ஜோதிட சக்கரவர்த்தி ஜோதிட ஆசிரியர் T.V.வெங்கட்ராம்ஜி கட்டண சேவைக்கு RS-1001 மட்டும் ஜோதிட ஆலோசனை வேண்டும் எனில் உங்கள் பெயர்.பிறந்த தேதி,நேரம் AM/PM.பிறந்த ஊர் போன் மூலம் தெரியப்படுத்தி உங்கள் ஜாதகபலனை தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள்.பிரச்சனைகளுக்கு.தீர்வு வாட்சப்பில் & வாய்ஸ் ரெக்காடிங் மூலம் அனுப்பப்படும்.CELL.8667710736. whatsapp NO 8124812470 email.sssjn2412@gmail.com V.VENKATESAN ,State Bank Of India. Ac/no. 34790428329 IFS code.SBIN0001603.Chennai.Tiruvottiyur
செவ்வாய், 5 ஜூலை, 2016
ஓரை சுப பலன்
பலரும் அன்றாட செயல்களைக்கூட பஞ்சாங்கம், ஜோதிடத்தை அனுசரித்து நடந்து கொண்டு நன்மைகளை அனுபவித்து வருகின்றர். அந்த வகையில் ஹோரை சாஸ்திரத்தை தற்போது நம்மில் பலரும் பின்பற்றி பயன்படுத்தி வருகின்றர்.
ஹோரை சாஸ்திரம்:
ஹோரை சாஸ்திரம் ஒரு வாரத்திற்கு வரும் ஏழு கோள்களை கொண்டே கணிக்கப்பட்டிருகிறது. அன்றைக்கு நடைமுறைக்கு வரக்கூடிய நாட்களுக்கு அதிபதியாக உள்ள கோளின் ஹோரை , சூரிய உதயம் முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நடைமுறைக்கு வரும்.
ஹோரையில் வாரத்தில் வருவதுபோல் ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்), செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி என தொடர்ந்து வருவது போல நடைமுறைக்கு வராமல் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற தொடர் சுழற்சி முறையில் நடைமுறைக்கு வரும்.
அன்றைய தின அதிபதிக்குரிய கோளின் ஹோரை ஆரம்பத்தில் நடைபெற்று, அடுத்தடுத்தக் கோள்களின் ஹோரை நடைமுறைக்கு வரும். நாட்கள் மாறி மாறி வந்தாலும், கோள்களின் ஹோரைகள் ஹோரைக்குரிய கோள்களின்படி தொடர் சுழற்சி முறையிலேயே நடைமுறைக்கு வரும்.
நாட்களில் சுப நாள், அசுப நாள் என்றும், கோள்களில் சுப கோள், அசுப கோள் என்றும் இருப்பதுபோல் ஹோரைகளிலும் சுப ஹோரை, அசுப ஹோரை இருக்கும் என்று பலரும் நினைத்து ஹோரையைத் தவறாகப் பின்பற்றி வருகின்றனர்.
வார நாட்களில் திங்கள், புதன் ,வியாழன் , வெள்ளி, ஞாயிறு ஆகியன சுப நாட்கள் என்றும், சனி, செவ்வாய், அசுப நாட்கள் என்றும் சிலர் கடைபிடிபதுபோல் ஹோரையையும் அவ்வாறே பிரித்து சுப ஹோரை, அசுப ஹோரை என்றும் பின்பற்றி வருகின்றனர்.
ஆனால், ஹோரை சாஸ்திர விதிமுறையில் சுப ஹோரை, அசுப ஹோரை என்றில்லை என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட ஹோரையிலும், வெவ்வேறு குறிப்பிட்ட பணிகளைச் செய்யலாம் என்று ஹோரை சாஸ்திர விதிமுறை கூறுகிறது.
சூரிய ஹோரை:
சூரிய ஹோரையில் விண்ணப்பம் செய்தல், அதிகாரிகளைச் சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு உபகாரம் பெறுதல், பதவியில் அமருதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
சந்திர ஹோரை:
சந்திர ஹோரையில் திருமணத்துக்குப் பெண் பார்த்தல், ஆபரணங்கள் அணிதல், கலைத்துறையில் ஈடுபடுதல், தொலைதூரப் பயணம் செய்தல், நாற்கால் ஜீவன்கள் வாங்குதல் போன்ற பணிகளைச் செய்யலாம்.
செவ்வாய் ஹோரை:
செவ்வாய் ஹோரையில் போர்க்கருவிகள் புதிதாகச் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல், பகைவர்களுடன் போர் தொடுத்தல். பூமி, நிலம் சமந்தமாக விவரங்கள் பேசி முடித்தல், மருந்துண்ணல், நீர் நிலைகளைத் தடுத்துக் கரை அல்லது அணை கட்டுதல், அழிவு வேலைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்கள் உத்தமம்.
புதன் ஹோரை:
புதன் ஹோரையில் ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டிபந்தயங்களில் பங்கு கொள்ளுதல், கடிதத்தொடர்பு கொள்ளுதல், பொருட்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல், தரகு,புரோக்கர் போன்ற வேலைகளைச் செய்யலாம்.
குரு ஹோரை:
குரு ஹோரையில் புதிய ஆடை, ஆபரணம் அணிதல், சேமிப்பு தொடங்குதல், கொள்முதல் செய்தால், விவசாயத்க்கு விதை விதைத்தல், நாற்றுநடுதல், குரு உபதேசம் செய்தல்,பெறுதல்,பெரியோர்களைச் சந்தித்தல் போன்ற காரியங்களைச் செய்யலாம்.
சுக்கிர ஹோரை:
சுக்கிர ஹோரையில் காதல் விவகாரங்களில் ஈடுபடுதல், திருமண ஏற்பாடு பற்றி பேசுதல், மருந்துண்ணல்,பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், ஆடை, ஆபரணம் அணிதல், போன்ற பணிகளைச் செய்யலாம்.
சனி ஹோரை:
சனி ஹோரையில் நிலத்தை உழுதல், விவசாயம் செய்தால், இரும்பு, மின்விசைச் சாமான்கள் வாங்குதல், தோப்பு, துறவு அமைதல், பயணம் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.
ஒவ்வொரு ஹோரைக்கும் மேற்குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்லாது, அது தொடர்பானப் பணிகளிலும் ஈடுபடலாம்.
எனவே ஹோரைகளில் சுப ஹோரை, அசுப ஹோரை என்று பாகு படுத்திக் கொள்ளாமல், அந்தந்த ஹோரைக்குரிய செயல்பாடுகளை, அந்தந்த ஹோரையில் செய்தால் செயலுக்குரிய பலனை அடையலாம்.
ஓம் சிவசிவ ஓம்! ஓம் சிவசிவ ஓம்!! ஓம் சிவசிவ ஓம்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்
வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம் சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...
-
உங்களது வாழ்க்கை எங்கே ? சிலர் எங்கோ ஓரிடத்தில் பிறந்து எங்கோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர். வேறு சிலர் உலகம் சுற்றினாலும் சொந்த ஊரே சொர்க...
-
மேஷம் என்பது ஒரு சர ராசி இது நெருப்பு தத்துவம் கொண்ட ராசி இதன் பலன்கள் என்பது சுயநலம் பேராசை எதிலும் மூர்க்கத்தனம் இருக்கும் கோபம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக