தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அபூர்வ சக்தி படைத்த பல கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரக பலன்களை நமக்குத் தரவல்லவை. இந்த அரிய கோவில்களை நமது முன்னோர்கள், நமது நன்மைக்காகவே கட்டிச்சென்றுள்ளனர்.
இவை அனைத்தும் மகத்தான மந்திர சக்தி பெற்றவையாகும். உலகில் எந்த ஒரு நாட்டுக்காரர்களுக்கும் இத்தகைய பாக்கியம் கிடைத்தது இல்லை. நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து இருப்பதால் பழமையான ஆலயங்களை நாம் பேணி, போற்றி பாதுகாக்க வேண்டும்.
இத்தகைய கிரக சக்தி கொடுக்கப்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றிலும் கருவறையில் மூலமூர்த்தி எழுந்தருளியிருக்கும் பீடத்திற்கு அடியில், ஒரு குறிப்பிட்ட மந்திர வீரிய சக்தி உள்ள யந்திரங்கள் பத்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எல்லா கோவில்களிலும் மூலவருக்கு கீழ் யந்திரம் பதிக்கப்படுவதுண்டு.
மூல, உற்சவ மூர்த்திகளின் குறிப்பிட்ட சக்திகளுக்கு உண்மையான காரணம் இந்த யந்திரங்களே. இவைதான் நமக்கு துணை புரிகின்றன. பொதுவாக நமக்கு உண்டாகும் பல கடுமையான தோஷங்களை விரட்ட பரிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த பரிகார பூஜைகளுக்கு நிறைய செலவாகும். ஏழைகள், நடுத்தர மக்களால அதிகம் செலவு செய்து அந்த பரிகாரங்களை செய்யவே முடியாது.
ஆதலால், பொதுநலன் கருதி அனைவருக்குமே எளிதில் அதே பரிகாரம் கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் நமக்காகவே ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய கோவில்களை நிர்மாணித்து அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக