புதன், 21 நவம்பர், 2018

ரிஷபம் ராசி காரகத்துவம்



ரிஷபம் காலபுருஷனின்  2 ம் வீடு. எப்போதும் இவர்கள் பணம் பொன் பொருட்கள் பற்றிய சிந்தனை இருக்கும் ஏனென்றால் இது சுக்கிரன் வீடாகும். ரிஷபம் பூமி ராசி.+ ஸ்திர ராசி. பந்த பாசம் மிக்கவர்கள். எதையும் ஏற்றுக் கொள்ளும் அல்லது தாங்கிகொள்ளும் திறன் உடையவர்கள். வாசனை திரவியம் ஆடை ஆபரணங்கள் மீது ஆசை இருக்கும். லக்கினத்தில்  கார்த்திகை நட்சத்திரம்  உள்ளது  அரசு சொத்து மீது நாட்டம் இருக்கும்  ரோகிணி   நட்சத்திரம்  உள்ளது  மனம் சஞ்சலம் இருக்கும் கல்வியில் நாட்டம் குறையும் உள்ளூரில் வசிக்க மாட்டார்கள்  ரிஷபம் நீர் சுரந்த உடல்வாகு இருக்கும் கார்த்திகை  நீரும் வெப்பமும் கலந்தது ரோகிணி நீரும் இரத்தமும் அதிகம் உள்ளது. மிருகசீரிஷம் நீரும் தசைகளும் உஷ்ணமும் அதிகம் உடையவர்கள்.
ரிஷபத்திற்கு 2,  ம்  வீடு  மிதுனம் இந்த இடம் காற்று ராசி +உபயராசி. உண்மைத்தன்மை குறைவு இருபொருள்பட பேசுதல் நகைச்சுவை கலந்த பேச்சு இருக்கும். இந்த இடம் காலபுருஷனின் 3.மிடம். தகவல் தொடர்பு எழுத்து ஒப்பந்தம் டாக்குமென்ட் போன்ற வகையில் தனலாபம் வரும் மிருகசீரிஷம் நட்சத்திரம்  உள்ளது 7. 12 ஆம் அதிபதி செவ்வாய் ஆகவே இவர்கள் தனம் மனைவி பார்ட்னர் மூலம் நஷ்டம் அடைவார்கள்                         2.5.ஆம் அதிபதி புதன்  ஆகவே இவர்களுக்கு தவனைமுறையில் பணவருவாய் சீட்டு லாட்டரி மூலம் தனலாபம் வரும்
3 ம் வீடு கடகம். இது காலபுருஷனின் 4 ம் வீடு  ஆகும். இது சர ராசி ஜல ராசி. இவர்கள் நிலையான ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள்  அடிக்கடி வீடு மாற்றம் இருக்கும் சொத்து நிரந்தரமாக தங்காது. இவர் மனம் வீடு நிலம் வாகனம் பற்றிய சிந்தனை இருக்கும். அடிக்கடி மனமாற்றம் உடையவர்கள் இவருக்கு புறம் போக்கு இடம்  வாரிசு இல்லாத சொத்து பத்திரங்கள் வைத்து இருப்பார்கள்.  கடகத்தில் புனர்பூசம் நட்சத்திரம் உள்ளது சட்டப்படி  முறையான உயில் வாரிசு சொத்து புறம் போக்கு வில்லங்க டாக்கு மெண்ட் சொத்து கிடைக்கும் கடகத்தில் பூசம் நட்சத்திரம் உள்ளது   ஏலம் பாலங்கள் பராமரிப்பு மூலம் லாபம் கிடைக்கும் ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது  குத்தகை கமிஷன் மூலம் லாபம் உண்டு.
ரிஷபத்திற்கு  4,  ம்பாவம். சிம்மம்  இந்த இடம் ஸ்திர ராசி நெருப்பு ராசி. சூரியனின் வீடு அரசு உதவி மூலம் கல்விபயிலும் அமைப்பு ஏற்படும். இவர் வீடு குழந்தை ஆஸ்பத்திரி சிறுவர் பள்ளி குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் கலைஞர்கள் வாழும் இடத்தில் வீடு அமையும் சூரியன் வீடு அதனால் அரசு குடியிருப்பு அரசு அதிகாரிகள் வீட்டிலோ வாழ்வார்கள்
ரிஷபத்திற்கு  5 ம் வீடு. கன்னி ராசி. இது பூமி +  உபயராசி  ஆகும். இவருக்கு பிறக்கும் குழந்தை மூலம் கடன் வழக்கு  ஏற்படும்.  இவர்கள் காதல் வாழ்க்கை பிரச்சினை உரியதாக இருக்கும். பிறருக்கு விட்டு குடுக்கும் தன்மை உடையவராக இருப்பார் இவர்கள்
ரிஷபத்திற்கு 6  ம்வீடு  துலாம்  காலபுருஷனின் 7,ம்வீடு  ஆகும். இந்த இடம் சர ராசி + காற்று ராசி. இந்த இடம் சுக்கிரன் வீடு. பெண்களால் கடன் மற்றும் நோய் ஏற்படும். 6  ம் பாவம் சித்திரை நட்சத்திரம் உள்ளது  உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் வரும். கிட்னி கர்ப்பபை நோய் வரும். விசாகம் நட்சத்திரம் உள்ளது  கிட்னி கருப்பை பழுதடைதல் செயலிழத்தல். ஏனெனில் குரு இவருக்கு அஷ்டமாதி ஆவார். +  காலபுருஷனின் விரயாதி இவர்
சுவாதி  நட்சத்திரம் உள்ளது  அடிவயிறு பால்வினை நோய்கள்  பாலின சுரப்பிகள் போன்றவை உண்டாகும். அதீத சுக  சௌகரியத்தால் நாட்டத்தால் நோய்வரும் ஏனென்றால் 4  ம்  அதிபதி சூரியன் 6  ல் நீசம்
8 ம் அதிபதி  குரு அஷ்டமாதி. ஆதலால் கௌரவம் மரியாதை இழக்கும் படியான திடீர் செயல்கள். நாணயம் தவறுதல்  இருக்கும்
ரிஷபத்திற்கு 9, 10 க்குரியவர் சனிபகவான். தொழில் சிந்தனை மிகுந்த தந்தை இருப்பார் தந்தைபாசம் முழுமையாக கிடைக்கும் இவர்களுக்கு
ரிஷபத்திற்கு  7. ம் வீடு விருச்சிகம்  காலபுருஷனின் 8. ம் வீடு  ஆகும்  திருமணம் போது விபத்து இருக்கும். இந்த இடம் செவ்வாயின் வீடாக  7. 12 அமைவதால் இவர்கள் மனைவி மூலம் நஷ்டம் கஷ்டம் அடைவர். காலபுருஷனின் 8  ம்வீடு சங்கடங்கள் பிரச்சினை இருக்கும். கணவர் மனைவி உறவு சண்டை சச்சரவு இருக்கும்.
ரிஷபம் லக்னத்திற்கு 8 ம்வீடு தனுசு . காலபுருஷனின் 9. ம் வீடு  ஆகும்  இவருக்கு  உயர் கல்வி மூலம் தடைகள் கல்லூரி விட்டு வெளியேற்றப் படுதல் சட்ட விரோதமாக செயலால் அசிங்கப்படல் நேரும். தனுசு ராசி நெருப்பு உபயராசி ஆகும். கல்வி மூலம் பாதிப்பு அடைந்து தீக்குளித்தல்   தீப்பிடித்தல் மூலம் விபத்து போன்றவை ஏற்படும். இது குரு வீடாக இருப்பதால் சட்டத்தால் தண்டனை ஏற்படும் குழந்தைகளால் அசிங்கம் அவமானம் ஏற்படும் பெரிய மனிதர்களால் பிரச்சினை சங்கடங்கள் ஏற்படும்
இவர்கள் பூர்வீகம் சொத்து மீது பிரச்சினை அனுபவிப்பார்கள். இவர் ஆராய்ச்சி + வெளிநாட்டு வேலை வாழ்க்கை மூலம் கஷ்டங்கள் அனுபவிப்பார்கள்
ரிஷபம் லக்னத்திற்கு 9 ம் வீடு மகரம். காலபுருஷனின் 10. ம்   சர ராசி + பூமி ராசி. இவருக்கு தொழில் மூலம் பாக்கியம் கிடைக்கும். வெளிநாட்டு சுற்றுப்பயணம் தொழில் மூலமாக அமையும் 9 ம்பாவம் உத்திராடம் நட்சத்திரம் உள்ளது ஆசிரியர் புரொபஸர் ஆக இருப்பார்கள். திருவோணம் நட்சத்திரம் உள்ளது  தகவல் தொடர்பு கொரியர் டிராவல்ஸ்  டிரான்ஸ்போர்ட் போன்ற துறைகளில் இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரம் உள்ளது ஒற்றர் வேலை தகவல் செய்தி குடுப்பவராக இருப்பார்கள்
இவருக்கு 9. 10 க்கு உடையவர் சனிபகவான் ஆதலால் எந்த தொழில் செய்தாலும் அடிக்கடி முடக்கம் ஏற்படும். ஏனெனில் 12 . மேஷத்தில் சனிபகவான் நீசம்.  10 ம் வீடு ஸ்திர ராசி + காற்று ராசி ஆகும். விமானம் ராக்கெட் ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட துறைகள். துப்பரவு செய்யும் எந்திரங்கள் ஏர் கண்டிஷனர் போன்ற தொழில் மூலம் சிறப்பு உண்டு. 10 ம்வீடு அவிட்டம் நட்சத்திரம் உள்ளது தொழில் மூலம் கஷ்டம் உண்டு. பார்ட்னர் கூட்டுதொழில் சிறப்பாக இருக்காது ஏனென்றால் செவ்வாய் 7, 12 க்கு உரியவர் ரிஷபத்திற்கு 10  ம்  வீடு சதயம் நட்சத்திரம் உள்ளது  கடின உழைப்பு மூலம் முன்னேற்றம் இருக்கும்   பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது தொழில் பிரச்சினை இருக்கிறது. குரு இவர்களுக்கு 8 அஷ்டமாதி ஆதலால் இவ்வாறு இருக்கும்
11 ம் வீடு. உபயராசி ஜலராசி. காலபுருஷனின் 12. ம்வீடு.  இவர் விருப்பங்கள் 12  ம் பாவ சம்பந்தமான ஆராய்ச்சி ரகசிய நடவடிக்கை வெளிநாட்டு வாழ்க்கை போன்றவை அமையும். குரு 8, 11 ம் அதிபதி ஆதலால் இவரது ஆசைகள் வில்லங்கம் விவகாரம் உள்ளதாக சட்ட சிக்கல் நிறைந்ததாக இருக்கும். சங்கடங்கள் பிரச்சினைகளை குடுக்கும்
ரிஷபம் 12  ம் வீடு காலபுருஷனின்  1  ம் வீடு ஆகும் இந்த வீடு சர ராசி நெருப்பு ராசி இது 7, 12 செவ்வாய் வீடாததால் மறைமுக எதிரிகள் இருக்கும் இரகசிய வேலையில் அடியாட்கள் அதிகாரிகள் நெருக்கமும் முரட்டு தனமும் கொண்டவர்கள் இவர்கள்
12 ம்பாவம் அசுபதி நட்சத்திரம் உள்ளது விளையாட்டு கேளிக்கை லாட்டரி மூலம் விரையம் இருக்கும். பரணி நட்சத்திரம் உள்ளது வழக்கு மூலம் விரயம் இருக்கும். சுக்கிரன் 1 . 6 உடையவர். கார்த்திகை நட்சத்திரம் உள்ளது வீடு வாகனம் நிலம் மூலம்  லாபமும் இருக்கும் விரயமும் இருக்கும்
ரிஷபம் வீதியில் நடுப்பகுதி ஆகும். காராம்பசு  காமதேனு படம் இருக்கும். பால் மோர் தயிர் வெண்ணெய் இருக்கும். யாதவர் வீடு பணம் புழங்கும் இடம். அழகு நிலையம். வளையல் கடை. இருக்கும் மாற்றாந்தாய் வளர்ப்பு இருக்கும். பெண் நண்பர்கள் அதிகம் இருக்கும்.  இவர்கள் வீட்டிற்கு போனால் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்கள். தைராய்டு பிரச்சினை உண்டு. 1. 6 சுக்கிரன். உத்தியோகம் நல்லது. கடன் இருக்கும் எதிரி உண்டு.  2.  5. புதன். இரண்டு வருமானம் இருக்கும் வாக்குபலிதம் உண்டு ஜோதிடர் ஆசிரியர் பேங்க்  சம்பந்தம் இருக்கும்                                                                                                                       3, ஆம் இடம்  கடகம் உடன் பிறப்பு பெண் இருப்பார். 4,ஆம்  அதிபதி சூரியன். மாடி வீடு அமையும். 7. 12 ஆம் அதிபதி செவ்வாய். திருமணம் பின்னர் வெளிநாடு உண்டு மனைவியால் விரயம் இருக்கும் கூட்டுத் தொழில் ஆகாது. நண்பர்களால் ஏமாற்றம் இருக்கும். 9, 10. ஆம் அதிபதி  சனி   தந்தையின் தொழில் செய்யலாம். தர்மகர்மாதிபதி யோகம் உள்ளது. தந்தைக்கு கர்மா செய்வார்.
ரிஷபம் காளை சின்னம். இது தானியம் விளையும் பூமி. காளை மாடு தான் இழுத்து செல்லும் பாரத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் கொண்டு செல்லும் அதுபோல இவர்கள் பொறுப்பானவர்கள். இவர் செய்யும் எந்த செயலும் இவர் பெயர் முன்னால் நிற்காது. மறைமுகமாக இருக்கும். ஏனெனில் மேஷம் இவருக்கு 12 ம்வீடு. தாயார் பற்று அதிகம். தாய் இவர்களை பயன்படுத்தி உடன் பிறந்தவர்கள் மீது அக்கறை காட்டுவார். எந்த ஒரு செயலையும் செய்து முடித்த பிறகு தனிமையில் அமர்ந்து நடந்ததை நினைத்து காளைமாடு போல் அசை போடுவார்கள். என்ன உபகாரம் செய்தாலும் அதில் வருத்தமும் பிரச்சினைம்  உண்டு
மிதுனம் காலபுருஷனின் 3  ஆம் இடம்  என்பதால் கதை  கவிதை . ராகு நட்சத்திரம் இருப்பதால்   சினிமா துறையும்   சிறந்த துறையாகும். மிதுனம் காற்று ராசி ஆகவே இசைத்துறையில் பிரபலம் அடையும் வாய்ப்பு இருக்கிறது.
5 ம் இடம் புதன். இவரே 2 க்கும் உரியவர். இந்த இடம் காற்று ராசி. ராகு நட்சத்திரம் உள்ளது. இவர்கள் வீனை கிடார் மிருதங்கம் தபேலா போன்ற வாத்தியம் இவர்களுக்கு உகந்தது. வாய்ப்பாட்டுக்கு மிகவும் சிறந்த இடமாகும்
இந்த இடத்தில் திருவாதிரை +  புதன் வீடு + காற்று ராசி சம்பந்தம் வருவதால் வெளிநாட்டில் வேலைக்கு விசா விமான டிக்கெட் மூலமாக பணம் வருவாய் உண்டு. புதனின் கேட்டை  நட்சத்திரம் காலத்துக்கு 8 ல் இருப்பதால் இவர்களுக்கு lic  போன்ற காப்பீடு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு இருக்கிறது. விருச்சிகம் ரயில் போக்குவரத்து அதனால் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வேலையும் கிடைக்கும்.
குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் இவர்களுக்கு இரண்டு அமையும். பெற்றோர்கள்  உடன்பிறப்பு கூட இருக்கும் போது கலகலப்பு ஒற்றுமை இருக்கும் தனிக்குடித்தனம் ஏற்படும் போது வாக்கு வாதங்கள் நிறைந்து காணப்படும்
கடகம் ரிஷபத்துக்கு சகோதர ஸ்தானம். லக்னாதிபதியே தாய் கிரகம் சந்திரன் உச்சம் ஆதலால் தாயின் விருப்பபடி நடப்பார்கள்.   கடகம் பல கால் ராசி ஆகவே உடன் பிறப்பு ஆறுக்கு மேல் இருக்கும் நடைமுறையில் இரண்டு பேர் மேல் இல்லையென்பதால் கருச்சிதைவு  இருக்கும். கடகத்தில் சனிபகவான் பூசம் +ச ந்திரன் வீடு. எனவே எந்த ஒரு விஷயத்தையும் எண்ணி  கலக்கம் கொள்வார்கள் காரியம் நடந்து முடிந்த பிறகு நிம்மதி அடைவார்கள். காலத்துக்கு 4  சுகஸ்தான மாததால் இவர்களுக்கு சுக போகம் குறைவிருக்காது. மேலும் 3  மாமனார் வீடு. ஆகவே மாமனார் வழி சுக போகமும்  கிடைக்கும்
கடகத்தில் குரு உச்சம். இவர் சிந்தனை நேர்மை நியாயம் ஆக இருக்கும். கடகம் சர ராசி. இவர் செயல் பாடு வேகம் சுறுசுறுப்பாக இருக்கும்
காலத்துக்கு 5 ம்மிடம் ரிஷபத்துக்கு தாயார் ஸ்தானம். ஆதலால் தாய் வசதியாக நல்ல பூர்வீகம் வழி வந்தவராகவோ அமைய பெறுவார்கள். கௌரவம் ஆன வாழ்க்கை இருக்கு இவருக்கும்
ரிஷப ராசியில் கிருத்திகை 2 3 4 பாதங்கள் ரோகினி நான்கு பாதங்கள் மிருகசீரிஷம் 1 2 பாதங்கள் உள்ளன. மாதம் வைகாசி உறுப்பு முகம் திசை தெற்கு ஸ்திர ராசி பெண் ராசி அதிபதி சுக்கிரன்  இதன் குணம் சாந்தம். இந்த ராசியில் பிறந்தவர்கள் முகம் வசீகரம் உடையவர்கள் அழகானவர்கள் சாந்த குணம் உடையவர்கள் முதுகில் காணாத இடத்தில் மச்சம் அல்லது மரு இருக்கும். விவசாயம் செய்ய விரும்புபவர்கள் மாடுகள் வைத்திருப்பார்கள் வயிற்றில் பிரச்சினை இருக்கும் கற்பனை உள்ளவர்கள் கவிதையில் ஆர்வம் இருக்கும் புளிப்பு விருப்பம் புதிய ஆடை நகை வாகனம் வாங்குவதில் ஆர்வம்  சிறிய காதுகளை உடையவர்கள் புகழுக்கு அடிமை. புதன் யோக காரகன் லக்னாதிபதி சுக்கிரன் கன்னியில் நீசம் அடைகிறார் குரு பாவி மாரகர் இவர்கள் பெருமாள் பக்தர்கள்,, மனைவி மீது பிரியம் உடையவர்கள் பெண்மையின் மென்மை இருக்கும் காலையில் முரட்டுத் தனமும் இருக்கும் சிரித்துப் பேசியே காரியம் சாதிப்பவர் இவர்கள் புது வீடு வாங்குவதை விட பழைய வீடுகளை வாங்குவதுதான் நல்லது இவர்களுக்கு கடன் இருக்கும் இவர்கள் கற்பனையில் காலம் கழிப்பவர்கள்
ரிஷப ராசி தன்மைகள் :
ராசியின் அதிபதி: சுக்கிரன், ஸ்திர ராசி, பெண் ராசி
நில ராசி,  சந்திரன் உச்சமாகும் ராசி, ராசியின் இடம் விளைநிலம், கர்ம ராசி,
ராசியில் உள்ள நட்சத்திரங்கள் : கிருத்திகை 2,3,4 ரோகிணி 1,2,3,4 மிருசீரிடம் 1,2,3,4 ராசியின் செயல் : மத்திமம்
ரிஷப ராசி காரத்துவங்கள் :

மாட்டுத் தொழுவம், பழங்கள், வெண்மை நிறம், உணவுத் தானியங்கள், முகம், வயல்  வெளி, தச்சுப்பட்டறை,  பெண்,  வெள்ளி,  ரத்தினக்  கற்கள், வியாபாரம், வட்டித் தொழில், கால்நடை வளர்ப்பு, கலைப் பொருட்கள், வாசனைப்பொருட்கள், திரைப்படம், கவிதை, பாட்டு, தங்கும் விடுதி.
ரிஷப ராசி வீதியில் நடுப்பகுதியில் வீடு  இருக்கும், மாடு, மாட்டு தொழுவம் இருக்கும், பெண்கள் அதிகம் வாழும் பகுதி, பெண்கள் பள்ளி, கல்லூரி அருகில்  வீடு  இருக்கும்,
ரிஷப வீட்டை பசு மாடு பார்க்கும்
ரிஷபம் கால புருஷனுக்கு இரண்டாவது இடம் இது மற்றொரு புறம் இருக்கும் உண்மை பொய் நாக்கு நட்பு சிறப்பு குடும்ப உறவுகள் வாசனை திரவியங்கள் தனம் வாக்கு கல்வி வாழும் ஆற்றல்கள் பணம் சேமிப்பது
ரிசபத்தார் வீடு அழகுற இருக்கும்.செலவுகள் மனம் போல செய்வர்
முகம் வெள்ளை நிறம் இரவு நேரம் தெற்கு திசை வைகாசி மாதம் நிகழ்காலம் இதற்கு அதிபதி சுக்ரன் பூமி தத்துவத்தை உடையது பெண்ராசி வைரக்கல் பரிகாரமாக உபயோகப்படுத்தப்படும்
தோற்றம்
1 நடுத்தர உயரம்
2. பருத்ததேகம்
3. அகன்ற நெற்றி
4. தடித்த கழுத்து
5 ஓளியான கண்கள்
6 நல்ல தேnற்றம்
7. நன்கு அமைந்த பெரிய தோள்கள்
8 நன்கு வளர்ந்த தசைகள்  ரிஷப ராசியின் குணாதிசயங்கள்
I சகிப்புதன்மை
2 அமைதி
3 எப்போது எதையும் மறவாமை
4. பிடிவாதம்
5 லட்சியம்
6 குறிக்கோள்
7 அன்புடையோர், பற்றுடையர்
8 எளிதில் காதல் வயப்படுதல்
9. மன்னிப்பின்மை
10 மெதுவாக , திடமாக
11. பாதுகாக்கும் இயல்பு
12. ராஜ பக்தி

ரிஷப ராசி காட்டும் நிலபரப்பு
1 விவாசய நிலம்
2 வயல் பகுதி
3 புல் தரை
4.நெற் போர் அடிக்கும் இடம்
5 மாட்டு தொழ வம்
6 மேய்ச்சல் நிலம்
7.நெற் களம்
8 ஆடு மாடு அடைக்கும் இடம்
ரிஷப ராசியின் தொழில்கள்
1 பொன்.வெள்ளி மற்றும் ரத்தின வியாபரம்
2. கால்நடை வளர்ப்பு
3வட்டி தொழில்
4. நிதி நிறுவனங்களில் பணி செய்தல்
5. கலை பொருட்கள், ஆடம்பர பொருட்கள் விற்பனை
6. அலங்கார பொருட்கள், சொகுசு பொருட்கள் விற்பனை
7 இயல்.இசை, நாடகம், பாட்டு எழுதுதல், போன் ற கலை தொழில்
8 தங்கும் விடுதி
9 கேளிக்கை விடுதி
10. கருவூலத்துறை
ரிஷப காரர்களுக்கு இளமைக்காலம் ஏற்றத்தாழ்வு உள்ள காலம் மத்திம அந்திம காலங்களில் சிறப்பாக வாழ்வார்கள் இரக்கம் கருணை அறிவாற்றல் பெருந்தன்மை மனோதிடம் கொள்கையில் உறுதி விடா முயற்சி வாழ்வாங்கு வாழ என்ன செய்யவேண்டும் என்ற திட்டமிடல் அன்பு அனைத்தையும் தெரிந்தவர்கள் இவர்கள் நண்பர்கள் தரமானவர்களாக இருப்பார்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் வருவதால் கலைகளில் நாட்டியம் நடனம் இசை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் நல்ல நடிகர்கள்  உள்ளம் அழுதாலும் வெளியே சிரிப்பார்கள் இவர்களுக்கு கன்னி ராசி ஒற்றுமையுடன் இருப்பார்கள் விருச்சிகம் கும்பம் மிதுனம் இவர்களுக்கு பொருத்தமானவர்கள்
சிம்மராசி காரர்கள் பகைவர்களாக இருப்பார்கள் ஒத்து வர மாட்டார்கள்
10 ம் அதிபதியோ அல்லது சனியோ இருந்தால் இவர்கள் தொழில் செய்யும் இடத்தில் ஆடு அல்லது மாடு வளர்ப்பார்கள், இதுவே ஒரு பரிகாரம் தான், அல்லது கண்ணில் படும்படியாக காமதேனு படத்தை வைக்கலாம், 9 ம் அதிபதி ரிஷபத்தில் அப்பா வீட்டில் பெண்கள் அதிகம், சினிமா கலைஞர்களை சொல்லும் வீடு, அல்லது கலை துறை நண்பர்கள் இருப்பார்கள்,
ரிஷப ராசிக்காரர்கள் இருமல் சளித் தொந்தரவு தொண்டை சம்பந்தமான நோய்கள் முக அழகு கெடக்கூடிய குறைபாடுகள் போன்றவைகளால் பாதிக்கப்படுவார்கள் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்த தொல்லைகள் இருக்கும்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தெற்கு திசை ராசியானது வீடுகளும் தென்திசையில் இருந்தால் உத்தமம்
கலை ரசனை படைத்தவர்கள் எழுத்துத் துறையில் நீதித்துறையில் கல்வித்துறையில் ரியல் எஸ்டேட்டில் துறையில் இவர்களுக்கு லாபம் கிடைக்கும் வங்கி சார்ந்த துறைகளிலும் பணப்புழக்கம் உள்ள துறைகளிலும் நாகை ஆபரண வியாபாரங்களும் இவர்களுக்கு உகந்ததே
ரிஷப ராசி ரிஷப லக்னக்காரர்களுக்கு சூரியன் குரு பகை சந்திரன் உச்சத்தில் சுக்கிரன் ஆட்சியில்
ரிஷபத்தில் சுக்கிரன் அமையப் பெற்றவர்கள் வாழ்க்கையில் அலங்கார ஆடை ஆபரணங்கள் வைர நகைகள் அதிகமாக இதர  சுகங்களை நன்கு அனுபவிப்பார்கள் ராகு-கேது சனி பார்வை இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக நடைபெறும்
சந்திரன் ரிஷபத்தில் இருந்தால்  வசீகர தோற்றம்  முக அழகு அனைவரையும் கவரக்கூடிய நளினம் மிக்க பெண்களாக இருப்பார்கள்
சேமிப்பு பணத்தை எதிலாவது முதலிடு செய்துவிட்டு தினம்தினம் பணத்திற்கா அன்றாடம் அலையவைக்கும்
பணத்திற்காக எப்போதும் அலைந்துக்கொண்டே இருக்கும் ரிஷப ராசி  சொகுசு வாழ்க்கை சுகமான. வாழ்க்கை எளிதில் காதல் வயப்படும். தாய் பாரம்பரிய குடும்பம் .வீட்டில் பசுமாடு இருக்கும்
ரிஷபம் ராசி
அதிபதி சுக்கிரன்
உருவம் மாடு
பெண் ராசி
இரட்டை ராசி
ஸ்திர ராசி
தத்துவம் நிலம்
நிறம் வெள்ளை
உறுப்பு முகம் கண்கள்
கடவுள் மீனாட்சி
ஓரே இடத்தில் இருக்க விரும்புவார்கள். மாற்றம் இவர்கள் விரும்ப மாட்டார்கள் ரிஷப லக்னத்தில் பிறந்த ஜாதகரைபெரும்பாலான பெண்கள் விரும்புவர்
ரிஷப லக்னம்
1:எண்ணியதை செயல்படுத்துவர்
2:இன்பமானவர்
3:அழகு
4:இசையில் நாட்டம்
5:உண்மையான பாசத்துடன் இருப்பவர்
6:கவர்ச்சியுடையவர்
7:புகழ்,
பெருமையுடையவர்
8:குறிக்கோளுடன் கூடிய வியாபார திறமை
9:முதியவரை மதித்தல்
10:அன்புடைமை
பெண்களுக்கு தியாகம் செய்தல்
11:நன்னடத்தை
12:விளையாட்டு குணம்
13:பொறாமை குணம்
14:மிதமானகோபம்
15:ஞாபக சக்தியுடையவர்
16:புதியவர்களால் புரிந்து கொள்ள முடியாமை
17:கோபபபடுத்தினால் வெறித்தனமான கோபம் உடையவர்
18:நிலையான தன்மை
19:காளையைப் போல் செயல்படுதல்
20:சுயநல விரும்பி
21:நடுதர உயரம்
22:பருத்த கழுத்து
23:பெருந்தோள்கள் கொண்டிருப்பார்கள்
24:அதிக செயலாக்கமற்ற தன்மை
25:பாதுகாப்பான நிதானமான போக்கு
26:சகிப்பு மனப்பான்மை
27:அமைதியானவர்
28:பொறுமையானவர்
29:லட்சயத்தில் உறுதியானவர்
30:உழைக்க அஞ்சாதவர்
31:நேர்மையானவர்
32:பிடிவாத குணமுடையவர்
33:இனிமையான பேச்சு
34:சாதுர்யம்
35:பாவனை
36:வியாபார சாமராத்தியம் கொண்டிருப்பார்கள்
37:வாழ்க்கைக்கு திட்டமிடுதல்
38:நிதானமாக முன்னேறுதல்
39:சினிமா
40:ஸ்வீட் ஸ்டால்
41:துணி கடை
42:சங்கீதம்
43:ஃபேன்சி ஸ்டோர்
44:காசாளர்
45:பொருளாளர்
46:பங்கு சந்தை தரகர்
47:சூதாட்டம்
49:குதிரை பந்தயம்
50:வங்கி மேலாளர்
51:கம்பெனி மேனேஜர்
52:விவசாயிகள்
53:தோட்டக்காரர்
55:நடிகர்
56:திரைபட அதிபர்
57:தையல் கலைஞர்
58:கால்நடை வளர்ப்பு
59:பால் பண்ணை
60:ஐஸ்கிரீம் கடை
61:பூ வியாபாரி
62:அரிசி வியாபாரிகள்
63:ரப்பர் தயாரிப்பு
64:பட்டு உற்பத்தி
65:நூலாடை விற்பனை
66:காய்கறி கடை
67:பெட்ரோல் பங்கு
68:கரும்பு சர்க்கரை வியாபாரம்
69:இன்சூரன்ஸ் முகவர்கள்
70:பஸ் முதலாளிகள்
71:மருந்து வியாபாரம்
72:வரி வசூலிப்பவர்
73:புத்தகம் பைண்டிங்  செய்பவர்
74:வண்ணம் அடிப்பவர்
75:அழகு கலை நிபுணர்
76:வாடகை வண்டியோட்டிகள்
77:முகம் பார்க்கு கண்ணாடி விற்பனையாளர்
78:வேளாண்மை துறை ஊழியர்கள்
79:விவசாய நிலத்திற்கு சொந்தகாரர்
80:மாதர் சங்கம் பொறுப்பு
81:தோல் பொருட்கள்
82:பணப்பை (மணிபர்ஸ்) விற்பனை
83:பள்ளிகூட ஆசிரியை
84:இன்கம் டெக்ஸ் துறை
85:விற்பனை வரித்துறை
86:நீதிமன்றம்
87:மோதிர விற்பனை
88: டைரி விற்பனை
89:காதணி விற்பனை
90:தொப்பிகள்
91:கழுத்தாரங்கள்
92:மாலைகள் விற்பனை
93:கைதடிகள்
94:கைகடிகாரங்கள்
95:வாசனை திரவியம் கடை
96:விலை உயர்ந்த நகைகள்
97:ராசி கற்கள்
98:அழகு சாதன பொருள்கள் கடை
99:தேயிலை வளர்ப்பு
100:காபி உற்பத்தி
101:பழமரவளர்ப்பு
102:பூத்தோட்டம் உடலைமைப்பு நடுதரம்
2:உடல் சதைப்பற்று இருக்கும்
3:அகலமான நெற்றி
4:கண்கூர்மை
5:ரோமம் கருமைநிறம்
6:புஜங்கள் பருத்து இருக்கும்
7:பிரகாசமானவர்
8:கட்டுமஸ்தான  உடலமைப்பு
9:தசைகள் நன்றாக வளர்ச்சி அடைந்திருக்கும்
லக்னத்திற்கு 9 மற்றும் 10 ஆம் அதிபதியான சனி திசை மற்றும் புதன் திசை, ராகு திசை ஜாதகருக்கு பலவிதமான யோகங்கள் வந்து சேரும்
ரிசபத்திற்கு குழந்தைகளால் ஒரு சில இடா்பாடுகள் உண்டு
ரிஷபத்தின் இடங்கள் :
1:கொட்டில்கள்
2:பசு நிற்குமிடங்கள்
3:கால்நடைகள்
4:குடிசைகள்
5:தட்டுமுட்டு சாமான்கள் விற்கும்  இடம்
6:புல்வெளிகள்
7:அழிக்கபபட்ட கட்டிடங்கள்
8:சமவெளிகள்
9:நிலவறைகள்
10:தாழ்வான அறைகள்
11:நெருக்கமான மரங்கள் உள்ள இடம்
ரிஷபம் குறிக்கும்நாடுகள்:
1:பாரசீகம்
2:கமோடியா
3:மோஜந்திரம்
4:அபெஜான்
5:காகணஸ்
6:ஜியார்ஜியா
7:சைப்ரஸ்
8:ஆசியாமைனர்
9:போலந்து தீவு கூட்டம்
10:ஹாலந்து
11:ரஷ்யா
12:அயர்லாந்து   ரிஷபம் கிருஷ்ணன் வீடு
பால் . தயிர்  . மோர் உண்டு பெண்கள் அதிகம் உண்டு  மாடு உண்டு  அழகு  சாதனப் பொருள் உண்டு + விற்பனை செய்வார்கள்  சொகுசு  பொருள் அதிகம் உண்டு
ரிஷப லக்னம் ஸ்திர லகனம் ..இதற்கு பாதாகதிபதியே பாக்யாதிபதிதான்.பத்துக்கு உரியவராக சனி வருவதால் பாதாகாதிபத்ததியம் அடிப்பட்டு அதாவது சனியின் ஆதிபத்தியம் அடிப்பட்டு யோகாதியபத்தியமாக வேலை செய்கிறது.
ரிசப லக்னத்தார்  அரசுப்பணியில் இருந்தால் உடல் ஊனமுற்றோர் துறை நன்று
ரிஷபம் குறிக்கும் நகரங்கள்:
1:ரோட்ஸ்
2:மாண்டுவா
3:டப்ளின்
4:மியான்மர்
5:லால்ப்ஜிக்
6:பிளாங்கோனியா
7:பாலர்மோ
8:பாத்ரா
9:மார்பார்
10:கோஷா
11:யமுனா
12:மத்பல்யா
13:மத்தூர்
14:சுரம்சவா
15:பஞ்சாலம்
16:அயோதியா
17:குருத்வாரா
18:பரியாதார்
19:மலை
20:கபிஸ்தலம்
21:ஹஸ்தினாபூர்
ரிஷபம் அடுத்தவரை உருவாக்கும் ஆசிரியர்கள்  மாற்றாந்தாயிடம் வளர்ந்தவர் அல்லது தாய் தந்தையை பிரிந்து வாழ்ந்தவர்  காதல் திருமணம் ஏற்படும் சற்றே சுயநலவாதிகள் அதிகம் உழைப்பவர்கள் கோபம் உடையவர்கள்  தயாள குணம் அதிகம் சாப்பிடுவார்  பெண் தெய்வம் வழிபடுவர்  சிரித்துப் பேசுவதில் ரிசாத்தார் வல்லவர்கள்  ரிசபத்தார் அரோக்கிய உடல்  தன்னை அலங்கரித்து கொள்பவர்கள்  சாஸ்திர ஈடுபாடு  உண்மையானவர்  வளர்ந்தாலும் சிறுபிள்ளை போல பேச்சு  நல்ல பிள்ளைகள் பெறுவார்  இருமல் வரும்  இளம் பருவத்தில் வறுமை  வளர்ந்த பின் வளமை அன்பானவர்  எடுத்த செயல் முடிப்பவர் எல்லா விஷயத்தையும் அறிந்தவர் அரச உத்யோகத்தில் இருப்பது  மன்னன்  போன்றவர்கள்  அநேக ஆபத்து  மனைவியால் மான குறைவு  மக்கட்செல்வம் குறைவு  பல கவலை உண்டு  புடைத்த கண்  விஷ தோஷம் ரிசப ராசி: ஸ்திரராசி நிலராசி 4கால் ராசி.மாடுராசி  மாடு உடல்வலிமை உள்ளது.அதனால் மாட்டுக்குண்டான குணாதிசயங்கள் இருக்கும். உடல்வலிமைஉள்ளவர்கள்.பெருத்தஉடல். மாடு நிறைய பொதி  சுமக்கும் பாரம்தாங்கும். அதனால்.இவர்கள்  எதையும் தாங்ககூடிய சக்திஉடையவர்கள்.  எதையும்எதிர்பாரமால்  கூடுதலாக வேலை செய்வார்கள். கடினமாக உழைக்க  கூடியவர்கள். மற்றவர்களுக்குகட்டு பட்டுநடப்பவர்கள். ஞாபகசக்திஉள்ளவர்கள்.மனம்போனபோக்கில்போகமாட்டார்கள். விசுவாசமாகஇருப்பார்கள்.மாடு நல்லாசாப்பிடும் பின்அசைபோடும். அதனால் இவர்கள் நன்கு சாப்பிடுவார்கள்  பின்பு சிந்தனை செய்வார்கள். தான் இருக்கும் இடத்தில் வாழநினைப்பவர்கள். தொழில் செய்யும் இடத்தில் சண்டை போடுவார்கள். காமஉணர்ச்சியை  வெல்பவர்கள். அடக்கிஆளக்கூடியவர்கள்.இது வீதியின் நடு. இவர்கள் எங்குபோய் உட்கார்ந்தாலும் கூட்டத்தின் நடுவில் போய்தான் உட்காருவார்காள். வீடு சென்ரான இடத்தில் அமையும். மாட்டுத்தொழுவம் பக்கத்தில் இருக்கும். வீட்டின் பக்கத்தில் நிறைய மாடுகள் போய்கொண்டு இருக்கும்.அதில்ஒரு மாடு நின்று திரும்பி பார்த்தால் அங்கு ரிசபராசிக்காரர் வீடு இருக்கும்.பெண்கள் அதிகம் உள்ளவீடு இவர்கள் இடம்வாங்கினால் பெண்கையெழுத்து போட்ட இடத்தை வாங்குவார்கள். 10 க்குடையவன் 4 ல் இருந்தால் அதிக  பெண்களை வேலைக்கு வைத்துக்கொண்டால்  சிறப்பாக இருக்கும். ரிசபத்தில் 6  ம்அதிபதி அதிகமாக பெண்களிடம் கடன்  வாங்கி  இருப்பார்கள். பெண்கள் வாழும் பகுதி ரிசபம். இவர்களை சுற்றி  பெண்கள் கூட்டம்  இருக்கும்.கோகுலத்து கண்னண்போல.  இவர்களுக்கு பிரச்சனை என்று  வந்தால் அதுபெண்கள்  மூலம்தான்வரும். ரிசபத்தில் 9  ம்அதிபதி  இருந்தால் தந்தைவழி  பெண்கள்அதிகம்.  சொந்த வீடுஉண்டு. கெளரவமான வீடு. அறிவாளிகள். இவர்கள் வீட்டின் அருகில் ATMசிட்பண்ட்ஸ்  பஸ் ஸ்டாண்டு பைனான்ஸ் பால் பண்ணைகள்.சினிமா தியேட்டர் இந்தமாதிரியான இடத்தில் வாழ்வார்கள். இவர்கள் வீடு வாடகைக்கு விட்டால் இந்த மாதிரிவிட்டால் லாபம் கிடைக்கும் பேன்சி ஸ்டோர் அழகு பொருட்கள் வாசிங் மெசின் ஆடம்பர பொருட்கள் இருக்கும். காதல்ராசி காமராசி. இது யாதவர் வீடு. பூர்வ ஜென்ம பந்தம் இருக்கும்.அமானுஷ்ய சக்தி இருக்கும். ரிசபத்தில் சனி  இருந்தால் மனைவி வேலைக்கு போகக் கூடியவர்.  ரிசபத்தில் பாவகிரகங்கள்  இருந்தால் முகஅழகு கெடும். பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் வீட்டில் இருக்கும். இவர்கள் மோர் தானம் செய்வது நல்லது. ரிசபத்தில் 5மிடஅதிபதி அல்லது கேது புதன் சம்மந்தம் இருந்தால்  காதல் வரும். ரிசபத்தில் சனிமாந்தி  கேதுமாந்தி ராகு மாந்தி  செவ்வாய்  மாந்தி  இதில் ஏதாவது  ஒரு  தொடர்பு இருந்தால் கண்டிப்பாக அவர்கள் வீட்டில் ஒரு பசுமாடு  இறந்திருக்கும். செவ்வாய் சனி இருந்தாலும் பார்த்தாலும் மாடு  இறந்திருக்கும்  அல்லது  காணாமல் போய்  இருக்கும். விலங்குகள்:முயல்  மாடு  மரங்கள்:துளசி அகத்தி கொடிக்கா வெற்றிலை பாக்குமரம்.பலாமரம். தொழில்:வாகனத்  தொழில் சினிமா  அழகுதொழில் வட்டிக்கடை பர்னிச்சர். மாடுவளர்த்தல். நோய்:முகத்தில் பரு கண்ணாடி அணிதல்  கண்பிரச்சனை  தூரபார்வை கன்னத்தில் ஏதாவது மாறுதல் வருதல். ரிசபராசி இவர்கள்  எதிரியின் பலத்தை  தனக்கு சாதகமாக்கி கொள்வதில் கெட்டிக்காரர்கள். இவர்கள் யோசித்து  செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அடுத்தவர்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள்.  ஒரு ரோகிணி கூட இருந்தால் வெற்றி நிச்சயம். அரசியல் அரசாங்க  தொடர்பு இருக்கும். பெரும்பாலும் தாயுனால் எந்த பிரயோஜனம் இல்லாமல் தான் இருக்கும். சுக்ரன் ரோகிணியில் மனைவியின் ஆதிக்கம் கருத்து வேறுபாடு ரிசப ராசி முகத்தை குறிக்கும் ராசி அங்கு  பாவகிரகம் இருந்தால் முகத்தில் மாற்றம். மாறுதல் இருக்கும்  1 க்குடையவரே  6  க்குடையவராக வருவதால் கடன் உண்டு எதிரி  உண்டு.இவார்கள்  வேலைக்கு போவது  நல்லது. இரண்டு வரூமானம் வருவது இவர்களுக்கு நல்லது.முதல்வருமானம்நிலைக்காது. 3 வீடும் 11 வீடும்பெண்  வீடாக வருவதால்  ஒருசகோதர சகோதரி இருக்க வாய்ப்புண்டு  பெண்சகோதரி  நிச்சயம்  உண்டு.  அவசரக்காரர்கள் ஒருஇடத்தில் நிக்க மாட்டார்கள்.ஓடி கொண்டேஇருப்பார்கள் அவசரபுத்தி நிதானம் இல்லாமை. தொட்டகுறை  விட்டகுறை இவர்கள்  வேலை இருக்கும். வேலைக்கு போவாங்க திடீர்என்று அரசியல் செய்வாங்க.கமிசன்  தொழில்செய்வாங்க  ஏதோ ஒன்று செய்து கொண்டேஇருப்பார்கள் லாப நோக்குடன்  அனைத்தும் இருக்கும். ரிசபராசியில் 4 மிட அதிபதி இருந்தால் மாடிவீடு கட்டுவார்கள். அதை விற்பார்கள். வாகனம் உண்டு. அரசாங்கநிர்வாகம் ஆபீஸ் வீட்டின்அருகே இருக்கும். ரிசபராசியினருக்குத் திருமணம் முடிவானால் முன்னோ பின்னோ  நெருங்கிய உறவில்  மரணம் உண்டு  7 க்குடையரே  12 க்குடையவர். திருமாணத்திற்கு  பின் வெளிநாடுஅல்லது  மனைவியில் விரையம் அல்லது மனைவி  விரையம்.மனைவி  டூர்போக சுற்றுலாபோக இப்படி ஆடம்பரசெலவு வரூம் மனைவியால். கூட்டுத்தொழில்ஆகாது. கூட்டாளிகள் ஆகாது. நண்பர்களால் ஏமாற்றம். 8 க்குடையவரே  11 க்குடையவராக  வருவதால் அதிகமாக ட்ரஸ்ட் ஈடுபாடு இருக்கும். அனாதை இல்லம் முதியோர்இல்லம் உயில்சொத்து  LIC  இன்ஸ்சூரன்ஸ்  ஈடுபாடு.வழக்கு வெற்றி  நோயினால்வெற்றி புதையல் எடுத்த  குடும்பம். 9 க்குடையவரே10க்குடையவராகவருவதால் தர்மகர்மாதிபத்திய  யோகம்.தந்தையின் தொழில் செய்யலாம். தந்தைக்கு கர்மம்  செய்ய  யோகம்.குலதெய்வம்  இரண்டு இருக்கும். இவர்கள் எல்லாகர்ம காரியத்தில்கலந்து கொள்வார்கள்.அதற்கு நிதிஉதவி செய்வார்கள்  காதல் பிரச்சனை  அல்லது நரம்புசம்மந்த மான பிரச்சனை இருக்கும். அஞ்சுக்கு  நான்கு ஏழாமிடம் ஆவதால் குழந்தைகள் படிப்பு  அவர்கள் முன்னேற்றச் செலவுகள் 5 மிடம் கன்னி ராசி  புதன் இரட்டிப்புசெலவு. படிப்புக்காக... இவர்கள் வீட்டில்  காராம் பசு காமதேனு  படம் வைப்பது நல்லது. ரிசபத்தில் ஒருகிரகம் இருந்தால் காராம்பசு வளர்ப்பதுநல்லது. மாட்டுக்கு இலைகளை போடுவது. கோபூஜை  பார்ப்பது.செய்வது.   நல்லது.
ரிசபம்
காலப்புருஷனுக்கு 2 வது ராசி  ரிசபம் சுக்கிரனின் ஆட்சி வீடு
ரிசபம் சந்திரன் & ராகுவிற்கு உச்ச வீடு ரிசபம் கேதுவிற்கு நீச வீடு
2 ஆம் பாவம் வாய் வாய்க்குள் உமிழ்நீர் சுரக்கிறது  ராகு வாய் மற்றும் உதடுகளை குறிக்கும்

ரிசப ராசியின் உருவம் மாடு ஆகும். மாடுகளை கடினமான வேலைகளை செய்வதற்கு நாம் பயன்படுத்துகிறோம், அதாவது  நமக்கு  பயன்படும் வகையில் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.இதனால் ரிசப ராசியினர் பிறருக்கு கீழ்படிந்து நடப்பர் என்றும் ,நல்ல உழைப்பாளிகள் எனக்கூறப்படுகிறது. மாடுகளை ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பழக்கிவிட்டால் அவை தன் பழக்கத்தை எளிதில் மாற்றிக்கொள்ளாது, உதாரணத்திற்கு செக்கு மாடுகளைக்கூரலாம். இதனால் ரிசப ராசியினர்  மாற்றங்களை விரும்பாதவர் எனப்படுகிறார்கள். மாடுகளுக்கும் இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் மாட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் ரிசப ராசிக்காரர்களுக்கும் காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது.
ரிசபம்
ரிசப ராசியின் உருவம் காளை மாடு ஆகும். காளை மாடுகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வளர்க்கப்படுகின்றன. புல்வெளிகளுக்கு மேய்ச்சலுக்காக செல்கின்றன. மாட்டுக்கொட்டகை பெரும்பாலும் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும். மாட்டுக்கொட்டகையையொட்டி வைக்கோல்போர் அமைந்திருக்கும். சிவன் கோவிலில் காளை உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.எண்ணெய் செக்கு இழுப்பதற்கு காளை மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.நெற்போர் அடிக்கும் இடங்களில் காளை மாடுகள் இருக்கும். வயல்வெளிகளில் மாடுகள் ஏர் இழுக்கின்றன. எனவே ரிசப ராசி மாட்டுத்தொழுவம்,மேச்சல் நிலம்,வயல்வெளி,நெற்களம்,எண்ணெய் செக்கு உள்ள இடம்,சிவாலயம் மற்றும் கிராமப்புறங்களைக்குறிக்கும்.(கிராமம்)

ரிசப ராசியில் அமைந்துள்ள நட்சத்திரங்கள்
கிருத்திகை 2,3,4
ரோஹிணி 1,2,3,4
மிருகசிரிடம் 1,2
பிருகு நாடி:

ரிசபம்
ரிசப ராசி ஸ்திர ராசி நில ராசி

ரிசபத்தின் உருவம் மாடு. ஸ்திர ராசி. நில ராசி. எஜமானனிடம் மட்டும் பொறுமை & விசுவாசம் உடையது. மற்றவர்களை முட்டி தள்ளும். அரைத்த மாவையே அரைப்பதில் வல்லவர்கள்.
மாடு வாயை அசை போடுவது போல எப்போதும் சதா ஏதாவது சாப்பிட்டு கொண்டு அல்லது பேசிக்கொண்டு இருப்பார்கள்.
மேசம் மாற்றத்தை விரும்புவர்கள். ரிசபம் உடனடியாக மாற்றத்தை விரும்ப‌ மாட்டார்கள். மாடு போல பொறுமையானவர்கள்.
மேசத்தை தொட்டாலே பத்திக்கும். ரிசபம் அப்படி அல்ல தொடர்ந்து கீ கொடுத்துக்கிட்டே இருக்கனும். பழக்கப்பட்ட வேலையை தொடர்ந்து செய்வதில் வல்லவர்கள். சற்று சோம்பல் குணம் உள்ளவர்கள். கடின உழைப்பாளிகள்.
ரிசப கிருத்திகை மேஷ கிருத்திகை சாணம் பிடித்த கத்தி. நல்லா வெட்டும் ரிசப கிருத்திகை மொன்ன கத்தி  இதில் குரு அல்லது சுக்கிரன் இருக்க
ஜாதகன் / ஜாதகி பார்க்க பரம சாதுவாக இருப்பார்கள். அதிகம் பேச விரும்புவார்கள். கோபம் வந்தால் சுடு சொற்களால் கொல்வார்கள்.

செவ்வாய் இருந்தால் ஆயுதம் பிரயோகப்படுத்துவார்கள். இந்த ஆயுத நட்சத்திரத்தில் செவ்வாய் இருக்க, கோச்சார சனி செல்லும் காலம் வேலை பறிபோகும்.

பொதுவாகவே பிறப்பு ஜாதகத்தில் ஆயுத நட்சத்திரங்களில் செவ்வாய் இருக்க அதில் கோச்சார சனி போகும் போது வேலை பறிபோகும். இவர்கள் ஆயுத உற்பத்தி வேலைக்கு செல்வது நல்லது.

ஆயுத நட்சத்திரங்களில் சனி இருக்க செவ்வாய் போனால் அடிக்கடி வேலை பறிபோகும்.
ரிசப ராசியில் உள்ள கிருத்திகை நட்சத்திரம் தலை அற்ற நட்சத்திரம் ஆகும். எனவே இந்த நட்சத்திரத்தில் பதவியேற்றால் பதவி பறிபோகும்...

கிருத்திகையில் சூரியன் இருந்தால் தனது தலையை அடமானம் வைத்தாவது சொன்ன சொல்லை காப்பாற்றுவார்

சந்திரன் இருக்கும் சில ஜாதகர்கள் உணவிற்காக காய்கறிகள் நறுக்குவதை அதிகம் பார்க்க முடிகிறது. சில விவசாயிகள் கதிர் அறுக்கின்றனர்.
இவை எல்லாம் பொதுபலன்களே....
ரிசபம் ரோஹிணி  ரோஹிணி நட்சத்திர வடிவம் தேர், கோவில்
ரிசபத்தின் வடிவம் மாடு, காளை நந்தியின் ஒரு கொம்பு கிருத்திகை இன்னொரு கொம்பு மிருகசிரிடம்  நடுவில் இறைவன் ரோஹிணி
அதனால்தான் பிரதோச காலங்களில் நந்தியின் கொம்புக்கிடையே இறைவனை தரிசிக்க சொல்கின்றனர்

ரோஹிணி என்ற தேரில் இறைவன் பவனி வருகின்றார். இங்கு இறைவன் என்பது சிவனை குறிக்கும். சிவன் ஜடாமுடியில் சந்திரன் இருப்பதாக ஐதீகம்.

ஜோதிடத்தில் சூரியனுக்கு அதிதேவதையாக சிவனை சொல்கின்றோம். ரோஹிணி நட்சத்திரம் சந்திரனின் நட்சத்திரம் ஆகும்.

சூரிய சந்திரர்களுக்கு பகை கிரகம் சனி ஆகும். சனி கிருத்திகை நட்சத்திரத்திலிருந்து ரோஹிணி நட்சத்திரத்திற்கு செல்லும் போது உலகில் பூகம்பம் இயற்கை அழிவுகள் உண்டாகின்றது.

பூகம்பத்திற்கும் ரிசபத்திற்கும் என்ன சம்பந்தம்

ரிசபம் ஸ்திர நிலராசி. இது பூமியை குறிக்கிறது. ரிசபம் வாயை குறிக்கும். பூமி தனது வாயை பிளப்பது போல இருக்கிறது.  கிருத்திகை நட்சத்திரம் வாள். இது வெட்டுதல் அல்லது பிளத்தலை குறிக்கிறது. ரிசபம் காளை வடிவம். காளை முட்டும் தன்மை உடையது. பூமியின் தட்டுகள் ஒன்றோடு ஒன்று முட்டுவதால் பூகம்பம் உண்டாகும்.
சனி பொது மக்களையும் ராகு கூட்டு மரண தோஷத்தையும் குறிக்கும். ராகுவிற்கு உச்ச ராசி ரிசபம் ஆகும்.

இதற்கு புராண குறிப்புகளும் மஹாபாரதத்தில் உள்ளது.

குருக்ஷேத்ர போரில் கர்ணன் அர்ஜூனனின் தலைக்கு குறிவைத்து அம்பை ஏவ, ரோஹிணி யில் பிறந்த கிருஷ்ணன், ரோஹிணி நட்சத்திர வடிவம் உடைய தேரை தனது காலால் அழுத்த பூமியில் ஓரடி தேர் அமிழ்வதால், ஏவப்பட்ட அம்பு அர்ஜூனனின் கிரீடத்தை மட்டும் தாக்குகிறது. இங்கு அம்பு என்ற ஆயுதமாக கிருத்திகையை கருதலாம். தலையற்ற நட்சத்திரம் கிருத்திகை என்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

பஞ்ச பாண்டவர்கள் ஐவருடன் மூத்தவன் கர்ணனயும் சேர்த்தால் ஆறுபேர்.
கிருத்திகை நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களை உடையது. கிருத்திகை முதல் பாதம் மட்டும் மேசத்துடன் பிரிவதால் தலைமகனான கர்ணன் தனது சகோதரர்களை பிரிந்தான்

கௌரவர்கள் நூறு பேர். சதயம் நட்சத்திர கூட்டத்தில் மொத்தம்நூறு நட்சத்திரம்))) குரு இருக்க ஜாதகன் சிலகாலம் தனிமையாக இருக்க நேரிடும்

சுக்கிரன் இருக்க பெண்களுக்காக ஏங்க வைக்கும். எத்தனை பெண் வந்தாலும் பிரிவு வரும்... மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு தோன்றும்..

செவ்வாய் இருக்க சகோதரனால் தொந்தரவு ஏற்படும்  இப்படி அந்தந்த கிரகங்களுடன் தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள வேண்டியது....
ரோஹிணியை கவனிக்க  புராணங்களில் பல குறிப்புகள் உள்ளன

1) ரோஹிணியில் அவதரித்த கிருஷ்ணர் இறக்கும் போது தனது காலில் அம்பு பட்டு இறந்து போனார். இங்கு கால் என்பது ரோஹிணி பாதசாரமாக பார்க்கவும். கிருஷ்ணருக்கும் அலெக்சாண்டர் க்கும் ஒறு ஒற்றுமை உண்டு. அதை வேறு ஒரு சமயத்தில் விளக்குகிறேன்

2) ரோகிணியுடன் அதிகம் நெருக்கம் காட்டிய சந்திரன் தனது ஒளியை இழந்து அவதியுற்றான்

3) பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்புகளுக்கு இடையே கவனி என்று சொல்லப்படுகின்றது

4) கோதுளி முகூர்த்தம் ஒன்று உள்ளது. அந்தி சாயும் நேரத்தில் பசுவின் கொம்புக்கிடையே யட்சினி ஒன்று இருக்குமாம். அதை வழிபட்டால் பல ரகசியங்கள் புலப்படும்.

ரோகிணியில் இருக்கும் கிரகம் அழிவை நோக்கி கொண்டு செல்லும்...
சனி ரோகிணியில் செல்லும் காலம் பேரழிவு

சந்திரன் இருக்க தற்கொலை எண்ணம்
குடி பழக்கம்                                                                                                                                                    ரிசபத்தில் சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்களுடன் எட்டாம் பாவம் சம்பந்தப்பட்டு இருக்க அவர்கள் குடிபழக்கத்திற்கு சிலகாலம் அடிமையாக இருப்பதை காணமுடிகிறது.
சுக்கிரன்
கிரகங்களில் பிரகாசமான கிரகம் என அழைக்கப்படுவது சுக்கிரனாகும். இந்த கிரகம் உருவத்தில் சிறியதாகவும் இல்லாமல்,பெரியதாகவும் இல்லாமல் நடுத்தரமாக உள்ள கிரகமாகும். ஜொலிக்கும் வெண்மை நிறமுடையது சுக்கிரனாகும். சுழற்சி வேகத்திலும், அதிக வேகமுடையது இல்லையென்றாலும் வேகமாக நகரக்கூடிய கிரகமாகும். மற்ற கிரகங்கள் எல்லாம் தன் அச்சில் வலஞ்சுழியாக சுற்றுகின்றன.ஆனால் இந்த சுக்கிரன் மட்டும் தன் அச்சில் இடஞ்சுழியாக சுற்றுகிறது. இந்த கிரகத்திற்கு விடிவெள்ளி என்றும் ஒரு பெயர் உண்டு. காலை நேரங்களில் வானத்தில் பிரகாசமாக தெரிவதால் விடிவெள்ளி என பெயர் பெற்றுள்ளது.
தினமும் பொழுது விடிவது சூரிய உதயத்தால்தான் என்றாலும், விடிவெள்ளி என்ற பெயர் மட்டும் சுக்கிரனுக்கு போய்விட்டது. அதாவது சுக்கிரனால்தான் பொழுது விடிகிறது என்பது போன்ற  ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. இதனால் சுக்கிரன் வேசக்காரன் என்று அழைக்கப்படுகிறான். வேசம் என்பது ஒப்பனை செய்து கொள்வதை குறிக்கிறது. இதனால்தான் கலைக்கு காரகன் சுக்கிரன் என கூறப்படுகிறது. கலஞர்கள் எல்லோரும் ஒப்பனை செய்துகொள்பவர்களே. ஆடை, அலங்கார பொருட்கள் அனைத்தும் சுக்கிரனுக்கு உரியவையாகும். இதனால் சுக்கிரனை ஆடை அலங்காரப்பிரியன் என்கிறார்கள்.
மற்ற எல்லா கிரகங்களும் தன் அச்சில் வலஞ்சுழியாக சுற்றுகின்றன,சுக்கிரன் மட்டும் தன் அச்சில் இடஞ்சுழியாக சுற்றுகிறது, எனவே மாற்று வழிகளை காட்டும் கிரகமாக சொல்லப்படுகிறது. பொதுவாக மனிதர்கள் மரணத்தை வெல்ல முடியாது என்பார்கள், ஆனால் சஞ்சீவினி மூலிகையை கொண்டு மரணத்தை வெல்லலாம் எனக்கூறப்படுகிறது. மாற்று வழி காட்டும் சுக்கிரன் சஞ்சீவினி  மூலிகையைக்குறிக்கிறது. சுக்கிரன் எதிர் பாலாரை(பெண் பாலார்) குறிக்கும் கிரகமாகவும் சொல்லப்படுகிறது. மனிதர்களில் அதிகம் ஆடை அலங்காரம் செய்துகொள்வது பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுக்கிரன் பிரகாசமான கிரகம் என்பதால் பார்ப்பதற்கு மினுமினுப்பாய் இருக்கும் இளம் பெண்களை குறிக்கிறது.
பணம் என்பது ஒரு மதிப்புதானே ஒழிய அது ஒரு குறிப்பிட்ட பொருள் ஆகாது. ஒரு கிலோ அரிசியின் விலை 60 ரூபாய் என்றால், ஒரு கிலோ அரிசியானது 60 ரூபாயாக பாவிக்கப்படுகிறது. அரிசியை தின்பதாலேயே பசி அடங்குகிறது. 60 ரூபாயை தின்றால் பசியடங்காது. 60 ரூபாய் என்பது ஒரு வகையில் அரிசியைப்போல் வேசம் போடுகிறது. எனவே பணத்தைக்குறிப்பது சுக்கிரனாகும். அதாவது ஒரு பொருளுக்கு ஈடானது போன்று இணை வைக்கப்படுவதை சுக்கிரன் குறிக்கிறது.
உலோகங்களில் வெண்மையாகவும்,ஜொலிப்பாகவும் இருக்கும் வெள்ளி, ரத்தினங்களில் வெண்மையாகவும், ஜொலிப்பாகவும் இருக்கும் வைரம் போன்றவை சுக்கிரனுக்கு உரியவையாகும்.
உடலிலிருந்து உற்பத்தியாகும் விந்து வெண்ணிறமாகவும், ஜொலிப்பாகவும் இருப்பதால் விந்துவுக்கு அதிபதி சுக்கிரனாகும்.
ஜொலிக்கும் பொருட்களான ஜரிகை, ஜிகுணா, பட்டு வஸ்திரம்,தங்கம்,வெள்ளி நகைகள்  போன்றவை சுக்கிரனுக்கு உரியவையாகும்.
மனிதர்கள் ஒப்பனை செய்துகொள்ளும்போது முகத்திற்கு மட்டுமே அதிகமாக ஒப்பனை செய்கிறார்கள். இயற்கையாக உள்ள முகத்தைக்காட்டாமல் , முகத்தில் மட்டும் அதிகம் சாயம் பூசிக்கொள்கிறார்கள். எனவே மனித உடலில் முகத்தை குறிப்பது சுக்கிரனாகும். முகத்தில் குறிப்பாக கன்னத்தில் அதிக சாயம் பூசப்படுகிறது எனவே கன்னத்தைக்குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும்.
பிறரால் நடப்பதை தன்னால் நடப்பதுபோல் காண்பிப்பது சுக்கிரனின் இயல்பாகும்.அதாவது தன்னால் பொழுது விடியவில்லையென்றாலும் , தன்னால்தான் பொழுது விடிகிறது என்பது போல் காட்டிக்கொள்வது. இதன் படி, தான் நடக்காமல் பிறரை நடக்கவைப்பது சுக்கிரனின் செயலாகும். குதிரை சவாரி, வாகன சவாரி போன்றவை சுக்கிரனின் செயல்களாகும். இதில் மனிதன் நடப்பதில்லை ,குதிரைதான் நடக்கும். பிறரை நகர வைத்து தான் நகர்வது போல் காட்டிக்கொள்வது.
மனித உடம்பிற்குள் மனித உடம்பு விந்து வடிவத்தில் சென்று வசிக்குமிடம் பெண்ணின் கருப்பையாகும். எனவே பெண்ணின் கருவறை சுக்கிரனாகும். இதுபோல் மனிதர்கள் தங்கும் இடமான வீடுகளும் சுக்கிரனுக்கு உரியவையாகும்.
பொதுவாக மனித உடம்பில் உடல் கழிவுகளை வெளித்தள்ளும் உறுப்புகளே உள்ளன. ஆனால் பெண்ணின் கருப்பை மட்டும் விந்து நீரை உள்ளுக்குள் உறிஞ்சிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இது தன் அச்சில் சுக்கிரன் இடஞ்சுழியாக சுற்றும் தனித்தன்மையை காட்டுகிறது. பெண்ணின் கருப்பையில் உயிர் வளர்கிறது ,  எனவே கருப்பையை குறிக்கும் சுக்கிரன் பெண்களுக்கு ஜீவக்காரகனாக சொல்லப்பட்டுள்ளது.
விடியல் சூரியனால்தான் வருகிறது என்றாலும், சுக்கிரனால் விடியல் வருவதுபோல் ஒரு மாயை உள்ளது. இது ஒரு வகையில் நம்பிக்கை சார்ந்த விசயங்களை குறிக்கிறது. சிலர் மருந்தினால் நோய் குணமாகவில்லை, மந்திரத்தினால் குணமானது என்பார்கள். எனவே நம்பிக்கை மருத்துவத்தை சுக்கிரன் குறிக்கிறது.மருந்தில்லா மாற்று மருத்துவ முறைகள் அனைத்தும் சுக்கிரனின் காரத்துவங்கள்

ஆட்சி வீடு - ரிஷபம்,துலாம்.
உச்சவீடு- மீனம்.
நீச்சவீடு- கன்னி
சுக்கிரன்
                சுக்கிரன் மீன ராசியில் 27 வது பாகையில் உச்சமடைகிறான். மீன ராசியில் 27 வது பாகை ரேவதி நடசத்திரத்தைக் குறிக்கும். மீனராசியின் அதிபதி குருவாகும். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதனாகும். சுக்கிரன் ஆடம்பரப் பிரியனாகும். சுகப்பரியனாகும் புதன், ஒரு வியாபாரியாகும். வுpயாபார தந்திரம் தெரிந்தவன். சுக்கிரன், பணம், பொருள்மீது ஆசை கொண்டவனாகும். குருவோ ஒரு ஆன்மீகக் கிரகமாகும். நீதி நேர்மையைக் குறிப்பவன் குருவாகும். பொதுவாக பணம், பொருள் மீது பற்று உள்ளவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்காது. பணம் பொருள் ஈட்ட வேண்டுமானால் வியாபாரத்தின் மூலமாகவே ஈட்ட முடியும். வியாபாரிகளிடம் நீதி, நேர்மையை எதிர்பார்க்க முடியாது. நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள் வியாபாரிகளாக இருக்க முடியாது. பணம், பொருள் ஈட்டுவது ஒன்றை மட்டுமே
குறிக்கோளாக கொண்டவர்கள் நீதி நேர்மைகளைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். இதன் அடிப்படையில் சுக்கிரன் மீனாராசியில் ரேவதி நட்சத்திரத்தில் உச்சமடைவதே சிறப்பாகும்                                               சுக்ரன்:வெள்ளி  நெய்  அன்னம் மொச்சை பரசுராம அவதாரம். இந்திரன் லஷ்மீ திருப்பதி  மீனாட்சி
போற்றி பாமாலை:
சுக்கிர மூர்த்திசுபமிக
ஈவாய்
வக்கிர மின்றி வரமிகு
தருவாய்
வெள்ளிச்சுக்ர வித்தக
வேந்தே
அள்ளிக்கொடுப்பாய்
அடியார்க்கருளே....
வல்லவுணர் தம் குரவன்
மாய்ந்தார் உயிர்பெறவே
சொல்லு மனு வை
அறிவான் சுக்கிரன்
என்றெல்லவரும்
சாற்றும் பெரியான்
சடை முடியான்
மாரிக்கோள் போற்றும்
வெள்ளி என்றே புகழ்....
பிருகுவின் சுதனே
யானான் பேரரக்கரின்
குருவாய் மண்ணில்
தருகின்றமழையுமாகி
அதை தடுப்பவன் தானே யாகி
கருவன விளங்கும்
சாத்திரம் கற்றவன்
தானு மான
பெரியவன் சுக்ராச் சாரி
பொன்னடி போற்றி
போற்றி...
ஸ்தோத்திரம்:
மூர்க்கவான் சூரன்
வாணன் முதலினோர்
குருவாய் வையம்
காக்க வான் மழை
பெய்விக்கும் கவிமகள்
கனகம் ஈவோன்
தீர்க்க வானவர்கள்
போற்றச்செத்தவர்
தமைஎழுப்பும்
பார்க்கவன் சுக்கிரன்
தன் பாதபங்கயங்கள்
போற்றி...
ஓம் அச்வத்வஜாய
வித்மஹே
தனுர் ஹஸ்தாய
தீமஹி
தன்னோ சுக்ர
ப்ரசோதயாத்...
சுக்ரன்:உறுப்புகள்  கன்னம் புருவமத்தி  கர்ப்பபை பெண்ணின்  மர்மஉறுப்பு. உறவுகள்:சகோதரி அத்தை மனைவி மருமகள்  பொது:வயதிற்கு வந்த இளம்பெண்கள் ஒப்பனை கலைஞர்கள்  நடிகர்கள்  பொதுஇடம்:சொகுசு வசதி நிறைந்துள்ள இடங்கள். Garments jewellers வீட்டின்அமைப்பு: சமையலறை  தென்கிழக்கு திசை. எண்:6 நிறம்:ஜொலிக்கும் நிறம்  ரத்னம்:வைரம் ஜிர்கான் பொதுவானகுணங்கள்: வசீகரித்தல் அழகு கூட்டுதல் பகட்டாக காட்சியளித்தல் ஜொலித்தல் சொகுசாக வாழ்தல் மாயை  மயக்குதல் ஆடம்பரம் சிற்றின்பம் சுபநிகழ்ச்சி கள். தொழில்:இயல் இசை  நாடகம் நடிப்பு ஒப்பனை பேஷன் டிசைனிங்  மற்றவை:கவர்ச்சி வசீகரித்தல் பணம் நகைகள் வீடு கார் சொகுசானபொருட்கள்
ரிஷபம் ராசி காரகத்துவ பலன்கள் கால புருஷனின் இரண்டாம் வீடு ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன் இந்த ராசி ஸ்திர ராசி பூமி ராசி வேலையில் பகல் பொழுது உடைய ராசி  நான்குகால் ராசி வெள்ளை நிறமாகவும் தாது ஜீவன் மூலமாகவும் பெண் ராசியாகவும்   காளை உருவம் கொண்ட விவசாய நிலங்களை சுட்டிக்காட்டிய ராசியாகவும் உள்ளது இவர்கள்  கண்கள் பிரகாசமாக இருக்கும் அழகான கழுத்து உயரமான தோற்றம் ரிஷப ராசியின் உருவம் பசு காராம்பசு இவர்கள் வளர்ப்பது சிறப்பு காமதேனு புகைப்படத்தை வீட்டில் வைத்துக் கொள்வது சிறப்பாகஇருக்கும்  அழகு சாதன பொருட்கள் ஆர்வம் இருக்கும்   பேன்சி ஸ்டோர் அழகு சாதனப் பொருட்கள் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவார்கள்
இவர்கள் வீடு அருகே  கலைநயமிக்க கடைகள் இருக்கும்  இவர்கள் வீட்டில் கிருஷ்ணர் ராமர் கோபால் போன்ற பெயர்களைக் கொண்டவர்கள் இருப்பார்கள் இவர்களுக்கு நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்பு என்பது இருக்கும்

நிதானமான நேர்த்தியான போக்கு இவர்களிடம் இருக்கும் கபடமற்ற சொல்லும் செயலும் இயல்பான போக்கும் எதார்த்தமான சிந்தனையும் இவர்களிடம் இருக்கும் உறுதியான நடவடிக்கை களையும் உண்மையான பேச்சும் இதமான குணமும் இனிமையான உடன்பாடுகளும் சகிப்புத்தன்மையும் சாதிக்கும் குணமும் நினைவாற்றலும் நேர்த்தியான வாழ்க்கைப் பாதையையும் பொருளாசையும் நிலையான வழிகளில் தேடுதல் இருக்கும்
 பாசம் உள்ளவர்களாகவும் அதற்காக விட்டு கொடுப்பவராகவும் உணவுகளில் அதிக ஆர்வம் உள்ளவராகவும் கலைகளில் தேர்ச்சி உள்ளவராகவும் ஆராய்ச்சி உள்ளவராகவும் கடமையில் நேர்மையும் கண்ணியமும் கட்டுப்பாடும் உள்ளவராகவும் மற்றவர்களை வழி நடத்தும் சிறந்த ஆசிரியராகவும் இருப்பார்கள்
 பூர்வீகத்தைப் பற்றி பெருமை பேசும் நபர்கள்  இவர்கள் விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள் மற்றவர்கள் மூலம்  ஏமாற்றம் அடைவார்கள் அவசர மற்ற உடன்பாடுகள் வெளிப்படையான விஷயத்தை வெளிப்படுத்தும் ஆனால் வேதனைப்படுத்தும் வகையில் இருக்கும்  வாதிடும் திறனும் சொல்லுக்கு உறுதி  அளிக்கும் நபர்கள் இவர்கள் எப்போதும் எதற்கும் கலங்காத நபர்கள்  தன்னிடம் இருப்பதை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை இருக்கும் சோம்பல் என்பது இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்க கூடியவராக இருப்பார்கள்  விசுவாசத்தில் விசுவாமித்திரர் ஆகவும் வியாபாரத்தில் வெற்றியும் புகழுக்கு மயங்காதவர் ஆகவும் உயர்ந்த மனிதர்களின் விரோதம் உடன் பிறந்தவர்களுக்காக எதையும் தருவார்கள்  தாயிடம் நேர்மை பாசம் தகப்பனாரிடம் பகைமை இருக்கும்   குடும்பத்தின் கவுரவத்தை காத்து நிற்பார்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு செயல்படுதல் இயல்பான மனநிலை விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்
 உறவுகளுக்கு விட்டுக்கொடுத்தல் இடமாற்றத்தில் விருப்பம் யாத்திரையில் பயணங்களில் விருப்பம் கதை சொல்வதில் ஆர்வம் நடந்த நிகழ்வுகளை நேர்த்தியான முறையில் நினைவாற்றலுடன் விளக்கம் தருவார்கள் விலாசமான போக்கும் சிறப்பான அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்
 பூமியில் விளைவிக்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் உண்டு உயிர் வாழும் உயிரினங்கள் அனைத்தும் சமம் என்கிற சமதர்ம சன்மார்க்கத்தை போதித்த வள்ளலார் மண்ணின் தன்மையைப் பற்றி பலவாறாக பகுத்தாய்வு செய்து நமக்கு சொல்லப்பட்ட கருத்துகள் நிறைய இருப்பினும் இந்த ராசி விளைநிலங்களை குறிப்பது மண்ணிலிருந்து விளையும் தானியங்களில் எல்லா உயிர்களும் உண்டு உயிர் வாழ்கின்ற உரிமை சக்தி இருக்கிறது என்று புரிய வைக்கும் ராசி இந்த ராசி நிலையான ஸ்திரமான நிலைத்து நிற்கக்கூடிய பயனுள்ள காரியங்கள் கொடுக்க வல்லது இந்த ராசி  இவர்கள்  வீட்டில் செய்யும் சுப காரியங்கள் எப்போதும் காலம் காலத்திற்கு பயன் தரும் வகையில் இருக்கும்
 எப்போதும் நிலைத்து இருக்கும் படியான
ரிஷபத்திற்கு இரண்டாம் இடம் மிதுனம் இதன் அதிபதி புதன் இரட்டைத் தன்மை உள்ள கிரகம் இரட்டைத் தன்மை உள்ள ராசி இவர்களுக்கு இரண்டு விதமான வருமானங்கள் சிறந்த பலனைத் தரும் குழந்தை பிறந்த பின்பு இவர்களுக்கு வருமானம்  என்பது பல மடங்கு அதிகரிக்கும்
இரண்டாம் இடம் புதனின் வீடாக இருப்பதால் இவர்களின் பேச்சு என்பது சிறப்பாக இருக்கும் பேச்சு சாதுர்யம் கொண்டவர்கள் விகடகவி போல் பேசுவார்கள் ஒரு விஷயத்தை சொல்லி புரியவைப்பது இவர்கள் வல்லவர்கள் நேர்த்தியான முறையில் பேசும் பழக்கம் உள்ளவர்கள் புத்தியை இணைத்து பேசும் நபர்கள்
பொதுவாக புதன் பேச்சாளர் எழுத்தாளர் குமாஸ்தா ஆசிரியர் கணக்கர் ஆடிட்டர் கல்வி நிலையங்கள் தபால் நிலையம் போக்குவரத்து துறை தொடர்பு தகவல் தொழில்நுட்ப தொடர்பு கொண்டவர்கள் இந்த துறைகளில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள் மூன்றாம் இடம் என்பதால் ஒப்பந்த அடிப்படையிலான தொழில்கள் இவர்களுக்கு சிறந்த வருமானத்தை தரும்
இவர்கள் ராசியில் செவ்வாய் நட்சத்திரமும் இரண்டாமிடத்தில் செவ்வாய் நட்சத்திரமும் இருக்கிறது செவ்வாய் காலை புருஷனுக்கு ஒன்று 8-க்கு அதிபதியாக இருப்பதால் இவர்கள் எல்ஐசி மூலமாகவும் அதை சார்ந்த துறைகளிலும் பொருள் ஈட்ட கூடிய அமைப்பு இருக்கும்
கலைத்துறை என்பது ஐந்தாம் இடத்தை குறிக்கும் ரிஷபத்திற்க்கு ஐந்தாம் இடம் கன்னி   அந்த வீட்டின் அதிபதி புதன் மேலும் இரண்டாம் வீட்டிற்க்கும் இவர் தான் அதிபதி  இவர்களுக்கு இரண்டாம்  காற்று ராசி ஐந்தாம் இடம் என்பது பூமி ராசியாக உள்ளது இவர்களுக்கு இரண்டாம் இடத்தில் ராகு என்ற கிரகத்தின் நட்சத்திரம் உள்ளது  ராகு என்ற கிரகம் வீணை மிருதங்கம் தபேலா இசை கருவி  இதன் மூலமாக நல்ல வருமானத்தைக் கொடுக்கும் கலை துறையில் இயல் இசை நாடகம் போன்ற அமைப்புகளை உறுதிப்படுத்தும்
ரிஷப லக்னத்திற்கு ரிஷப ராசிக்கு 2-ஆம் இடம் என்பது புதன்  வீடாக இருப்பதால் இவர்களுக்கு குடும்பம் என்பது இரண்டு விதமான அமைப்புகளில் இருக்கும்
ரிஷப லக்னத்திற்கு மூன்றாம் இடம் கடகம் உள்ளது இது சந்திரனுடைய வீடு எனவே ரிஷபத்திற்கு மூன்றாம் இடம் என்பது தகவல் தொடர்பு சந்திரன் மனோநிலையை கொடுக்கக் கூடிய கிரகமாக உள்ளது எனவே இவர்கள் அடிக்கடி மனநிலையை மாற்றும் போக்கு உள்ளவர்களாக இருப்பார்கள்
ரிஷப ராசியில் சந்திரன்  நட்சத்திரம் உள்ளது சந்திரன் இவர்களுக்கு மூன்றாம் அதிபதி சகோதர ஸ்தானாதிபதி சகோதரர்களுக்கு நன்மை அதிகம் தாய் பாசம் மூலம் செய்வார்கள்   இவர்களின் ராசியில் சந்திரன்  இருப்பதால் சகோதரர் மீது அதிக பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள் சகோதரர்கள் நல்ல முறையில் நல்ல பலன்களை இவர் மூலம் பெறுவார்கள்   இவர்களுக்கு  எந்தவிதமான நன்மையும் இல்லை சகோதரர் மூலம் இல்லை
ரிஷபம் கால புருஷனின் அர்த்த திரிகோணம் ஆக உள்ளது  இவர்கள் உழைப்பால் கிடைக்கும் பொருளை தர்மத்திற்கு பயன்படுத்தும்பொழுது வாழ்க்கை நிலை சிறப்பாக  அடையும் சிறப்பாக இருக்கும் சுக்கிரன் புதன் சனி இவர்கள்  திரிகோண அதிபதிகள் ஆக வருகின்றனர் இவர்களுக்கு அதே சுக்கிரன் புதன் சனி அர்த்த காம கோணமாக  காலபுஷனுக்கு  அதிபதிகளாகவும்   அமைவதால் சுக்கிரன் புதன் சனி மூவரும் இவர்களுக்கு நன்மை தீமைகள் நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது எனவே இவர்கள்  வெள்ளி புதன் சனி  நாட்களில் இறைவனை வழிபாடு செய்யலாம்
இவர்களுக்கு மரகதம் மாணிக்கம் சிறப்பாக இருக்கும்
சுக்கிரன் வரலாறு :

கிரஹ மண்டலத்தில் சுக்கிரன் ஆறாவது கிரஹம் ஆவார். பிரம்மதேவரின்  மானஸபுத்திரரான பிறகு முனிவருக்கு  மகன் ஆனதால் பார்கவன் எனப்பெயர் பெற்றார். இவருக்குக் கவி என்றும் ஒரு பெயர் உண்டு. சுக்கிர பகவான் மிகச்சிறந்த சிவபக்தர். சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி என்ற மந்திரத்தைக் கற்றவர். சுக்ரபகவான் வெள்ளி நறம் கொண்டவர். கிரஹங்களில் சுபர். ஜங்கோண மண்டலத்தில் வெண்பட்டாடை உடுத்தி வெண்தாமரை மலர் அணிந்து கருட வாஹனத்தில் வீற்றிருப்பவர். முதலை வாஹனமும் உண்டு. அசுரர்களுக்குக் குருவானதால் சுக்ராசார்யார் என்று அழைக்கப்படுகிறார். கிரஹமண்டலத்தில் சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு வடக்கே தெற்கு நோக்கிய திருமுகத்துடனும் காட்சி தருகின்றார்.

சுக்கிரபகவான் ரிஷபதுலா ராசிக்கு அதிபதி, பரணி, பூரம், பூராடம், நட்சத்திரத்திற்கு உரியவர். சுக்ரதிசை இருபது ஆண்டுகள் ஆகும். மீன ராசியில் உச்சமும், கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். ஒரு ராசியில் இவர் சஞ்சரிக்கும் காலம் சுமார் ஒரு மாதம் ஆகும். சுக்கிரபகவானுக்கு மித்திரன் - புதன், சனி, சத்ரு சூரியன், சந்திரன். சமன் - செவ்வாய், குரு. உலோகம் வெள்ளி, கல் - வைரம், தான்யம் - வெள்ளை மொச்சை, சமித்து அத்தி, அதிதேவதை - இந்திராணி, பிரத்யதி தேவதை - இந்திரன். கோசாரத்தில் 1, 2, 3, 4, 5, 8, 9, 11, 12 ஆகிய இடங்களில் சுபத்தையும் 6, 7, 10 ஆகிய இடங்களில் அசுபத்தையும் செய்வார்.

சுக்ர பகவான் களத்திர காரகன். சுகபோகத்தைச்செய்பவர். வேலைவாய்ப்பு, தொழில், திருமணம், வாகனம், வாசனை திரவியங்கள், இலக்கியம் மற்றும் கவிதை எழுதும் ஆற்றல் ஆகியவற்றைச்செய்பவர். திருமணத்தடை, தம்பதிகள் ஒற்றுமையின்மை, தொழில் வியாபாரம், வாகனம் ஆகியவற்றில் நஷ்டம் குளிர் மற்றும் கண் சம்மந்தமான நோய்கள் ஆகிய தோஷங்களைச் செய்பவர். இத்தலத்தில் ஸ்ரீ அக்னீஸ்வரர் சன்னதிக்குத் தென்பாத்தில் சுகபோகம் அருளும்பார்வதி தேவியுடன், தேவர்களுக்கு சுக்கிர தோஷம் நீக்கியருளிய சிவபெருமான் தனிச்சன்னதிகொண்டு எழுந்தருளியுள்ளார்.

திருநாவுக்கரசரால் இமவான்தன் பேதையோடும் இனிதிருந்த பெருமான் என்று போற்றப்படும் இப்பெருமானை வணங்கி வழிபடுபவர்கள் சுக்கிர கிரஹத்தினால் ஏற்படும் அனைத்து தோஷங்களிலிருந்து விடுபட்டு பொன்னும் மெய்ப்பொருளும் போகமும் திருவும் பெற்று சுகபோகவாழ்வு வாழ்வார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...