புதன், 15 பிப்ரவரி, 2017

இறைவனை ஆலயங்களுக்கு சென்று தான் வழிபட வேண்டுமா?



✫ இறைவனை கோவிலிலும் வழிபடலாம், வீட்டிலேயும் வழிபடலாம். ஆனால் ஞானிகளால் நிறுவப்பட்ட ஆலயம் சென்று வழிபடும்போது பயன் அதிகமாகவும், விரைவிலேயும் கிடைத்து விடும்.

✫ கோயிலில் இறைவனை வழிப்பட்டால் வினைகள் வெந்து எரிந்து கருகி, நீராகி விடுவது போல், மனம் நிம்மதி கொள்ள வாய்ப்புகள் உருவாகிவிடும்.

✫ விஞ்ஞான ரீதியிலும் ஒரு கருத்து அழுத்தமாகவே தெரிவிக்கப்படுகின்றது நன்றாக மின் சக்தியை ஏற்கக்கூடிய பொருட்கள் தான் பூஜை அறையில் பயன்படுத்தபடுகின்றது. வேப்பிலை, மாவிலை, துளசி, எழுமிச்சைபழம் போன்றவைகளுக்கு இந்த ஆற்றல் அதிகம். பிராண வாயு நமது ரத்தத்தில் ஹீமோக்ளோபின் பண்பாக கலப்பதற்கு இது உதவுகின்றது. கோயில்களில் - நகரங்களிலும் வெளியிலும் இருப்பதைவிட, பூஜை நடைபெறும் கர்ப்ப கிரகத்தில் இந்த சக்தி அதிகமாகவே கிடைக்கிறது.

✫ கடற்கரையிலும், மலை மீதும் உள்ள ஆலயங்களில் இந்த சக்தி இயற்கையாகவே நிரம்பக் கிடைக்கிறது. மலை அருவிகள் பொழியும் இடங்களிலும் இது நிறைந்துள்ளன. எனவே தான் பழனி, திருப்பரங்குன்றம், திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற மலைகள் மீதும் ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, திருச்செந்தூர் போன்ற கடற்கரையிலும் குற்றாலம் போன்ற அருவிகள் கொட்டும் இடங்களிலும் ஆலயங்கள் அமைக்கபட்டுள்ளன.

✫ ஆலயங்களில் ஒலிக்கப்படும் மணியிலிருந்து வரும் அதிர்வு அணு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு அலைவரிசையைத் தோற்றுவிக்கும். நமது உடலும் உள்ளமும் ஆன்மாவும் அந்த அலைவரிசையினால் மீட்டப்பட்டு, மூளை, இருதயம், செவிப்பறை, முகுளம் போன்றவற்றிக்கு ஊட்டம் அளிக்கின்றது. பின்னர் எரியும் கற்பூரத்திலிருந்து வரும் வெளிச்சம், கண்ணின் ஆடிகளை அகல விரியச் செய்து அதனால் ஏற்படும் அதிர்வுகள் நரம்பு மண்டலத்தையே உறுதி செய்கின்றன.

✫ விஞ்ஞான உலகில் ஆலய தரிசனம் என்பது அன்றாட நடவடிக்கை என்பது இல்லாது போயிற்று. ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பது உண்மை என்றாலும், ஆலயத்தை அவனது இருப்பிடமாக கருதி வழிபடுவதில் ஒரு தனி சுகத்தையே நாம் காண்கின்றோம். ஏனெனில் அனைத்து இடங்களிலும், சூழ்நிலைகளிலும் மனதை ஒரு நிலைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றாகும். ஆனால் ஆண்டவன் குடி கொண்டுள்ள இடம் ஆலயம் எனக் கருதி அங்கே நுழையும் போதே மனம் ஒருவித நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது.

✫ ஆலயத்தின் மணியோசை அங்கு கமழும் தூப, தீப, நைவேத்யங்களின் வாசனை, இறைவன் மீதான பாமாலைகளின் ஒளி, அங்கு குழுமியுள்ள இதர மனிதர்களின் பக்திபரவச நிலை ஆகிய அனைத்தும் சேர்ந்து நம்முடைய இதயங்களையும் வேறு திசைக்குத் திருப்பாமல் பக்திப் பரவசத்தால் நிரப்பிவிடுகின்றன.

✫ வெளியில் பெறமுடியாத இறையுணர்வை, பக்திப் பரவசத்தை ஆலயங்களில் பெற முடிவதால், ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடுவதே சாலச் சிறந்தது ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...