சனி, 8 ஆகஸ்ட், 2015

பேய்கள் பற்றிய சில நம்பிக்கைகள்.

பேய்களுக்கு நேரம் காலம்
தெரியாது என்றாலும், நள்ளிரவு
நேரங்களில் பகலை விட கூடுதலாக
அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு.
ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ்
பொருட்களின் வேகத்தையும், அதன்
இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில்
கொண்டுவரும் சக்தி நிச்சயமாக
உண்டு.
* அமைதியான இடம், நிசப்த்தமான
இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது
பேய்களுக்கு பிடித்த விடயம்.
* பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக்
கோடுகள், மூடுபனி, புகார்,
கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான
தெரிவது, கரு உருவம், காற்றுத்
தூசிகள், காற்று போன்றவைகள்
மூலம் தங்களை
வெளிப்படுத்துகின்றன. முழு
உருவத்தையும் எப்பொழுதும்
வெளிப்படுத்துவது இல்லை. ஆனால்
சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம்,
பெண்குரல் சிரிப்பு போன்ற
சினிமாவில் காண்பிக்க படுபவை
கூடுமானவரை கற்பனையே.
* கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள்
தன்னை வெளிப்படுத்த
விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை
தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே
பின்தொடர்ந்து செல்லும்.
* பேய்கள் குழந்தைகள், அல்லது
பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய
முடியும். பேய்களுக்கு நிறை
அதிகம் என்பதால் அவைகளுக்கு
நிறைய சக்தி தேவை என்பதால்
பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக
சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை
உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள்
நாளடைவில் மெலிந்து போவார்கள்.
* பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம்.
வாழும் காலத்தில் நடந்த உணர்வுப்
பூர்வமான விடயங்களை , சம்பவங்களை
அடிக்கடி நினைத்து பார்க்குமாம்.
ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம்
தான் அதிகம் நினைவில் நிற்கும்.
பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே
காரணமாகும்.
* குழந்தைகள், மிருகங்களால்
பேய்களை அடையாளம்
காணமுடியும். மிருகங்களின் மீதும்
பேய்கள் இறங்கி அவைகளை
தாறுமாறாக செயல்பட வைக்க
முடியும்.
* பேய்களுக்கு உதவிசெய்யும் குணம்
உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே
கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய்
ப்பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில்
காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள்,
கொலைகளில் துப்புகளை கூட
காட்டிக்கொடுத்தும்
இருக்கின்றனவாம்.
* இருப்பிடத்தை விட்டு வெளியே
வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.
* பேய்கள் இடம்பெயரும்பொழுது
பயங்கர காற்று, காற்றுச்சுழல்,
நீர்நிலைகள் அதிருதல், சுழிகள்
உண்டாகுதல், மரங்களை முறித்தல்,
கதவுகள் தானாக அடிபடுதல்
போன்றவை ஏற்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...