடு ஆக இருக்கும். கரடு முரடான பாதைகளைக் குறிப்பவன் செவ்வாயாகும். ஆகவே பலவிதமான சோதனைகளை சந்திந்து, அதில் வெற்றி கொண்டு மோட்ச நிலையை அடைவதே சிறப்பாகும். இத்தகைய சிறப்பு அம்சத்துடனே சூரியன் மேசராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் உச்சமடைகிறான்…                                                                                               சிம்மம் ராசி காரர்கள் தற்பெருமை பேசி திரிவார்கள் கோபமாக பேசுவார்கள் மற்றவர்களை கோபப்படுவார்கள் நல்ல நிர்வாகிகள் தேர்வு மிகக் கடுமையாக அதிகாரம் செய்பவர்கள் பசி பொறுக்க மாட்டார்கள் தாகம் தாங்க மாட்டார்கள்
சிங்கம் போல் யாரையும் தங்கள் கட்டுப்பாட்டில் தங்களுக்கு கீழே வைக்கவே விரும்புவார்கள்
அரசியலில் கோள் கோலோச்சியவர்கள
அரசாங்கத் துறை விளையாட்டுத்துறை finance விளம்பரம் போன்ற துறைகளில் பரிமளிப்பார்கள் நகை பொருள் சிவப்பு நிற பொருட்கள் வண்டிகள் வாங்கி விற்றல் போன்றவையும் செய்வார்கள்
சிவப்பு நிறம் பகல் காலம் ஆவணி மாதம் நெருப்பு தெற்கு திசை இவர்களுக்கு உரியது
இது ஆண் ராசி
இதயம் சம்பந்த நோய்கள் ரத்த ஓட்ட பிரச்சினைகள் முதுகு தண்டில் வலி பல் வலி அலர்ஜி நெருப்பு காயங்கள் போன்றவை இவர்களை தாக்கக்கூடும்: சிம்ம ராசியின் தன்மைகள்
|. நெருப்பு ராசி
2 ஸ்திரராசி
3. இதயம்
4 முன் கோபம்
5 எதையும் புரிந்து கொள்ளாமை
6. வறண்ட மலட்டு ராசி
7 மிருக குணம்
8. குறுகியது
9.4 கால் ராசி
10. சிங்க உருவம்
11. காடுகள்
12. கோட்டைகள்
13. அரசு கட்டிடங்கள்
14. ஆவணி மாதம்
15. நண்பகல் பொழுது
16. ஓற்றை ராசி
17. உயர்ந்த குன்றுகள்
18. மலைகள்
சிம்ம ராசி மனநிலை
1, குறிக்கோள் உடையவர்
2 பேராசையுடையவர்
3 கலை , காவியம், இசை மேல் ஆர்வமுள்ளவர்
4. உற்சாகமுடையவர்
தோற்றங்கள்
1 நன்கு வளர்ச்சி பெற்ற தோற்றம்
2 அகன்ற தோள்கள்
3 அகன்ற நெற்றி
4. உயர்ந்த கட்டுமஸ்தான உடம்பு
5 கம்பிரமான தோற்றம்

குணாதிசயங்கள்
1 உதார குணம்
2. தயாள குணம்
3. பெருந்தன்மை
4. கோபம்
5 மனித தன்மை
6. தீய எண்ணமின்மை
7 உயர்ந்த குணம்
8 விசுவாசம்
9. புகழ்ச்சியை விரும்புதல்
10. வைராக்கியம்
சிம்மம், அரசாங்க வீடு, காடும், மலையும், அரசு கட்டிடங்கள், அரசு குடியிருப்பு வெட்டு காயம், பாலைவனம், அக்ரகார பகுதிகள்,
மருத்துவ வீடு, பெரியோர்களின் நட்பு, அதை சரியாக பயன்படுத்த வேண்டும், சுனைகள் உள்ள மலைகள் சதுரகிரி, வெள்ளிங்கிரி, தீர்த்தமலை,
ஸ்திர லக்னத்தில் வலிமை வாய்ந்தது சிம்ம லக்னம்.
உணர்ச்சி வசப்பட்டு உளறாமல் வெற்றியையும் , தோல்வியையும் சரிசமமாக எடுத்துக்கொள்வார்கள் .
உதிப்பதும் , அஸ்தமனமும் சூரியனுக்கு இயல்புபோல ,இவர்கள் பல இடங்களில் புத்திசாலியாகத் தோன்றுவார்கள் .
2 க்கும், 11க்கும் புதனே அதிபதி,  வாக்கு பலம்  வாக்கால் தொழில்  வாக்கு பலிதம்  லாப நோக்கத்துடன் கூடிய பேச்சு  ரெண்டு தொழில்  ரெண்டு வருமானம்                                                                                                                                                       சிம்ம ராசியின் தொழில் கள்
1 அரசு உத்யோகம்
2 அரசியல்
3.தலைமை பொறுப்பு
4 மருத்துவர்
5 சமுக சேவை
6 பிரதம மந்திரி
7 முதலமைச்சர்
சூரியனுக்கு இணையாக செவ்வாய் அதிகமாக உதவப்போகிறார் ..கேந்திர ஸதானமான நான்காம் வீட்டிற்க்கும், பாக்கிய ஸ்தானமான திரிகோணத்திற்க்கும் அதிபதியாக செவ்வாய் வருகிறார் .செவ்வாய் நன்றாக இருந்தால் பாரம்பரியத்தை கட்டி காப்பாற்றுவார்கள் .
சிம்மத்தோன் சீறி சினந்து நிற்பான் என்பது ஜோதிட பழமொழி. எதற்கும் அஞ்சாதவர்கள். சிம்மராசி காரர்கள் உண்மையான அன்புடன் பிரியத்துடனும் பெருந்தன்மையுடனும் இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் அதிகப்படியான கட்டுப்படுத்த முடியாத அன்பே இவர்களுக்கு சில சமயங்களில் கெடுதலாக அமையும். இந்த ராசிக்காரர்கள் நல்ல புத்தி உடையவர் களாகவும் தெய்வபக்தியும் அதிக பிரியமும் முன்கோபமும் வயிற்று வலியுடனோ கை கால்களில் மச்சம் உடையவர்களாகவும் இருப்பார்  இவர்கள் பித்த உடல் அமைப்பு உடையவர்கள் இவர்களுக்கு மாணிக்கத்தின் மீதும் கோதுமை மீதும் செந்தாமரை புஷ்பத்தின் மீதும் பிரியம் உடையவர்களாக இருப்பார் .  இவர்கள் சிகப்பு நிறத்தை விரும்புபவர்களாகவும் சிவ பக்தி உடையவர்களாகவும் இருப்பார்கள். சிம்மராசிக்காரர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லா விஷயங்களிலும் அடக்கமாக நடக்க கற்றுக் கொடுக்க வேண்டும் .அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக சாப்பிட செய்ய வேண்டும் .  இவர்களை பண விஷயத்தில் சிக்கனமாக கண்டிப்பாகவும் இருக்க செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இவருடைய பெருந்தன்மையான குணத்தால் பணத்தை அனாவசியமாக செலவு செய்துவிடுவார்கள்.
சிம்ம ராசியின் தன்மைகள் :

ஸ்திர ராசி
ராசியின் அதிபதி : சூரியன்
ராசியின் சின்னம் : சிங்கம்
நெருப்பு ராசி
தர்ம ராசி
ஆண் ராசி
கிழக்கு ராசி
ராசியின் காலம் : நண்பகல்
ராசியின் இடம் : மலை
ராசியின் குணம் : முன்கோபம்
ராசியின் செயல் : மத்திமம்
ராசியில் உள்ள நட்சத்திரங்கள் : மகம் 1,2,3,4 பூரம் 1,2,3,4 உத்திரம் 1
ராசி நிலையில் உடல் உறுப்புகள் : இருதயம், மார்பு
சிம்மம் ராசியின் காரத்துவங்கள் :                                                                                      சிம்ம லக்னகாரர்கள் பார்ப்பதற்க்க் ஆக்ரோஷமாக அருகில் நெருங்க பயப்படும்படி அவரின் வார்த்தைகள் கோபக்கனல் வீசுவதாக இருக்கும். ஆனால் நெருங்கி பழகினால் ரோஜா மலரை போல் மென்னமையான மனமும் குணமும் உடையவர்கள். பார்த்து பழகினால் ரோஜாவில் உள்ள முள் குத்தாமல் மலர் பறிப்பது போல் இவர்களிடம் உதவி பெறலாம். சிஙகம் தனது எல்லைக்குள்  வேறு சிஙகத்தை தலைமை பதவிககு அனுமதிக்காது. மீறீனால் சணடையிட்டு கொன்று விடும் குணம்.
ஆண் சிங்கம் தனக்கான உணவை தேடாது. அதனுடைய வேலை குட்டிகளை பார்த்தால் மற்றும் பெண் சிங்கத்துடன் சேர்தல். பெண் சிங்கமே வேட்டைக்கு செல்ல வேண்டும். ஆண் சிங்கம் சாப்பிட்ட மீதியைத்தான் பெண் சிங்கம் சாப்பிட்ட வேண்டும்.
பெண் சிங்கத்தை அடைய மற்ற ஆண் சிங்கம் வந்தால் அது பழைய சிங்கத்தை ஜெயிக்க வேண்டும். இந்த பெண் சிங்கத்துடன் சேர வேண்டும் என்றால் அதனுடைய குட்டிகளை புதிதாக வந்த ஆண் சிங்கம் கொன்று விட்டு சேர வேண்டும். ஆகவே சிம்மம் ராசி, சிம்மம் லக்னம் வேலைக்கு செல்ல மாட்டார்கள். பிரச்சனை வந்தால் களம் இறங்கும் ஆண் சிங்கம் அழகான ரோஜாவின் உள்ளே முள் இருக்கும் கர்ஜிக்கும் சிங்கத்தில் ஆழ் மனதில் அன்பு இருக்கும்.

அரண்மனை, அலுவலகம், குகை, உயரமான பகுதி, விலங்குகள் வசிக்கும் இடம், மாநில அரசு, வயிறு, அரசு உத்தியோகம், அரசியல் நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல்                                                                                                                                     சிம்ம லக்ன பலன்கள் :

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் எவருக்கும் கட்டுப்படமாட்டார்கள். மற்றவர்களிடம் பெருந் தன்மையுடன் நடந்துகொள்வார்கள். எதிலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பார்கள். தர்ம நியாயப்படி நடந்துகொள்வார்கள். சற்று முன்கோபம் உள்ளவர்கள். எவரையும் சாராமல் தன்னுடைய சுயமுயற்சியினால் முன்னேற்றம் அடைவார்கள்.

சிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிபதி சூரியன். எனவே இவர் சுப பலம் பெற்று அமைந்திருப்பது அவசியம். சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும் மேஷத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், இந்த லக்னக்காரர்களுக்கு அற்புதமான யோக பலன்களை வழங்குவார். அரசாங்கத்தில் உயர் பதவி, தொழில், உத்தியோக வகையில் நல்ல முன்னேற்றம், செல்வ வளம், தந்தை வழியில் அனுகூலமான பலன்கள், பூர்வீகச் சொத்துச் சேர்க்கை போன்ற யோக பலன்கள் உண்டாகும். சிலர் அரசியலிலும், சிலர் கலைத் துறையிலும் பிரகாசிப்பார்கள்.

கன்னி, விருச்சிகம் போன்ற இடங்களில் சூரியன் இருந்தாலும் யோக பலன்கள் உண்டாகும். ஆனால், கன்னியில் இருக்கும் சூரியன் ஜாதகருக்கு கண்களில் சிறு பாதிப்பை ஏற்படுத்துவார்.

அதேபோல், சூரியன் மேஷத்தில் நீச்சம் பெறுவதும், 12-ம் இடமான கடகத்தில் மறைவு பெறுவதும் நல்லதல்ல.

சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், சிம்ம லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கு செவ்வாய் யோக பலன்களை வழங்கக் கூடியவர் ஆகிறார்.

செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும், மகரத்தில் உச்சம் பெற்று இருந்தாலும் தொழில், உத்தியோகம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம், பூமி சேர்க்கை, வண்டி வாகன வசதி, சகோதரர்களால் ஆதாயம், அரசாங்க அனுகூலம் போன்ற யோக பலன்களை வழங்குகிறார்.

செவ்வாய் லக்னத்துக்கு 12-ம் இடமான கடகத்தில் நீச்சம் பெறுவது, இந்த லக்னக் காரர்களுக்கு பலவீனமாகும்.

பரிகாரம்

சூரியன் வலுவின்றி இருந்தால், சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், செவ்வாய் வலுவின்றி இருந்தால், சஷ்டி அன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதும் சிரமங்களைக் குறைக்கும்.
சிம்ம லக்ன பலன்கள் :

கம்பீரமான தோற்றமும்,திடமான சரீரமும்,ராஜநடையும் உள்ளவர்.தனவான்,பக்திமான்,ஜனவசியன்,மிக முக்கியமாக..,, ,யார்பேச்சையும் கேட்டு அதன்படி நடக்க மறுத்துவிடுவார், சுயபுத்திபடி மட்டுமே செயல்படுபவர்,கர்வம் அதிகம் உடையவர்,சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர்,நன்றாக சாப்பிடும் நன்றாக வேலை செய்யும் கடின உழைப்பாளி,தான் செய்யும் காரியங்களில் அடுத்தவர் தலையீட்டை விரும்பாதவர்,முன்கோபம் அதிகம் உடையவர்,ஆனால் சிறிதுநேரத்தில் சகஜநிலைக்கு திரும்பிவிடுவார்,தான்போக்குபடி நடக்க விடாவிட்டால்பெற்றோர்களிடம்கூட கருத்துவேறுபாடு கொண்டு வசைபாடகூடிய மனபான்மை கொண்டவர்,சில கிரக அமைப்புகள் கொண்ட ஜாதகர் பாவகரியங்களை தவறு என்றுகூட நினைக்காமல் செய்யக்கூடியவர்.சட்டத்திற்கு கட்டுபடாதவர் ஸ்திரமான புத்தி கொண்டு எதையும் தீரயோசித்து செய்பவர்,தன்னம்பிக்கை உடையவர் சமுதிரிக்கா லட்சணங்கள் பொருந்தியவர்,சகலகலா வல்லவராக இருக்க பெரிய லட்சியங்களை கொண்டு அதை நிறைவேற்ற துடிப்பவர்,சுய கௌரவத்தை விட்டுகொடுக்க மாட்டார்,தலைவலி,கண்வலி அதிகம் வரும்.

மேற்படி இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5,10,27 ஆகிய வயதுகளில் சுரத்தால் தொந்தரவுகள் ஏற்பட்டு ஒருமாதம் கழித்து நீங்கலாம்.

எட்டாமிடம் மற்றும் லக்னம் சுபர்பார்வை பெற்று பலமுடன் இருந்தால் இவருக்கு ஆயுள்பலம் 80 க்கு குறையாமல் உண்டு.
சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்
1. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தாம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று, கௌரவம் பெற்று மேன்மையடைய திருவோணம், திருவாதிரை, உத்திராடம், புனர்பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் தொடங்க வேண்டும்
2. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தாம் புதிய வேலையில் சென்று பதவியேற்க, வங்கியில் பணம் டெபாஸிட் செய்ய, நகைகள் வாங்கவும், விலை மதிப்புள்ள இரத்தினக்கற்கள் வாங்கவும், வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் உலோகபாத்திரங்கள் வாங்கவும், சொத்துக்கள் வாங்கி பதிவு செய்யவும் பத்திரங்கள் வாங்கவும் அவற்றை தமது பெயரில் ரிஜிஸ்டர் செய்யவும், ஷேர் பத்திரங்களில் முதலீடு செய்யவும், அவிட்டம், ரோகிணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வந்தால், சிறப்பான முறையில் விருத்தியாகும்.
3. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தாம் கடிதம் எழுதி அனுப்ப, சிபாரிசு கடிதம் வாங்க செல்ல, விளம்பரங்கள் செய்ய, ரேடியோ, தொலைக்காட்சிப்பெட்டி, செல்போன், கமப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ், அச்சு இயந்திரங்கள் ஆகியன வாங்க, தொலைபேசி இணைப்பு பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க, பத்திரிக்கை சார்ந்த பணிகள் செய்ய, நூல் வெளியிட, நூலகம் ஆரம்பிக்க, வியாபார விற்பனை, குத்தகை ஒப்பந்தங்கள் செய்ய ஆரம்பிக்க, வீடு, நிலம், தோட்டம், வாகனம் ஆகியவற்றை விற்பனை செய்ய, வீட்டுக்கு மின் இணைப்பு குறித்து விண்ணப்பம் செய்ய, சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
4. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தம்முடைய ஆரம்பக் கல்வி படிக்க தொடங்க, வீடு கட்ட ஆரம்பிக்க, கட்டிய வீட்டை வாங்க, கலைப்பொருட்கள் வாங்க, விவசாய வயல்கள் வாங்க, கிணறுகள், குளம் ஆகியவற்றை வெட்டி அமைக்க, அவற்றை செப்பனிட, போர்வெல் போட ஆரம்பம் செய்ய, பன்ணைகள் வாங்க, பழத்தோட்டங்கள் வாங்க, பரம்பரைச் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற எடுக்கும் முயற்சிகளை தொடங்க, பள்ளிகள், கல்லூரிகள் துவங்க, மேலும் அவற்றை விஸ்தரிக்க முயற்சிகள் செய்ய, பால்பண்ணைகள் தொடங்க, தொழிற்சாலைகளில் பொருட்கள் உற்பத்தி துவங்க, அனுஷம், பூசம், ஆயில்யம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் முயற்சியை துவங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
5. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - வேதங்கள், மந்திரங்கள் படிக்க தொடங்க,சமயம் சார்ந்த பணிகளை துவங்க, உல்லாச சுற்றுலா செல்ல, காதல் விசயங்களை ஆரம்பிக்க, நோயிலிருந்து விடுபட மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற, சங்கீதம் - வாய்ப்பாட்டு இசைக்கருவிகள் இவைகளை கற்க ஆரம்பிக்க, சினிமா மற்றும் சீரியல் எடுக்க ஆரம்பம் செய்ய, விருந்து விழாக்கள் நடத்த, கிளப்புகள் ஆரம்பிக்க, குழந்தை செல்வம் கிடைக்க வேண்டி முயற்சிகள் செய்ய, கோயில்களில் வேண்டுதல்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி யாகங்கள் செய்ய, புத்திரப்பேறு வேண்டி மருத்து சிகிச்சைகள் செய்ய, அசுவனி, மகம், பரணி, பூரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்து வர மேன்மையான பலன்கள் உண்டாகும்.
6. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தமக்கு விலையுயர்ந்த உடைகள் வாங்குவதற்கு, உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள் துவங்குதல், புதியதாக வேலைக்கு சேருதல், வேலையாட்கள்அமர்த்திக் கொள்ளுதல், வீட்டு பிராணிகள் வாங்குதல், கடன் வாங்க முயற்சி செய்தல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல், வாடகைக்கு குடிபோதல், எடுத்த காரியங்களில் வெற்றி பெற, கைத்தொழில் துவங்குதல் ஆகியவற்றை திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
7. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய வர்த்தகம் நிமித்தமாக புதிய நபரை சந்திக்க, தனக்கு கௌரவம்:  மதிப்பு வேண்டி செய்யும் காரியங்களை துவங்க, திருமணத்திற்க்கு வரன் தேட துவங்க, பெண்/மாப்பிள்ளை ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்க, தொழில் நிமித்தம் வெளிநாடு பயணம் துவங்க, கைவிட்டுப் போன பொருட்களை மீட்பதற்க்கான முயற்சிகள் செய்ய துவங்க, பொதுகூட்டங்கள், வியாபார விளக்க கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த மூலம், பூராடம், திருவாதிரை, புனர்பூசம், ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
8. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய இன்சூரன்ஸ் பாலிசி போட ஆரம்பிக்க மேன்மை தரக் கூடிய நட்சத்திரம் உத்திரட்டாதி, ரேவதி.
9. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சமயம் சார்ந்த பணிகள், மற்றும் தெய்வ வழிபாடு குறித்த காரியங்கள் துவங்கவும், தியானம் பழக, தீட்சை பெறவும், ஆராய்ச்சிகளைத் துவங்கவும், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்ல துவங்கவும், ஆவிகளுடன் பேசுதல் இது தொடர்பான முயற்சிகள் செய்ய துவங்கவும், சட்டப்படியான கோர்ட் (அ) வக்கீல் மத்தியஸ்தம் செய்ய முயற்சிகள் துவங்கவும், ஆன்மீக நூல்கள் வெளியிட துவங்கவும், உயர்படிப்பு (கல்லூரி படிப்பு) குறித்து காரியங்கள் ஆரம்பிக்கவும், நீண்ட தூரப் பயணங்கள் கடல் வழி, ஆகாய வழியில் செல்ல ஆரம்பிக்கவும், மறுமணம் குறித்து முயற்சிகள் செய்ய தொடங்கவும், தர்ம காரியங்கள் செய்ய துவங்கவும், பூரம், உத்திரம், பரணி கார்த்திகை ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய ஆரம்பிக்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
10. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய சொந்த தொழிலை துவங்கவும், தன்னுடைய பணியில் பதவி உயர்வுக்கான முயற்சிகள் செய்ய துவங்கவும், அரசாங்கம் தரும் லைசென்ஸ்சுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கவும், அரசின் உயர்பதவியிலிருப்பவர்களைச் சென்று சந்திக்க, கௌரவமும் மதிப்பும் மிக்க பிரபுக்களைச் சென்று சந்திக்கவும் தன்னுடைய தொழில் அபிவிருத்திப் பற்றி ஆலோசனைகள் பெறவும். அஸ்தம், ரோகிணி, சித்திரை, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
11. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தன்னுடைய நண்பர்களின் நட்பை வலுப்படுத்த, அவர்களைச் சென்று சந்திக்கவும், தனக்கு ஆலோசகர்களை நியமித்து கொள்ளுவதற்கும், தன்னுடைய ஆதரவாளர்களைச் சென்று சந்தித்து தனக்கு அதரவு பெறவும், தான் எடுத்த காரியங்களில் குறைந்த முயற்சியில் வெற்றி பெறவும், முன்னேற்றம் பெறவும், லாபம் பெறவும், தனக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்து சாப்பிட துவங்கவும், ஆபரேசன் சுகமாய் நடந்து மகிழ்ச்சி பெறவும், தனக்கு ஏற்பட்ட பொருட்சேதத்தை புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கவும், கம்பெனிகள், சபைகள், சங்கங்கள் ஆரம்பிக்க, முன் காரியங்கள் செய்ய தொடங்க மிகவும் உகந்த நட்சத்திரங்கள் - சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம் ஆகியவை. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில், மேல் கூறிய காரியங்கள் செய்ய துவங்கினால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.
12. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் - தனக்கு சொத்துக்களை கிரயத்திற்கு வாங்குதல், தொழில் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தல், வெளிநாடு செல்லுதல், தன்னுடைய இரண்டாவது தொழில் துவங்குதல், வைத்திய ஆராய்ச்சிகள் செய்ய துவங்குதல் ஆகிய காரியங்கள் செய்ய துவங்க வேண்டிய நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, பூசம், அனுஷம் ஆகியவை, மேற்கூறிய காரியங்களை இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் செய்ய ஆரம்பித்தால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்                                                         சிம்ம ராசிக்கு 5 ஆம் அதிபதியாக குரு வருவதால், தகுந்த குருமார்களின் வழிகாட்டுதல் மூலம் எளிதில் உயர்ந்த நிலையை அடைவார்கள்..புத்திக்கூர்மை, உள் உணர்வு, மந்திரசித்தி, போன்றவை எளிதில் கைகூடும்                                                                                                                .சிம்ம ராசிக்கு 3ம் அதிபதி சுக்ரனே 10ம் அதிபதி,
கலை துறையில் ஈடுபாடு
எழுத்து மற்றும் இசையில் ஆர்வம்,
முதல் தொழிலை மாற்றி செய்யும் இரண்டாவது தொழிலில் வெற்றி பெறுவார்கள்
சகோதரனோடு ஒரு தொழில் செய்வார்கள்,
ஜெராக்ஸ், டைப்பிங் போன்ற தொழில்கள் செய்யலாம்,
சுய முயற்சியாலும்
விட முயற்சியாலும் வெற்றி பெறுவார்கள்                                                 .காலபுருஷனின் 5 ம்வீடு இது. நெருப்பு ராசி ஸ்திர ராசி ஆகும் இவர்களுக்கு இந்த இடம் லக்னமாவதால் கலைத்துறை கமிஷன் லாட்டரி அரசியல் சினிமா முதலியவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். சுயசிந்தனை விரைந்த செயல் திறன் சுய கௌரவம் தலைமை பொறுப்பு மிக்கவர் கம்பீரமான தோற்றம் இருக்கும்                                                                                     சிம்ம ராசி மிகவும் ஆக்ரோஷமானவர்கள். எடுத்த காரூயத்தை முடிக்காமல் விடமாட்டார்கள். தான் என்ற அகந்தை உடையவர்கள்
 ஸ்திர லக்னம்என்று அழைக்கப்படுவதில் மிகவும் வலிமை வாய்ந்தது சிம்மமே ஆகும். அள்ளிக் கொடுக்கும் குணம் கொண்ட சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, மனசாட்சிக்கு மாறாக பேசத் தெரியாது. ஏழை - பணக்காரர், படிக்காதவர் - மேதை என்று வித்தியாசம் பார்க்கத் தெரியாது. சிம்ம ராசிக்காரர்கள் கொஞ்சம் ஆர்ப்பாட்டம், அலங்காரமான பேச்சு என்று வளைய வருவார்கள். உணர்ச்சிவசப்பட்டு உளறாமல், வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்வார்கள். சிம்ம லக்னத்தில் பிறந்தால் அதிர்ஷ்டத்தோடு வாழும் பாக்கியம் கிடைக்கும்                                                                      சிம்ம ராசி மிருக ராசி நாற்கால் ராசி பழைய கோட்டைகள் பெரிய வீடு நிரந்தர வருமானம் தரகூடிய கட்டிடங்கள் மலை மலை சார்ந்த இடங்கள்
அரசுஅதிகாரிகள் தியேட்டர்உரிமையாளர்கள் நகை செய்வோர் பெரிய நிருவனத்தின் மேனேஜர் அருவை சிகிச்சை நிபுனர்
.
சிம்மத்திற்க்கு முற்பாதியை விட பிற்பாதி வாழ்க்கை நன்றாக இருக்கும்                  .சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும்
                                                                                                                                        

சிம்ம (மகம், பூரம், உத்திரம், 1ம் பாதம்)
சிம்ம ராசியின் ராசியாதிபதி நவகிரகங்களின் முதன்மை கிரகமான சூரிய பகவானாவான். இது கால புருஷனின் இருதயத்தை குறிப்பிடும் இரண்டாவது ஸ்திர ராசியாகும். மகம், பூரம், உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக கருதப்படகிறார்கள். சிம்ம ராசி ஒரு பார்வை ராசியாகும். இந்த ராசிக்கு பகலில்தான் வலு அதிகம். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன.
உடலமைப்பு,
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேசும்போது கைகளையும், கண்களையும் அசைக்காமல் இருக்க முடியாது. முன்கோபம் அதிகம் உள்ளவர் என்றாலும் அனாவசியமாக கோபப்பட மாட்டார்கள். அழகான கண் இமைகள் இருக்கும். கண்களாலேயே பல கதைகள் பேசும் ஆற்றல் கொண்டவர்.
குண அமைப்பு,
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் இருக்கும். அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவர்கள். சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். முகஸ்துதிக்கு அடிமையாவார் என்பதை புரிந்து கொள்ளும் உடனிருப்பவர்கள் இவர்களை புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்துக் கொண்டு பின்னால் திட்டுவார்கள். ஆனால் பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள். இவர்களின் அமைதியான தோற்றத்தை கண்டு ஏமாற்றிவிட முடியாது. வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். அதிலும் தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களைந்த பின்தான் நிம்மதியடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் பாகுவதை தவிர்ப்பார்கள். வாழ்க்கையில் பல தோல்விகளைக் கண்டாலும் இறுதியில் ªவ்ற்றி இவர்களுக்கே. நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவரதாலால் தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். இவர்களுக்கு நியாயமாக தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாக தோன்றவேண்டிய அவசியமில்லை என்பதால் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். என்றாலும் தங்களுடைய திறமை சாமர்த்தியம் போன்றவற்றால் எதிலும் தனித்து நின்று போரலலடி வெற்றி பெறுவார்கள். முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி விடுவார்கள்.

மண வாழ்க்கை,
சிம்மராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை சொந்தத்தில் அமையாது. அந்நியத்தில் அமைந்தாலும் மன வேற்றுமைகளுடன்தான் வாழ்க்கையை நடத்த முடியும். அடக்கி ஆளும் குணமும், சந்தேக மனப்பான்மையும் கொண்டவர்களாதாலால் கருத்து வேறுபாடுகள் நிறையவே ஏற்படும். திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார். வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
பொருளாதார நிலை,
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வருமான நிலை சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் அதிக செலவுகள்ஏற்பட்டாலும் தனது தேவைக்கேற்றவாறு எந்தவிதத்திலாவது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வார்கள். உயர் தரமான பொருட்களையே வாங்க விரும்புபவர்கள் என்பதால் செலவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. உத்தியோகத்திலோ, தொழிலிலோ ஊதியம் பெறுவது ஒருவாரு இருந்தாலும் தன்னுடைய சாதுர்யமான சாமர்த்தியத்தால் பண வரவுகளை பெருக்கிக் கொள்வார்கள். கடன் வாங்குவதென்பது இவர்களுக்குப் பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை நியாயமாக திருப்பி செலுத்தி விடுவதால் கடன்களால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தினால் வீடு, மனை போன்றவற்றை அமைத்துக் கொள்வார்கள். வண்டி, வாகன, வசதிகளும் உண்டாகும். ஆடம்பரமான உடைகளை நவீன பொருட்களையும் அதிகம் விரும்புவதால் மிகுந்த செலவாளிகளாகவும் இருப்பார்கள்.
புத்திர பாக்கியம்,
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகம் ஆண் பிள்ளைகளே பிறக்கும். முன்யோசனை அதிகம் உடையவர்கள் என்பதால் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வார்கள். கடவுளின் பூரண ஆசி பெற்றவர்கள் சிம்ம ராசிக்கார்கள் என்பதால் புத்திர வழியில் அனுகூலமானப் பலனையே அடைவார்கள்.
தொழில்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அரசாங்க உத்தியோகம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாலும் நல்ல பெயர் லாபம் கிட்டும். வழக்கறிஞர் பணி, சங்கீதம், கவிதை இயற்றுதல், உணவு தானியங்கள் தயாரித்தல், மூலிகை, மருந்து செய்தல் போன்றவற்றில் லாபம் கிட்டும். பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் ஏற்பட்டாலும் எங்கும் அதிக காலம் தங்கமாட்டார்கள். அடிமைத் தொழிலை விரும்பாதவர்கள் என்றாலும் உத்தியோகத்திலிருந்தால் முன்னுக்கு வரமுடியும். அதுவே தொழிலாளிகளானால் மிகவும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். கலை துறையில் கூட இவர்களால் பிரகாசிக்க முடியும் என்றாலும் பணவரவுகளை எதிர்பர்க்க முடியாது. சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப்போவது கடினமாகும்.
உணவு வகைகள்,
சிம்மராசி காரர்கள் முடிந்தவரை கிழங்கு வகைகளை நீக்கி கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்துள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது. எண்ணெய் பொருட்களை தவிர்ப்பதால் கொழுப்பு அதிகமாவதை குறைக்க முடியும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 1,2,3,9,10,11,12,18
நிறம் -வெள்ளை, சிவப்பு
கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் - மாணிக்கம்
திசை - கிழக்கு
தெய்வம் – சிவன்… .சிம்ம ராசியில் பிறந்தவர் பலன்( General Characteristics of Mesha Rasi - Aries Sign ) :
மகம், பூரம்,உத்திரம்,1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள், சூரியனைப் போன்று விளங்குவார்கள். தைரியமும்,வாக்குவன்மையும் தெய்வீக தேவாலய வழிபாடுகளுடன், ஆசார அனுஷ்டானங்களிலும் சிறந்து விளங்குவர். கல்வியில் ஊக்கமும் சாஸ்திர ஆரய்ச்ச்சிகளில் தேர்ச்சியும் அடைவர். வேதங்களில் பற்றுதல் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும்,அந்தஸ்தும் ஏற்படும்.சமூகத்தில் கீர்த்தியுடனும்,பிரபலத்துடனும், விளங்குவார்கள். உன்னத்ப் பத்வியில் செல்வம்,செல்வாக்கு, ஸ்திர சொத்துக்களுடன் இருப்பார்கள். குடும்பம் சிறப்புடன் இருக்கும். புத்திர பாக்யங்களுடன் வாழ்வார்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமான் அருளைப் பெற்று இருப்பார்கள்.அதிகமாக உணவு புசிப்பார்கள். வியாதிகள் ஏற்பட்டாலும் உடனே குணமாகும். தொழிலில் ஊக்கத்துடன் விளங்குவார்கள். தன்னுடைய அந்தஸ்துக்குக் குறைவாக இருப்பவர்களிடம் அலக்ஷியத்துடனும்,அதிகாரங்களுடனும், சிறிது கர்வம் கொண்டவர்போல நடந்துகொள்வார்கள். கோபமும், படபடப்பும் தலையெடுத்திருக்கும்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் கிரஹ பலத்துடன் ஜாதகம் அமைந்திருந்தாஅல் 80 வயதுகளுக்குக் குறைவில்லாமல் நல்ல சுக செள கர்யங்களுடன் இருப்பார்கள்…                                                                                                  .சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்...

சிம்மம் லக்னம் பற்றிய அடிப்படை :-
சிம்மம் ஸ்திர லக்னம்
சிம்மம் நெருப்பு லக்னம்
சிம்மம் ஆண் லக்னம்
சிம்மம் தர்ம லக்னம்
சிம்மம் கிழக்கு லக்னம்
சிம்மம் க்ஷத்ரிய லக்னம்
சிம்மம் பித்த லக்னம்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சூரியன் ஆவார் லக்னம் என்ற தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய ஸ்தானம், ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் சூரியன் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முழு யோகாதிபதி ஆகும் எனவே இவரின் வலு ஜாதகத்தில் மிகவும் முக்கியம்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதி புதன் ஆவார் இவரை பொருத்தே குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சி, பொருளாதார ஸ்தர தன்மை காண முடியும், மேலும் பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கு அதிபதியும் புதனே ஆகும் லக்னாதிபதி சூரியனுக்கு சனி, சுக்கிர சம்பந்தமில்லாத புதன் நண்பர், சம்பந்தபட்டால் பகை தன்மை வரும் எனவே பொதுவாக 50% நன்மையான பலன்களும் 50% தீமையான பலன்களையும் தரவல்லார் ஆனால் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கான செல்வ வளத்தை தீர்மானிப்பவராக உள்ளார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாம் வீடு  -  தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானத்திற்கு அதிபதியும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதியும் சுக்கிரன் ஆகும். லக்னாதிபதி சூரியனுக்கு சுக்கிரன் பகை தன்மை வரும் ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய சிம்ம லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும், எனவே மாரகாதிபதி தன்மையும் பெறுவதால் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் சுக்கிரனே எனவே 40% நன்மையான பலன்களும் 60% தீமையான பலன்களையும் தரவல்லார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார், சூரியனுக்கு செவ்வாய் நட்பு பெற்றதாலும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ஒரு யோகர் ஆகும். சிம்ம லக்னத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானமாக அமைகிறது அதாவது பாதகங்களை ஏற்படுத்த கூடியவரும் செவ்வாயே ஆகும் எனவே நல்ல நிலையில் அமர்ந்தால் பாதகங்களுக்கு பின் நன்மை ஏற்படும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாம் வீடு  -  பூர்வ புண்ணிய  ஸ்தானம், புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியும், மறைவு ஸ்தானம் என அழைக்கபடும் ஆயுள்  ஸ்தானம், மர்ம ஸ்தானம், துரதிர்ஷ்ட ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாக வருபவர் குரு பகவான் ஆவார் எனவே திரிகோண ஸ்தான 5ஆம் வீட்டிற்கும், மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாவதால் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே குரு திசையில் முதலில் 60% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 40% தீமையான பலன்களும் தரவல்லார்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஆறாம் வீடு  -  ரண ருண ரோக ஸ்தானம், சேவா ஸ்தானத்திற்கு அதிபதியும், ஏழாம் வீடு - களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும் அதிபதியுமான சனி பகவான் சூரியனுக்கு விரோத தன்மை பெற்றவர் எனவே 30% நன்மையான பலன்களும் 70% தீமையான பலன்களையும் தரவல்லார் என்றாலும் திருமண வாழ்க்கை தீர்மானிப்பவர் அவரே.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பன்னிரண்டாம் வீடு  -  நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதி சந்திரனே ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் மறைவு ஸ்தானமும் ஆனதால் தேய்பிறை சந்திரனாக அதாவது கிருஷ்ணபக்ஷ திதிகளில் பிறந்தால் ஜாதகருக்கு மேலும் பாவர் ஆகிவிடுவார்                                                                                                                                                       சிம்ம லக்னத்திற்கு 10ம் அதிபதி சுக்கிரன் கலை காரகன் என்பதாலும், சுக்கிரனே 3ம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். சுக்கிரன் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்ட தொழிலில சம்பாதிக்க முடியும். சுக்கிரன் தன லாப அதிபதியான புதனின் சேர்க்கை பெற்றிருந்தால் மற்றவர்களை வழி நடத்தும் திறன், அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், கதை, கவிதை எழுதக்கூடிய கற்பனை ஆற்றல், சினிமாத் துறைகளில் உள்ள உட்பிரிவுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். அதிலும் 10 ல்  புதன் பலம் பெறும் போது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்திரிகைத் துறை, புத்தக பதிப்பு, சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் புதன், குருவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தால் ஆசிரியர் பணி, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பணி, தனது அறிவாற்றலால் முன்னேறும் வாய்ப்பு, பள்ளி கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
சிம்மம் கால புருஷனுக்கு ஐந்தாவது வீடு நெருப்பு ராசி ஸ்திர ராசி பொதுவாக சிம்மத்தில் ஒரு கிரகம் இருந்தால் நிச்சயம் அந்த ஜாதகர் தன் சுயமுயற்சியால் எப்படியேனும் வாழ்க்கையில் முன்னேறுவார் சிம்மராசிக்காரர்கள் அதிகம் தன்மானம் எதிர்பார்ப்பார்கள் பொது வாழ்வு கோவில் திருப்பணிகள் இதில் அதிக ஈடுபாடு இருக்கும் இவர்கள் பேசுவதில் நளினமாக இருப்பார்கள் பேச்சில் சாமர்த்தியசாலிகள் இவர்களுக்கு வாக்கால் வருமானம் உண்டு இரண்டு தொழில் இரண்டு வருமானம் நன்று இவர்கள் பேச்சு எப்பொழுதும் லாபகரமான லாப நோக்கமான பேச்சாக இருக்கும் ஒரு சிலருக்கு இரட்டை பல் இருக்கும் இரண்டில் சுக்கிரன் நீச்சம் அடைவதால் இவர்களுக்கு பெண்களால் சகோதரிகளால் தொல்லை மூன்றாம் அதிபதி புதன் சம்பந்தப்பட்டால் எழுத்து எழுத்தாளர் கவிதை புத்தக பதிப்பாளர் போன்ற தொழில்கள் அமையும் நாலாம் அதிபதி இவருக்கு ஒன்பதாம் அதிபதி எனவே வீடு வாகன யோகம் உண்டு சிம்ம ராசி மற்றும் லக்கின காரர்களுக்கு இயற்கையில் மருத்துவ குணம் இருக்கும் இவர்களின் தாத்தா வழியில் ஜோதிடர் கோவிலில் குறிசொல்பவர் இருக்கலாம் ஐந்தாம் அதிபதி எட்டாம் அதிபதி குரு ஆறாம் அதிபதி ஏழாம் அதிபதி இருவரும் ஒருவராகவே இருப்பதால் மனைவியுடன் மனக்கசப்பு சிறு சிறு சண்டைகள் நிச்சயம் உண்டு திருமணத்திற்காக கடன் வாங்குவார் திருமணம் தடை தாமதத்திற்கு பின் நடக்கும் சிம்மராசிக்காரர்கள் கொடையாளிகள் இருப்பார்கள் அவர்களுக்கு கேளிக்கை விருந்து பொழுதுபோக்கு இவற்றில் அதிக நாட்டம் இருக்காது ஒரு சில பெற்றோர் காதல் திருமணம் கொண்டவர்களாக இருப்பார்கள்                                                                                                                

சிம்மராசி தொழில்
அரசு உத்யோகம்,அரசியல்,பிரதம மந்திரி,முதலமைச்சர்,நிர்வாக பொருப்பு,இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில்,பொறியியல்துறை,அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்,சமுக சேவை செய்தல்,தர்ம ஸ்தாபனங்கள் நடத்துதல்
சிம்மராசி ஆரஞ்சு நிறம் தாமரைப் பூவின் வண்ணம் மங்கலான சிவப்பு சூரியன் பலமாக இருந்தால் தன் தந்தையின் செல்லப் பிள்ளையாக இருப்பார் கிழக்கு திசை இவர்கள் ஊரின் கிழக்கு பக்கத்திலோ கிழக்கு வாயில் உள்ள வீடுகளிலும் வசிக்க நேரிடும் அங்கம் வயிற்றுப்பகுதி நாற்கால் ராசி இரவில் பலமுடையது நல்ல சாப்பாடு சாப்பிடுவதில் பிரியமுள்ளவர்கள் இங்கு சனி செவ்வாய் நின்றால் வயிற்றுவலி சரியாக தன்மை பசி பட்டினி போன்றவை ஏற்படும்
சிம்மராசி
உத்திரம் 1பாதம்
அறிவாளி தெய்வ பக்தி
நேர்மை  தவறாத
உத்தமர்  பெண்களை கவரும் ஆற்றல்  அழகான உடல் அமைப்பு கவர்சிகரமான தோற்றம். உடையவர்
சிம்மம் நெருப்பு ராசி, வறண்ட ராசி, அரசாங்கத்தை குறிக்கும். அடுத்தவரை வாழ வைக்கும். மலை, மலை சார்ந்த பகுதிகள்.                          லக்னாதிபதி சூரியன், முன்கோபம், விரைந்து முடிக்கும் தன்மை, எதிலும் முதன்மையாக இருத்தல், தலைமை பொறுப்பை ஏற்பு. 2 க்கும், 11 க்குடையவர் புதன் : லாப நோக்கமான பேச்சு, வாக்கு பலிக்கும். 3 க்கும், 10 க்குடையவர் சுக்கிரன் : எழுத்து, பாடல், கலை இவைகளில் ஈடுபாடு இருக்கும். 4 க்கு, 9 க்குடையவர் செவ்வாய் : வீடு, வாகனயோகம் உண்டு, சொத்து தானாக வந்து சேரும். 5 க்கு, 8க்குடையவர்  குரு : குழந்தை பிறப்பில் பிரச்சினை, ஆன்மிகம் ஈடுபாடு உண்டு.                       6க்கும்,7க்குரியவர் சனி : தாமத திருமணம், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். 12 க்குடையவர் சந்திரன் : சுப செலவுகள் உண்டாகும், நிம்மதியான உறக்கம் இருக்கும்.
சிம்மம் ராசி பூரம் 4 பாதம் அழகற்றவராக  நோயளி மெலிந்த சரிரம்  பெண்களால் அவமானம் தொல்லை தாய் வழியில் தொல்லைவந்துகொணடே இருக்கும் சிம்மராசி பூரம் 3 பாதம் குழப்பமான மனோபாவம் அழகாக இருந்ததாலூம் கவர்சியாக இருக்கமாட்டார குடும்ப சூழல் மனம் அடிக்கடி வாடி காணப்படும் நண்பர்கள் சகோதரர் உறவினர்களால் தொல்லை வந்துவிலகும் தலை வலி வரும் உறவினர்கள் உடன் இணக்கம் குறைவு சிம்மராசி பூரம் 2 பாதம் நல்ல அழகான கவர்ச்சியாக இனிமை  பேச்சு  பெணகளைகவரும் ஆற்றல்  பணம் சம்பாதிக்க  சிம்மராசி பூரம் 1 பாதம் அழகு கவர்ச்சியாக தாய் பாசம் வட்ட முகம் அதிகமாக பணம் சம்பாதித்து அதிக செலவு செய்வார் சிம்மராசியின் கேது நட்சத்திர நான்கு பாதங்களும்  அம்சத்தில்முறையே செவ்வாய் சுக்ரன் புதன் சந்திரன் சுக்ரனின் பூரம் முறையே சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் உத்ரம் தனுசாக அம்சத்தில் வரும் மாணிக்கம் கல் அணிய நலம் சூரியவழிபாடு  சூரியன் ஒளிபடும் கோயில் ஆதித்ய ஹிருதயம் தந்தை இழந்த குழந்தைகளுக்கு உதவுதல் கோதுமை கலந்த உணவுகள் எடுத்தல் குதிரைக்கு உணவளித்தல்
சூரியனார்கோயில் வழிபாடு சூரியன் தோசம் போக்கும் ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு ஒருவிதமான குணாதிசயங்கள் இருப்பது இயல்பு.

ஆனால், அந்த வகையில் சிம்ம ராசி பெண்களுக்கு என்று ஒருமித்த சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றது.

அவை காதலில் எப்படி இருக்கிறது? இவர்களை காதலிக்கும் ஆண்களுக்கு என்ன அதிரஷ்டம் உள்ளது என்பது பற்றி பார்ப்போம்..

சிம்ம ராசி பெண்களிடம் உள்ள குணாதிசயங்கள் என்ன?

சிம்ம ராசி பெண்களிடம் பொதுவாகவே அறிவுக் கூர்மை அதிகம். மேலும் படைப்பாற்றல், நகைச்சுவை ஆற்றல் கொண்டவர்களாக இவர்கள் திகழ்வார்கள். இவர்கள் எங்கிருந்தலும் தனக்கானவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.
புத்தகங்கள் மற்றும் படங்களில் உள்ள கனவு வாழ்க்கையை கூட இவர்கள் உண்மையாக மாற்றும் திறமையை கொண்டவர்களாக திகழ்வார்கள்.
சிம்ம ராசி பெண்கள் மிகவும் அதிகமாக காதலிப்பார்கள். நீங்கள் ஒரு மடங்கு எதிர்பார்த்தால், அவர்களிடம் இருந்து ஆயிரம் மடங்கு எதிரொலிக்கும்.
சிம்ம ராசி பெண்கள் ஒரே மாதிரியான சுழற்சியான வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு நாளுமே இவர்கள் புதிய புதியதாய் வாழ விரும்புவார்கள்.
தாம்பத்தியத்தில் ஆண்களுக்கு நிகராக ஈடுபடும் திறன் கொண்டவராக சிம்ம ராசி பெண்கள் திகழ்வார்கள். எனவே சிம்ம இராசி பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் அதிர்ஷ்டசாலி தான்.
சிம்ம ராசி கொண்ட பெண்கள் உடை உடுத்துவதில் இருந்து, தாங்கள் செய்யும் சிறிய விடயங்களில் கூட அழகாக ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.
தங்களின் துணையை திடீரென ஆச்சரியப்படுத்துவதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். ஆனால் அது பரிசாக மட்டுமில்லாமல், அவர்களின் துணை எதிர்பார்த்த விடயமாகக் கூட இருக்கலாம்.
சிம்ம ராசி பெண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுவதில் எவ்வித குழப்பமும் கொள்ளாமல், யாரையும் சந்தேகிக்கும் குணத்தை கொள்ளாமலும் இருப்பார்கள்.
தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் குணத்தைக் கொண்டவர்களாக சிம்ம ராசி பெண்கள் இருப்பார்கள்……….சிம்ம ராசிக்காரர்கள் தங்களை வலுவான மனநிலை உடையவர்கள் என நினைத்துக் கொள்வார்கள். தங்களது கருத்துக்களையும், முடிவுகளையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்கள் எப்போதும் தான் சரியாக இருப்பதாக நம்புவார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு தலைமை குணம் இயற்கையாகவே இருக்கும். தலைமை பொருப்பில் இருப்பவர்கள், மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் பிறரால் அதிகமாக காயப்படுத்தப் படுவார்கள். அவர்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் அதிகமாக ஏங்குவார்கள். ஆனால் இதை மற்றவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் உயர்ந்ததையே எதிர் பார்ப்பார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் தங்களது இலக்குகளை விரைவாக அடைவதில் சிறந்தவராக இருப்பினும் அவர்கள் சில தவறுகளையும் செய்வார்கள். அவர்களுக்கு ஆர்வம் மற்றும் பதட்டம் இருக்கும்  சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தனிமை விரும்பிகள் பெரும்பாலும் இவர்கள் தனித்தே இருப்பார்கள்
சிம்ம ராசி லக்ன மனிதர்கள் சுயநலம் உள்ளவர்கள். தானே அனைத்து விசயங்களையும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்  சிம்ம இராசியில் பிறந்தவருக்கு தலைமை பண்புகள் நன்றாக இருக்கும் மற்றவர் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறந்த தலைவர்களாக விளங்குவர்
குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நாகூர் ஜோதிடர் பொள்ளாச்சி முத்துசாமியின் மதிய வணக்கங்கள். சிம்ம லக்கனம் ஜாதகர்களுக்கு வாழ்க்கை சிறப்பாக இருக்காது ஒரு சிலருக்கு மட்டுமே சிறப்பாக இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு ஆணவம் அதிகமாக இருக்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வார்கள் இந்த ராசிக்காரர்களுக்கு இல்வாழ்க்கை துணைவரை கொடுப்பவர் சனி பகவான் இவர் இருக்கும்.

 எந்த லக்னமாக இருந்தாலும் 2,7 வீட்டின் அதிபதிகள் மாறாக ஸ்தான அதிபதிகள் ஆவார் மூணு 8 ஆயுளைக் கொடுக்கும் ஸ்தானமாகும் இந்த ராசிக்கு ஒன்பதாம் இடம் அதாவது மேட ராசி அதிபதி செவ்வாய் . சுக்கிர பகவான் மூணு 10 க்கு உடையவர் இசைத்துறையில் இவரது பங்கு அதிகம் சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ஏதாவது ஒரு வழியில் ஐந்துடன் தொடர்பு இருந்தால் மட்டுமே இசைத் துறையில் சாதிக்க முடியும்
ஒருவர் கும்பத்தில் பிறந்து இருந்தால் இவருக்கு அமையும் கணவன் அல்லது மனைவியை அமைத்துக் கொடுப்பவர் சிம்மலக்கின அதிபதி சூரிய பகவானே. தலைமைப் பொறுப்பு அரசு அதிகாரம் கொண்ட இவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஒத்துப்போக மாட்டார்கள் .ஒரு சில ஜாதகங்களை தவிர சூரியன் நெருப்பு கிரகம் ஆண்-பெண் இணைகின்ற இணைப்பில் இறுதியில் இன்பமயமான மகிழ்ச்சி இருக்காது. துன்பங்கள் வரும் எரிச்சலைக்கொடுக்கும் இந்த லக்னக்காரர்கள் தக்க வழிமுறைகளை கையாள வேண்டியது. நன்றி.
பொதுநல விரும்பிகள்
குடும்பத்தில் பெயர் எடுக்க மாட்டார்கள் சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்
சிம்ம லக்னம் ஜாதகருக்கு இல்வாழ்க்கை கொடுப்பவன் துணைவரைக் கொடுப்பவர் சனி பகவான் அலிக்கிரகம். இல்லறத்தின் இனிமையை இவர்கள் தேடித்தான் பிடிக்க வேண்டும் சனி பகவான் ஆறு 7 வீட்டுக்கு உரியவர் சிம்ம லக்னம் ஜாதகர்களுக்கு ஒரு சிலரைத் தவிர எல்லோருக்கும் விரைவில் திருமணம் நடக்காது நடந்தாலும் சிறப்பாக இருக்காது அல்லது பிரிவினை அல்லது விவாகரத்து இருக்கும் நன்றி
சிம்ம  லக்னம் ஜாதகரின் கண்களில் கூர்மை இருக்கும்.
சூரியன் இரண்டாம் இடமான கன்னியில் இருந்தால்,தேவையில்லாமல் நிறைய பேசுவார்கள்.
முன்கோபம் உள்ளவர்களாக இருப்பார்கள் ..
ஆரம்ப கல்வி சுமாராக இருக்கும் .
மேல்கல்வி நன்றாக இருக்கும்.
துலாத்தில் நீசமாகிறார். இதனால் எல்லாவற்றிலும் பயந்தபடி இருப்பார்கள்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்                                                              சிம்மம் கால புருஷனின் ஐந்தாம் வீடு அதன் அதிபதி சூரியன் ஸ்திரத்தன்மை கொண்ட ராசி நிலைத்த நிலையான அமைப்பை வழங்கக்கூடியது நெருப்பு தத்துவம்  இது காலத்தில்  பகல்
 பொழுதையும் செயல்களில் காரண காரியத் தையும் மத்திய  பகுதியை கொண்டது  மாதங்களில் ஆவணி மாதம்  பருவ காலத்தில்  காற்று காலமாகவும் உள்ளது  ஆண் ராசியாகுவும் கம்பீரமான தோற்றம் கொண்ட அமைப்பை கொண்டதாகவும் நிறத்தில் இளஞ்சிவப்பாகவும் இயல்பான நடை உடையதாகவும் மலையும் மலை சார்ந்த இடங்களையும் மூலம் வைரம் பாய்ந்த மரங்களையும் கொண்டது உடல் பாகத்தில் இருதயம் வயிற்றுப் பகுதியையும் குறிக்கும் முரட்டுத்தன்மை மலட்டுத் தன்மை கொண்ட ராசியாக அமைந்து உள்ளது
 நிமிர்ந்த நேரான தோற்றம் கம்பீரமான தோற்றம் அகன்ற மார்பு அதற்கேற்ற உயரமும் சதைப்பிடிப்பும் சிறுவயதில் மெலிந்தும் வயது ஆக ஆக தோற்றப்பொலிவும் கவர்ச்சியும் சுருண்ட தலைமுடியும் அழகிய அகன்ற நெற்றி சிறிய கண்களும் கூரிய பார்வையும் அடர்ந்த புருவமும்
கரை படிந்த உறுதியான பற்களும் அகன்ற தடையும் உருண்டை முகமும் சற்று தட்டையான அகன்ற மூக்கும் உயர்ந்த உதடும் சற்று தட்டையான அகன்ற முகமும் பருத்த கண்ணம் முகவாய் கட்டை குறுகலான நீண்ட கழுத்தும் நீண்ட கூர்மையான  மூக்கும் காதுகளும் விரிந்த மார்பு அகண்டநெஞ்சில் ரோமங்களும் நீண்ட கைகள் நிமிர்ந்த தேகம் நீண்ட வயிறு உப்ப லான வயிறும் ஒட்டிய வயிறும் சிலருக்கு  தொப்பையும் அகன்ற பருத்த பிண்டமும் பருத்த தொடைகளும் முழங்கால்களுக்கு கீழே உறுதியான கால்களும் பாதம்  சின்னதாக  படர்ந்தும் பெண்களுக்கான அழகான நெற்றியும் சுருட்டை  முடியும் சுருக்கம் விழுந்த அழகான நெற்றியும் வானவில் போன்ற புருவமும்  உருண்ட முகமும்  பிரகாசமான கண்கள் அழகான  உதடுகள்  வாயும் வெண்மையான பற்களும் குட்டையான கழுத்து அழகான மெழுகு போன்ற வேகமும் விரிந்த மார்பும் பருத்த குறுகலான வயிறும் சற்று ஏறிய சுருக்கம் விழுந்த வயிற்றுப் பகுதியும் இடை  தெரியாத அமைப்பும்    உருளை போன்ற கால்களும் நரம்புகள் தெரிந்த சிறிய அழகிய கால்களும் அழகிய நடையில் தோரணையும் கொண்டதாக இருக்கும்
 குணநலன்கள் தரம் சிறிதும் குறையாத நபர்கள் யாரையும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்  போற்றுதற்குரிய லட்சியங்களை பற்றி சிந்தனை கொண்டவராக விளங்குவார்கள் விசுவாசம் நிறைந்தும் விரைந்து செயல்படும் வேகமானதும் நிலையான செயல்களை செய்தும் புகழை விரும்புவதும் புகழுக்குரிய லட்சணமும் வணங்கி தன் வணக்கத்தை எதிர்பார்ப்பதும் உயர்ந்த இடத்தை அடைய துடிப்பதும் தன்னைச் சார்ந்தவர்களுக்கு இயன்றவற்றை உதவுவதும் மற்றவர்களின் வாழ்க்கையில் கண்ட நஷ்டத்தை போக்கும் குணம் கொண்டது இறக்க தன்மையும் எதார்த்த போக்கும் எளிதில் கோபமடைதல் ஏகாந்த மனப்போக்கும் எந்த நிலையிலும் மதிப்பு மரியாதையை விட்டுக்கொடுத்து காத்தலும் வறுமையில் வற்றாத கௌரவமும் வாழ்ந்தவர்களின் வழியை போற்றி பின்பற்றுவதும் தன் வாழ்வில் மற்றவர்களின் மரியாதையைக் கொடுத்து தன்னை உயர்ந்த பீடத்தில் வைத்துக்கொள்வதும் தாராளமான போகும் பெருந்தன்மையும் நியாயமான கோபமும் வேகமான தத்துவமான போக்கும் இயற்கையை நேசிக்கும் தன்மையும் மலைகளில் வாகனங்களில் இருக்க ஆசைப்படுவதும் தவ வாழ்வில் இணைந்து கொள்வதும் எளிதில் சித்தியடைவது விடாமுயற்சியும் எந்த நிலையிலும் தீய குணங்களை தன்மையும் தன் தேவைக்காக யாரிடமும் யாசகம் அமைதியும் ஆனந்தமும் விரும்பி தனித்து இருக்க விரும்பும் தன்மை கொண்ட ராசி விளையாட்டில் விருப்பமும் யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல்  அதோடு இணைத்துக் கொள்வதும் தான் செய்யும் செயல்களில் எதையும் எதிர்பார்த்து செயல்படாமல் நட்புக்கு இலக்கணம் விருப்பம் வைராக்கியமான உழைப்பும் உயர்வும்  கொண்ட குணம் இந்த ராசிக்கு உண்டு,                                                                                                 கால புருஷனின் ஐந்தாம் வீடு சிம்ம இதை ஸ்திர ராசி ஆக்கி வைத்துள்ளார்கள் அக்னி என்ற உடன் எரிக்கும்  குணம் கொண்டது என்று எண்ணத் தோன்றும் ஆனால் நம் முன்னோர்கள் கால புருஷனின் 12 ராசிகளில் முதன்மையாக தர்ம திரிகோணத்தில் தத்துவங்களையும் அதன் காரண காரியங்களை அக்னி தத்துவத்தை விளக்கும் போல் ஒரு  நிலைத்த தன்மையை நீடித்த புகழை அக்னி தத்துவத்தில் மறைத்து வைத்துள்ளார் அக்னியின் மறு பொருள் பரிசுத்தம் எனப்படும் மாசற்ற தன்மையும் மறைக்கும் தன்மை இல்லாத போக்கும் புனிதமான குணநலன்கள் கொண்ட நிலையை நமது முன்னோர்கள் தர்ம திரிகோணமாக பிரித்து அதனை அக்னியில் வைத்து உள்ளனர்
 இதில் மூன்று விதமான இயற்கை தன்மைகளை இருப்பதை உணரலாம் ஒரு ஆன்மா பிறவிப் பயனை அடைந்து பின் தன் மறுபிறப்பை நோக்கி செல்வதை விளக்கும் விதமாக மேஷம் என்ற ராசி விளங்குகிறது ஆனால் ஒரு ஆன்மா பிறக்கும் காலத்திலும் சரி பிறப்பு பற்றி பிறவிப் பயனை அடையும் போது தனது செயல் முறைகளை வகுத்து தத்துவார்த்தமான  வழிமுறைகளில் தன் முனைப்புடன் செயல்பட்டு தன்  சரீரம் அழிந்தாலும்  தான் ஆன்மாவின்  புகழ் என்றும் அழியாத நிலையில் புகழோடு விளங்குகின்ற தன்மையை விளக்கும்  இடமாகவும் விளங்குகிறது
கால புருஷனின் ஐந்தாம் இடமான சிம்மத்தில் ஆன்மாவின் சிறப்புகளை அறிய முடியும் அற்புதங்கள் நிறைந்த இடம் இது  பிறப்பால் ஒரு ஆன்மா தன் முன் ஜென்ம கர்ம வினைக்கு தக்கபடி இந்த ஜென்மத்தில் அடையும் நிலை தானே  உயர்வை பெருமையை கௌரவத்தை புகழை பறைசாற்றும் கேடயமாக இந்த ராசி விளங்குகிறது உயிர்களின் சிறப்பை சொல்லும்பொழுது கால புருஷனின் மூன்றாம் இடமான மிதுனத்தில் அறிவின் திறவு  கோலாகவும் அதனை பகுத்து பார்த்து  ஆராயும் தன்மை தீமைகளை பிரித்து நல்லதை எடுத்துக்கொண்டு உயர்வுக்கு வழிவகுக்கும் அற்புத குணம் ஐந்தாமிடமாகும் 3-க்கு மூன்றாமிடமான 5ஆம் இடம் பயன்பாடுகளை பழக்க வழக்கங்களை வெளிக்கொண்டு வரும் அறிவின் வளர்ச்சி   இயக்க சக்தியாக பரிணமிக்கிறது
அறிவு இதனை தாங்கி நிற்கும் இடம் மூன்றாம் இடமே இதனை செம்மைப்படுத்தி அடுத்த  நிலைக்கு அழைத்துச் செல்வதும் பக்குவப்படுத்துவது மூன்றுக்கு மூன்றாம்   இடமான ஐந்தாமிடம் இந்த 5ஆம் இடமே பகுத்தறிவின் சாட்சியாக விளங்குகிறது பகுத்தறிவு என்பது யோக மார்க்கத்தில் அடித்தளமாகவும் ஞானமார்க்கத்தின் திறவுகோலாகவும் தத்துவத்தின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது அதேநேரம் பகுத்தறிவு மேதாவித்தனத்தை காட்டினாலும் அஞ்ஞானத்தின் பால் இருக்கும் இருட்டை விலக்கி மெய்ஞானத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் வழிவகை செய்கிறது இதனை மெய்ஞானத்தின் பிறப்பிடமாகவும் கொள்ளலாம் அதேநேரம் அறியாமை என்கிற அநீதியை போக்குகின்ற அதர்மத்தை விளக்குகின்ற உண்மை நிலையை உணர்ந்து புரிந்து தெளிந்து அதனை தனக்கென்று கொள்ளாமல் வெளிக்காட்டும் பிரகாசம் ஏற்பட்டு அது அறியாதவர் போல் ஆணித்தரமான கொள்கை விளக்கங்களை கொண்டு தனித்துவம் பெற்ற தன்மையை நிலைநாட்டி எக்காலத்திலும் எதனாலும் அழிக்க முடியாத பேருண்மை விளக்கமாய் விளங்கும் சக்தியே அறிவு என்பதாகும் அறிவைக் கொண்டு அனுவையும்  பிரிப்பது போல் பகுத்தறிவைக் கொண்டு இந்த பிரிவை காக்கும்  வல்லமையும் பிறப்பைதடுக்கும் வழிமுறைகளையும் ஜீவமுக்தி மூலத்தையும் அஷ்டசித்திகளையும் அடையும் அடையலாம் பகுத்தறிவை அறிவால் அறிந்து ஆனந்த அனுபவத்தை விளக்குகின்ற இடம் 5-ஆம் இடம் இந்த ஐந்தாமிடத்தில் அதாவது கால புருஷனின் ஐந்தாமிடமான சூரியனின் வீடு சிம்மம் இங்குதான் யோகம் பிறக்கிறது யோகம் என்பது இணைதல் என்று பொருள் நல்லதும் கெட்டதுமான இவ்வுலகில் நன்மையை தன்பால் ஈர்க்கும் நிலைதனை யோகம் என சொல்லலாம் இதில் தானாக சேர்த்துக்கொள்வது யோகம் என்று அல்லது இயற்கையின் கருணையால் ஒன்று உயிர்களின்  மேன்மைக்கு அதாவது நல்வழி சேர்த்து நிற்பது யோகம் என்று சொல்லலாம் பலவிதமான பொருட்கள் கொள்ளும் பொருட்டு இங்கு ஜீவாத்மா பரமாத்மாவின் பால் கொண்டு செல்ல அல்லது அதனை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகள் யோகங்களும் என்று சொல்லலாம் யோகம்  உடலையும் உயிரையும் ஒன்று சேர்க்கும் வழிமுறை ஆதாரமாகும்   அடித்தளமாக இருக்கிறது இந்த யோகம் சரீரத்தை கடந்து  கிரியை கடந்து யோகத்தை  அடையும் பொருட்டு ஞானத்தின் கதவுகள் திறக்கப்படும் என்பது மெய்ஞானத்தின் வழிமுறைகளும் விதிமுறைகளும்
சிம்மம் அக்னி தத்துவத்தின் ஸ்திரத் தன்மையைக் கொண்டது என்பதால் விளக்கின் வெளிச்சத்தை போல் உயிர்களின் பிரகாசத்தின் அருட்பெருஞ்ஜோதி ஆகா  உருவெடுத்து விளங்குகிறது சிம்மம் மலையும் மலை சார்ந்த இடத்தையும் குறிப்பிடும் மலை  வளம் பற்றி அறியும்போது அதுவே மனித மனங்களை குறிக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலை ஜோதி என்றும் வள்ளல் பெருமான் வர்ணிக்கிறார் ஜோதியாய் விளங்குகிறது அது மலையைக் குறிக்கும் ராசி இங்கே இரண்டையும் இணைக்கும் பொழுது ஜோதிமலை என்று கொள்ளலாம் இன்றைக்கும்  மலைசார்ந்த இடங்களில் எல்லாம் இமயம் முதல் குமரி வரையிலான அனைத்து மலைகளிலும் சித்தர்கள் உலாவுகின்ற இடமாக விளங்குவதையும் யோகப்பயிற்சியில் திளைத்தவைகளையும்  அங்கு சென்று அவர்களின் வாழ்வியல் முறைகளையும் காணும் பொழுது  பஞ்சபூத ஸ்தலமாக திருவண்ணாமலை உள்ளது நமது ரிஷிகள் பிரித்து  காட்டியதில் ஜோதிமலை தத்துவத்தைத் தாங்கி நிற்கின்ற அம்மையப்பனாக  திருவண்ணாமலை விளங்குகிறது நெருப்பை தாங்கி நிலையாக உறுதியாக உயர்ந்து நிற்கும் மலை திருவண்ணாமலை அருள் சுரக்கும் ஆனந்தமாக விளங்குகிறது உலகத்திலுள்ள சாதுக்கள் சன்யாசிகள் யோகிகள் இறையாண்மை கொண்ட நபர்கள் பெரியவர்கள் இருக்கின்ற இடமாக இருந்தாலும் அருள்ஜோதி கொண்ட ஆன்மாக்களை நெருப்பில் போட்டு புடம் போட்டு உடைத்த சுத்தம் தங்கம் போன்று சுடர் விட்டுப் பிரகாசிக்கும் மெய்ஞானம் மேன்மையை கொண்ட மகான்களை இன்றைக்கும் தந்து கொண்டு இருக்கும் இடம் இது கற்காலம் முதல் உலகம் தோன்றிய முதல் இன்றுவரை அந்த ஆன்மாக்கள் தன்னைக் காத்துக் கொள்ளவே மலையை  பயன்படுத்தி உள்ளது இதன் மூலம் காக்கும் தன்மை உண்டு என்பது உறுதியாகின்றன,,                                                                                                                                        சிம்மம் கால புருஷனின் ஐந்தாவது வீடாக பிரிக்கப்பட்டுள்ளது அதில் ஒரு ஆன்மாவின் வரும் சந்ததியின் நிலையையும் தனக்கு முந்தின முன்னோர்களின் பெருமை மட்டுமல்லாது தனக்கு வரும் சந்ததி   அடையும் சிறப்பையும் குறிப்பிடும்போது இந்த ஆன்மாவின் முன்ஜென்ம கர்ம வினையும் குறிப்பிடப்பட்டு அதனால் இப்பிறப்பில் அடையும் பெருமைகளையும் சிறப்புகளையும் குறிப்பிடும்போது இந்த அம்மாவின் முன் ஜென்ம கர்ம வினையும் குறிப்பிட்டு அதனால் சிறப்பையும் பெருமைகளையும் சிறப்புகளையும் கொடுக்கக் கூடியதும் வெளிக்காட்டும் சக்தியாக கொண்ட அற்புதமான திரிகோணமாக விளங்குகிறது
 சிம்மத்தில் ஒரு தனி மனிதன் உயர்ந்த நிலை மட்டுமல்லாது நாட்டின் பிரதிநிதி களையும் அரசியல்வாதிகளையும் அறிஞர் பெருமக்களையும் வித்துவான்களையும் இசை அறிந்தவர்களும்  நாட்டின் முக்கிய பிரதிநிதிகள்  ராஜ்யசபாவில் சட்ட சபைகளும் நாடாளுமன்றம் மக்கள் ஒன்றுகூடி பொழுதுபோக்கும் சபாக்களும் குறிக்கப்படும் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான தன்மை உல்லாசமான போக்கு உயர்ந்த பொழுதுபோக்கு தன் நிலைக்கு தகுந்த மேதாவித்தனம் உயர்ந்த ஞானம் ஆழ்ந்த அறிவு உற்பத்தி நிபுணத்துவம் உலகத்தில் உள்ள அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் உள்ளது
 இதே போன்று  வீர விளையாட்டுகளில் இருந்து அனைத்து விளையாட்டுகளும் சிம்மத்தில் குறிக்கப்படுகின்றன ஒரு  விளையாட்டு வீரனாக பதக்கங்களையும் வெற்றிகளையும் பெற்றுத் தரும் ராசி சிம்மம் ராசி இதுவே இந்த நாட்டின் இந்த வீட்டின் தனித்தன்மையையும் சொல்லும் விளையாட்டு துறை நாடகம் சினிமா இசை நடனம் சங்கீதம் போன்ற மனதை ரசிக்க வைக்கும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இருக்கக் கூடிய இடம் சிம்மம் சூதாட்டம் குதிரைப் பந்தயம் புதிர் போட்டிகள் சீட்டாட்டம் லாட்டரி ஷேர் மார்க்கெட் மூலம் ஆதாயத்தையும் அதனால் விரயத்தையும் கொடுக்கும் இடம் சிம்மம் அதற்கும் மேலாக உலகத்தில் பிறந்த ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிரின விருத்திக்கு தேவையான காதலை வெளிப்படுத்துவதாக உள்ளது சிம்மராசி காதலை கொடுத்து ஒன்றோடு ஒன்று சேர வைப்பதும் கொடுத்து இளைப்பாற வைப்பதும் இணைந்த உறவுகளுக்கு  இனவிருத்தியை கொடுத்து உயிர் தருவது சிம்ம ராசி தான் அதுபோல தனக்கு பிடித்த உடலியல் கலப்பை விரும்பி செல்வதும் சிம்மராசி தான் இந்த சிம்ம ராசியை காமத்தை கொடுத்து அதில் இருக்கும் பொழுது ஞானத்தையும் கொடுப்பதும் இந்த சிம்ம ராசி
 விவேகமும் புண்ணியமும் கொண்ட சிம்ம ராசி தனது வேலையை தானே தேர்வு செய்து அதில் வெற்றி அடையும் நல்ல உள்ளம் கொண்ட உயர்ந்த வேத அறிவு ஞான அறிவு கொடுத்து நல்ல தெய்வீக தன்மையை வழங்கும் உயர்ந்த மகாத்மா என்ற பீடத்தை கொடுக்கக் கூடியது இந்த சிம்ம ராசி எந்த ஒரு செயலிலும் ஆசையின் அளவுக்குத் தக்கவாறு இந்த வீடு உக்கிரமான பலனைக் கொடுக்கக் கூடியது மலையும் மலை சார்ந்த இடமாக இருப்பது ஜோதி  வெளிச்சம் போன்ற சிறந்த ராசிக்காரர்கள் இவர்கள் அழியாப் புகழுக்கு சொந்தமாகி வாழ வைக்கும்  சிங்கம் எப்போதும் தன் போக்காக யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது  என்பது போல் இந்த வீட்டில் பிறந்தவர்கள் தனித்தன்மையோடு உயர்ந்த உறவு வைத்துக் கொண்டு உயர்ந்த நிலையை அடைவார்கள்
 சிம்மம் கால புருஷனின் ஐந்தாம் வீடு இது பிறப்பால் ஒரு அம்மாவின் பிரபல்யத்தை காட்டி சுட்டிக்காட்டுகின்ற இடமாக  உள்ளது இந்த வீட்டின் அதிபதி சூரியன் கிரகங்கள் தலைவன் என்று சொல்வதைவிட பிரபஞ்ச சார்ந்த எந்த ஒரு பொருளும்  சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் அனுதினமும் சூரியனின் ஒளிக் கதிர்களை பெற்று பிரகாசிக்கின்றன சூரியனின்காரகத்துவத்தை பெறுவதாலும் உலகிலுள்ள உயிரினங்கள் பிறந்து வளர்ந்த நிலையும் அனைத்தும் சூரியனை சுற்றி வருகின்றன எப்போதும் ஆழ்ந்த சிந்தனையுடன் பகுத்தறிவை தனக்கு நிகரில்லாத தனித்தன்மையை கொடுப்பதும் எங்கும் எதிலும் எப்போதும் தன்னை தலைமை படுத்திக் கொள்வதும் எதற்கும் எக்காரணத்திற்காகவும் உலக பாரம்பரியத் தன்மை பெற்றதாகும் தத்துவத்தின் மூலம் சூரியன் என்பதால் மற்றவர்களை அடிமைப் படுத்திக் கொள்ளாது சுதந்திரமாக செயல்பட விரும்பும் மற்றும் அனைத்தையும் தகர்த்தெரிந்து தன் சுய விருப்பத்தின் பேரால் செயல்படுவார்கள்                                                                                                                                                 சிம்ம வேறு பெயர்
அரி சிங்கம்  வேங்கை  புலி  மா யாளி சிங்க உருவம்  மலையில் வசிப்பவர்கள்  தெற்கு திசை  சிவப்பு நிற விரும்பிகள்  பகல் ராசி  நாற்கால் ராசி சிம்ம ராசியின் முதல் திரேகாணம் நரி உருவம்  குரங்கு உடல்  சிங்க வால்  அழுக்கு புடவை அணியும் 2 ம் திரேகாணம்  குதிரை வடிவம்  அகல மூக்கு  கருப்பு போர்வை கவசம் பூண்டது  வில்  அம்பை கரத்தில் பிடித்தது  சிங்க பார்வை  உத்திதாயுத் திரேகாணம் 3 வது திரேகாணம் கரடி முகம்  குரங்கு சேஷ்டைகள்  சுருள் முடி அமைதி தன்மை  ஒரு கரத்தில் கம்பு  மற்றதில் இறைச்சி
சிம்மம் (LEO)

இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் கூட. மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி. இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு. சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனின் கடக ராசிப் பிரவேசம் தட்சணாயணம் என்றும், மகர ராசிப் பிரவேசம் உத்தராயணம் என்றும் கூறப்படுகிறது. இந்த ராசிக்கு சிம்ம உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசி மனித இதயத்தின் இரண்டு வால்வுகளின் அமைப்பையே கொண்டிருக்கிறது. இது E என்று குறிக்கப்படுகிறது. மனித இதயம், பின் முதுகு, முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றை இந்த ராசி குறிக்கிறது.
பெண்களுக்கு சுக்கிரன் நன்றாக அமையப் பெற்றால் தோற்றப் பொலிவையும் நளினத்தையும் கலை ஆர்வத்தையும் தருவார். சிலருக்கு நடிகையாகும் பாக்கியம் கிட்டும். அதன்மூலம் கார் பங்களா என சுகங்கள் கிடைக்கும். அதே சுக்கிரன் நாய்களுக்கும் காரகத்துவம் உடையவர். அவர் ஆதிக்கம் உள்ள நடிகைகளுக்கு நாயின் மேல் பிரியம் உள்ளது. நடிகைகள் வளர்க்கும் நாய்கள் பெரும்பாலும் வெள்ளையாக இருக்கும். சுக்கிரனுக்கு பிடித்த நிறம் வெள்ளை  தயாளகுணம் இருந்தாலும் இதர குணம் வெளிப்படும் உயர்ந்த மனிதர்களிடம் பழக்கத்தை வைத்துக் கொள்வதோடு தன்னையும் உயர்த்திக்கொள்ளும் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் தனது பணிகளை செய்வதில் வைராக்கியத்துடன் இருப்பார்கள் எடுத்த காரியத்தை முடிப்பவர்கள் சிம்மராசிக்காரர்கள் உலகத்திலுள்ள எல்லா விஷயங்களையும் அறிந்து தெரிந்து கொள்வது இவர்கள் தேவைப்படும்போது அதை இயல்பாக வெளிப்படுத்துவார்கள் கலை இலக்கியம் நாட்டியம் சங்கீதம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும் ஆன்மீக நபர்களுடன் நட்பு வைத்துக் கொள்வார்கள் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வார்கள் எந்த காலகட்டத்திலும் அல்லது எந்த சூழ்நிலையையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்கள் உடன்பாடு உள்ளவர்கள் தன் மீது அன்பு பாசம் வைத்திருக்கும் நபர்களுக்கு எதையும் செய்யும் தன்மை கொண்டவர்கள் இந்த சிம்ம ராசி நபர்கள்
நடிப்பு துறையாகட்டும் சினிமா துறையாகட்டும் அனைத்திலும் இவர்கள் கெட்டிக்காரர்களாக விளங்குவார்கள் இயக்குனராகவும் பரிமாணம் செய்வார்கள் கதாநாயகனாகவும் இவர்கள் இருப்பார்கள் ஒப்பனை கதாபாத்திரத்திலும் ஈடுபடுவார்கள் கலை சார்ந்த துறையில் அனைத்து துறையிலும் புகழ்  உள்ளவர்களாகவும்  திகழ்வார்கள் இவர்களை கலைஞர் என்று அழைக்கலாம்  கலா ரசிகன் என்று அழைக்கலாம்
சூரியன் ஆத்ம காரகன் என்பதால் பிறக்கின்ற ஆன்மாவின் சிறப்பையும் அதன் முன் ஜென்ம கர்ம மேன்மைக்காக  அமைப்பை இப்பிறப்பில் பிறந்தவர்களை சொல்லும் வாழ்வாதாரங்களை கொடுத்து புகழ் பெறச் செய்வது முன்ஜென்மம் கர்மாக்களில் இருந்து விடுபடுவது பூர்வ புண்ணிய பலத்தால் இந்தப் பிறப்பில் உயர்நிலை பெறுவது சிம்மம்  ராசிக்காரர்கள்  இவர்களுக்கு புகழை கொடுக்கும் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாக விளங்குவதால் இவர்களுக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு குல தெய்வ அனுக்கிரகம் எப்போதும் உண்டு ஆன்மாக்களின் அன்பை பெற்றவர்கள் சமூக மதிப்பை பெற்றவர்கள் சமுதாய மதிப்பை பெற்றவர்கள் தன் வாழும் பகுதியில் பிரபலமாக இருக்கக் கூடியவர்கள் தான் வாழும் பகுதியில் உயர்ந்த நிலையில் வாழ்வார்கள் கம்பீரமான வாழ்க்கை வாழ்வியல் அமைப்பு இவர்களிடம் இருக்கும்
சூரியன் குறிப்பாக தகப்பன் காரகர்  என்பதை நாம் அறிவோம் தகப்பனாரின் நிலையையும் வாழ்வியல் நிலையையும் அறிய  காரணமாக இருக்கும் அதேநேரம் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தான் எப்படிப்பட்ட தகப்பனாக திகழ வேண்டும் என்பதையும் மறைமுகமாக உணர்த்துவது சூரியன்  தன் வீட்டிலிருந்து ஒன்பதாம் இடமான மேஷத்தில் உச்சம் அடைவதால் இதன் காரணம் என்று சொல்லும்பொழுது சிம்மம்  ராசியாகி தன்னிடம் இருந்து வெளிப்படும் ஒரு அன்பின் வெளிப்பாடே குறிக்கும் விதத்தில் சர ராசியில் உச்சம் அடைவதால் இதன் தத்துவம் காரணம் என்றாலும் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு தலைமை ஏற்று தன்னை அண்டியவர்களுக்கு மக்களுக்கும் குறிப்பாக நாட்டின் தலைமையை ஏற்றுக் கொண்டாலும் பின் சிறப்பாக நடத்தும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு அதே நேரத்தில் சூரியன் என்பதால் பிறக்கும் குழந்தைக்கும் தகப்பனுக்கும் செயல்பாடுகளை சம்பந்தம் செய்து கொண்டிருக்கிறது சிம்மத்தில் பிறந்தவர்கள்  மக நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் உத்திரம் நட்சத்திரம் இங்கு  கேது சுக்கிரன் சூரியன் நட்சத்திரங்கள்  பிரகாசிக்கின்றன இங்கு மகம் நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம் என்றாலும் இதில் பெற்றோர்களின் நட்சத்திரமாகும் முன்னோர்களின் வழிபாட்டுக்குரிய முன்னோர்களின் வழிபாடு சரிவர செய்யும் பட்சத்தில் வரும் சந்ததியும் நிகழ்கால வாழ்வும் சூட்சுமமாக அமையும் இவர்களை நினைத்து ஜோதி வழிபாடு செய்யவேண்டும் மேஷம் சிம்மம் தனுசு இம்மூன்றும் வீடுகளில் இந்த ஜென்மத்தில் ஒரு ஆன்மா உயிர் அடையும் நிலையை பூர்வபுண்ணியத்தை முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு நன்மை தீமைகளை நிர்ணயிக்கும் வீடாக சிம்மம் விளங்குகிறது
 மேஷம் பிறப்பின் ரகசியத்தை குறிக்கும் தனுசு வரும் ஜென்மத்தை ரகசியத்தை குறிப்பிடும் இந்த ஜென்மத்தில் ரகசியத்தை குறிப்பிடும் முன்ஜென்ம கர்ம வினை இப்படிப்பின் கர்மாவோடு இணைக்கும் போக்கு சுக்கிரனுக்கு உண்டு அதிலும் பூரம் சுக்கிரன்  நட்சத்திரம்  ஆகையால் சுக்கிரன் சிம்மத்திற்கு 3 . 10 கூடியவராக விளங்கி கால புருஷனது இரண்டு ஏழாம் இடம்   இல்லறத்தை கொடுப்பவர் சுக்கிர பகவான்   பெரிதும் துணையாக விளங்க கூடியவர் சுக்ரன் என்பதால் பத்தாமிடம் கால புருஷனது தன ஸ்தானம் குடும்ப ஸ்தானம் ஆகும் இவர்களுக்கு குடும்பம் அமைந்தபின் நல்ல தொழில் மேன்மை பொருளாதாரம் இருக்கும் மேலும்  சூரியன் பிறப்புக்குக் காரணமாக அபிவிருத்தியையும் பூர்வபுண்ணியத்தையும் இணைக்கும் பாலமாக விளங்குவது இவர்கள் எதிலும் தன் தனித்தன்மையை தக்க வைத்துக் கொள்வதில் சாமர்த்தியசாலிகள்
அறிவையும் ஆற்றலையும் பகுத்தறிவோடு இணைத்து செயல்படுவதால் இந்த வீடு பண்பாட்டையும்  நாகரிகத்தையும் காலத்திற்கு ஏற்றவாறு கொடுத்துக்கொண்டே இருக்கும் எத்தனை காலங்கள் வந்தாலும் நாகரிகத்தையும் பழக்கவழக்கத்தையும் அந்த அந்த நாடு இனம் மொழி வாரியாக விருத்தி செய்து கொண்டே இருக்கும் இவை அனைத்தும் சிம்மராசியில் நிலைத்திருக்கும் சிங்கம் மற்ற மிருகங்களை  தன் கீழ் வைத்திருப்பதுபோல் இவர்கள் வீட்டில் பிறப்பவர்கள் மரியாதையும் புகழ்ச்சியையும் பெரிதும் விரும்புவார்கள் அனுபவத்தையும் திறமையையும் வளர்த்து உலகில்  ஆற்றல் அழியாத புகழை கொடுக்கக்கூடிய சிம்மம் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் சோதியாய் விளங்கும் மலையைக் குறிக்கும் இந்த வீடு திகழ்வதால் அருள்வதில்  திருவண்ணாமலை போன்று விளங்கும்,                                  , கால புருஷனின் ஆறாம் வீடு கன்னி சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு தனஸ்தானமான விளங்குகிறது குறிப்பாக இரண்டாம் இடம் தனம் குடும்பம் வாக்கு ஸ்தானம் புதன் சாதகமாக அமையும் போது பொருளாதார முன்னேற்றம் இயல்பாக சிறப்பாக இருக்கும் என்பதால் கால புருஷனின் அர்த்த  திரிகோணம் பொருளாதாரம் தொழில் மேன்மை குறிப்பிடுவது இந்த   வழிகளில் வருமானம் கிடைக்கும்  உத்தியோக ரீதியாக சுயதொழில் மூலமாகவோ ஒப்பந்த அடிப்படையில் மூலமாகவோ ஆறாம் இடம் என்பதால் இந்த வீடு உத்தியோக சிறப்பைச் சொல்லும் கடமை உணர்வை கொடுக்கக்கூடியது கன்னி வீடாக வருவதால் அதன் அதிபதி புதன் கிரகம் இரட்டை  தன்மை அதிகமாக இருப்பதாலும் இரட்டை ஆதிபத்தியம் கொண்ட நபராக புதன் இருப்பதால் சிம்மத்திற்கு தனஸ்தானாதிபதி லாப ஸ்தான அதிபதி  புதன் கன்னியில் உச்சம் பெறுகிறார்
 இது இவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் வருவாய் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை கொடுத்து முன் நின்று செயல்படுத்துவது போதனை செய்வது புதன் கிரகம் கூட சூரியன் இணைந்து  இருப்பினும் நிபுணத்துவம் வாய்ந்த வருமானத்தை கன்னி ராசி அதன் அதிபதி விளங்குகிறார் ஆகவே இவர்கள் தனது வருவாயை பூமியின் மூலமாக பெறலாம் விவசாயம்  செய்யலாம் காரணம் அர்த்த திரிகோணத்தில் முதல் வீடு ரிஷபம் விளைநிலங்களையும் அதன் அதிபதி சுக்கிரன் இவர்களுக்கு பத்தாம் இடமாக  வருவதால் இயற்கை விவசாயம் செய்யலாம் என்றாலும் இரண்டாமிடம் சுக்கிரன் நீசம் அடைகிறார் அப்படியானால் மண்ணிற்கு தேவையான உரம் வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் வருவாயை அடையலாம்
 இங்கு புதன் பூமி தத்துவத்தின் அதிபதியாக பூமி ராசியின் அதிபதி  உச்சம் பெறுவதாலும் கன்னி கால புருஷனது ஆறாம் வீடாக  விளங்குவதாலும் இவர்கள் பெரிய கட்டிடம் கட்டும் கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் அதன்மூலம் வருவாய் ஈட்டும் போக்கும் உண்டு அதே நேரம் தானே முதலீடு செய்து ஒப்பந்த ரீதியாக கட்டடம் கட்டும் தொழிலும் செய்யலாம் அதேநேரம் கட்டிடக்கலை வரைபட பொறியாளர் துறையும் இவர்களுக்கு உகந்ததாக இருக்கும்  இருப்பினும் ஆயில்யம் கேட்டை ரேவதி புதன் நட்சத்திரம் கால புருஷனின் மோட்ச திரிகோணத்தில் புதனின் நட்சத்திரங்கள் அமைவதால் இவர்கள் பல அடுக்குமாடி கட்டடம் கட்டும் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுக்கலாம் மேலும் இந்த கன்னி வீட்டில் சுக்கிரன் நீசமாகி சுக்கிரன் 3 10-க்குடையவர் நீசம் அடைகிறார் இந்த வீட்டில் புதன் உச்சமாகவும் சுக்கிரன் நீசம்  எனும்போது மக்கும் தன்மை போன்ற பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுவது நல்ல வருவாய் தரக் கூடியதாக இருக்கும்
புதன் சுக்கிரன் சேர்ந்தால் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு கேரி பேக் தயாரிக்கக் கூடிய அனைத்து பொருட்களும் இதில் அடங்கும் இதேபோன்று கண்ணாடி போன்ற பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் சாமான்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதும் மக்கள் அவர்களுடைய பயன்படுத்தும் சமையல் பொருட்களின் மொத்த வியாபாரம் ஆகவில்லை வியாபாரமாக செய்வதன் மூலம் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் புதன் சுக்கிரன் சேர்ந்தால் மின் இணைப்பு தேவையான அலுமினியம் இரும்பு கம்பிகள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை  மூலமாகவும் இவர்களுக்கு பொருளீட்டும் வாய்ப்பு கிடைக்கும்  மண்ணில் இருந்து எடுக்கப்படும் தாதுக்கள்  மூலம் உருவாக்கப்படும் பொருட்களையும் குறிக்கும் இங்கு அலுமினியம் வகை ஒவ்வொரு உலோகத்தில்  இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் நன்மை அடையலாம்
இந்த வீட்டில் உத்திரம் நட்சத்திரம் அஸ்தம் நட்சத்திரம்  சித்திரை நட்சத்திரம் முறையே சூரியன் சந்திரன் செவ்வாய் குறிப்பிடும் நட்சத்திரங்கள் இங்கு உள்ளன சந்திரன் விரையாதிபதி சூரியன் உயிர்காக்கும் மருந்துகளை கொடுக்க கூடியது
கன்னி உயர் தத்துவம் கொண்ட ராசியாக காலபுருஷனின் ஆறாம் வீடாக வருவதால் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை குறிக்கும் வீட்டில் வளரும்  விலங்குகள் தேவையான உணவு மருந்து பொருட்கள் மூலம் வருமானம்  ஈட்ட துணை நிற்கும் மேலும் சூரியனும் புதனும் கதை காவியம் ஓவியம் ஜோதிடம் மற்றும் எடுத்து துறைகளிலும் மின்சார சம்பந்தமான நுட்பமான துறைகளிலும் ஈடுபட்டு பொருள் தேடும் வழியை காட்டும் இந்த வீடு வாக்கு ஸ்தானம் என்பதால் இவர்களுக்கு பேச்சு சாதுர்யம் அதிகமாக இருக்கும் வழக்கறிஞர் இந்தத் துறையில் அதிகமாக இருப்பார்கள் வருவாயை கொண்டு கம்ப்யூட்டர் மெக்கானிக் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் துறை மற்றும் இயந்திர துறைகளில் மூலமாகவும் பொருளாதார மேன்மை உண்டு சூரியன் பட்டு ஜவுளி என்பதாலும் இதனை  குறிப்பதாக உள்ளது ஜவுளித்துறைக்கு தேவையான நூல்  துறையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அரசு சம்பந்தமான எழுத்தாளராகவும் பணிபுரியும் வாய்ப்பு உண்டு அஸ்தம் சந்திரன் அதிபதி என்பதாலும் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற்றம் உண்டு ஆறாம் இடம் என்பதால் இவர்களிடம் வாங்கிய பணத்தை வைத்துக் கொள்ள முடியாது காரணம்  கலபுருஷனின்   7-ம் வீட்டிற்கு கன்னி  இரண்டாம் இடமாகும் இவர்களிடம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும் பொதுவாக கமிஷன் காண்ட்ராக்ட் என்பதால் இதன் மூலம் நன்மை ஏற்படும்
 குடும்பம் என்று சொல்லும் போது இவர்களது திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது பல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதரிகள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்களின் மேன்மைக்காக இவர்களின் பொருளாதாரம் உயர்வடையும் காரணம் சகோதர ஸ்தானாதிபதி சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் நீச்சம் அடைந்தால் மேலும் சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் உள்ளவர்கள்  ஆனால் இவர்கள் வளர வளர தந்தையின் வளர்ச்சி குறைந்து கொண்டே வரும் காரணம் குடும்பத்திற்கு தந்தையை போன்று இவர்கள் சதாகாலமும் செயல்படுவார்கள் குறிப்பாக உடன்பிறந்தோர் அனைவரையும் வாழ்க்கையில் அவர்களுக்காக செலவுகள்   செய்வார்கள்   கன்னியில் சூரியன் சந்திரன் செவ்வாய் நட்சத்திரங்களில் செவ்வாய் 4.9.ஆம்  அதிபதி ஆகிறார்  விருச்சிகம்  4.ஆம் இடம்  9.ஆம் இடம் மேஷம் தகப்பனார் ஸ்தானம் மேலும் அதன் அதிபதி செவ்வாய் இரண்டாம் இடத்தில் நட்சத்திரமாக கொண்டுள்ளதால் தாயையும் தந்தையையும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு  உண்டு இவ்வாறு அவர்கள் நலனில் அக்கறை செலுத்தும் போது  இவர்களுக்கு சொத்தின் மேல் சொத்துக்கள் வந்து சேரும் மேலும் விருச்சிகத்திற்கு நாலாம் இடம் வீடு நிலம் சொத்தை கிடைக்கும் இதே போன்று பல அடுக்குமாடி கட்டிடங்களும் குறிப்பிடும்  இங்கு நல்ல வருமானம் உள்ள சொத்துக்கள் அமையும் அமையப் பெற்று காலத்தால் குறையின்றி குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உழைப்பில் முன்னேற்றம் உண்டு
கால புருஷனின் ஏழாம் இடம் துலாம் என்பதால் இவர்கள் உலகத்தாரோடு பொதுஜன தொடர்புகள் நல்ல தொடர்பும் அணுகுமுறையும் இயல்பாக தொடர்ந்து கொண்டே இருக்கும் காரணம்  சர ராசியாக இருப்பதால் தகவல் தொடர்பும் பரிமாற்றம் சிறப்பைத் தரும் இவர்களின் சிந்தனையும் செயல்பாடும் ஓய்வில்லாமல் காரியத்தை நோக்கி சிந்தித்துக்கொண்டே இருப்பார் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டால் அதனை சிறப்பாக செய்வதில் முதன்மையான நபர்களாக இருப்பார்கள்
துலாம் கால புருஷனின் ஏழாம் இடமான சிம்மத்திற்கு மூன்றாம் வீடாக விளங்குவதால் இந்த வீட்டில் சனி உச்சம் அடைவதும் சனிபகவான் சிம்மத்திற்கு 6 7-க்கு உடையவர் என்பதும் துலாத்திற்கு சுக பஞ்சமாதிபதியாக ஆக விளங்குவதால் இவர்களிடம்  உழைக்கும் போராட்டமும் இவருடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல இவர்களோடு அன்புடன் இருப்பவர்களுக்கு நல்ல சுகம் எண்ணம் விருத்தியும் நல்வாழ்வும் அடைவார்கள்  இவர்களின் ஆலோசனையைக் கேட்டு வழி நடப்பவர்கள் உயர்வடைவார்கள்   அதே நேரம்  துலாத்தில் சூரியன் நீசம் அடை வதால் மற்றவர்கள் உயர்ந்த பின்பு இவர்களை  உதாசீனப்படுத்தும் காலம் இவர்களுக்கு கொடுக்கும் பாடமாக அமையும் இவர்களுக்கு வரும் வாழ்க்கை துணை  இவர்களை போன்று வாழ்க்கை கொடுப்பார் இவர்களின் எண்ணங்களுக்கு ஒத்துப் போகக்கூடிய வாய்ப்பு உண்டு ஏழாம் வீட்டின் அதிபதி சனி துலாத்தில்  உச்சம் அடைவதால் மனைவி வந்த பின்பு மென்மையாக சுக வாழ்க்கை இவர்களுக்கு அமையும் மூன்றாம்  இடம்  மனைவியின் தகப்பனாரை குறிப்பதால் மாமனார் இவர்களுக்கு  என்றும் அவர்களுக்கும் இவர்கள் மூலமாக உயர்வு பெறுவார்கள்
 இந்த வீட்டின் அதிபதி சுக்கிரன் சிம்மத்திற்கு கர்ம ஸ்தானம் ஆகி மூன்று கூடியவராகவும் விளங்குவதாலும் மூன்றாமிடம் காற்று ராசியாகவோ சர ராசியாகவோ என்றாலும் இந்த வீடு சுகமான தென்றல் எடுத்து விளங்குவதாலும் இந்த வீட்டில் உச்சம் அடையும் சனிபகவான் காற்று தத்துவத்தின் அதிபதி என்பதாலும் இவர்களுக்கு விமானத்தை இயக்கக்கூடிய பைலட் பணி கிடைக்கும் வாய்ப்பு உண்டு பெண்களுக்கு விமான பணிப்பெண்ணாக விளங்கும் வாய்ப்பும் உண்டு இந்த ராசிக்கு காலா  புருஷனுக்கு  7-ஆம் இடம்  சிம்மத்திற்கு மூன்றாம் இடம் இருப்பதால்  ஒப்பந்தம் கூட்டுத் தொழில்  தன்மை கொண்டதால் இவர்கள் அடிப்படையில்  மற்றவர்களுடன்  கூட்டு சேர்ந்து தொழில் செய்யும் அமைப்பு உண்டு இந்த  இடம் சர ராசியாக வருவதால் இவர்களுக்கு தகவல் தொடர்பு சம்பந்தமான தொழில் சிறக்கும் மற்றும்  நல்ல எழுத்தாளராகவும் அதோடு பத்திரிக்கை  எழுத்தாளராகவும் நல்ல ஆலோசனை இவர்கள் வழங்குவார்கள்  சுக்கிரனின்  நட்சத்திரம்  ராசியில் அமைவதால் இவர்களுக்கு உடன் பிறந்த ஆண்களும் பெண்களுமாக இருப்பார்கள்  துலாத்தில்  சூரியன் நீசம் ஆகிவிடுவதால் மற்றவர்கள் நலனுக்கு இவர்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடும் சூழ்நிலை அமைந்து விடும் சூழ்நிலை கைதியாக உயர்வுக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டிய  வாழ்க்கை வந்தபின் வாழ்க்கை மாறும் அதேபோன்று இரவில் பிறப்பவர்கள் ஆனால் வாழ்வில் இவர்கள் இளம் வயதிலேயே சாதனை செய்யக்கூடிய  நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக சிறுவயதிலிருந்தே கஷ்டத்தை உணர்ந்து பொறுப்பான மனிதனாக உருவெடுத்து தனது வாழ்க்கைப் பாதையை தானே அமைத்துக் கொள்வார்கள் மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பார்கள்  மூன்றாம் இடம் சனி உச்சம் அடைவதால் இவர்களிடம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்  எளிதில் வசியமாகி விடுவார்கள் வசியம் உந்து சக்தியும் அதிகம் உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...