சனி, 10 ஜனவரி, 2015

வாஸ்து - எது நல்ல வீடு


சில வீடுகளை பார்த்தால் அடடா... இதுவல்லவா வீடு என்று நின்று       ரசிக்க தோன்றும்.  

சில வீடுகளை பார்த்தால் என்ன இப்படி இருக்குபாழடைந்த பங்களா மாதிரி என்று வெறுக்க தோன்றும். 

சில தெரிந்தவர்உறவினர் வீட்டுக்கு போனால் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு போயேன் என்று  சொல்லாமல் சொல்லும்.

சில உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு போனால் காலில் வெந்நீர் ஊற்றிய மாதிரி எப்படா இந்த இடத்தை விட்டு போவோம் என்று மனசு பரபரக்கும். 

கூடு கட்டி  வாழும் பறவை மாதிரிவீடு கட்டி வாழும் மனிதனுக்குஉணவு, உடைக்கு அடுத்த படியாக வீடுதான் முக்கியத்துவம் பெறுகிறது.  இதை உணர்ந்தவர்கள் ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள்.

அதனால்தான் மனையடி சாஸ்த்திரம் என்ற வாஸ்த்து ரகசியத்தை நமக்கு சொன்னார்கள். 

ஒரு வீடு என்ன மாதிரி கட்டபட்டிருக்கிறது என்பது முக்கியமல்ல.   இன்னும் சொல்ல போனால் எந்த ராசிக்காரர் அந்த வீட்டில்  குடி இருக்கிறார் என்பதும் முக்கியமல்ல.

அப்பறம் என்னதான் முக்கியம்?

நாம் குடி இருக்கும் வீட்டின் கிழக்கு பக்கமும், வடக்கு பக்கமும் எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்.

மனித உடலில் தலை பிரதானம்.  ஒரு வீட்டிற்கு தலை வாசல் பிரதானம்.  அதை போல் அந்த வீட்டிற்கு ஈசானியம் என்பது மனிதனுக்கு தலை போன்றது. 

நீங்கள் வாஸ்த்துவை  பற்றி  அறிந்திருக்கலாம்.  அறியாமல் இருக்கலாம். அல்லது வாஸ்த்து நிபுணராக கூட இருக்கலாம்.  நீங்கள்  எந்த பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

வடக்கு திசை  என்பது மேல்புறம்.  தெற்கு திசை என்பது கீழ்புறம்.  நாம் வசிக்கும் பூமி ஒரு நொடிக்கு ஏழு மைல் வேகத்தில்  கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது.    

இந்த பூமி சுற்றுவதால் நாமும் பூமியோடு சேர்ந்து சுற்றி கொண்டிருக்கிறோம். வேகம் ஒரே சீராக இருப்பதால் நாம் ஒரே இடத்தில் இருப்பது போன்ற ஒரு மாய தோற்றம் இருக்கிறது.  சினிமா பிலிம் கூட இந்த தத்துவத்தில் தான் இயக்க படுகிறது.  

சுழலும் பூமி மீது  இடை விடாமல் சூரிய ஒளி விழுந்து கொண்டிருக்கிறது.  இந்த சூரிய ஒளி நம் வீட்டின் மீது தடை இல்லாமல் விழுந்தால் வீடு சுபிச்சம் பெரும். 

வீட்டில் செல்வம் தங்கும்.  நிம்மதியும் சந்தோசமும் நிலைத்திருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.  அனைத்து வகையிலும் சிறந்து வாழ்வார்கள்.  

சூரிய ஒளி அந்த வீட்டின் மீது விழாமல்  இருந்தால்வாழ்க்கையை தொலைத்தவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையின்  மீது எந்த பிடிப்பும் இருக்காது.  


சரி .....வாஸ்து குறை இருந்தால்எந்திரங்களை பதிக்கலாம், பிரமீடுகளை வைக்கலாம்அதிஷ்ட்ட  மீன்  வாங்கி வளர்க்கலாம்.  வழியா இல்லை பூமியில்.

நல்ல யோசனைதான்.  ஆனால் ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நமது வீடு நொடிக்கு ஏழு மைல் வேகத்தில், அதாவது மணிக்கு 25000 மைல் வேகத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறது.

அந்த வீட்டின் மீது காலை வெயில் விழ வேண்டும்.  உங்கள் மனையில் கிழக்கு பகுதியில் காலி இடம் வைத்து வீடு கட்ட வேண்டும்.  எவ்வளவு முடியமா அவ்வளவு.

மாறாக கிழக்கில் இடம் இல்லமால் வீடு கட்டி விட்டால்அந்த கிழக்கு பகுதியை ஒட்டி இன்னொருவர் வீடு கட்டினால், உங்கள் வீடு சுபிச்சம் இழந்து விடும்.

உடல் நல கோளாறு, கடன் தொல்லை, நிம்மதி குறைவுகுடும்பத்தில் ஒற்றுமை குறைவு என்று அவல நிலையில் வாழ வேண்டிய நிலை வந்து விடும்.

அதனால் வீடு கட்டும் போது கிழக்கை  கவனித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...